Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆரியச் சடங்கை அடிப்படையாக கொண்டு உருவானதுதான் தீண்டாமைச் சாதியம். இந்த வகையில் உருவான வரலாறு, எப்படி எந்தக் காரணத்தினால் உருவானது.

1.அசுரர்கள், தாயூகள், கருப்பர்கள் என்று பலவாக தாமல்லாதவர்களை இழிவாடியும் ஒடுக்கியும், தம்மை வேறுபடுத்திய படி அவர்களை கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள் ஆரியர்கள். இவர்கள் தம்மைத்தாம் பஞ்ச சனங்கள் என்றனர். இப்படி தம் ஆரிய அடையாளத்தை அடிப்பiடாக கொண்டு, தம் நிறம் மூலம்; தம்மைத்தாம் வருண வேறுபாடக்கினர்.

இவர்கள் வெள்ளை நிறம் கொண்டவர்கள் என்பதால், கறுப்பு நிறம் கொண்ட இந்தியர்கள் இவர்களுக்கு இயல்பாகவே அன்னியர்களானார்கள்;. இப்படி நிற வேறுபாடு வெளிப்படையான ஒரு அடையாளமாகியது. தமது எதிரியை வகைப்படுத்திக் காட்டும் கறுப்பு அடையாளம் தான், ஆரியரின் முன் நிற வருணமாக விளங்கியது. இதனால் தான் வேதம் தாம் அல்லாதவரை கருப்பர்கள் (அசுரர், தாயூகள்) என்று கூறினர். இதன் மூலம் சமூகத்தில் வருண வேறுபாட்டையும், வந்தேறித் தன்மையையும் தெளிவாக வேறுபடுத்தி தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

2.இந்த வருண ஆரியர் இந்திய சமூகத்தில் சிதைந்த போது, வருண அடையாளமும் சிதைந்தது.  ஆரியரில் இருந்து சலுகைக்குரிய பூசாரி வர்க்கம், தன்னை மற்றவனில் இருந்த வேறுபடுத்துவதே  வாழ்விற்கான சமூக அடிப்படையாக இருந்தது. இதனால் தொடர்ந்து தம் நிற வருணத்தை, வருணமாக முதன்மைப்படுத்தினர். அவர்கள் ஊடாகத் தான் வருணம் அறிமுகமாகின்றது. இப்படி வருணம் திரிந்து, அதிகார வார்க்கத்தின் அடையாளமாகியது.

இந்த நிறம் வருணமோ, கறுபர்களை அடக்கியாளும் அதிகாரம் கொண்ட சமூகப் பிரிவின் பொது அடையாளமாகிய போது, அது நான்கு வருணமாகியது. வருண வேறுபாடு அடக்கியாண்டவனின் பொது அடையாளமாகியது. இப்படி வென்றவன் தமது அதிகாரத்தை (ஆரிய ப+சாரிகளுக்கு சுரண்டி ஆளத் தெரிந்திருக்கவில்லை) சலுகைக்குரிய வகையில் குறுக்கு வழியில் தக்கவைத்துக் கொண்ட போது, அங்கு வருணம் முதன்மை அடையாளமாகியது. இது பிளவையும் வேறுபாட்டையும் விதைத்தது. இப்படித் தான் இந்திய சமூகம், வர்க்க அமைப்பில் வருணமாக நுழைக்கின்றது. நிலவிய அதிகார மையங்களில் ஏற்பட்ட ஆளும் வர்க்கப் பிரிவினை, உயர் தகுதி உடைய வர்க்கங்களின் வருண அதிகாரமாகியது.

3.இந்த நிற வருணம் திரிந்தது. இயல்பாகவே ஆளும் வருணமாக, அது சுரண்டும் வர்க்க அமைப்பாகியது. அது வர்க்க வருணமாகியது.

4.ஆளும் வர்க்கங்கள் வருணமாக, சுரண்டிவாழும் பண்பு வருணமாகியது. இப்படி ஆளும் வர்க்கம் சார்ந்து, உயர் வர்க்கத்தினை அடையாளப்படுத்தும் வடிவங்கள் வருணமாகியது. இப்படி வருண நிறத்தை வர்க்கம் இல்லாதாக்கின்றது.

5.வருணம் சார்ந்த சுரண்டல் வர்க்கம், தனது வருண நிற அடையாளத்தை இழந்து போனது. வருணம் என்பது  சுரண்டும் வர்க்கமான போது, அது வர்க்க வருணமாக (நிறமற்ற வர்க்கமாக) திரிகின்றது. இங்கு வருண அடையாளத்தை, வர்க்கம் மேவுகின்றது. இது இரண்டு வடிவத்தில் நடக்கின்றது.

1.உழைப்பை நேரடியாக சுரண்டும் வர்க்கமாக ஆரியர் அல்லாத பிரிவுகளே இருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார சமூக அந்தஸ்தை, வருணமாக, தமக்கு நிகராக எஞ்சிய ஆரிய பூசாரிகள் அங்கிகரிக்க வேண்டி ஏற்படுக்கின்றது. இங்கு பூசாரிகளாக ஒடுங்கி எஞ்சிய ஆரியர், சலுகைக்குரிய பார்ப்பனனான். ஒரு சுரண்டும் வர்க்கம் உறுப்பாகத்தான், வருணத்தில் அறிமுகமாகின்றான்.

2.ஆரியருக்கு மனித உழைப்பை சுரண்ட தெரிந்து இருக்கவில்லை. அவர்களோ கொள்ளையடித்து வாழும், அரைக்காட்டுமிராண்டி நாடோடிகள். இதனால் மக்களை சுரண்டி ஆளத் தெரியாது, தொடர்ந்தும் கொள்ளையடிக்க முடியாது சிதைந்து போனார்கள். அதாவது உழைப்பை அறியாது, உழைத்து வாழ்ந்த வர்க்க சமூகத்தில் சிதைந்தனர். பூசாரிகள் ஆளும் வர்க்கத்துடனான இணக்கத்தை பெற்றதன் மூலம், தான் சலுகை கொண்ட ஒரு சுரண்டல் பிரிவாக தன்னை மாற்றிக்கொண்டது. தனது வருணத்தை ஆளும் வருணமாக அழைத்துக்கொண்டது. இங்கு வருண நிறத்தின் சிதைவு சுரண்டும் வர்க்கதில் (மேலேயும்), சுரண்டப்படும் வர்க்கத்தில் (கீழேயும்) நிகழ்ந்தது.

6.ஆரியர் தம்மை வேறுபடுத்திக் காட்ட, தாம் பின்பற்றிய தம் நிற வருணத்தைத்தான் வருண அமைப்பாக ஆரிய ப+சாரிகள் தம் சுயநலத்துடன் திரித்தனர். இப்படி நிற வருணம், வர்க்க வருண அமைப்பாக மாறியது.

7.வர்க்க அமைப்பை வருணமாக்கிய ஆரிய பார்ப்பனப் பிரிவு, அதை தனது பரம்பரை உரிமையாக முனைந்தது. இதைப் படிப்படியாக சமூகத்திடம் கோரினர். அதாவது சலுகையூடாக தான் சுரண்டுவதை, தனது பரம்பரை உரிமையாக கோரிய போது, அது திரிந்து சாதியமாகியது. பரம்பரை அலகுக்குள் ஏற்பட்ட வர்க்க ஏற்றுத் தாழ்வுகள், வருணத்தை சாதியமாகத் திரிந்தது.

பார்ப்பன் தன்னை மற்றவர்களில் இருந்து அடையாளப்படுத்திக் காட்ட, தனக்கு ஒரு பூனுலை போட்டுக் கொண்டான். இதை அணிவதை மற்றவர்களுக்கு தடை செய்தான். வருண (நிற) அடையாளத்தை இழந்து வர்க்க அடையாளத்தை வருணமாக பெற்ற பார்ப்பனன், பூனூல் மூலம் தன்னை சாதியப் பார்ப்பனாக வேறுபடுத்தினான். சில அடையாளங்களையும், வழிமுறைகளையும், வழக்குகளையும் சாதிக்குச் சாதி நிபந்தனையாக்கினர்.

8.வருணத்தை இழந்த வர்க்கம் அதாவது வருணம் கலந்த வர்க்கத்தில், தனது சலுகைக்குரிய சுரண்டல் தொழிலை பரம்பரை உரிமையாக்க கோரிய போது, அதுதான் சாதிய வடிவில் திரிகின்றது. இது படிப்படியாக சுரண்டல் தொழில்சார் பிரிவுகளின் பரம்பரை உரிமையாக, அது  பல முனையில் சாதியை உருவாக்கியது. இங்கு வர்க்கத்தை இழந்தவர்கள், இதை மீறியவர்கள் படிபடியாக புதிய சாதிகளாகினர். இதனால் கலப்புச் சாதிகளும், தொழில் பிரிவினையால் புதிய சாதிகளும் உருவாகின்றது.

இங்கு சுரண்டும் உயர் சாதியம் தான் பின்பற்றாத வாழ்வையும், தொழில்களையும் இழிவுக்குள்ளாக்குகின்றது. அதாவது அதிகம் சுரண்டப்பட்டதும், அதிக செல்வத்தை தராததும், அதிகம் மற்றவனுக்கு சேவை செய்யும் தொழில்களை, மேலும் இழிவுக்குள்ளாக்கியது. இதுவே தீண்டாமையை அடிப்படையாக கொண்ட வர்க்க சாதியமாகியது.

உயர் சாதிப் பண்பாட்டுக்கும், தாழ்ந்த சாதிப் பண்பாட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியும் அகலமாக்கினர். இதன் சமூக பொருளாதார அடித்தளம் மீதான வாழ்வின் ஏற்றுத்தாழ்வை அடிப்படையாக கொண்டு, சமூக இழிவையும் புனிதங்களையும் கற்பித்தனர். இதற்கு உதவிய மதமே, இதை கற்பிப்பதில் மிகமுக்கிய பங்குவகித்தது. பார்ப்பனக் கடவுளின் முன் (பார்ப்பனன் முன்) எது புனிதமோ, அது போற்றப்பட்டது. எது இழிவோ அது தூற்றப்பட்டது. இது சாதிய வடிவில் அனைவரினதும் மதக் கோட்பாடான போது, இழிவு புனிததுக்கு எதிரான தீண்டாமையின் முதுகெழும்பானது.

இதைச் சுருக்கினால்

1.கறுப்பரில் இருந்து தம்மை வேறுபடுத்தி வருண நிற ஆரியர்.

2.ஆரிய சமூகச் சிதைவால் எஞ்சும் நிற வருண ஆரிய பூசாரிகள்.

3.வர்க்க அமைப்பில் நிற வருண பூசாரிகள், நிறமற்ற வர்க்க வருண பூசாரிகள் (கலப்பு, மற்றும்; வெளியில் இருந்த வருதல்) உள்ளடங்கிய வருண அமைப்பாக திரித்தல்.

4.பார்ப்பனர் தமது வருணத்தை, சுரண்டும் வர்க்கத்தின் தகுதியை அடைப்படையாக கொண்டு வருணமாக  அவர்களுக்கு அங்கரித்தல். சுரண்டும் வடிவுக்கு அமைய,  நான்கு வருணமாக வகைப்படுத்தல்.

5.வ(ருண)ர்க்க அமைப்பில் பார்ப்பனர்களானவர்கள், தம் சலுகைக்குரிய சுரண்டலை பரம்பரை உரிமையாக்கியது.

5.பார்ப்பன பார்ப்பனியம் அனைவருக்குமானதாக திரிந்த போது, அது சாதியமாகியது.

6.பார்ப்பனிய சாதிய தனித்தன்மையுடன் கூடிய தூய்மை வாதம், தீண்டாமை கொண்ட சாதியாகியது.

இந்த படிநிலை ஒழுங்கு தான் சாதியத்தின் மூல தோற்றுவாய். பார்ப்பன பார்ப்பனியம் எப்படி சாதியாகியதோ, அப்படி தான் ஆரிய நிற வருணம், வருண வர்க்க அமைப்பாகியது. இப்படித் திரிந்த வருண அமைப்போ, நிறத்திலானதல்ல.

இப்படி உருவான பார்ப்பனியக் கோட்பாட்டின் மூலமான ஆரிய-வேதமோ, தாம் அல்லாதவரை கொள்ளையிட்டு சூறையாடி வாழ்ந்ததைப் பற்றியே பேசுகின்றது. அசுரர்கள், தாயூகள், கருப்பர்கள் என்று மற்றைய மக்கள் கூட்டத்தை கொன்று ஒழித்ததைப் பற்றியும், அவர்களை ஒழிக்க விரும்பியத்தைப் பற்றியும், தமது சடங்குகள் மூலம் பேசினர், போற்றினர்.

இந்த சடங்கின் ஊடாகத்தான், அதை தமக்கு ஏற்ப திரித்து சமூகத்தில் தொடர்ச்சியாக பிளவை வித்திட முடிந்தது. இதையே பார்ப்பனிய மதம் மூலம், சமூகத்தை சாதியமாக வித்திட முடிந்தது. நிற வருண பிளவையும், இந்த நீட்சியில் சாதியையும், சாதியத் தீண்டாமையை, தமது வர்க்க அடிப்படையில் உருவாக்கினர். இப்படி பார்ப்பனன் தான், பார்ப்பனிய மூலம் சமூகத்தை பிளவுபடுத்தினர். இதற்குள் தான் நிறம்சார் சுரண்டல் பிரிவினை முதல் சுரண்டல்சார் வர்க்கப் சாதிய பிளவுகள் வரை உருவாகியது. இதற்கென்று ஒரு நீண்ட தொடர்ச்சியான மனித வராலாறு உண்டு.

