Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆரியன் தன் சடங்கைச் செய்ய மறுத்தவனை 'தாச' மக்கள் என்று கூறி ஒடுக்கினான்;. இதன் மூலம் ஆரிய சடங்கை, தனது சுயநலத்துக்கு ஏற்ப செய்வதை கட்டாயப்படுத்தினான். இந்தச் சடங்கை ஆரிய வழிவந்த பார்ப்பனன் தான் மட்டும் சுரண்டும் சுயநலத்துடன், பெரும்பான்மை மக்களுக்கு தடை செய்தான். இதன் போது, உருவான சாதிய சமூக பொருளாதார பண்பாடுகள் தான், பார்ப்பனியம்.

 

இந்த பார்ப்பனியம் பிறப்பை முன்னிறுத்தி, அதை முனைப்புடன் ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதவிடுகின்றது. இதன் மூலம் மனித சமூகத்தைப் பிளந்து, சமூக படிமுறை மூலம் சுரண்டுகின்றது. இதைக்கொண்டு வாழ்வதுதான் பார்ப்பனியம். இந்தப் பார்ப்பனியமே சமூகத்தில் நிலவும் சகல சமூக ஒடுக்குமுறையிலும் தானாக பிரதிபலிப்பதுடன், அதற்கு இசைந்து இணங்கி நிற்கின்றது. அனைத்தும் தழுவிய ஒடுக்கும் வர்க்கமாகவே, பார்ப்பனியம் இயங்குகின்றது.

'மக்களின் நிலையை  நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. அதற்கு மாறாக, அவர்களுடைய சமூக நிலைமைதான் மக்களின் உணர்வை நிர்ணயிக்கிறது' என்று கார்ல் மார்க்ஸ் கூறியது போல், பார்ப்பன சமூக நிலைக்கு ஏற்ப முழு சமூகத்தையும் தனக்கு ஏற்ப சிதைத்தனர். தனக்கு ஏற்று சாதிய பொருளாதார வாழ்வைக் உருவாக்கினர். சாதிய உணர்வைக் கொண்டு, சமூக பொருளாதார உறவை தமக்கு ஏற்ப மலடாக்கினர்.

இந்த அடிப்படையிலான சாதிய சமூக ஒடுக்குமுறையினை மனித வாழ்வாக ஏற்று, அதற்கு இணங்க வாழ்வதை வழிகாட்டுவதுதான் பார்ப்பனிய சித்தாந்தம். இந்த பார்ப்பனிய சித்தாந்தமோ கடவுளின் பெயரில், சாதிய வடிவில் உள்ளது. இதுவோ மதமாக, மனிதப் பண்பாடாக, இந்துத்துவமாக, ஜனநாயகமாக, தனிமனித சுதந்திரமாக, இப்படி அது எல்லாமாக உள்ளது. ஏன் கடவுளுக்கு கூட சாதிய அடையாளங்களும், இழிவுகளும், சிறப்புத் தகுதிகளும் உண்டு. கடவுள் கூட தன் சாதியையும் தீட்டையும் பேனும் எல்லைக்குள் தான், சாதிய இந்துத்துவம் பார்ப்பனியமாக இயங்குகின்றது.

இந்த பார்ப்பனிய சமூக அமைப்பில் யாரும் தன் சாதியை மாற்ற முடியாது. பிறப்பிலான மதத்தைக் கூட மாற்றலாம், ஆனால் சாதியை மாற்றமுடியாது. இந்திய சாதிய அரசியல் அமைப்புச் சட்டம், சாதி மாறுவதை தடை செய்கின்றது, ஆனால் மதம் மாறுவதை அங்கீகரிக்கின்றது. இப்படி இந்த பார்ப்பனிய சாதியம்தான், இந்தியாவின் சட்ட ஆட்சியாகவுள்ளது. இதைத்தான் சுதந்திரம், ஜனநாயகம் என்று எல்லாம் பீற்றுகின்றனர். இப்படி சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் சாதியமாகமே கோலோசுகின்றது.

இப்படி எங்கும் எதிலும் ஒரு சாதியச் சமூகமாகவே, பார்ப்பனியம் மனிதர்களைப் பிழந்துள்ளது. மக்களினுள் ஏற்றுத்தாழ்வான சமூக இழிவுகளை கட்டமைத்து, வாழ்வியல் இழிவுகளை புகுத்தியுள்ளது. இவையெல்லாம் இப்படித்தான் என்று, மதத்தைக் கொண்டு நிர்ணயிப்பதுதான் பார்ப்பனியம். இதை மாற்ற முடியாது என்கின்றது. இது காலகாலமாக இருப்பதுதான் என்று, அறிவியலுக்கு எதிராக விதண்டாவாதம் செய்கின்றது. மனிதர்கள் பிறக்கும் முன்பே, நீ இப்படித்தான் வாழமுடியும் என்று, அனைத்தையும் முன் கூட்டியே வரையறுத்து விடுகின்றது இந்த பார்ப்பனியம். திருமணத்தாலும், பிறப்பாலும், ஒரு தனிமனிதனின் தலைவிதி இப்படித்தான் என்று, சாதி எல்லைக்குள் முன் கூட்டியே அது நிர்ணயம் செய்யப்பட்டுவிடுகின்றது.

