Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று காய் நகர்தல் தான், தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டம் என்கின்றனர். இப்படி வலது இடது அரசியல் பொறுக்கிகள், ஒரு புள்ளியில் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். இனவாதம் பேசும் வலதுசாரி தமிழ்நெற்றில், இடதுசாரிய சண்முகரத்தினம் கூறுவதைப் பார்ப்போம்.

"When sections of articulating Tamils fail at such a time as this in justifying the need for Tamil independence and in independently demanding the powers to recognize Tamil liberation, some world leftist circles currently misinterpret it as pro-imperialist tendency inherent to the Tamil struggle. Colombo is now capitalizing on it for justifying its genocide as its struggle against an imperialist plot and thus painting a sympathetic picture to the naive third world that it is a state standing up to the powers. The Tamil struggle is doubly penalized by the internal failure of its elite, Tamil circles pointed out, adding that some of the best Tamil minds should come forward in arguing for the due status of the struggle in the international arena, leading to Eezham Tamil independence."

 

முழுமையாக பார்க்க இதை அழுத்தவும்.  http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31990

மேற்கூறிய கூற்றின் தமிழாக்கம் "தேர்ச்சிபெற்ற தமிழ் அரசியல் சக்திகளின் ஒரு சில பகுதியினர் தமிழர்களின் விடுதலையின் நியாயப்பாட்டை எடுத்துரைப்பதிலும் அதற்கான அங்கீகாரத்தையும் கோரி நிற்கும் பணியில் முன்னேற முடியாமலிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். இதன் மூலம் இனவழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு முன்றாம் உலக நாடுகளின் மத்தியில் தாங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கின்றோம் என்ற விம்பத்தை உருவாக்குவதற்கு இந்த விளக்கத்தை அவர்கள் தம்வசப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் போராட்டமானது இவ்வாறான  உள்ளக சக்திகளினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறது என தமிழ் வட்டாரங்களால் கருதப்படுகின்றது. மேலும் சிறந்த ஆற்றலுடைய தமிழ் சிந்தனையாளர்கள் ஈழத் தமிழர் சுதந்திரத்திற்கு சர்வதேச அரங்கில் நியாய வலுச்சேர்க்கும் போராட்டத்தில் இணைய முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்"

நோர்வே இடதுசாரிய பிரமுகராக, மார்க்சியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் சண்முகரத்தினம் கூட்டிணைக்கும் தமிழ் வட்டங்கள் தான் தமிழ்நெற்றில் இப்படிக் கூறுகின்றனர். எமக்கு எதிரான அரசியல் போராட்டத்தை, வலதுசாரிய தமிழ்நெற்றில் தொடங்கியுள்ளனர். மறுதளத்தில் ஏதோ வழக்குப் போடப் போவதாக, நோர்வேயில் அரசியல் பேசும் பச்சோந்திகள் வழியாக மிரட்டும் செய்திகள் சில  வெளிவருகின்றது. இது ஒருபுறம் இருக்க முதலில் சண்முகரத்தினத்தின் இடதுசாரியம் என்பது, மக்களை சார்ந்து நின்று, மக்களை அணிதிரட்டும் அரசியலை முன்வைத்து அரசியல் பேசுவதோ, பேசியதோ கிடையாது. கடந்த 30 வருடத்தில் இலங்கை, வலதுசாரிய சிங்கள தமிழ் பாசிட்டுகளால் குதறப்பட்டது. தமிழ் - சிங்கள - முஸ்லீம் என்று, குறுகிய இனம் சார்ந்த வலதுசாரிய கும்பல்களால் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.  இதை செய்வதில் அவர்கள் தமக்கு இடையில் எந்த அரசியல் வேறுபாடுமின்றி இருந்தனர். இது எம் வரலாறு.

இந்த இடத்தில் ஒரு இடதுசாரியாக பாதிக்கப்பட்ட மக்களை சார்ந்து நின்று, பேராசிரியர் சண்முகரத்தினம் போன்ற அரசியல் பிரமுகர்கள் குரல்கொடுத்தது போராடியது கிடையாது. பேராசிரியர் சிவத்தம்பி போன்று, அரசியல் பச்சோந்தித்தனத்தைக் கொண்டு, மக்களை மேய்ந்தனர். அடையாள அரசியலை முன்னிறுத்தி, தங்கள் பிரமுகர் தனத்தைக்கொண்டு சமூகத்தை ஏய்த்துப் பிழைத்தனர். முரணற்ற வகையில், சமூகத்தில் நடந்த நிகழ்வுகளை மக்களைச் சார்ந்து நின்று குரல்கொடுத்தது கிடையாது.    

