Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பதிலாக தமிழினவாதிகளுக்கு வாக்கு போடுவதா!? அப்படியல்லாத ஓருவருக்கு வாக்கு போடுவதா!? அப்படி இல்லையென்றால், என்னதான் செய்வது!?

 

ஒரளவுக்கு அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினரிடம், அதன் ஊசாட்ட பிரிவினரிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகின்றது.

இன்னுமொருபுறத்தில் கூட்டமைப்பை ஆதரிப்பதா என்ற சங்கடத்தில் இருந்து எழுகின்றது. தேர்தலைப் பகிஸ்கரிக்க கோருவது என்பது, மக்கள் எற்றுக் கொள்ளும் மனநிலையில் இன்றில்லை. மறுபக்கதில், சரி பகிஸ்கரித்தால் என்னதான் நடந்துவிடும் என்ற அரசியல் வெறுமையில் இருந்து வருகின்றது. இப்படி நியாயமான சந்தேகங்கள், கேள்விகள், விவாதங்கள்.

 

இதையே மயூரன் இனியொருவின் பிள்னோட்டத்தில் எழுப்பினர். எம்மிடம் ஈமெயில் மூலம் எழுப்பியுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர், அங்கு நிலவும் எதார்த்தமான சூழல் சார்ந்து எழுப்பிய முக்கிய கேள்வி. இனியொரு பின்னோட்டத்தில் அவர் இதை விவாதித்த போது, முத்திரை குத்தி குதர்க்கமே அவருக்கான பதிலாக அளிக்கப்பட்டது. இதில் ஒருவர் "… இது பற்றி மயூரன், சிவானந்தம் சிவசேகரம், செந்திவேல், தேவராஜன், ரவீந்திரன் இவர்களின் நிலைப்பாடு என்ன? இதுவரையிலான கருத்து வெளிப்பாடுகள் என்ன? அரசுடன் மறைமுகமாக இவர்களும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை, மரபார்ந்த பிரதேசங்களை சிறிலங்கா அரசின் குடியேற்றங்களுக்கு சமதர்மப் பேச்சின் வீச்சிலே அமுக்கிவிடுகின்றார்களா? எதுக்கு ஜான் மாஸ்ரரையும் மே 18 இயக்கத்தையும் மட்டும் பிடித்து புளி உலுக்கு உலுக்கவேணும்?" என்று கேட்டு, அதையே பதிலாக அளிக்கின்றனர். இப்படி ஜான் பினாமிகள், "அறிவுப+ர்வமாக" பதிளிக்கின்றனர். சரி? "… இது பற்றி மயூரன், சிவானந்தம் சிவசேகரம், செந்திவேல், தேவராஜன், ரவீந்திரன் இவர்களின் நிலைப்பாடு என்ன?" என்பது இருக்கட்டும், உங்கடை பதில் தான் என்ன?  நேர்மையாக பதிலளிக்க வேண்டியதுதானே.

 

மயூரன் உங்களிடம் கேட்டது என்ன?

 

"திருகோணமலையில் பேரினவாத சக்திகள் தமது எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தித் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க நிற்கின்ற இக்கட்டான நிலையில், ஒரு அரசியல் சிந்தனை வட்டம் என்ற வகையில் உறுதியான தெளிவான வார்த்தைகளை ஏன் இந்த அறிக்கை சொல்ல மறுக்கிறது? யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் கட்சிகள் தொடர்பாக விரிவான அலசலைச் செய்த இவ்வறிக்கை ஏன் பின்னிணைப்பாக நாலுவரியில் திருகோணமலை நிலை பற்றி தொட்டுவிட்டு முடிக்கிறது? கிழக்கு மாகாணத்தின், திருகோணமலையின் அரசியல் போக்குகளைக் கற்குமளவுக்கு மே 18 இயக்கத்துக்கு ஆள்பலம் போதாதா? ஒரு சிந்தனை வட்டம் என்ற வகையில் அரசியல் வாதிகளைப்போல பூசு மெழுகும் வார்த்தைகள் தேவையில்லையே. ஏன் ஆட்களைக் குழப்புவான்? திருகோணமலையில் சம்பந்தருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் வாக்களிக்கச் சொல்லி நேரடியாக சொல்ல வேண்டியதுதானே? அல்லது வாக்களிக்காமலிருக்கும்படிச் சொல்ல வேண்டியதுதானே? மிக அபாயமான அரசியற் சூழல் இல்லாத யாழ்ப்பாண நிலவரத்தை இவ்வளவு அலசிவிட்டு மக்கள் மிகவும் அச்சத்துடனும் குழப்பத்துடனும் எதிர்கொள்ளும் கிழக்குமாகாண தேர்தல் நிலவரத்தை அசட்டை செய்வது ஏன்? மே 18 க்கு வடக்கு-கிழக்கை இணைப்பாக பார்ப்பதில் சங்கடங்கள் உள்ளனவா? மே 18 வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரிக்கிறதா இல்லையா?" இதுதான் மயூரன் உங்களிடம் கேட்ட கேள்வி.