இப்படி கட்டமைக்கப்படும் பார்ப்பனிய சமூக அமைப்பு, ஒரு சிறிய பிரிவின் குறுகிய நலனை அடிப்படையாக கொண்டது. இதனடிப்படையில் உருவான பார்ப்பனியம் படிமுறை வடிவில், மேலேயுள்ள சாதிகளின் நலனை முன்னிலைப்படுத்துகின்றது. இதற்கமையவே மக்களை ஒருவருக்கு ஒருவர், பிறப்பை அடிப்படையாகக் கொண்டே எதிரியாக நிறுத்திவிடுகின்றது. இந்த பார்ப்பனிய வாழ்வியல் முறை என்பது, எதார்த்தத்திலோ இந்து மத இந்துத்துவக் கோட்பாடாக உள்ளது.

இதுவோ, ஒர் பார்ப்பனிய மதம். ஆரியர் வழிவந்த பார்ப்பனரால்தான், தம் சொந்த குறுகிய நலன் சார்ந்து இது முன்னிறுத்தப்பட்டது. இந்த பார்ப்பனிய மதம் தான், இன்று இந்துத்துவமாக திரிந்துள்ளது. அதாவது இந்த பார்ப்பனிய மதம், பல மதங்களையும், கோட்பாடுகளையும், சிந்தனை முறைகளையும், தனது (சாதி) அடையாளத்துடன் தனக்குள் செரித்தன் மூலம், அது இந்துத்துவமாகியது.

இந்த பார்ப்பனிய இந்துத்துவம் வழிகாட்டும் அதன் சொந்த வாழ்வியல் நெறி என்ன? மக்களை பிறப்பிலேயே பிளந்து விடுகின்றது. அதை சாதியாக பிரித்துவிடுகின்றது. அவர்களை தமக்குள் மோதவிட்டு, அவர்களை பிரித்தாளுகின்றது. மனிதனை எதிரியாகவே அனுகவும், பார்க்க வைக்கின்றது. இப்படிபட்ட சாதியமும், இந்துத்துவமும் வேறுயல்ல. இதன் வாழ்வியல் நெறி என்பது, அதன் நீதி என்பதும், அதன் சட்ட நெறி என்பதும், அதன் ஆன்மீகம் என்பதும், அனைவருக்கும் பொதுவானதல்ல. மாறாக சாதிக்கு ஏற்ப, சாதிக்கு சாதி வேறுபட்டது. இப்படி மக்களை பிரித்து மோதவிடும் பார்ப்பனியம், தன் சாதிய சர்வாதிகாரத்தைத்தான், இந்தியாவின் ஜனநாயகம் என்கின்றனர். இதையே இந்தியாவின் சகிப்புத் தன்மை என்கின்றனர்.

கார்ல் மார்க்ஸ் கூறுவது போல் '.. உற்பத்தி உறவுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு முழுமைதான், சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக அமைகின்றது.... இதன் மீதுதான் சட்டம், அரசியல் என்கிற கட்டுக்கோப்பு நிர்மாணிக்கப்பட்டு நிற்கின்றது. அந்த அஸ்திவாரத்துக்கப் பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் திட்டவட்டமான வடிவங்கள் அமைகின்றன.' என்றார்.

இப்படி பார்ப்பனியமயமாகவுள்ள சாதிய ஜனநாயகமாகட்டும், சுதந்திரமாகட்டும், மதமாகட்டும், ஆன்மீகமாகட்டும், இது எதைத்தான் எதார்த்தத்தில் மனித வாழ்வியலாக்கின்றது. சமூகத்தினதும், தனிமனிதனினதும், சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் சாதி மூலம் முற்றாக தடைசெய்கின்றது. மனித தெரிவுகளை சுதந்திரமாக அனுகமுடியாத வகையில், பார்ப்பனிய சமூக அமைப்பு ஜனநாயகத்துக்கு மேலேயுள்ளது. இதை மூடி மறைத்து, இதை கடவுளின் பெயரில் மறுப்பதுதான் பார்ப்பனியம்.

16.ஆரியம் - வருணம் - சாதி – சாதித் தீண்டாமையாக மாறிய சமூகப் படிநிலை ஒழுங்குகள் - சாதியம் குறித்து பாகம் - 16

15.கொள்ளையடிக்க வழிகாட்டிய கடவுளே, வேதக் கடவுள்கள் - சாதியம் குறித்து பாகம் - 15

14.ஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14

13.பார்ப்பனப் பண்பாடு மிக இழிவானதாக உருவானது எப்படி? - சாதியம் குறித்து பாகம் - 13

12.பார்ப்பனரை மற்றயை பூசாரிகளில் இருந்து வேறுபடுத்தியது எது? - சாதியம் குறித்து பாகம் - 12

11.சமஸ்கிருதம் என்னும் தனி மொழியின் தேவை, ஏன், எதனால் எழுகின்றது? - சாதியம் குறித்து பாகம் - 11

10.தந்தைவழி தனிச்சொத்துடமைதான், ஆரிய-வேதச் சடங்குகளை சிதைவில் இருந்து மீட்டது : பாகம் - 10

9.ஏன் இந்திய சமூகத்தில் ஆரியர் சிதைந்தனர்? - சாதியம் குறித்து பாகம் - 09

8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08

7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு

 

6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06

5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05

 

4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

 

3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

 

2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

 

1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01