Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொழிலாளர் விரோத உணர்வுகள் தான் சோபாசக்தி, லீனா, அ.மார்க்ஸ் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் வரை ஒன்றிணைகின்றது. தொழிலாளர் விரோத உணர்வுள்ள பலரும், இங்கு கூடி கும்மியடிக்கின்றனர். கூலி கேட்டவனுக்கு கூலியை கொடுக்க மறுத்து அவர்கள் மேல் லீனா-சோபாசக்தி கும்பல் நடத்திய வன்முறையும், அந்தத் தொழிலாளர்களுக்காக போராடிய மார்க்சிய தலைவர்களையும் தன்சொந்த பாலியல் அனுபவத்தில் புணர்ந்து எள்ளி நகையாடியதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியத்தை கேவலப்படுத்தியது இந்த கூட்டம்.   தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த வகையில்தான் வினவு (www.vinavu.com) தோழர்களின் எதிர்ப்பு எழுந்தது.

அவர்களின் நியாயமான போராட்டம் ஒருபுறம். மறுபக்கத்தில் போராட்ட வடிவம் பற்றிய வரம்புக்குள், "ஜனநாயகம்" பற்றிய தத்துவமற்ற வரட்சியில் பலர் இந்தத் தொழிலாளி விரோத கூட்டத்தின் பின் சரிந்து வீழ்கின்றனர். தொழிலாளி விரோத கூட்டத்துக்கு எதிராக, அனைத்து வடிவங்களிலும் போராட முடியும். புரட்சிகர வடிவங்கள் என்பது, எதிரி எப்படி தொழிலாளி விரோத உணர்வுடன் எதிர் கொள்கின்றான் என்பதுடன் தொடர்புடையது. இந்த வகையில் வினவு தோழர்களும், ம.க.இ.க. நடத்திய போராட்டமும் மிகச்சரியானது.       
 
இனி நாம் இந்த தொழிலாளி விரோத கூட்டத்தின், மைய அரசியல் எதுவென்று பார்ப்போம்.

 

சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையும், மக்களைச் சுரண்ட உருவாகும் பாசிசத்தையும் ஒன்று என்கின்றார் லீனா. இதுதான் அவரின் கவிதையின் உள்ளடக்கம். அதை அவர் தன் பெண் அடையாளத்தின் ஊடாக, தன் பாலியல் உறுப்பின் ஊடாக, தன் சொந்த பாலியல் அனுபவத்தின் ஊடாக, தன் படைப்பு உரிமையின் பெயரால் வக்கரித்துக் காட்டுகின்றார். இதன் உள்ளடக்கமோ நாற்றம் பிடித்த கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சினிமாதான். அங்கிருந்து தான், "அழகிய" படைப்பாளியாக தன்னை மிதக்க வைக்கின்றார். 

 

இந்த கோட்பாடு அடிப்படை என்ன?

 

1.இன்று உலகை அடிமைப்படுத்தி ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்தியங்களும், அதை ஆதரித்து இயங்கும் படைப்பாளிகளும், பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாகக்காட்டி இதற்கு எதிரானது தான் தங்கள் "ஜனநாயகம்" என்கின்றனர். இந்த வகையில் கிட்லரையும் ஸ்ராலினையும் ஒன்றாக காட்டுகின்றனர். இதன் மூலம் ஒன்றுபடுத்தி மனிதகுலத்தின் எதிரியாக கம்யூனிஸ்ட் தலைவர்களையும் காட்டுகின்ற, ஒரு தத்துவத்தை அடிப்படையாக கொண்டு, இன்று தொழிலாளி விரோத கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றது. இந்தத் தத்துவம் தான், இரண்டாம் உலக யுத்தத்தை கிட்லர் - ஸ்ராலின் இடையிலானதாக திரிக்கின்றது. இந்த உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தான், இன்று உலகளவிலான சுரண்டலை நடத்துகின்றனர். லீனாவின் உழைப்புச் சுரண்டலும் இதற்கு உட்பட்டதுதான். லீனாவுக்காக சோபாசக்தி கையாண்ட ரவுடியிசமும் இதற்கு உட்பட்டது தான். இன்று மக்களை ஏய்க்க இந்தத் தத்துவம் உதவுகின்து. இதுதான் லீனாவின் சொந்த சுரண்டல் தத்துவமாகும். அவருடன் கூடி நிற்கும் கூட்டத்தின் தத்துவமும் இதுதான். இங்கு லீனாவின் சொந்த சுரண்டல், சொந்த அனுபவம் சார்ந்த பாலியல் என அனைத்தும், இதுதான். இதைத் தாண்டியதல்ல.  

