Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் மக்கள் மேல்,  அரசு மட்டுமல்ல புலிகளும் கூடத்தான் போர்க் குற்றத்தை இழைத்துள்ளது. இரண்டுக்கும் எதிராக போராடாத அதை அம்பலப்படுத்தாத அனைவரும் புலிகளே.  இதுதான் தமிழ்மக்களின் பெயரில் யார் புலி பினாமிகளாக உள்ளனர் என்பதை இனம் காட்டுகின்றது.

ஜனநாயகம் வேஷம் போடத் தேர்தல். வெள்ளைக்காரரை ஏமாற்ற தாங்கள் புலிகளல்ல என்று கூற வெள்ளைவேட்டி.

இதை அம்பலமாக்கிய போது பாசிசப்புலிகளின் பகிரங்க அச்சுறுத்தல். நோர்வே தொரம்சோவில் தனியாக நின்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்ணை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்மத்துடன் அச்சுறுத்தினர் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் உள்ளுர் கையாட்கள்.

தொரம்சோ நகரத்தில் ஜக்கிய நாடுகள் கழக சர்வதேச மக்கள் வாரத்தில் தான் இது நிகழ்ந்தது.  பலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தரும் திறந்தவெளி அரங்கப் பேச்சைக் கேட்பதற்காய் வந்திருந்த மக்கள் மத்தியில் வைத்து, இந்த மிரட்டல் உத்தரவு இவர்களால் பிறப்பிக்கப்பட்டது. இந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் யாருமல்லர். புலிகளுக்கான நிதி சேகரிப்பாளராய் இயங்கிய இயங்கும் ஒருவரும், நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் பிராந்திய வேட்பாளராய் தேர்தலில் பங்கேற்று பிரதிநிதியாகிய இன்னுமொருவருமாக சேர்ந்து துண்டுப்பிரசுத்தை விநியோகித்த பெண்ணை அச்சுறுத்தினர். இவர்கள்  நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் உள்ளுர் கையாட்களாகும்.

 

நோர்வே ஈழத் தமிழர் பேரவையின் வட பிராந்தியத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ரூபன் ஜயாத்துரை. (மிரட்டிய நபர்களில் ஒருவர்)

 

விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் (நோர்வே மொழியில்). இத் துண்டுப்பிரசுரத்தின் ஒரு தொகுதி  நோர்வேயின்   Bodo என்ற நகரத்திலும் தொரம்சோ பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன கருத்தரங்கொன்றுக்கு சமூகம் தந்தவர்களிடையேயும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

பேரினவாத பாசிசத்துக்கும், பாசிசப் புலிகளுக்குமிடையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாய் அகப்பட்ட தமிழ்மக்களின் மூன்று தசாப்த கால போராட்டம் அவலத்தில் முடிந்ததை நோர்வே மொழியிலான துண்டுபிரசுரம் மூலம் அம்பலப்படுத்தினர். இவர்கள் மக்களுக்கு இழைத்த தாங்கொணாத துன்பங்களை  தெளிவுபடுத்தும் வகையில் இவ்விரு பாசிசப் போக்குகளாலும் நிகழ்த்தப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்களுக்காக விசாரணையைக் கோரி  துண்டுப்பிரசுரம் ஒன்றினை நோர்வேஜிய மொழியில் வெளியிட்டு விநியோகித்தபோது இப்பெண்ணை இந்நபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நோர்வேஜியர்களின் கவனம் பலஸ்தீனம் பற்றிய சொற்பொழிவில் ஊன்ற ஆரம்பித்த தருணமாய் பார்த்து இந்தப் பெண்ணை இவர்கள் சூழ்ந்து கொண்டனர். “தவறான தகவல்களோடு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கிறீர்கள்” என்றும் அதனை நிறுத்தி அவ்விடத்தை விட்டு உடனடியாக அகலுமாறும் இல்லாவிடில் வீண்பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடும் எனறு கைகலப்பு பாணியில் நெருங்கி நின்று கொண்டு அச்சுறுத்தும் வார்த்தைகளை அள்ளி வீசினர்.

