Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதுதான் தமிழ் தேசியம் வெற்றிபெறாமைக்கான காரணம் என்கின்றனர். இதுதான் தமிழ் தேசியம் தோற்றமைக்கான காரணம் என்கின்றனர். தமிழ் தேசியத்தின் இன்றைய பலவீனத்துக்கு இதுதான் காரணமென்கின்றனர். இந்த மலட்டு ஒப்பாரிக்கு மட்டும் குறைவில்லை. இதன் மூலம் தமிழ் தேசியம் கோருவது தான் என்ன? ஐனநாயக மறுப்பைபும், பாசிசமயமாக்கலையும் தான். "ஒற்றுமை"யையும் "தமிழன்" அடையாளத்தையும் உருவாக்க, சுட்டுக்கொல்வதைத் தவிர அதனிடம் வேறு மாற்று அரசியல் வழி கிடையாது. இதுதானே உண்மை. இதை விரித்து ஆராய்வோம்.

முதலில் எது "ஒற்றுமைக்கு" தடையாக இருக்கின்றது? எது "தமிழன்" அடையாளத்துக்கு தடையாக இருக்கின்றது? சொல்லுங்கள்? தனி மனிதனின் கருத்தா? அவனின் செயற்பாடா? எதுவென்று சொல்லுங்கள்? தனிமனிதன் தன் கருத்தையும், செயல்பாட்டையும் தானாக நிறுத்திவிட்டால் அல்லது அதை பலவந்தமாக நிறுத்திவிட்டால் "ஒற்றுமையும்" "தமிழன்" அடையாளமும் வந்துவிடுமா!? சொல்லுங்கள். இதைத்தான் தமிழ் மக்கள் கோருகிறார்களா? சொல்லுங்கள்? மக்கள் தங்கள் வாய்களைப் பொத்திக்கொள்ள வேண்டுமா? சொல்லுங்கள்? சரி இப்படிச் சொல்லும் நீங்கள் யார்?

ற்றுமையையும் தமிழன் அடையாளத்தையும் நிறுவ நீங்களாக நிறுத்துங்கள் அல்லது நாங்கள் நிறுத்துவோம் என்று மேடைகள் முதல் எழுத்துகளிலும் முன்வைக்கின்ற கூச்சல்களுக்கு மட்டும் இன்றும் குறைவில்லை. இந்த வகையில் தனிமனிதனின் கருத்தை, செயல்பாட்டை நிறுத்த முனைகின்றனர். அவர்களைக் கொலை செய்வதன் மூலம், இதைத்தான் கடந்தகாலத்தில் தமிழ்தேசியமாக்கினர். இந்த சிந்தனைக்கு வெளியில் சுய அறிவு கிடையாது, சமூகப் பார்வையும் கண்ணோட்டமும் கிடையாது. 1970 கள் முதல் இப்படிப்பட்ட தமிழ் தேசியத்தை, தங்கள் வன்முறை மூலம் மக்கள் மேல் திணித்தனர். படிப்படியாக சமூகத்தை ஊனமாக்கி அதை தமக்கேற்ற பாசிசமாக்கினர். இதுதான் எங்கள் கடந்தகால தமிழ்தேசிய வரலாறு.

"ஒற்றுமைக்கு" தடையாக, "தமிழன்" அடையாளத்துக்கு தடையாக இருப்பது எது? தனிமனித கருத்தா!? தமிழனை தமிழன் ஒடுக்குவதா? சொல்லுங்கள். எது ஒற்றுமையைச் சிதைக்கின்றது. மாற்றுக் கருத்தா அல்லது அதை ஒடுக்கும் செயலா? எதுவென்று சொல்லுங்கள்.