   

2.தொழிலாளி விரோத தங்கள் வக்கிரத்தைச் சொல்ல, லீனா தன் பெண் அடையாளத்தையும், "பெண்ணியத்தையும்" பயன் படுத்துகின்றார். பெண்ணியம் என்பது பாலியல் உறுப்பு சார்ந்த ஒன்றாக காட்டுவதன் மூலம், அதை பேசுவதன் மூலம், அதை பெண்ணியமாக காட்டி தொழிலாள விரோத அரசியலை முன்வைக்கின்றனர். இதற்கு தங்கள் மேட்டுக்குடி பாலியல் விபச்சாரத்தையும், உடல் உறுப்பைக் காட்டும் ஆணாதிக்க விளம்பரத்தையும் சார்ந்து நின்று, அதை இங்கு "பெண்ணியமாக" காட்டுகின்றார். இதுதான் அவரின் "பெண்ணியக்" கோட்பாடு. இப்படி இன்றைய உலகமயமாதலின் விளம்பர எல்லைக்குள், பாலியல் உறுப்பைக் காட்டி இயங்கும் சந்தையின் வக்கிரத்தை, தொழிலாளி விரோத மேட்டுக்குடி படைப்பாளிகள் தங்கள் "உரிமையாக", "பெண்ணியமாக", "சுதந்திரமாக", "ஜனநாயகமாக" பிரதிபலிக்கின்றனர். அதையே லீனா முன்னிறுத்தி, தன் பெண் என்ற அடையாளத்தைக் கொண்டு அதை "பெண்ணியம்" என்கின்றனர். இப்படி மேட்டுக்குடிகளின் விபச்சாரமும், வரைமுறையற்ற பாலியல் நுகர்வும், பாலியல் விளம்பரத்தையும் தங்கள் "பெண்ணியமாக" "படைப்புச் சுதந்திரமாக" முன்வைத்து நடத்திய கூத்து, தொழிலாளி விரோத வக்கிரமாக வெளிப்படுகின்றது.

 

இப்படி இரண்டு தளத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், பெண்ணியத்துக்கு எதிராகவும் இயங்குகின்றனர். இதற்கு அமைவாகவே அ.மார்க்ஸ்-சோபாசக்தி கும்பல் தத்தம் சுயநலப் பின்னணியுடன் கூட்டுச் சேருகின்றனர். மார்க்சியத்தையும் அதன் தலைவர்களையும் புதைத்து,  அதன் மேல் மூத்திரத்தை அடிக்கும் போலிக் கம்யூனிசக் கூட்டமும் இவர்களுடன் கூடி நிற்பது, தொழிலாளி விரோத உணர்வுடன்தான். 

 

இப்படிப்பட்ட கூட்டத்தில் இருக்கின்ற சோபாசக்தி, தன் பாலியல் தேவையை எப்படி இன்று தீர்க்கின்றார். பெண்ணை இணங்க வைத்து புணர்தல் தான், அவரின் பாலியல் தெரிவு. இதுதான் அவரின் இலட்சியம். இதற்கே அவர் தன் படைப்பை பயன்படுத்துகின்றார். இதை அடிப்படையாக கொண்ட பெண்களின் கோட்பாட்டை பெண்ணியமாக காட்டுகின்றதன் மூலம், தன் பாலியல் இலட்சியத்தை அடைகின்றார்.

