Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமது சக பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி"யதாக யமுனா ராஜேந்திரன் எழுதுகின்றார். இதற்கு ஆதாரமான இந்திய றோவின் கூலி அமைப்பான ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பினர் ஒருவரின் கூற்றை ஆதாரமாக காட்டுகின்றார். இன்று ஈ.என்.டி.எல்.எவ் முன்னணி உறுப்பிரான இவர், அன்று கொலைகார புளட்டுக்கு தலைமை தாங்கி தீப்பொறியை போட்டுத்தள்ள அலைந்து திரிந்தவரில் ஒருவர். யமுனா ராஜேந்திரனின் கருத்தை வெளியிட்ட இணைய ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்தபடி, துப்பாக்கியுடன் தீப்பொறியை போட்டுத்தள்ள அலைந்தவராயிருந்த ஜென்னி எழுதிய கூற்று, யமுனா ராஜேந்திரனுக்கு "பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தபட்ட" ஒன்றாகிவிட்டது. அதை முன்வைத்து அவர் பிரச்சாரம் செய்கின்றார். உண்மையான போராட்ட வரலாற்றை திரித்துப் புதைக்கின்ற கச்சிதமான பணியில் யமுனா ராஜேந்திரனும், குருபரனும், ஜென்னியும் ஒன்றாகவே பயணிக்கின்றனர்.

இந்த வகையில் இந்திய உளவு அமைப்பான றோவினால் உருவாக்கப்பட்ட ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பின் இன்றைய முக்கிய உறுப்பினரும், உட்படுகொலைகளைச் செய்து வந்த புளட் முன்னணிப் பிரிவில் இருந்தவருமான ஜென்னியை மேற்கோள் காட்டி இவர்கள் பொறுக்கித்தனமாக பிழைப்பை நடத்துகின்றனர். இன்று றோவின் அனுசரணையுடன் இயங்கும் ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர் ஒருவரின் கூற்றை ஆதாரம் காட்டி முன்நிற்கும் யமுனா ராஜேந்திரனின், வழமையான மார்க்சிய விரோத பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டதே அவரின் இந்த வக்கிரம்; கூட.

யமுனா ராஜேந்திரன் எழுதுகின்றார் "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் தமது உட்பகையைத் தீரத்துக் கொள்ளத் தமது சக பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை எனும் கூற்றுக்கான ஆதாரம் குறித்து புளொட் அமைப்பினர் கேள்வி எழுப்பியமை தொடர்பிலும், அதனோடு பெண்போராளிகள் எனப் பன்மையில் பாவிக்கப்பட்டிருப்பது தொடர்பான சுட்டுதல்களும் குளோபல் தமிழ் இணையதள ஆசிரியரால் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தபட்ட, நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஆதாரம் இதுதான் : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் : எனது சாட்சியம் எனும் ஜெ. ஜென்னியின் வரலாற்றுப் பதிவுகள். குறிப்பாக, இன்றும் மறைக்கப்படும் தோழி ரீட்டா மீதான அவலம் எனும் பகுதி (ஜெ. ஜென்னி : தேசம்நெட் : 7 மார்ச் 2011)"

இதை முமுமையாக பார்க்க

இப்படி ஜென்னியால் திட்டமிட்டு அரசியலாகும் அவதூறு யமுனா ராஜேந்திரனுக்கு "பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட" ஒன்றாக இருப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தனது மார்க்சிய விரோத பிழைப்புவாதத்தை தொடர்ந்து நடத்த முனைகின்றார். இதை பிரச்சாரம் செய்யும் இந்த இணையத்தை நடத்துபவரும், முன்பு இந்த ஜென்னி முன்னின்ற கொலைகாரக் கும்பலுக்கு எதிராகப் போராடியவருமான குருபரனின் இணையத்தில், இது வெளிவருவது என்பது ஆச்சரியமானது. ஊடகங்களையும், எழுத்தையும் வியாபாரமாகவும் பிழைப்புக்கான ஒன்றாகவும் கருதும் இருவரும் இன்று ஒன்றிணைந்து நடத்துகின்ற எதிர்ப்புரட்சி அவதூறு அரசியல் இது.

அன்று கொலைகாரப் புளட்டையும், அதன் மக்கள்விரோத அரசியலையும் உள்ளிருந்து எதிர்த்துப் போராடி, அதில் இருந்து உயிர் தப்பி தலைமறைவாகிய தீப்பொறியை அவதூறு செய்து வேட்டையாட ஜென்னி போன்றவர்களால் திட்டமிட்டு அவர்கள் நடத்திய நாடகம் தான் இந்த ரீட்டா விவகாரம்.