நிலைமையின் இறுக்கத்தை உணர்ந்த அப்பெண் சற்று ஒரடி ஈரடிகள் தள்ளி நின்ற தன்னுடைய கட்சியின் பெண் உறுப்பினரை தன்னை நோக்கி எட்டி இழுத்து அழைத்தார்.  “துண்டுப்பிரசுரம் விநியோகிக்க வேண்டாம் உடனடியாக இவ்விடத்தை விட்டுப் போகும்படி என்னை இவர்கள் எச்சரிக்கின்றனர்” என்று அவரிடம்  கூறியபோது வழமையான தமது பாசிச குணத்தினை மறைக்கும் நோக்கில் தமிழில் அச்சுறுத்தும் தமது தொனியை மாற்றி நோர்வேஜிய பாசையில் அவர்கள் உரையாடலை நைசாக மாற்றினார்கள்.

"எந்த விவாதத்துக்கும் இங்கு இடமில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் உரிமையை இங்கு யாரும் தடைபோட முடியாது” என்று  ஆணித்தரமாக பதிலிறுத்த அந்த நோர்வேஜிய பெண்ணிடம் மேலும் தங்கள் பாசிச குணாம்சத்தை அமபலப்படுத்துவானேன் என்றெண்ணினார்களோ என்னவோ அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. துண்டுப்பிரசுர விநியோகம் அதன் பின்னர் தொடர்ந்தது.

இங்கு பாரதூரமானது என்னவெனில் புலிகள் தங்கள் அதே நிறுவனமயப்பட்ட பாசிச நடவடிக்கைகளை வேறு பெயர்களில் அவர்கள் உருவாக்கும் அமைப்புகளினூடாக தொடர்கிறார்கள், தொடரப் போகிறார்கள் என்பதையே இந்த நடவடிக்கை இத்தனை வருட அவலங்களுக்குப் பின்னாலும் காட்டிநிற்கின்றது.

இது நோர்வேக்கு மட்டுமான நிகழ்வானதாக நாங்கள் குறுக்கி எங்கேயோ நடந்ததென வாழாதிருப்போமாயின் மீண்டும் ஒரு பாசிச வழிக்கான ஆரம்பத்தை அனுமதித்தவர்களாவோம். எப்படி அன்று விடுதலை என்ற பெயரில் பாசிச அராஜகப் போக்குகள் முளைவிட்டு நச்சுவிருட்சமாகி தமிழ்மக்களை அச்சுறுத்தி அடக்கியொடுக்கியதோ அவர்களின் விடுதலையை துவம்சம் பண்ணினவோ அதே போக்கை நாம் மீண்டும் இன்றும் மவுனமாக அனுமதித்தவர்களாவோம்.

தமிழ்மக்களை மீண்டும் இந்தப் பாசிசப்படுகுழியில் தள்ளிவிட புலிகள் மட்டுமல்ல பேரினவாத சக்திகளும் பதுங்கியிருக்கிறார்கள். புலிகளின் இந்தப் போக்கு மீண்டும் மக்களை படுகுழியில் தள்ளிவிடுவதில் மட்டும் தான் முடியும்.

இந்த மிரட்டல் விட்ட நபர்கள் அன்றைய பாசிச இயக்குனர்கள் வன்னிப் போர் பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டிருந்தபோது கடைசி நிமிடம் வரையும் புலிக்காக நிதி சேகரித்தவர்கள். தற்போதைய நோர்வே ஈழத்தமிழர் பேரவைக்குள் ஜனநாயக முகமூடியுடன் நுழைந்திருக்கிறார்கள். இலங்கை தமிழ்மக்களின் போர் அழிவுகளை சித்திரக்கண்காட்சி மூலம் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியினை அந்தப் போர்வைக்குள் நடாத்தினர்.

இந்த மிரட்டல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தலைவரை இந்தப் பெண் தான் அங்கம் வகிக்கும் கட்சியின் நாடாளவிய மாநாட்டில் கலந்து கொண்டபோது தலைநகர் ஒஸ்லோவில் சந்தித்திருந்தார்.

நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா

இந்த மாநாட்டு நிகழ்ச்சி நிரலில்,  நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் சொற்பொழிவொன்றும் சேர்க்கப்பட்டிருந்ததை இந்தப் பெண் சுட்டிக்காட்டி, அது ஒரு புலிப்பினாமி அமைப்பென்பதை தனது சக கட்சி அங்கத்தவர்களிடையே சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதை வேறொருவர் மூலமான தெரிந்து கொண்ட அங்கு வருகை தந்திருந்த அதன் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா தனது சொற்பொழிவு நேரத்துக்கு முன்னதாக இப்பெண்ணை அணுகி ஈழத்தமிழர் பேரவை புலிகளின் ஒரு பகுதியோ அல்லது புலிகள் அமைப்போ அல்ல என்றும் கருத்துரைத்திருக்கின்றார்.

அந்தப் பெண் அவருடைய வாதங்கள் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவருடைய சொற்பொழிவின் பின்னரும் தொடர்ச்சியாக அந்த அமைப்பு புலிப்பினாமி அமைப்பே தான் என்று தனது சக கட்சி உறுப்பினரிடம் இந்தப்பெண் வலியுறுத்தி பேசினார் என அறிய வருகிறது. தேர்தல்களை கண்துடைப்பாய் நடாத்தி தங்களை ஜனநாயகப் போர்வைக்குள் போர்த்திக் கொண்டவர்களே இவர்கள். புலிகள் தோற்கடிக்கப்படும் வரை புலிகளுக்கான அனைத்து பொறுப்புகளையும் சுமந்த நபர்களின் பினாமிக் கூட்டுத்தான் இது என அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்துகொண்ட நோர்வே ஈழத்தமிழர் பேரவையின்  பெருந்தலைவரோ -பஞ்சகுலசிங்கம் கந்தையா – இந்தப் பெண்ணின் மின்னஞ்சலை யாரிடமிருந்தோ துழாவி எடுத்து பொது வாதங்களை தனியாக கையாண்டு இப்படிப்பட்ட குரல்களை வெளியே வராமல் தனியாக கையாண்டு அடக்கலாம் என்ற வகையில் மின்னஞ்சல் மூலமாக மீண்டும் தனிப்பட்ட இருவருக்கிடையிலாக வாதமாக அதைக் குறுக்கிக் கையாளும் நரித்தனத்தை செய்தார்.

தான் தனது மின்னஞ்சலை தானாகவே வழங்காதவிடத்து மின்னஞ்சல் மூலம் ஒரு புலி சார் நபர் தன்னை தொடர்பு கொண்டாலே அது வில்லங்கம் என்று நினைக்கும் அச்சமான சூழலை புலிகளே விளைவித்த பின்னால் இப்படியொரு மின்னஞ்சலை தேடித்துழாவி எடுத்து தொடர்பு கொள்கின்றபோது தன்னைத் தொடர்ந்து வில்லங்கம் ஒன்று பின்தொடர்கின்றது என்றே பொதுவில் எவரும் உணர்வர்.

அத்தோடு தனது பதவிப் பெயரை பிரத்தியேகமான மின்னஞ்சலில் கூட தனது பெயரின் கீழ் குறிப்பிடத் தவறாதவராய்  தனது மின்னஞ்சல் பெறுபவர்களை கல்விசார் தாழ்நிலைக்கு ஏற்படுத்தலாம் என்ற அறிவுமேலாண்மை இறுமாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நோக்கில் இதை பயன்படுத்துகின்றார். பகிரங்க பொதுச்சபையொன்றில் இப்பெண்ணால் தனது சக கட்சி உறுப்பினர்களிடையே நடந்த நாடுதழுவிய மாநாட்டில் எழுப்பப்பட்ட பொதுவான எதிர்நிலை நின்ற கருத்துக்களுக்கு பொதுவிடத்தில் அல்லது பொதுத்தளத்தில் பதிலிறுக்கும் நாகரீகத்தை மறுத்து இப்படி மறைமுகமாக மிரட்டுகின்றனர். நாட்கள் கடந்தபின்னர் இரு தனிநபர்களுக்கிடையிலான சம்பாசணையாக அதனை மாற்றி குறுக்கி கிள்ளி எறிந்துவிடலாம் என்ற நோக்கிலும் இப்படி கேள்விகள் எழுப்புவோரின் தற்துணிவுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர் கனவு கண்டிருக்கிறார்.

தனியான நபராக இப்படி கையாள்வதன் மூலம் அவர்களைத் தனித்து மடக்கி,  இப்பொதுக் கேள்விகள் சந்தேகங்கள் மேலெழாவண்ணம் நோர்வேஜிய மக்கள் மத்தியில் தாங்கள் அம்பலமாகாது தப்பித்து தங்கள் பாசிச முகங்களை மறைத்து பொய்கள் மேல் குந்தியிருக்கலாம் கட்டவிழ்த்து விடலாம் என்பது இவர்களது நடைமுறை.

தனியான பிரச்சனையாக அதனை இழுத்து குறுக்கிவிடலாம் என்ற அதே புலிப்புத்தியுடன் இதே பெண்ணுக்கு எழுதிய மின்னஞ்சலின் இறுதி அத்தியாயம் தான் இந்த நேரடி மிரட்டலாக நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் தொரம்சோ பிராந்திய உறுப்பினர்களால் வன்மத்துடனான பாசிச அச்சுறுத்தலில் முடிந்திருக்கிறதா அல்லது தொடருமா என்பதே இன்றுள்ள கேள்வி.

பொதுவிவாதத்திலிருந்து நழுவலாம் என்ற எண்ணப் போக்கில் பொதுவான எந்தக் கேள்விகளிலிருந்தும் நழுவும் மூடிமறைக்கும் போக்கில் எழுதிய மின்னஞ்சல்களின் தமிழாக்கம் இங்கே தரப்படுகின்றது.

முதலாவது மின்னஞ்சல்
—————————————————————————————————————————————

Fra: Panchakulasingam, Kandiah <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Emne: rødt landsmøte
Dato: Tirsdag 1. juni 2010 11.01

Hei!

Takk for sist. Jeg har snakket med Bjørnar Moxnes som påstod at du hadde fremstilt NCET som en del av LTTE. Det er helt feil. NCET er en demokratisk valgt organisasjon (med 3000 stemmer i Norge) som skal jobbe for tamilenes rettigheter og frihet i Tamil Eelam.

Som politikker har du et ansvar og du må ikke spre feil informasjon. Jeg som leder for NCET ser svært alvorlig på dette. Håper det bare var en misforståelse og du blir også med oss for å kjempe for et fritt tamil Eelam.

Hilsen
Overlege Panchakulasingam Kandiah
leder, NCET.

 

 

ஹேய்!

வணக்கம். நான் கதைத்தபோது அவர் சொன்னார்; நீர் NCET ஐ LTTE இன் ஒரு பகுதி என்று கருத்து  வெளியிட்டதாக. அது தவறு. NCET தமிழீழத்திலுள்ள தமிழரின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும்  வேலை செய்வதற்காக ஜனநாயக முறையில் தெரிவு செய்யபப்பட்ட அமைப்பு (நோர்வே இல் 3000 வாக்குகள்). …………. நீர் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் உமக்கு பொறுப்பு உள்ளது. அதனால் நீர் தவறான தகவல்களைப் பரப்ப கூடாது. …NCET இன் தலைவரான நான் இதனை பாரதூரமான விடயமாக பார்க்கிறேன். புரிதலில் ஏற்பட்ட தவறு என்றே இதை கருதுகிறேன். ஒரு சுதந்திரமான தமிழீழத்துக்கான போராட்டத்தில் நீரும் இணைவீர் என எதிர்பார்க்கிறேன்

வாழ்த்துக்கள்
பெரியடாக்குத்தர்/வைத்தியஅதிகாரி பஞ்சகுலசிங்கம் கந்தையா
தலைவர் NCET

இரண்டாவது மின்னஞ்சல்

Fra: Panchakulasingam, Kandiah <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Emne: SV: Vedr. rødt landsmøte
Dato: Onsdag 2. juni 2010 12.41

 

Hei M……..!