 

பெண்ணை இணங்க வைத்து தங்கள் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் உள்ளடக்கத்தை தாண்டி, பெண்ணியம் தொடர்பாக வேறு எந்த மாற்றுவழி எதுவும் இவர்களிடம் கிடையாது. இதற்குள் தங்கள் பாலியல் தெரிவாக செய்யும் பெண்ணின் நடத்தையையே, "பெண்ணியம்" என்கின்றார். பெண் சொல்வதும், சொல்ல வைப்பதும் ஒருபுறம். சரி இதை செய்யும் ஆணின் நடத்தையை எப்படி வரையறுப்பது? அடிப்படையில் ஆணாதிக்க விபச்சாரம் தான். இங்கு  மேட்டுக்குடி விபச்சாரம் தான், இதன் மூலம் நடக்கின்றது. வரைமுறையற்ற புணர்ச்சி பெண்ணியமுமல்ல, பெண்விடுதலையுமல்ல. அது மேட்டுக்குடி மற்றும் நுகர்வு சார்ந்த விபச்சாரம்.  

 

பணத்தைக் கொடுத்து செய்யும் விபச்சாரம் அல்ல இது. மற்றவன் உழைப்பைச் சுரண்டி பணத்தில் மேல் படுக்கின்ற கூட்டத்தின் விபச்சாரம்.  நுகர்வு உலகத்தில் வரைமுறையின்றி நுகர்ந்து வாழ்கின்றவர்கள், விதவிதமாக பாலியலை நுகருகின்ற உள்ளடத்தில் செய்யும் விபச்சாரம். இதை இல்லையென்று எவரும் மறுக்கமுடியாது. இதுவல்ல தங்கள் நடத்தைகள் என்று, இவர்கள் எவரும் தங்கள் "பெண்ணியம்" மூலம் மறுக்க முடியாது.

 

இங்கு இது ஆணாதிக்க உள்ளடகத்தில் ஆணின் விருப்பமாக, பெண் தன் வரைமுறையற்ற  நுகர்வு விருப்பத்தை நியாயப்படுத்த அதை "பெண்ணியமாக" காட்டி, இந்த ஆணாதிக்க பாலியல் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

 

இங்கு தம்மை படைப்பாளிகளாக காட்டிக் கொள்பவர்கள் தான், இதைக் கோட்பாட்டு ரீதியாக "பெண்ணியமாக", "பெண்விடுதலையாக" காட்டி விளக்கம் கொடுக்கின்றனர். இதற்குள்தான் சோபாசக்தியின் பாலியல் நடத்தை உள்ளது. இதைத்தான் தன் தெரிவாக கொண்டுள்ளார். இந்த வகையில்தான் அவர் "அழகிய" லீனாவை அணுகுகின்றார். இதற்கு அவர் தன் படைப்பை பயன்படுத்துகின்றார்.

 

நடைமுறையில் பெண் தானாக தன் பாலியலுக்கு இணங்கிவர மறுத்தால், தன் போதையைப் பயன்படுத்துகின்றார். கைப்பிடித்து இழுத்து, அதை நிர்பந்திக்கின்றார். அவரின் போதையிலோ நிதானம் தவறாத குறி, இங்கு இலக்காக இருக்கும். "அழகிய" பெண்ணை புணர்தல் தான் அவரின் இலட்சியம்.

 

இந்த வகையில் போதையில் நிதானம் தவறாது இலக்கை அடைதல். இது புலிகளிடம் அவர் பெற்ற பயிற்சியாகும்;. புலிகள் பயிற்சியில் இதுவும் ஒன்று. நல்ல போதையில் நிதானம் தவறாது எப்படி காரியமாற்றுவது என்பதை, போதையை ஏற்றி புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. உளவு தகவல்களைப் பெறவும், மற்றவனை போதையில் ஏமாற்றி காரியம் சாதிக்கவும், பலர் பயிற்றப்பட்டனர். இதைத்தான் சோபாசக்தி பலதளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார். 

 

இந்த வகையில்தான் பாரிசில் தனது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரின் கடைக்  கண்ணாடியை அடித்து உடைத்தும், கூலி கோரியவனை அடித்ததும் உதைத்ததும், மிகத் தெளிவான போதையில்தான். நான் செத்துப் போனதாக கூறி எனக்கு கல்வெட்டை எழுதி வெளியிட்ட அன்று, ஒரு திருமண மண்டபத்தில் எனது மனைவியிடம் "நான் தான் சோபாசக்தி" என்று வக்கிரத்துடன் கையைக் கொடுத்து மிரட்டியது அதே தெளிவான பாசிசப் போதையில்தான்;. (அன்று நான் எழுதிய கட்டுரையை பார்க்க. "ஆயிரம் கல்வெட்டுகளை வெளியிட்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போரை யாராலும் சேறடிக்க முடியாது!"  )  இந்தளவுக்கும் என் மனைவியை அதற்கு முன் ஒரு நாளும் தெரிந்தோ, கதைத்தோ இருக்கவில்லை.


இங்கும் அவரின் இலக்கும் குறியும் இலக்குத் தவறாது இருந்தது. தொழிலாளர் விரோத உணர்வுகளுடன், மார்க்சியத்தை சேறடித்தல் அவரின் குறியிலக்காகும். இந்த வகையில் தான், லீனாவுடன் சேர்ந்து கூலி கேட்டவனை தாக்கியதை நியாயப்படுத்திய தன் கட்டுரையில், மார்க்சுக்கு "வைப்பாட்டி" இருந்ததாக அவதூறு பொழிகின்றார். தங்கள் இந்த வன்முறைக்கும், கார்ல்மார்க்சுக்கும் இதில் என்ன தொடர்பு? தொழிலாளர் விரோத உணர்வு தான், மார்க்சை இப்படி இதற்குள் கொண்டு வந்து கேவலப்படுத்துகின்றது. கூலிகொடுக்காத உன் "அழகிய" முதலாளிக்கு குண்டர்படையாக செயல்பட்டதை நியாயப்படுத்த, கார்ல்மார்க்சை கேவலப்படுத்த வேண்டியிருக்கின்றது. கவனத்தை திசைதிருப்பி நியாயப்படுத்த வேண்டியிருகின்றது. 

 

இங்கு இரண்டு விதத்தில் லீனாவை அவரின் "அழகிய" கவிதையை முத்தமிடுகின்றார்.

 

1.தொழிலாளர் விரோத உணர்வுடன் ஒன்றுபடுகின்றனர்

 

2.மார்க்சிய தலைவர்களை கேவலப்படுத்திக் காட்டுவதில், லீனாவுக்கு தன்னிகரற்றவராக தம்மை வெளிப்படுத்துகின்றனர்.  

 

சோபாசக்தியின் அதே பாணியில்தான், லீனா தன் சொந்த ஆணாதிக்க அனுபவத்தில், மார்க்சிய தலைவர்களை புணர்ந்து காட்டுகின்றார்.

 

தன் இலக்கை அடைய, போதையே சோபாசக்திக்கு உதவுகின்றது. இதை செய்யும் பயிற்சியை, அவர் புலியில் பெற்றவர். இதையே தன் பாலியல் தேவைக்கு பயன்படுத்துபவர். தானாக முன்வந்து  இணங்காத, அதற்கான சமிக்கையை காட்டாத, பெண்ணின் இணக்கத்தை பரிசோதிக்க போதையையே பயன்படுத்துபவர். இந்த வகையில் தன் ஊதியத்தைக் கேட்டவனை, ஊதியத்தை கொடுக்காது ஏமாற்றி மறுத்த லீனாவுக்காக தாக்குகின்றார். இங்கு தாக்குதல் நோக்கம், தன் பாலியல் தேவையை பூர்த்தி செய்வதுதான். லீனாவின் தேவைகள் எவை என்று எமக்கு தெரியாவிட்டாலும், கூலியை கொடுக்காமல் இருத்தல் இதில் ஒன்று. கூலி கொடுக்காத முதலாளிக்கு, தன் லும்பன் குணாம்சம் மூலம் அடியாள்;தனத்தைக் காட்டுகின்றார். சமூக ஒடுக்குமுறைகளை தன் பங்கில் குதறி கேவலப்படுத்தி, சுரண்டும் தன் லும்பன்தனமான நுகர்வு வாழ்வுக்கு, சோபாசக்தியின் ரவுடியிசத்தைக் கொண்டு தன் எடுபிடியாக பயன்படுத்துகின்றார் லீனா.

 

போதையில் நிதானம் தவறாது தாக்கிய சோபாசக்தி, போதை கழன்ற நிலையில் தான் தாக்கியதை நியாயப்படுத்தி எழுதுகின்றார். இந்தத் தொழிலாளர் விரோத கட்டுரையும், லீனா தொழிலாளர் விரோத உணர்வுடன் எழுதிய கவிதையும் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றது. எப்படி?

 

தொடரும்
20.04.2010