புளட் புலி .. போன்ற அன்றைய அமைப்புகளுக்கு எதிரான மக்கள் சார்ந்த போராட்டத்தை ஒடுக்க, தங்கள் மக்கள் விரோதத்தை தொடர நடத்திய நாடகங்கள் யமுனா ராஜேந்திரனுக்கு "பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தபட்ட" ஒன்றாக இருக்கின்ற அரசியல் பின்னணி சந்தேகத்துக்குரியது. வழமையான மார்க்சிய விரோத அரசியல் பின்புலத்தில் இந்த "பதிவு செய்யப்பட்ட, ஆவணப்படுத்தபட்ட" அரசியல் பற்றிய இவரின் நோக்கம், அதை ஜென்னியின் துணையுடன் முன்னெடுத்து செல்லும் பின்புலத்தை நாம் இனம் காணவேண்டும்.

இதே யமுனா ராஜேந்திரன் புலிப் பாசிசத்தைப் பலப்படுத்தி, புலிகளின் ஊடகமான ஈழமுரசில் வாரம்தோறும் தொடர்ந்து எழுதியவர் தான். இப்படி புலிப் பாசிசத்தின் பின் பிழைப்பு நடத்தியவர், இன்று குருபரனின் ஊடக வியாபாரத்துடன் கூடி நிற்கின்றார். இதில் இலங்கையில் கடந்தகால புரட்சிகர போராட்டத்தை கேவலமாக திரித்துக் கொச்சைப்படுத்தி, நிகழ்காலத்தில் புரட்சிகரப் பிரிவுகளை இழிவாட ஈ.என்.டி.எல்.எவ் துணையுடன் அதை முன்னெடுக்கின்றார். வழமையான அவரின் மார்க்சிய விரோத பிரச்சாரத்தின் ஒரு அங்கம் தான் இது.

இந்த வகையில் இதை எழுதுகின்றவர்களின், இவற்றை வைத்து ஊடகம் நடத்துபவர்களின் சமூக நோக்கம் தான் என்ன? எதற்காக இதைச் செய்கின்றனர்? இந்தப் பின்னணியில் இவர்களின் இந்தப் பிரச்சாரங்களையும் நாம் இனம் காணவேண்டும்.

பி.இரயாகரன்

25.05.2012

யமுனா ராஜேந்திரன் தொடர்புடைய சில கட்டுரைகள்

1. புலிகள் முற்போக்கான கொள்கைகளை தனக்குள் கடைப்பிடித்த ஒரு இயக்கமாம்! : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல்

2 புலிகள் முற்போக்கான சட்டங்களையம் திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 2

3. புலிகள் சாதி மறுப்பு இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 3

4. யமுனாவின் புலித் "தேசியமோ" சாதியை சமூகத்தில் ஒழிக்கத் தேவையில்லை என்கின்றது புலிகள் தாம் கடைப்பிடித்தால் சரி என்கின்றது : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 4

5. புலிக்கு "கரையார்" தலைமை தாங்கியதால் அது சாதியற்ற தேசியமாம் : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 5

6. யார் இந்த டயானா? ஒரு கவர்ச்சிக்கன்னி ஒரு மொடலிஸ்ட் ஒரு பணக்கார சீமாட்டி ஏகாதிபத்திய கலாச்சாரத்தைக் கோரிய பெண் 7. மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்

7. மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்

8. சதியாளர்கள் மூடிமறைத்துக் கோரும் தமிழீழம்

9. அழகியல் குறித்த உயிர்ப்பின் முதலாளித்துவ வக்காலத்துத் தொடர்பாக…….

10. புரிந்துணர்வு உடன்பாடும் மக்களின் அவலங்களும்

11. மார்க்சியத் தலைவர்கள் ஆணாதிக்கவாதிகளா?

12. மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால் 13. ஸ்டாலின் பற்றிய அவதூறுகளின் தோற்றமும்இ அதன் உள்ளடக்கமும்

13. ஸ்டாலின் பற்றிய அவதூறுகளின் தோற்றமும், அதன் உள்ளடக்கமும்

14. உழைக்கும் மக்களின் ஆட்சியை கோராத ஆய்வுகள் முதலாளித்துவ ஆய்வுகளை