தமிழனை தமிழன் ஒடுக்குவது தான் மாற்றுக் கருத்தாக, சிந்தனையாக, நடைமுறையாக வெளிப்படுகின்றது. இங்கு ஒடுக்குகின்ற சிந்தனையும், ஒடுக்கப்பட்டவனின் சிந்தனையும் என, இரு வேறுபட்ட சிந்தனைகள் வழிமுறைகள் நடைமுறைகள் உருவாகின்றது. இதனால் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான தனிமனித சிந்தனைகள் செயல்பாடுகள் உருவாகின்றது. தனிமனிதனைக் கொல்வதன் மூலம், அவனின் சிந்தனை செயல்பாட்டை நிறுத்துவதன் மூலம், தமிழன் ஒற்றுமை வந்துவிடாது. தமிழனை தமிழன் ஒடுக்குவது உள்ளவரை, ஒடுக்கப்படும் உணர்வுகள் அரசியல் எதிர்வினையாகின்றது. தமிழனை தமிழன் ஒடுக்கும் இந்தத் தமிழ் தேசிய வடிவத்தில், ஒற்றுமை என்பது, என்றும் சாத்தியமில்லை. தமிழனை தமிழன் ஒடுக்காத போது மட்டும் தான் ற்றுமை சாத்தியம். இதுதானே உண்மை. யார் தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்றனரோ, ஒடுக்க உதவுகின்றனரோ, அவர்கள் தமிழன் அடையாளத்தை சிதைக்கின்றனர், ஒற்றுமையை போட்டு உடைக்கின்றனர். இதைத்தானே தமிழ்தேசியம் இன்றுவரை தொடர்ந்து செய்கின்றது.

ற்றுமைக்கு அடிப்படையானவை எவை என்பதை இங்கு நாம் இனம் காண்கின்றோம். ஒற்றுமைக்கு தடையாக இருப்பதை அரசியல்ரீதியாக களைய மறுக்கின்றவர்கள் தான், ற்றுமைக்கு எதிராக இருக்கின்றனர். இதுதானே உண்மை. ஆனால் அவர்கள் தான், ஒற்றுமையின் பெயரில் வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். கொலைவெறி பிடித்து அலைகின்றனர். இவர்கள் தாம் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் உரிமையைத்தான், ஒற்றுமை என்கின்றனர். அதாவது தமிழனை தமிழன் சுரண்டவும், சாதிய ஆணாதிக்க பிரதேசவாத… சமூக ஒடுக்குமுறைகளை தமிழன் மேல் ஏவவும் உள்ள உரிமையைத்தான், தமிழ்தேசியம் ஒற்றுமை என்கின்றது. இதைத்தான் தமிழ் அடையாளம் என்கின்றது. இதை எதிர்ப்பதையும், சிதைப்பதையும் ற்றுமைக்கு பங்கம் என்கின்றனர். இப்படி தமிழ்தேசியம் குறுகியதாக, சிலர் நலன்பேணும் வண்ணம் உள்ள போது, எப்படி ஒற்றுமை வரும்? சொல்லுங்கள். ஒடுக்குமுறை செய்பவன்தான், தமிழனின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லவா! இதுதானே உண்மை.

ஒற்றுமைக்கு தடையாக இருப்பதையும், தமிழன் அடையாளத்துக்கு தடையாக இருப்பதையும், முதலில் நாம் இனம் கண்டு கொள்ளவேண்டும். இல்லாமல் மருத்துவம் செய்யமுடியாது. தமிழனை தமிழன் ஒடுக்குவதை இனம் காண்பதன் மூலம், அதை முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு தீர்க்கப் போராடுவதன் மூலம் தான் ஒற்றுமையை வந்தடைய முடியும்;. இதற்கு மாறாக இதை வெளிப்படுத்தும் நபர்களை, சமூகங்களை ஒழித்துக்கட்டும் தனிநபர் பயங்கரவாதம் மூலம், இந்த ற்றுமையை தமிழ்தேசியம் வந்தடைந்துவிட முடியாது. இதன் மூலம் வந்தடைய முடியும் என்பது, தமிழ் மக்களுக்கே எதிரானது. தமிழனுக்கு எதிராக தமிழனின் ஒடுக்குமுறையிலான சமூக முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலம் தான், மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனைகின்றது. இதை மறுக்கும் வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், இந்த ற்றுமையைக் கம்யூனிசம் என்று கூறி தமிழனை தமிழன் ஒடுக்கும் வன்முறையை ற்றுமை என கூறி, தம் பங்குக்கும் வன்முறையை ஏவுகின்றனர்.

இதற்கு உடன்படாதவர்களை போட்டுத்தள்ளுவது தான், தமிழனின் ஒற்றுமைக்கான வழி என்கின்றது. இன்றும் இதைத்தான் குறுந் தமிழ்தேசியம் முன்வைக்கின்றது. இதைத் தாண்டிய அரசியல் எதுவும், தமிழ்த் தேசியத்திடம் கிடையாது.

தமிழ்தேசியம் தனக்குள்ளான சமூக டுக்குமுறைகளை (சுரண்டல், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம் ….) போன்றவற்றை ஒழித்துக்கட்டும், அரசியல் செயல்திட்டத்தையும் நடைமுறையையும் மறுக்கின்றது. இதை ஒழிக்கக் கோருவதை ஒற்றுமைக்கு எதிரான ஒன்றாக, துரோகமாக இட்டுக்கட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்றது. இதை கம்யூனிசத்தின் கூறாகக் காட்டி, கம்யூனிசத்துக்கு எதிரான அரசியல் உணர்வாக இதை ஊட்ட முனைகின்றது. இப்படித்தான் குறுந் தமிழ்தேசியம் வக்கரிக்கின்றது. இது ஜனநாயக மறுப்பாக, பாசிசமாக வெளிப்படுகின்றது.

"ஒற்றுமை" "தமிழன்" என்ற அடையாள அரசியல் உள்ளடக்கம் இதுதான். இப்படி தமிழனை தமிழன் ஒடுக்கும் இந்த வலதுசாரிய வக்கிரம் தான், பண்பு ரீதியான அளவு ரீதியாக மாற்றம் பெறும் போது பாசிசமாக கொப்பளித்து வெளிப்படுகின்றது. இந்த ஜனநாயக மறுப்பு நடைமுறையில் வன்முறை வடிவம் பெற்று, சமூகத் தன்மை பெறும் போது, சமூக இயக்கமே பாசிசமாகின்றது.

தமிழ் தேசியம் என்பது தமிழனை தமிழன் அடக்கி ஒடுக்கும் மக்கள் விரோதக் கூறாகியது. புலிகள் இப்படித்தான் சமூகத்தில் இருந்தும் அன்னியமாகினர். அராஜகவாத மாபியா வன்முறைக் கும்பலாக செயல்பட்டனர். இதை மூடிமறைத்து அரசியல் மயமாக்க "தமிழன்", "ற்றுமை" என்ற கோசத்தின் கீழ், சமூகத்திற்கு எதிரான வன்முறையை தொடாந்து ஏவினர், ஏவுகின்றனர். ற்றுமையின் பெயரில் ஒற்றுமைப்படுத்த, தமிழனுக்கு எதிரான வன்முறை ஏவினர். இப்படி ஒற்றுமைக்கு வேட்டு வைத்தனர். தமிழன் பெயரில் தமிழனை அடையாளப்படுத்த வன்முறை ஏவினர். இதன் மூலம் தமிழன் அடையாளத்தை சிதைத்தனர்.

இது வெறும் புலிகளின் சித்தாந்தம் மட்டும் மல்ல, தமிழ்தேசியத்தின் வரட்டுச் சித்தாந்தமாக எங்கும் இருக்கின்றது. இதற்கு மாறாக ஒற்றுமைக்கு ஐக்கிய முன்னணியைக் கோருவதையோ, தமிழனுக்குள் உள்ள முரண்பாட்டை களைவதையே மறுக்கின்றனர். இந்த வலதுசாரிய பாசிசக் கோட்பாடுதான், "ஒற்றுமை" "தமிழன்" என்ற அடையாள அரசியல்.

தமிழனின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பது, தமிழனுக்குள் இருக்கின்ற ஒடுக்குமுறை. இதை களைய மறுப்பது தான் ஒற்றுமைக்கு எதிரானது. இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் புள்ளியில் தான், ஒற்றுமை ஏற்படுகின்றது. இதை மறுக்கும் புள்ளியில் ற்றுமைக்கு இடமில்லை. தமிழனை தமிழன் ஒடுக்கியபடி ஒற்றுமைப்படுத்துவது என்பது, வன்முறை மூலம் இதற்கு எதிரான கருத்தை செயலை ஒடுக்குவது தான். இதன் அளவு ரீதியான, பண்பு ரீதியான மாற்றம் தான் பாசிசம். இந்த வகையில் ஒற்றுமைக்கு எதிரான வன்முறையே, தமிழ்த் தேசியத்தின் அரசியல் பண்பாகும். அது ஜனநாயக மறுப்பை தன் அரசியலாக்கிக் கொண்டு, இன்று கொக்கரிக்கின்றது. பிழைப்புவாத சந்தர்ப்பவாத இடதுசாரியம் தமிழ் தேசியத்துடன் கொண்டுள்ள கள்ளக் கூட்டு மூலம், மீண்டும் இந்த தமிழ் தேசியம் மேல் எழமுனைகின்றது.

 

பி.இரயாகரன்

03.05.2012