சோபாசக்தி லீனா கூட்டத்தின் தொழிலாளர் விரோதம் எப்படி வன்முறையாக, அதை எப்படி நியாயப்படுத்தினர் என்பதை பார்க்க இருந்தேன். இருந்த போதும் தியாகு என்பர் அவர்களின் ஏகப் பிரதிநிதியாக மாறி, தர்க்கிக்கும் தர்க்கத்தையும் அதன் அரசியலையும் முதலில் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் அரங்கேற்றிய தொழிலாளர் விரோத வன்முறையையும், அதை எப்படி இன்றுவரை நியாயப்படுத்தி நின்கின்றனர் என்பதையும் பின்னால் பார்ப்போம்.
தியாகு கூறுகின்றார் "லீனாவின் கருத்து ஏற்கத்தக்கதில்லை ஆனால் அவர் அதை வெளியிடும் உரிமை இருக்கிறது அவருக்கு" என்கின்றார். உரிமை என்பது என்ன? மற்றவனை ஒடுக்கும் உரிமையை, நாம் எப்படி அங்கீகரிக்க முடியும். உரிமை என்பது மற்றவனை ஒடுக்காத வரைதான். ஒடுக்குமுறைக்கும் உரிமை கொடு என்பது, பிதற்றலும் அபத்தமுமாகும். உரிமை என்பது, சமூகத்துக்கு எதிரான உரிமையாக இருக்க முடியாது. சமூகத்துக்கு உட்பட்ட உரிமையைதான், மனிதன் மனிதனாக இருந்து அங்கீகரிக்க முடியும். சமூகத்தை ஒடுக்க, இழிவுபடுத்த, அதன் பெயரால் வாழ்வதற்கு இருக்கும் சுதந்திரம் உரிமையல்ல. இப்படி இருப்பதாக நம்புகின்ற "ஜனநாயகம்" மக்களை தங்கள் உரிமையின் பெயரால் ஒடுக்குவதுதான். அதனால் தான், இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றது. அந்த ஒடுக்கும் உரிமைக்கு எதிரான, அதை மறுக்கும் போராட்டங்கள் நடக்கின்றது.
வர்க்க அமைப்பிலும், சமூக முரண்பாடுகள் கொண்ட அமைப்பிலும், அனைவருக்கும் "ஜனநாயகம்" இருப்பதில்லை. அனைவருக்கும் "உரிமைகள்" இருப்பதில்லை. வர்க்க முரண்பாடுகளும், சமூக முரண்பாடுகளும் கொண்ட வர்க்கப் போராட்டங்கள் தான் நடக்கின்றது. வர்க்கம் கடந்த உரிமை என்பது, முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறைக் கபட வடிவங்களில் ஒன்று.
தொழிலாளர் விரோத கூட்டத்தை, குறிப்பாக கம்யூனிச விரோத கூட்டத்தையே, அ.மார்க்ஸ்-சோபாசக்தி லீனா கும்பலும் இணைந்து, போலி கம்யூனிச பன்னாடைகளும் கூடி நடத்தினர். இவாகள் அனைவரும் உலகறிந்த தொழிலாளர் விரோத கூட்டம். இந்து முன்னணியின் பாசிச வன்முறையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, கம்யூனிச எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர்.
உண்மையில் இந்து முன்னணியின் பாசிசத்தை எதிர்க்க விரும்புபவர்கள் நேர்மையானவராக இருந்திருந்தால், இந்த கூட்டத்தை வேறுவிதமாக நடத்தியிருப்பார்கள்.
1. லீனாவின் தொழிலாளர் விரோத பாலியல் வக்கிரத்தை எதிர்த்தும்
2. லீனா-சோபாசக்தி தொழிலாளர் விரோத உணர்வுடன் நடத்திய வன்முறையைக் கண்டித்தும்
ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இருப்பார்கள். மூன்றையும் கண்டித்து கூட்டம் போட்டு இருப்பார்கள்.
இங்கு தொழிலாளர் விரோத, கம்யூனிச விரோத கூட்டத்தை, அதுவும் ம.க.இ.க வுக்கு எதிரான கூட்டத்தை நடத்த முனைந்தனர். இந்த வகையில் ம.க.இ.க அவர்களின் உரிமையை அங்கீகரித்தபடிதான், அவர்களை நோக்கி கேள்வியை எழுப்புகின்றனர். அப்படி போராடும் உரிமை அவர்களுக்கு உண்டு. இந்தக் கேள்வி எழாத வண்ணம், முன் கூட்டியே பதிலளித்து இருந்தால், அவர்கள் அங்கு வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நாளை வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நிலையும் ஏற்படாது.