 

Det er helt greit at du ikke vil endre synet på NCET men du er feilinformert og jeg får inntrykk av at du ikke har fulgt med utviklingen i forhold til vår situasjon.

Det er mye rart i det du svarer med.  Hvem har skrivet dette??? Det ble gitt uttrykk for mange vrangforestillinger i denne artikkelen. Personen som skrev dette “avis innlegg” hallusinerer.

Jeg representer ikke LTTE. NCET har ingeting med tidligere penge innsamling å gjøre.  Frigjøringskampen må videreføres. Som jeg sa i landsmøte: tamiler i Eelam er blitt slaver i sitt eget land.  Men jeg understrekker igjen her at du har misforstått hele greia. Jeg vet hva jeg / NCET står for og ser tiden etter 18 mai ifjor som en mulighet til å endre kurs. Vi burde ha gjort dette for 10 – 15 år siden.

Men nå er det ikke forsoning .Vårt folk nektes til og med legebehandling.

Jeg synes at argumentene dine er på feil grunnlag og ikke holder mål. Det er helt greit at du ikke vil endre synet på NCET men det er fakta feil å koble NCET til LTTE.

Hilsen
Overlege Panchakulasingam Kandiah
leder, NCET.

ஹேய் …..!
உனது  NCET பற்றிய கருத்தை  மாற்ற மறுப்பது பிரச்சினை இல்லை. ஆனால்  உனக்கு   தவறான தகவல்கள் வளங்கப்பட்டுள்ளது. மேலும்    நான் நினைகிறேன் நீர்  எமது நிலை சம்பந்தமாக கவனிக்க தவறிவிட்டீர்  என. உமது பதில் சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிலாகவுள்ளது.   அதை யார் எழுதியது??? விசர்த்தனமான கருத்துகளை அந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது- அதை எழுதியவர்  hallucinogenic .   நான் LTTE ஜ பிரதிநிதிதுவப்படுத்தவில்லை. NCETஇக்கும் முன்பு சேர்த்த பணத்துக்கும் சம்பந்தமில்லை. விடுதலைப்போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் . நான் உனது கட்சி கூட்டத்தில்   சொன்னது   போல்இ ஈழத்தில் தமிழர்கள் தமது நாட்டிலேயே அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் நான் திரும்பவும் வலியுறுத்தி சொல்கிறேன் நீர் எல்லாவற்றையும் தவறாக விளங்கியுள்ளீர். எனக்கு தெரியும் எனது/NCET நிலைப்பாடு. மேலும் போனவருடம்  மே 18 பிற்பட்ட காலத்தை (போராட்ட) பாதையை மாற்றுவதற்கான   நல்ல சந்தர்ப்பம். இதை நாங்கள் 10 -15  வருடங்களுக்கு முன் செய்திருக்க வேண்டும்.  இப்போது(சிங்களவர்களுடனான)  சகவாழ்வு முடியாத விடயம்.     எமது மக்கள் வைத்தியரிடம் போவதற்கு கூட மறுக்கப்பட்டுள்ளனர்.          உனது விவாத உள்ளடக்கம் தவறான கருத்துகளை கொண்டுள்ளது என்பதே என்  கருத்து ஆகவே அது (உனது விவாதம்)  தரமானதல்ல.     உனது  NCET பற்றிய கருத்தை  மாற்ற மறுப்பது பிரச்சினை இல்லை ஆனால் NCET ஐ LTTE உடன் இணைப்பது உண்மைக்கு புறம்பானது.

வாழ்த்துக்கள்
பெரியடாக்குத்தர்/வைத்தியஅதிகாரி பஞ்சகுலசிங்கம் கந்தையா
தலைவர் NCET

 

http://www.psminaiyam.com/?p=6443