இந்த வகையில் கடந்த காலத்தில் மக்களை முன்னிறுத்தி, தங்களை அரசியலை நடைமுறை ரீதியாக முன்னெடுத்தது கிடையாது. மாறாக வலதுசாரிய அரசியல் போக்குடன், சக பயணியாக பயணித்து இடதுசாரியத்தை கலந்து விட்டனர். இந்த வகையில் தான் 09.06.2010 வலதுகள், இடதுகள், ஏகாதிபத்தியங்களும் கூடிய ஒரு கூட்டத்திலும், தங்கள் பிரமுகர்தனமான இடதுசாரியம் மூலம் அரசியல் அழுகுண்ணி ஆட்டத்தை ஆடினர். இதை நாம் அம்பலப்படுத்தியவுடன், அவர்களின் சீடர்கள் வாள்களைச் சுழற்றுகின்றனர். யார் இதை எழுதியது என்று, வலைபோட்டுத் தேடினர். கட்டுரையின் தகவல் தவறு என்றால் அதை, அவர்கள் தெளிவுபடுத்த முடியும். அதில் சொன்னது போல் உங்கள் அரசியல் உள்ளடக்கம் அதுலல்ல என்றால், அதை மறுத்து உங்கள் சரியான அரசியல் நிலையை தெளிவுபடுத்த முடியும். இதை செய்யும் அரசியல் நேர்மையும், வெளிப்படையான அரசியல் அணுகுமுறையும் அவர்களிடம் கிடையாது. எழுதிய ஆளைத் தேடுகின்றனர். வழக்கு போடுவோம் என்று மிரட்டுகின்றனர். தங்கள் அரசியல் அழுகுண்ணி ஆட்டத்தில், இதைத்தான் அவர்கள் நாடமுடியும். மக்களைச் சார்ந்து நின்று போராடவும், தங்கள் சரியான நிலையை தெளிவுபடுத்தவுமா முடியும். தாங்கள் அம்பலமாவதைத் தடுக்க, ஏகாதிபத்திய சட்டம் தமக்கு உதவுமா என்று சட்டத்தை மேய்கின்றனர். தமிழ்மக்களின் உரிமையை ஏகாதிபத்திய தயவில் கோருபவர்கள் இப்படித்தான் அணுகமுடியும். (குறிப்பு : இவர்களின் சீடர்கள் ஆளைத் தேடி வாளைச் சுழற்றிய போது, அந்த வாளுக்கு இரையாக்க தமயந்தியை குறிவைத்து எமக்கு போட்ட பின்னோட்டங்களோ நாற்றம் கொண்டவை. நாம் அதை அனுமதிக்கவில்லை.) இவர்கள் எல்லாம் சேர்ந்து வழக்குப் போடப்போகின்றார்கள். 

இப்படியிருக்க 17.06.2008 தமிழ்நெற்றில் சண்முகரத்தினத்தின் புதுப் பேட்டி வருகின்றது. வலது இடது இணைப்பிலான அரசியல் அசிங்கத்தின் பலமுனை கொண்ட பல விடையங்கள் உள்ளடங்கியது. இருந்த போதும், குறிப்பாக ஒரு விடையத்தை மட்டும் இங்கு எடுக்கின்றோம்.

"தேர்ச்சிபெற்ற தமிழ் அரசியல் சக்திகளின் ஒரு சில பகுதியினர் தமிழர்களின் விடுதலையின் நியாயப்பாட்டை எடுத்துரைப்பதிலும் அதற்கான அங்கீகாரத்தையும் கோரி நிற்கும் பணியில் முன்னேற முடியாமலிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். இதன் மூலம் இனவழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு முன்றாம் உலக நாடுகளின் மத்தியில் தாங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கின்றோம் என்ற விம்பத்தை உருவாக்குவதற்கு இந்த விளக்கத்தை அவர்கள் தம்வசப்படுத்தியிருக்கிறார்கள்."