இங்கு இந்தத் தொழிலாளர் விரோத கும்பல், லீனாலின் கவிதையுடன் தமக்கு உடன்பாடு கிடையாது என்று கூவுகின்றனர். அப்படியெனின் அதையும் கண்டித்து, ஏன் கூட்டம் நடத்தவில்லை. அதை கண்டித்து லீனாவுடன் சேர்ந்து கூட்டம் நடத்தத்தான் முடியுமா!? தொழிலாளர் விரோத உணர்வுடன் ரவுடிகளைக் கொண்டு அடிதடியில் இறங்கும்; "அழகிய" ரவுடி, மேலிடத்து செல்வாக்;கையும் பணத்தையும் கொண்டு பொலிசையே வளைக்கும் லீனாவின் "அழகிய" பக்கங்கள், லீனாவைக் கண்டித்தால் என்ன பதில் கிடைக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியம் கிடையாது.
கவிதையில் தமக்கு உடன்பாடில்லை என்ற அந்த கூட்டம் நடத்திய தொழிலாளர் விரோதக் கூட்டத்தின் உள்ளடக்கத்தைத்தான், இங்கு தியாகுவும் முன்னிறுத்தியபடி வலம் வருகின்றார். "லீனாவின் கருத்து ஏற்றதக்கதில்லை ஆனால் அவர் அதை வெளியிடும் உரிமை இருக்கிறது அவருக்கு" என்கின்றார். முஸ்லீமை கொல்லு என்று கூச்சல் போடும் இந்துத்துவவாதிகளின் உரிமையும், தமிழனைக் கொல் என்ற சிங்கள பேரினவாதிகளின் இனவழிப்பு உரிமையும், தொழிலாளியைச் சுரண்டு என்று கூறும் "ஜனநாயக" உரிமையும், எங்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது. லீனாவின் உரிமை போல். அப்படித்தான் லீனாவின் அனுபவரீதியான வக்கிரமான உரிமை, கவிதையாக நடைமுறையாக கொப்பளிக்கின்றது. இப்படி இவற்றை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்வது கிடையாது. இதை மறுக்கின்றோம். அதற்காகத்தான் நாம் போராடுகின்றோம்.
"கவிதைகள் அனுபவத்தில் இருந்து பிறக்கவேண்டும் என்பதில்லை" என்ற தியாகுவின் கண்டுபிடிப்புக்கு, வினவு தோழர்களும் பதிலளித்துள்ளனர். இதை விரிவாகப் பார்ப்போம். எதையும் அனுபவிக்காது, அதை உணராது எப்படி எதைத்தான் எங்கிருந்து படைக்க முடியும்;? பொருள் இல்லாத எதையும் படைக்க முடியாது. தன் சொந்த அனுபவமாக அது இல்லாது இருந்தால், மற்றவன் அனுபவத்தை உள்வாங்கித்தான் அதைப் படைக்க முடியும். அதை எந்த வர்க்கத்திடம், யாரிடம் இருந்து பெற்றார்? அந்த அனுபவம் எப்படிப்பட்டது என்பதை, கவிதையில் இருந்து பார்ப்போம்.
"லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்" என்கின்றார்.
லீனாலின் தாயாரா! தந்தையா! அவருக்கு இதைக் கற்பித்தார். எந்தத் தாய், எந்தச் சமூகம், எந்த வர்க்கம் இப்படி இதைக் கூறுகின்றது. சுரண்டும் வாக்கம் தான், தன் வரைமுறையற்ற நுகர்ச்சியில் பாலியலையும் உள்ளடக்கும் போது, "லிட்டர் கணக்கில்" நுகர்ந்து "சேர்ந்துவிடும் விந்துவை" தூர் வார வேண்டி ஏற்படுகின்றது. இதுவே அந்த வர்க்கத்தின் மையப் பிரச்சனையாகி விடுகின்றது. அந்த வர்க்கப் பெண்களின் பிரச்சனையாகி விடுகின்றது. அதை அனைத்துப் பெண்களின் பிரச்சனையாக காட்டுவதே அந்த வர்க்கத்தின் குணாம்சமாகும். ரொட்டியில்லை என்றால், கேக் தின்னச் சொல்கின்ற கூட்டம். இந்தச் சுரண்டும் வர்க்கப் பெண்களுக்கு வெளியில், கோடானு கோடி பெண்கள் இப்படி பாலியலை நுகர்வதில்லை. பாலியல் தேவைக்குள் வாழ்கின்றனர். கீழே லீனா கூறியது போல், பாலியலை அணுகுவது கூட கிடையாது. மாறாக இவர்களின் பாலியல் தெரிவு என்பது, சமூகத்துடன் இணைந்த கூட்டுக் கண்ணோட்டத்திலானது. சமூகமாக சேர்ந்து வாழும் உள்ளடக்கத்திலானது. இப்படித்தான் ஆண் பெண் உறவு உள்ளது. யாரும் இங்கு தூர் வாருவது கிடையாது. இங்கு ஏற்றத் தாழ்வும், ஒடுக்குமுறைகளும் உண்டு. அது எல்லா சமூக செயல்கள் மேலும் உள்ளது போல். இங்கு போராட்டங்களும், முரண்பாடுகளும் அவைகள் மேல் உண்டு. இதுதான் உழைத்து வாழும் சமூகத்தின் வாழ்க்கை முறை. "லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை தூர் வார்ந்து" கொண்டு, மக்கள் (பெண்கள்) வாழ்வதில்லை. இதனால் தான் லீனா போன்ற சீமாட்டி பெண்களின், குறிப்பான சொந்த அனுபவமாக அது மாறிவிடுகின்றது. இந்தவகை பெண்களை அடிப்படையாக கொண்ட மேல்தட்டு வர்க்க பெண்ணின் பொது அனுபவமாக இது உள்ளது. இது சுரண்டும் வர்க்கத்தின் நுகர்வு பாலியல் தெரிவாக, அதன் பொது விளைவாகின்றது.
மேலும் பார்ப்போம். "லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை தூர் வாருவதை" உழைத்து வாழும் பெண்கள் செய்வது கிடையாது. அப்படியிருக்க இங்கு இந்தக் கவிதைக்கான அனுபவம் எது? விபச்சாரம் தான். விபச்சாரம் பல வகையானது. சரி இது எந்த வகையான விபச்சாரம்;?
1. விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்;டவர்கள். இங்கு சமூகம் இவர்களை நிர்ப்பந்திக்கின்றது.
2. விபச்சாரம் செய்தே வாழவேண்டிய நிலையில் உள்ளவர்கள். இங்கு சமூகம் இப்படித்தான் வாழ நிர்ப்பந்திக்கின்றது.
3. ஆடம்பரமாக வாழ்வதற்காக விபச்சாரம் செய்பவர்கள்.
4. விதவிதமான நுகர்வின் அடிப்படையில், விபச்சாரம் செய்பவர்கள். இங்கு ஆணும் பெண்ணும் ஈடுபடுகின்றனர். இதை அவர்கள் பெண்ணியமாக, தனிமனித சுதந்திரமாக, இருவரின் விருப்பமாக, தனிமனித உரிமையாக கூறுகின்றனர்.
இங்குதான் "லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை" "தூர் வாரு"கின்ற கவிதையின் உள்ளடக்கத்தைக் நாம் காணமுடியும்;. படைப்பாளியின் கருப்பொருள் இங்குதான் உள்ளது. இங்கு கிடைக்கும் அனுபவம் தான், கருப்பொருள். நுகர்வின் அடிப்படையிலான விபச்சாரம் தான் (அவர்களின் வர்க்கப் பார்வையில் இது பெண்ணியம்) லீனாவின் கவிதை உள்ளடக்கம். "லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்து" மேட்டுக்குடி வர்க்கத்திடம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வரைமுறையற்ற நுகர்வின் அடிப்படையில், இந்த முரண்பாடு எழுகின்றது.
இங்கு எப்படி, ஏன் மார்க்சியத்தை "கட்டவிழ்ப்பு" செய்ய முனைகின்றனர். யாருடன் கூடி நுகர்கின்றனர் என்பதே இதைத் தீர்மானிக்கின்றது. இங்கு மேல் வர்க்கப் பெண் லும்பனுடன் (அனாகிஸ்ட்டு) நுகரும் போதும், இப்படிப்பட்ட கவிதை பிறக்கின்றது. அந்தச் சுரண்டும் வர்க்கத்தினதும், அனாகிஸ்ட்டுகளோடு கூடும் போது தான், கவிதை இப்படி வக்கரிக்கின்றது.
"ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்"
இது தொழிலாளர் விரோத உணர்வுடன், மார்க்சிய விரோத உணர்வுடன், கவிதையாக பெண்ணியமாக பிதற்றுகின்றது. மேட்டுக்குடி வர்க்கம் தன் நுகர்வின் இன்பத்தை, தன் வர்க்கமல்லாத லும்பனுடன் கூடும் போதுதான், அவர்களுக்கு இடையிலான வம்பு உரையாடல் தான் இப்படி உருவாகின்றது. மேட்டுக்குடி போல், லும்பன்கள் (அனாகிஸ்ட்டுகள்) மார்க்சியத்தை மறுப்பவர்கள். லும்பன் அல்லாத தன் சொந்த வர்க்கத்துடன் கூடும்போது, இப்படி பிதற்றினால் பைத்தியம் என்பார்கள்.
லும்பனும் மேட்டுக்குடி சீமாட்டிகளும் கூடிப் புணருகின்ற போது மார்க்சியத்தை கிண்டல் அடிக்கின்றனர்.
"கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழ்ந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்"
இதைத்தான் தங்கள் அனுபவமாக, பெண் விடுதலையாக சமூகத்திற்கு தருகின்றனர். இதை சீமாட்டிகள், தன் வர்க்கம் சார்ந்து சொல்லும் அனுபவத்தை பெண்ணியம் என்று கூறுகின்றனர். பெண்ணியவாதிகள் என்று கூறும் கூட்டத்தின், சத்தத்தைக் காணோம். எந்த ஆணாதிக்கத்தை மார்க்சியம் உலகுக்கு முன் அம்பலமாக்கியதோ, அந்த மார்க்சியத்தை தன் வர்க்க புணர்ச்சியின் அனுபவத்தின் ஊடாக இழிவுபடுத்துகின்றார். மார்ச் 8 பெண்கள் தினத்தை, எந்த மார்க்சியத்தின் அடிப்படையில் எந்தப் பெண்ணிலைவாதிகள் "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்று கூறி உருவாக்கினரோ, அதை இங்கு கேவலப்படுத்துகின்றார்.
சுரண்டும் வர்க்கத்தின் பெண்ணாக இருந்தபடி அதை கேவலப்படுத்துகின்றார். இங்கு தன் பெண் அடையாளத்தை, வர்க்கம் கடந்த தளத்தில் பெண்ணியமாக காட்டி பதுங்கி நின்று மார்க்சியத்தையும் ஒடுக்கப்பட்ட பெண்களையும் இழிவுபடுத்துகின்றார். ஒடுக்கப்பட்ட பெண்கள் இதை எதிர்த்து போராடாத வரை, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பொதுப்போராட்டமாக இது மாறிவிடுகின்றது. அதுவரை பெண்ணியமாக, வர்க்கம் கடந்த பெண் அடையாளத்தின் பின்னால் இந்த வர்க்கம் ஒழித்துக் கொள்கின்றது. மார்க்சியத்தை கொப்பளித்து துப்பும் போது
"கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்"
இங்கு எதை, "கட்டவிழ்ப்பு" என்கின்றார் மார்க்சியத்தை. ஒரு லும்பனுடன் சேர்ந்துதான் இதை இங்கு "கட்டவிழ்க்க" முடிகின்றது. எப்படி என்றால் "மயக்கம் வர புணர்ந்த" படி தான், "வார்த்தை வறண்ட" "வாயில்" மார்க்சியத்தை "ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்" என்கின்றார். கூலி கொடுக்காத ரவடித்தமான முதலாளியின் திமிருடன் "உபரி என யோனி மயிரை விளித்தாய்" என்கின்றாய். கூலிக்கு பதில் வன்முறையைக் கொடுத்த வக்கிரத்துடன் தான் "உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்" என்று கூற முடிகின்றது. இங்கு கூலிகேட்டு அடிவாங்கிய மனிதன், தன் உழைப்பிலான உபரியை மட்டுமல்ல, தன் கூலியை பறித்தெடுத்த வர்க்கத்தின், கொழுப்பு நிறைந்த அதன் வக்கிரத்தை இந்தக் கவிதையில் காணமுடியும்;. இதைச் செய்ய பெண் அடையாளமும், பெண்ணியமும் உதவுகின்றது. தொழிலாளர் விரோதக் கூட்டத்தின் ஆதரவுடன் தான், கம்யூனிசத் தலைவர்களையே நுகர்வு வெறியுடன் புணர முடிகின்றது.
தொழிலாளர் விரோத உணர்வுடன் கூடும் சோபாசக்தியும் லீனாவும்
தொடரும்
பி.இரயாகரன்
21.04.2010