Language Selection

புதிய ஜனநாயகம் 2009

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதியன்று நடைபெற்றபோது, மே.வங்கத்தில் பயங்கரவாத ""ஊபா'' () சட்டம் செயல்படுத்தப்படுவதைப் பற்றிய விவாதம் நடக்கும்; மே.வங்க அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் என்று "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்தன. ஆனால், அக்கூட்டத்தில் இது பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை

.

""மே.வங்க நிலைமை பற்றி அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜியோ, மாநிலச் செயலாளர் பீமன்போசோ எதையும் குறிப்பிடாததால், நாங்கள் அதைப் பற்றி எதுவும் விவாதிக்கவில்லை'' என்கிறார். சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளரான எம்.கே.பாண்டே. ""எங்கள் கட்சி ஊபா சட்டத்தையொட்டி சில முடிவுகள் எடுத்துள்ளது. ஆனால் மாநில அரசு, அரசியல் சட்டப்படிதான் இயங்க முடியும். தொழிற்தகராறு சட்டத்தை எங்கள் கட்சி கருப்புச் சட்டம் என்று அறிவித்துள்ள போதிலும், மே.வங்க அரசு அதை நடைமுறைப்படுத்தித்தான் வருகிறது. அதைப்போலவே ஊபா சட்டத்தை எங்கள் கட்சி எதிர்த்தாலும், மாநில அரசு அதை நடைமுறைப்படுத்துவதில் வியப்பொன்றும் இல்லை'' என்று விளக்கமளிக்கிறார் இந்த தொழிற்சங்க சுல்தான்.

 

சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வார இதழான ""பீப்பிள்ஸ் டெமாகிரசி''யில் (டிசம்பர் 21,2008 தேதியிட்ட இதழ்) அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சீதாராம் எச்சூரி, இந்தச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதினார். இப்போது மே.வங்க அரசு, லால்கார் போராட்டத் தலைவரான சத்ரதார் மஹடோவை இப்பயங்கரவாத ஊபா சட்டப்படி 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் சிறையிலடைத்துள்ளது. எச்சூரியோ ""கட்சியின் நிலைப்பாடு வேறு; மாநில அரசின் செயல்பாடு வேறு'' என்று தமது சந்தர்ப்பவாதத்துக்குப் புதுவிளக்கம் தருகிறார்.

 

""ஊபா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை எங்கள் கட்சி எதிர்க்கிறது. அதேசமயம் மைய அரசு மாவோயிஸ்டு பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. மைய அரசு போட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டப்படிதான் மே.வங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கிறது. மாநில அரசு எந்தக் கருப்புச் சட்டத்தையும் இயற்றவில்லை'' என்று தனி விளக்கம் அளிக்கிறார், மே.வங்க சி.பி.எம்.செயலாளரான பீமன்போஸ்.

 

""இதுதான் சி.பி.எம். கட்சியின் அப்பட்டமான இரட்டை நாக்கு'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர், "இடதுசாரி' கூட்டணியிலுள்ள புரட்சி சோசலிஸ்டு கட்சியினர். சொல்லில் சோசலிசம், செயலில் பாசிசம் என்ற பித்தலாட்டத்துக்கு மிகப் பொருத்தமான துரோகக் கும்பல்தான் சி.பி.எம். கட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? ·

 

நாடெங்கும் ஏறத்தாழ 5,000 பேர் கொண்ட ஆயுத மேந்திய படையை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் கட்டியமைத்துள்ளதாக அரசின் உளவுத்துறை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ள நிலையில், அவர்களை ஒழிக்க நாடெங்கும் இவ்வளவு பெரிய அதிநவீன ஆயுதப் படைகளை அரசு கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தக் கிளம்புவது ஏன்?

 

சுருக்கமாகச் சொன்னால், மே.வங்கத்திலிருந்து ஆந்திரா வரையில் நக்சல்பாரிகள் ""சிவப்புப் பிரதேசத்தை'' உருவாக்கிவிட்டார்கள் என்று அரசு பீதியூட்டிவரும் இப்பகுதியில்தான், நாட்டின் கனிமவளம் மிகுந்துள்ளது. ஜிண்டால், டாடா, எஸ்ஸார் முதலான ஏக போக நிறுவனங்கள் இப்பகுதியில் கனிம வளத்தைச் சூறையாட அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. 2005ஆம் ஆண்டில் சல்வாஜூடும் என்ற குண்டர்படையை அரசு கட்டியமைத்த அதேநேரத்தில்தான், நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இம்மாநிலங்களில் போடப்பட்டன. சட்டிஸ்கரிலும் ஜார்கந்திலும் நக்சல்பாரிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்கள். இப்போது திடீரென நக்சல் வன்முறை பற்றிக் கூப்பாடு போடுவதற்குக்காரணமே, இப்பகுதிவாழ் மக்களை வெளியேற்றிவிட்டு, இம்மாநிலங்களின் கனிம வளமிக்க வனப்பகுதியை உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் சூறையாடலுக்குத் திறந்து விடுவதற்குத்தான். சட்டிஸ்கரிலுள்ள தண்டேவாடா மாவட்டத்தில் மட்டும் 644 கிராமங்களிலுள்ள மக்கள் கட்டாயமாக அரசால் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏறத்தாழ மூன்றரை இலட்சம் மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