ஒன்றில் இருந்து ஒன்றும், ஒன்றில் இருந்து ஒன்று திரிந்தும், பல இடைப்பட்ட வழித்தடங்கள் ஊடாகத்தான், இன்றைய சாதிய தீண்டாமையை அடிப்படையாக கொண்ட சாதி சமூக அமைப்பு உருவாகியுள்ளது. சாதியம் தனித்து ஒரு சாதியாக வாழமுடியாது. ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றிலொன்று தங்கி இயங்குகின்றது. இப்படி வரலாற்றில் வேத-ஆரியம் பார்ப்பனியமாகி, இன்று இந்த பார்ப்பனியம் இந்துத்துவமாகிவிட்டது.

இதன் போக்கில் நிற வருணம் சாதிய தீண்டாமைச் சமூகமாக மாறிய வரலாறு எங்கும், சுயநலத்துடன் கூடிய பார்ப்பன நலனை அடிப்படையாக கொண்ட சிந்தனையும், செயலும், நடைமுறைகளும் உண்டு. இதற்கென்று சித்தாந்தமும், கோட்பாடுகளும் உண்டு. அதுவே இன்று இந்துத்துவமாக உள்ளது. இந்த பார்ப்பன பார்ப்பனிய நலன்கள் சமூகமயமாகி விட்டதால்தான், இது இன்று இந்துத்துவ பார்ப்பனியமயமாகி நிற்கின்றது. இன்று இது ஜனரஞ்சமாக வடிவமெடுத்துள்ளது. இதுவே எங்கும் நிலவும் சாதியமாக, சுரண்டல் நலன் கொண்ட சமுதாயமயமாகிவிட்டது. இது இதனால், பார்ப்பனச் சாதியை கடந்து சமூகத்தை பார்ப்பனியம் ஊடாக சுரண்டி ஒடுக்குகின்றது. அதாவது பார்ப்பனச் சாதிய நலனைக் கடந்து, சமூகத்தின் மற்றவனை அடக்கியாளும் பிரிவுகளின் பொது நலனாகி விடுகின்றது. நிற வருணப் பிளவு சாதிய வர்க்கப் பிளவாக மாறியது முதல், இது வெறும் பார்ப்பன சாதிய நலனாக மட்டும், மிகக் குறுகிய எல்லையில் இயங்கவில்லை. அது பன்முகத் தன்மை கொண்ட ஒன்றாக, மக்களை அடக்கியாளும் பிரிவின் மொத்த நலனுமாக இயங்குகின்றது. ஆளும் வர்க்கமாக, ஆளும் அனைத்துப் பிரிவின் சமூக அங்கமாகிவிட்டது. அதாவது இது சாதியை அடிப்படையாக கொண்ட, பார்ப்பனியமாக கோலோசி நிற்கின்றது. நிலவும் சுரண்டல் அமைப்பின் நெம்புகோலாகத்தான், பார்ப்பனியம் இன்று சாதி வடிவில் தொடர்ந்து இயங்குகின்றது. இன்று இதை வெறுமனே பார்ப்பனிய சாதிக்கு எதிராக மட்டும் காட்டுவது, காட்ட முனைவது கூட உள்ளடக்க ரீதியாக பார்ப்பனியம் தான்.

இதை மறுப்பது, பார்ப்பனியம் இயங்கும் விரிந்த சமூகத் தளத்தை மூடிமறைப்பதாகும். இது உருவாக்கி வைத்திருக்கும், சாதிய தீண்டாமையை அடிப்படையாக கொண்ட இந்துத்துவ சுரண்டல் சமூகத்தை மறுத்தலாகும்.

15.கொள்ளையடிக்க வழிகாட்டிய கடவுளே, வேதக் கடவுள்கள் - சாதியம் குறித்து பாகம் - 15

14.ஆரியரின் இரத்த உறவு வழிவந்தவர்கள் அல்ல, அனைத்து பார்ப்பனர்களும் - சாதியம் குறித்து பாகம் - 14

13.பார்ப்பனப் பண்பாடு மிக இழிவானதாக உருவானது எப்படி? - சாதியம் குறித்து பாகம் - 13

12.பார்ப்பனரை மற்றயை பூசாரிகளில் இருந்து வேறுபடுத்தியது எது? - சாதியம் குறித்து பாகம் - 12

11.சமஸ்கிருதம் என்னும் தனி மொழியின் தேவை, ஏன், எதனால் எழுகின்றது? - சாதியம் குறித்து பாகம் - 11

10.தந்தைவழி தனிச்சொத்துடமைதான், ஆரிய-வேதச் சடங்குகளை சிதைவில் இருந்து மீட்டது : பாகம் - 10

9.ஏன் இந்திய சமூகத்தில் ஆரியர் சிதைந்தனர்? - சாதியம் குறித்து பாகம் - 09

8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08

7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு

6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06

5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05

4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01