உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாக நடித்த இந்த கயவன், காவேரியை அனுபவித்தபின் அவளுடைய தங்கையயும் கேட்கிறான். திருமணம் முன்பு வரை காவேரி அழகில்லை என்று அந்த காமவெறியனுக்கு தெரியாதா என்ன? தெரிந்தும் அவள் தங்கையை அடைய காவேரியை கொல்லவும் தயாராகிறான்.
ஆகையால் தான், 11 தீக்குச்சிகளை காட்டி மிரட்டியவன், 12 வது தீக்குச்சியில் தன்னுடைய மனைவியையே பொசுக்குகிறான். இது ஏதோ ஆத்திரத்தில் நடந்தது அல்ல.
03-10-09, நக்கீரன்
இந்த மறுகாலனியதிக்க காலத்தில் பாலியியல் வெறியே உண்மையான் காதல் போல், பண்பாட்டுக் கருவிகள் பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன. பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப் பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. அதனால் தான், காவேரி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்னுடைய தாயிடம் யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணத்தை தெரிவிக்கிறாள்.
நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள் காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள் அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை.
அவசரகதியில் முடிவுசெய்ய, காதல் என்பது சந்தையில் விற்கப்படும் பொருள் அல்ல. உலக வாழ்க்கையையும், சமூகத்தையும் புரிந்து கொண்ட பின்னர், வாழ்க்கையில் தன் வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும் காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச் சொல்கிறது.
http://rsyf.wordpress.com/2009/