 

இந்தக் கேள்விக்கு மே 18 காரரும், இனியொருவும், பதிளிக்க முடியவில்லை. மாறாக தொடர்சியான குதர்க்கத்தை அடுத்து, மீண்டும் மய+ரன் "எனது கருத்தை பிரதேசவாதம் என்ற கண்ணால் பார்க்கின்ற பொழுதுதான் ஜான் மாஸ்டர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. அவரை அறிவேன். யாழ்ப்பாணத்துக்கு வெளியே நடக்கும் தேர்தல் தொடர்பாக, அதிலும் மக்கள் மிகுந்த அச்சத்துடனும் குழப்பத்துடனும் எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பாக ஒரு தெளிவான கருத்தை இவ்வறிக்கை முன்வைக்கத் தவறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். (கூடவே பிரதேசவதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் எனக் குதிக்கின்ற மனநிலைகளை நான் நன்கறிவேன்)" என்கின்றார்.

 

மய+ரனின் கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில், எம்மிடம் இதற்கான பதில் என்ன என்று கேள்வியுடன் ஒரு கடித்தத்தை அனுப்பிவைத்தார்.

சமூகத்தில் தங்களை "முன்னேறி" பிரிவுகள் என்று கூறிக்கொள்பவர்களின் அரசியல் வறுமையும், பிற்போக்கான சந்தர்ப்பவாத அரசியல் நிலையும், இதை கொச்சைப்படுத்தவே முடிகின்றது. இதைத்தாண்டி இதற்கு வெளிப்படையாக பதிலளிக்க முடிவதில்லை. பதிலை அதன் ஆதாரவளர்கள் கேட்ட எழுதவும் முடியவில்லை. இதுதான் இதில் உள்ள உண்மை. மாறாக புனைபெயரில் குதர்க்கம் செய்யப்படுகின்றது. மயூரன் இலங்கையில் இருந்து தன்சொந்தப் பெயரில் இதை எழுப்புகின்றார். இங்கு இவர்கள் தங்களை மூடிமறைத்துக் கொண்டு, "முன்னேறி அறிவுத்துறையினர்" என்ற பெயரில் வம்பளக்கின்றனர்.

 

சரி, இதை நாங்கள் எப்படிப் பார்க்கின்றோம். இன்றைய இந்தத் தேர்தல், முதலில் ஜனநயாக அடிப்படைகளைக் கொண்டதல்ல. அது மகிந்தாவின் பாசிசத்தினால்;, பற்பல முகம் கொண்டு அது வெளிப்படுகின்றது. இதில் ஒன்றுதான் இனவாதம். குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவதை இல்லாதாக்கும் வண்ணம், பௌத்த பேரினவாதம் மிகத் தீவிரமாக மீண்டும் இந்தத் தேர்தலிலும் இயங்குகின்றது. இந்த வகையில் தமிழ் பகுதி எங்கும், தமிழ் வாக்கை சிதறடிக்கும் வண்ணம், நாய்களுக்கு எலுமைப் போட்டு குலைக்க விட்டுள்ளது.

 

இந்த நிலையில் யாரிடமிருந்து வாக்கைப் பிரிக்க என்றால், அது கூட்டமைப்பிடம் இருந்துதான் என்பது வெளிப்படையான ஒரு அரசியல் உண்மை. தங்கள் பௌத்த சிங்கள இனவாத அடிப்படையைப் போல், தமிழினவாத அடிப்படையிலான பிரதிநிதிகள் கூட்டணிதான் என்பது வெளிப்படையான உண்மை. தங்கள் பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக, தமிழ்மக்கள் தமிழினவாதிகளை ஆதாரித்து தங்களை அம்பலப்படுத்திவிடக் கூடாது என்பது பேரினவாதிகளின் இனவாதக் கவலை. குறிப்பாக தமிழினவாத கூட்டமைப்பை தோற்கடிப்பதன் மூலம், தேசிய இனப் பிரச்சனை இலங்கையில்லை என்று உலகு காட்டும் பேரினவாதக் கவலைகள். இப்படி நிலவும் எதார்த்த உண்மைகள் வெளிப்பiடானது. இதற்கு எதிரான உணர்வுகள் என்பது, கொச்சைப்படுத்த முடியாத உண்மையாகும். இந்த உண்மையை எற்று, அரசியல் ரீதியாக ஆராய்வது அவசிமானதாக உள்ளது. அதுதான் நேர்மையான அரசியல்.

 

இதற்கு எமது பதில் என்ன? மிகத் தெளிவாக கூறுகின்றோம். தேர்தலை பகிஸ்கரிப்பதுதான்.

 

இப்படி நாம் சொல்லும் போது உங்களிடம் கேள்வி எழும், இதனால் சிங்கள பேரினவாததின் இன ஒடுக்குமுறைக்கு இது உதவாதா!? இதற்கு இரண்டு பதில் உண்டு. நாம் தேர்தலை எப்படி பகிஸ்கரிக்கின்றோம் என்பதைப் பொறுத்தது அது.

 

1.தேர்தல் பகிஸ்கரிப்புக் கூட, சிங்கள பேரினவாதத்துக் உதவுவாதாக இருக்கும்.

 

2.தேர்தல் பகிஸ்கரிப்பு சிங்கள பேரினவாதத்தை களுவறுப்பதாக இருக்கும்.

 

தேர்தல் பகிஸ்கரிப்பை நாம் எப்படி ஏன் செய்கின்றோம் என்பதுடன், இது நேரடியாக தொடர்புடையது.

 

1.வாக்குப் போடுவது போல் நாமும் பகிஸ்கரித்தால், அது சிங்கள இனவாதத்துக்கு தொடர்ந்து உதவுவதாக மாறும்.

 

2.இதற்கு மாறாக அரசியல் ரீதியான புரிதலுடன் கூடிய நிராகரித்தல் மூலம், தம்மைத்தாம் மாற்றுவழியில் போராடுவதற்காக அணிதிரட்டினால், அது பேரினவாதத்தை எதிர்கொள்ளும் ஒரு மாற்று சக்தியாக மாறும்;. இந்த வகையில் கிளர்ச்சி, பிரச்சாரத்தை செய்ய, எங்களை நாங்கள் அமைப்பாக்குவதில் இருந்து மக்களை அமைப்பாக்குவதன் மூலம் தான் பேரினவாதத்தை நீண்ட காலத்தில் முறியடிக்க முடியும்;. தேர்தல் காலம் மற்றும் குறித்த சூழலுக்குள் இதைப் பற்றி பேசிவிட்டுச் சென்றால், மக்களைப் போல் வெற்றிடத்தில் நின்று பிற்போக்குவாதிகளின் பின் தொடர்ந்து வால்பிடிக்கத்தான் முடியும்.

 

இந்த வகையில் இரண்டு தளத்தில் தேர்தலை நிராகரித்தல் செயற்படுகின்றது. நாங்கள் தேர்தலை நிராகரித்தல் என்பதை, தேர்தலுக்கு மாற்றான வழியில் மக்களை அணிதிரட்டலாக்கும் அரசியல் பிரகடனத்தையே செய்கிறோம். இதுவல்லாத பகிஸ்கரிப்பைக் கோரவில்லை.

 

இதை நாம் மறுதலையாகப் பார்ப்போம். சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க, தமிழ் குறுந்தேசியவாதிகளை ஆதாரித்து வாக்குப் போட்டால் என்னதான் நடத்துவிடும்? தமிழ் இனவாதி வெற்றிபெற்றால் என்ன நடத்துவிடும்;? இனவாதத்தையும், இனவழிப்பையும், அவர்கள் வெற்றி பெறுவதால் குறைந்துவிடுமா!? சரி நிறுத்தித்தான் விடுவார்களா!? மாற்றுத் தீர்வு தான் வைத்துள்ளனரா!? இல்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். 50 வருடத்துக் மேலாக, இந்தக் கூத்து நடந்துதான் வருகின்றது. சரி ஏன் ஆயுதமேந்திய புலிகள் கூட, இதை தடுத்த நிறுத்த முடியாமல்தான் போனது.

 

காரணம் என்ன? குறுகிய இனவாதம் கொண்ட வலதுசாரிய அரசியலே, இதற்கான அடிப்படைக் காரணமாகும். இனவொடுக்கு முறையையும், அதனால் எழும் மக்கள் உணர்வுகளையும், தங்கள் குறுகிய மக்கள் விரோத அரசியலுக்கே அவர்கள் பயன்படுத்தினர். இதுதான் வலதுசரிய அரசியலின் அரசியல் அடிப்படையாகும்.

 

மக்கள் என்றும் தமக்காக தாம் போராடவில்லை. மக்கள் தமக்காக போராடும் வகையில், மக்கள் அணிதிரட்டப்பாடாத வரை, இனவாதத்தை வேறுவழியில் முறியடிக்க முடியாது. மக்கள் தமக்காக போராடும் வகையில் அணிதிரட்டுவதுதான், சமூகம் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் இன்றைய அரசியல் கடமை. இது வாக்கு போடச் சொல்வதல்ல. இது வெறுமனே இனவாதத்தை மட்டும் எதிர்த்து செயல்படுவதல்ல. இலங்கையில் எந்த பிரிவு மக்களும் எந்த வகையில் ஓடுக்கப்பட்டாலும், அவர்களுக்காக குரல் கொடுப்பது அவசியம். இதன் மூலம் எமக்காக அவர்கள் குரல் கொடுக்கும் வண்ணம், ஒருங்கினைந்த அரசியல் முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்டதாக எமது செயற்பாடு அமையவேண்டும். இந்த வகையில் தான் தேர்தல் பகிஸ்கரிப்பை அரசியல் மயமாக்க வேண்டும்.

 

இதற்கான போராட்டம் தான், நீண்டகாலத்தில் இனவாதத்தை முறியடிக்கக் கூடியதாக அமையும். இதை எற்றுகொள்ளாமல் பலர் இருக்கலாம். ஆனால் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள், அவர்கள் தனிநபராக இருந்தாலும், தொடர்ச்சியான கிளர்ச்சி போராட்டத்தை விடப்பிடியாக நடத்தப்பட வேண்டும். இதன் மூலமே எதார்த்தம் சார்ந்த உண்மையை, எற்றுக்கொள்ளும் மக்கள் திரள் அமைப்பைக் கட்டமுடியும்.

 

இதுவல்லாத தீடிர் உணர்ச்சி, படுகுழியைத்தான் வழிகாட்டும். மிக நல்ல உதாரணம் புலிகள். இனவாதத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சியை ஆதாரித்த மக்கள், புலியையும் அதே காரணத்துடன் ஆதாரித்தனர். இதற்கு மாற்றான அனைத்தை நிராகரித்தனர். அதன் விளைவை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர். மீண்டும் அதை வழியில் செல்லுகின்றனர். வேறு வழி, அவர்களிடம் கிடையாது. மக்கள் இப்படி இருப்பது என்பது, ஆளும் வர்க்க கருத்தியலுக்கு உட்பட்டுத்தான். இதை நாம் மாற்றப் போராடாமல் இருப்பது, தொடர்ந்து இனவாதத்துக்கு துணை போவதுதான்.

 

தேர்தல் கால இனவழிப்பு எற்படுத்தும் இனவுணர்ச்சி, புலியழிப்பு காலத்தில் கூட எற்பட்டது தான். புலியை ஆதாரிப்பது தான், புலியை பாதுகாக்கும் ஒரு வழியாக முன்வைக்கப்பட்டது. இன்று தேர்தலில் வாக்குப் போடக் கூறுவது போல். புலியின் அழிவில் இருந்து காப்பற்ற  உணர்ச்சிக்கு உட்பட்டு அதை ஆதாரித்தன் மூலம், அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேறு வழியில் போராடியிருந்தால், இது சாத்தியமானதாக இருந்தது. அதே அடிப்படையில், தேர்தலில் கூட்டணியை ஆதாரிப்பதன் மூலம் கடுகளவும் இனவழிப்பைத் தடுக்க முடியாது.

 

இதற்கு மாறாக நாம் சிந்திப்பது, எந்த இனவாதத்தையும் ஆதாரிக்கமல் விடுவது, மக்களை இதற்கு வெளியில் விழிபுற வைப்பதற்காக நாம் முதலில் அமைப்பாவது தான், மாற்று அரசியல் வழிமுறையாகும். மந்தைகள் போல், மக்களை வால்பிடித்த வாக்குப் போடுவதில்லை. மக்கள் தமக்காக தாம் போராட வேண்டுமென்றால், வாக்கு போடுவதை நிராகரிக்க கற்றுக் கொடுக்கவேண்டும். வாக்கு போடுவதை நிராகரிப்பது என்பது, சாரம்சத்தில் மக்கள் தமக்காக மாற்று வழியில் போராடக் கற்பதும், கற்றுக்கொடுப்பதும் தான்.

 

(இதற்குள் கேள்விகள் இருப்பின் தனிபதிவாக பதிளிக்கப்படும்)

 

பி.இரயாகரன்
28.03.2010