Language Selection

அன்று ஆறுமுகசாமி 5 வது முறையாக தீட்சிர்களால் தாக்கப்பட்டார். வழக்கம் போல சிதம்பரம் காவல் துறை பார்ப்பானுக்கு ஒரு நீதி, பஞ்சம சூத்திரனுக்கு ஒரு நீதி என்று<அடித்தவன் பெயர் தெரியாது என வழக்கு போட்டது.

“சிவனடியாரை தாக்கியது ரவுடி ஞானமூர்த்தி தீட்சித கும்பல்தான், கைது செய்யுங்கள், நீங்களும் விசாரித்து கொள்ளுங்கள்” என்று நாங்கள் போலீசிடம் சொன்னோம். ஆனால் பூணூல் குடுமிக்கு எதிராக காக்கிச் சட்டை அசைய மறுத்து விட்டது.

இதற்காக 17.7.2009 அன்று காலை 10.00 மணிக்கு மேலவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்புடன், பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பா.ம.க, வி.சி.க மற்றும் சிவனடியார் ஆறுமுகசாமி, வி.எம். சந்திரபாண்டியன், வி.வி.சுவாமிநாதன், வழக்கறிஞர் ராஜூ, வழக்கறிஞர் செந்தில், காவியச்செல்வன், தோழர் அம்பிகாபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அதில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ பேசிய உரையின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

” சிதம்ரம் நகர போலீசு சிவனடியாரை தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சித கும்பலை இந்த ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கைது செய்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நடராசர் நகையை திருடிய தீட்சித்தர்கள் மீது சங்கர தீட்சிதர் என்பவர் கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டு 1994 முதல் தூங்குகிறது. மூர்த்தி தீட்சிதர் என்பவரை கோவிலுக்குள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் நகர ஆய்வாளர் ராமலிங்கத்திற்கு தெரிந்தும் அன்றைக்கு வழக்கு பதிவு செய்யாமல் முடிக்கப்பட்டது. இவைகளுக்கு சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் போட்ட வழக்கில் தமிழக போலீசு 2 வருடங்ளாக தீட்சிதர்களுக்கு ஆதரவாக இழுத்தடித்து வருகிறது.பின் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?”……

“போலீசு தன் கடமையை செய்ய மறுக்கிற போது , பொது மக்களே அதை செய்யவேண்டும். குற்றவியல் சட்டம் பிரிவு 43 நமக்கு அந்த அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. சிவனடியாரை தாக்கிய ரவுடி ஞானமூர்த்தி தீட்சிதரை நாமே பிடித்து கையை பின்புறம் கட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இப்படி செய்யும் சூழல் இருந்தால் போலீசு முந்தி கொண்டு கைது செய்து விடும். கடலூரில் புதிதாக வந்துள்ள எஸ்.பி, எஃப்.ஐ.ஆர் இருந்தால் அந்த ரவுடி கையை உடைத்து விடு என்று சொல்கிறார். தீட்சிதன் கையை உடைப்பாரா அந்த கடலூர் எஸ்.பி என்று நாங்கள் கேட்கவில்லை, கைது செய் என்றுதான் கேட்கிறோம்.”

“தமிழ் பாடும் அரசாணையை போலீசு அமுல்படுத்த தவறினால் ம.க.இ.க தோழர்களும், பொது மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் தானே அமல்படுத்தும் என்பதை அறிந்த அரசு, ஏ.எஸ்.பி செந்தில் வேலன் மூலம் நிறைவேற்றியது. நாம் செய்திருந்தால் எத்தனை தீட்சிதர்களுக்கு பூணூல் குடுமி அறுந்திருக்கும், மண்டை உடைந்திருக்கும், என்று சொல்ல முடியாது. போலீசு உயர் அதிகாரிகள் வர்க்க பாசத்தோடு தீட்சிதர்கள மீது தள்ளு முள்ளு நடத்தியபோது எஸ்.பியை தாக்கிய பிறகும் அடங்காத தீட்சிதர்கள் சாதாதரண காவலர்கள், போலீசு என்பதை தாண்டி வர்க்க உணர்வோடு உடம்பு முழுவதும் எண்ணை தடவிய தீட்சித பார்ப்பனர்களை சிண்டை பிடித்து இழுத்து சிற்றம்பல மேடைக்கு வெளியே எறிந்தவர்கள் சாதாரண காவலர்கள். அன்று மாலை எங்கள் மீது தடியடி நடத்தி கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது ஏ.எஸ்.பி. செந்தில் வேலன் என்னிடம் என்ன தெரியுமா சொன்னார்? ‘என் உத்யோகத்தை பணயம் வைத்து இன்று காலை இந்த வேலையை செய்து முடித்தேன்’ என்றார். அரசாணையை அமுல்படுத்தும் இந்த போலீசு அதிகாரி வேலையைப் பணயம் வைக்கிறார் என்றால என்ன அர்த்தம்? பார்ப்பானிடம் பூணூல் குடுமி இருக்கிறது. அவன் ஆன்மீகத்தில், சாதாரண மக்களை பக்தியால் ஒடுக்கும் ஆன்மீக போலீசு. இவர்களிடம் லத்தி, துப்பாக்கி இருக்கிறது. சாதாரண மக்களை அடித்து பலாத்காரமாக ஒடுக்கும் அரசு போலீசு, அதனால் தீட்சிதப் பார்ப்பான் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதை புரிந்து கொண்டால்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக செய்ய முடியும்.”

“எங்களை சட்டவிரோதமாக தாக்கி கைது செய்த போலீசு மீது வழக்கு போட்டு இதே சிதம்பரம் நீதிமன்றத்தில் அவர்களை குற்றவாளிகளாக்கி கோர்ட டவாலியால் போலீசு வகையறா என்று கூப்பிட வைத்திருக்க முடியும். ஆனால் எங்கள் போராட்டம் போலீசை எதிர்த்து அல்ல. தீட்சித பார்ப்பனர்களை எதிர்த்துதான். கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழில் பாடி வழிபட சென்று சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் அடித்து கையை முறித்து தூக்கி வெளியே வீசினார்களே, அப்போது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தீட்சிதனுக்கு எதிராக இங்கு கண்டன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தியிருந்தால், நம்ம தோழரை தீட்சித பார்ப்பன வேசம்போட்டு செருப்பால் அடித்து இழுத்து சென்றதை வைத்து சிதம்ரத்தில் பிராமண சங்கம், பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தியிருக்காது. பிரமீடு சாய்மீரா என்ற பிராடு கம்பெனி தலைவர் நாராயணன், பிராமணர் சங்க தலைவராக துணிச்சலாக இங்கு பேசியிருக்க மாட்டான். இந்து ஆலய பாதுகாப்பு குழு என்கிறான். இந்த ஆலயப்பாதுகாப்பிற்காக என்ன செயதான், கோவிலில் நடந்த தீட்சிதர்களின் காமகளியாட்டத்தை தட்டி கேட்டானா, மர்ம கொலைகளுக்கு நீதி கேட்டானா, சாமி நகையை திருடி விற்ற தீட்சிதனை தண்டித்தானா, பக்தர்களிடம் ஆன்மீகத்தை பேசாமல் டூரிஸ்ட் கைடு போல பணம் பறித்த்தை தடுத்தனா, தமிழ்பாட மறுத்த தீண்டாமை கொடுமைக்கு குரல் கொடுத்தனா? கோவில் சொத்தை விற்று பங்கு போட்ட தீட்சிதனை கண்டித்திருப்பானா? கோவில் முழுவதும் குப்பையும், மாடும், மாட்டுசாணியும் பரவி கிடந்தபோது பார்க்காதவன், இன்று தீட்சிதன் போட்ட எச்சில் எலும்பு துண்டுக்காக கைக்கூலிகளாக ஒன்று சேர்ந்து இந்து ஆலய பாதுகாப்பு குழு என்று வைத்து கொண்டு உண்டியல் வைப்பதை தடுக்கிறான், கோவிலை பாதுகாப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பெற்ற உரிமையை பாதுகாப்பது நமது கடமை.”

இந்த கோவிலில் வரும் வருமானத்தை சாமியாரா கொண்டு போக போகிறார், இல்லை நாங்க கொண்டு போக போகிறோமா? அவர் மட்டும் பாட வேண்டும் என்று இருந்தால் எப்போதோ போராட்டம் முடிந்திருக்கும். அனைவரும் பாடவேண்டும், இந்த கோவில் முழுமையாக தீட்சித கொள்ளை கூட்டத்திடமிருந்து மீட்க வேண்டும். தீட்சித தனித்சொத்தாக உள்ள, நடராசா கோவில் பொது சொத்தாக்காப்படவேண்டும் என்பதற்குத்தான் இந்த போராட்டம். தமிழக முதல்வரால் நேரடியாக தமிழ் காவலர் என்று பாராட்டு பெற்று, மாதம் 3000 ஓய்வூதியம் பெறுபவர், பெற்ற உரிமை பாதுகாக்க படவேண்டும் என்பதற்காக தள்ளாத வயதிலும் தினந்தோறும் மாலையில் கோவிலுக்கு சென்று சிற்றம்பல மேடைக்கு போங்க, பாடுங்க, தீட்சிதன் காசு கேட்டா குடுக்காதீங்க, உண்டியல்ல காசு போடுங்க என்ற பக்தர்களை ஆற்றுபடுத்துகிற காரணத்தால் கோவிலுக்கு வரும் சிவனடியாரை தீட்சிதன் தாக்க முடிகிறது என்றால் காரணம் தீட்சிதன் அல்ல, சிதம்பரம் நகர பொதுமக்கள், பக்தர்கள்தான். வள்ளலார் ஜோதியில் கலந்தார், நந்தனார் ஜோதியில் கலந்தார், பெத்தான சாம்பான், மூத்த்தாண்டவர் ஜோதியில் கலந்தார்கள், சிவனடியார் ஆறுமுகசாமி கால் தவறி கீழே விழுந்து கருங்கல்லில் அடிப்ட்டு இறந்து போனார் என்று தீட்சிதனே சாமியாரை சுவற்றில் மோதி கொன்று விடுவான். காவல்துறை இத்துப்போன 2 தீட்சிதனை கைது செய்யும். சாட்சி சொல்ல எந்த பக்தர்களும் வரமாட்டான் கேