வெளிநாட்டவர்களுக்கு எதிராக கோஷம் இடும் நாசிகள், வெளி நாட்டவர்களாலேயே இங்கு பிரச்சனைகள் எனக் கோஷம் இடுகின்றனர். இங்கு வேலையில்லாமைக்குக் காரணம் வெளிநாட்டவரே என படுபுளுகு விடுகின்றனர்.
பிரஞ்சு தேசத்தோர் மொத்தமாக 25லட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில்புரிகின்றனர்.
அமெரிக்காவில் - 1,15,000 பேர்
பெல்ஜியத்தில் - 1 லட்சம் பேர்
ஜெர்மனில் - 80,000 பேர்
இங்கிலாந்தில் - 60,000 பேர்
கனடாவில் - 52,000 பேர்
சுவீசில் - 30,000 பேர்
ஸ்பெயினில் - 28,000 பேர்
இத்தாலியில் - 21,000 பேர்
கொலன்டில் - 8,000 பேர்
சுவீடனில் - 3,000 பேர்
ஜப்பானில் - 3,000 பேர் என மொத்தமாக 7,70,000 பேர் இந்நாடுகளில் வேலை செய்கின்றனர்.
பதினொரு முன்னனி பன்னாட்டுக் கம்பனிகளில் , மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளனர். இதை விடவும் பதவியில் இல்லாமல் 17 லட்சம் பிரஞ்சுக்காரர்கள் வெளி நாடுகளில் தொழில் புரிகின்றனர். இது போன்று வெளிநாடுகளில் 45 இலட்சம் ஜெர்மனியரும், 50 லட்சம் ஜம்பானியரும் தொழில் புரிகின்றனர்.
பிரான்சிலுள்ள 1,40,000 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியில் 92 சத விகிதம் ஏற்றுமதி ஆக்கப்படுவதன் மூலம் மூன்றாம் உலக நாடுகள்; சூறையாடப்படுகின்றன.