 

அரசு எந்திரம் இப்பகுதிகளில் பலவீனமாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறுவது அப்பட்டமான பொய். ஏறத்தாழ 3 இலட்சம் தாழ்த்தப்பட்டபழங்குடியின மக்கள் இப்பகுதிகளிலிருந்து வனத்துறையாலும் போலீசாலும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பாவிகள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டுள்ளனர். எல்லாவகையான அடக்குமுறைச் சட்டங்களும் இங்குதான் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதிகாரவர்க்கபோலீசுஇராணுவ ஆட்சி இங்குதான் முழுஅளவில் வீச்சாகச் செயல்படுத்தப்படுகிறது.

 

""காடுகளும் மலைகளும் சூழ்ந்த பின்தங்கிய இப் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டங்களை நக்சல்பாரிகள் எதிர்க்கிறார்கள்; முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்'' என்று வாதிடுகிறார் ப.சிதம்பரம். ஆனால், இப்பகுதிகளிலுள்ள உழைக்கும் மக்கள் நீண்டகாலமாக வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராடி வந்துள்ளார்கள். வன உரிமைப் பாதுகாப்பு, குறைந்தபட் சக் கூலி, வேலைக்கு உணவு, புறம்போக்கு நில உரிமை மற்றும் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை வசதி முதலானவற்றுக்காகப் போராடினார்கள். அவற்றையெல்லாம் மிருகத்தனமாக ஒடுக்கி, அம்மக்களை இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே இருத்திவைத்து கடந்த 62 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த ஆட்சியாளர்கள், இப்போது "வளர்ச்சிக்கு' நக்சல்பாரிகள் தடையாக நிற்பதாகப் பேசுகிறார்கள்.

 

நாட்டின் பாதுகாப்புக்கு நக்சல் வன்முறை மிகப் பெரிய அச்சுறுத்தலாகி விட்டதாம்! அதற்காகத்தான் இந்தப் போர் நடத்தப்படுகிறதாம்! நாட்டையும் மக்களையும் அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமைப்படுத்திவிட்ட சர்வகட்சி ஆட்சியாளர்கள் இப்படியொரு பூச்சாண்டி காட்டுகிறார்கள். நக்சல் வன்முறை தீவிரமாகிவிட்டதாகக் கூறப்படும் பகுதிகளிலுள்ள காடுகளை அழித்த கிரிமினல் மாஃபியா குண்டர்கள், மலைகள் குன்றுகளை அழித்த குவாரி மற்றும் சுரங்க முதலாளிகள், வனத்துறை அதிகாரவர்க்கக் கொள்ளையர்கள், இப் பகுதிவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களில் பலரைக் கொன்றொழித்தும் பலரை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கியும் அரசு ஆதரவோடு அட்டூழியம் செய்து வரும் சல்வாஜூடும் குண்டர்படைகள் என நாட்டின் பாதுகாப்புக்கே, மக்களின் பாதுகாப்புக்கே மிகப்பெரிய அபாயமாக நிற்கும் நாட்டுவிரோத மக்கள்விரோத இச்சக்திகள் மீது எந்த அரசும் இன்றுவரை எந்தத் தாக்குதலும் நடத்த முன்வரவில்லை. மாறாக, இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அம்மண்ணையே சூறையாடிவரும் தனியார்மயதாராளமயக் கொள்ளையை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடுபவர்கள்தான் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, அவர்களை ஒடுக்குவது என்ற பெயரில் இப்பகுதிகளில் உள் நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆந்திரா, சட்டிஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணப் பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவரும், களநிலைமைகளில் அனுபவமிக்கவரும், இரு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் () தலைமை இயக்குனருமான மகேந்திர குமாவத், ""இத்தகைய போரினால் நாட்டின் அப்பாவி ஏழை மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதும் இரத்த ஆறு ஓடுவதும்தான் நடக்கும். சொந்த நாட்டு மக்களின் மீதே இப்படியொரு போரை நடத்துவதால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. மாறாக, இப்பிரச்சினைகள் மேலும் தீவிரமாகவே செய்யும்'' என்று எச்சரிக்கிறார். ஆனாலும், எல்லா ஓட்டுக் கட்சிகளும் மைய அரசு தொடுக்கும் இந்தக் கொடிய உள்நாட்டுப் போருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தெரிவிக்கின்றன. வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளரான பரதன் மட்டுமே, மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் ஆயுதப் படைகளைக் குவித்து தாக்குதல் நடத்துவதை எதிர்க்கிறார். அவரும் கூட, அந்தந்த மாநிலப் போலீசுப் படைகளைக் கொண்டு "நக்சல் வன்முறை' யைத் தடுக்குமாறு உபதேசிக்கிறார்.