இப்படி எம்மை நோக்கி குறிவைத்த அம்புகள். "சில உலக இடதுசாரிகள்" என்பதன் மூலம் பல இடதுசாரிகள் வலது இடதுமற்ற, எந்த மாற்று அரசியல் வழியுமற்ற வலதுகளின் பின் கூடிக் கூத்தாடுவதை சரியென்று இதன் மூலம் கூற முற்படுகின்றார். இந்த புள்ளியில் தான்,   ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் இலங்கை அரசுக்கு சார்பானது என்கின்றனர். அதாவது ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்கின்ற, தமிழ் தேசியம் பேசும் போராட்டத்தை எதிர்ப்பது, இலங்கை அரசுக்கு சார்பானது என்கின்றனர்.

இந்த அரசியல் தர்க்கத்தை சண்முகரத்தினம் தமிழ்வட்டங்கள், புலியெதிர்ப்பு பேசி மகிந்த பாசிசத்தை ஆதரித்த அரசியல் பின் தளத்தில் இருந்து பெறுகின்றனர். யுத்தம் தீவிரமாகி புலி அழிவின் போது, புலியெதிர்ப்பு இடது அரசியல் பேசிய கூட்டம் இதை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராகக் காட்டி அதை ஆதரித்தனர். அதையே தலைகீழாக்கி, தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மேற்கை எதிர்ப்பதை, மகிந்த ஆதரவு என்று புலியாதரவு இடதுசாரி கும்பல் காட்ட முனைகின்றது. இதையே சண்முகரத்தினம் தமிழ் வட்டங்கள் வலதுசாரிய தமிழ்நெற்றில் கூறுகின்றனர்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, சாராம்சத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டது. இதுவல்லாத அரசியல் அனைத்தும், தேசிய விடுதலைப் போராட்டமல்ல. இது அரசியல் அடிப்படையாகும். மார்க்சியம் பேசியபடி சமுத்திரன் என்ற பெயரில் "புதிய ஜனநாயக புரட்சி ஏன்"  என்று, அன்று சண்முகரத்தினம் எழுதிய நூலை அன்று என்.எல்.எப்.ரி. வெளியிட்டது.

குறைந்தது இதனடிப்படையில் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் மட்டுமன்றி, தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நடத்த வேண்டும். ஆனால் தங்கள் கடந்தகால அரசியலை துறந்தோடும் இடதுசாரிய கூட்டம், வலதுசாரி பாசிசத்துடன் இடதுசாரியத்தை புகுத்துவது பற்றி சதா நினைக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமை என்பது, "சிங்களவனிடம்" பெறுவதல்ல. அப்படியொரு உரிமையை சிங்கள மக்கள் கொண்டிருக்கவில்லை. ஆளும் வர்க்கங்கள் சிங்கள மக்களின் உரிமையை மட்டுமின்றி, தமிழ் மக்களிடம் தமிழன் என்ற அடையாளம் மூலம் மேலதிகமான உரிமைகளை மறுக்கின்றான். அதை அவன் செய்வது, தன் வர்க்க நலனுக்காகவும், ஏகாதிபத்திய  நலனுக்காகவும் தான். சிங்கள மக்களின் உரிமைகளை மறுப்பதை மூடிமறைக்க, தமிழ் மக்களை எதிரியாக காட்டி மேலதிகமாக ஒடுக்குகின்றான்.

உலகம் என்பது ஏகாதிபத்திய வர்க்க நலனுடன் பின்னிப்பிணைந்தது. எந்த மக்களும் ஏகாதிபத்தியம் சார்ந்து நின்று, எந்த உரிமைகளையும் பெறமுடியாது. ஏகாதிபத்தியம் மக்கள் நலன் பற்றி பேசுகின்றது என்றால், அவன் தன் நலனை அடைவதற்காகத்தான். இதை பயன்படுத்துவதன் மூலம், மக்கள் நலனை அடைய முடியும் என்று கூறுபவன், தன்சொந்த தனிப்பட்ட நலனை அடையத்தான். இந்தியாவைப் பயன்படுத்தி போராடுவதாக கூறிய எமது போராட்டத்துக்கு, என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இது நல்ல படிப்பினையாக இருந்த போதும், மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொள்ளும் புத்திஜீவிகள் இதை தொடர்ந்து வழிகாட்டுகின்றனர்.

கேள்வியே இது தான். இன்று நிலவும் தமிழ்தேசிய போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டதா?  இல்லை என்றால், அது ஏகாதிபத்தியம் சார்பானது. இப்படியிருக்க "சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள்." என்றால், இப்படிக் கூறுபவர்கள் யார்? மக்களின் எதிரிதான். ஏகாதிபத்திய எடுபிடிகள்தான். (தொடரும்)

பி.இரயாகரன்
18.06.2010
           

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது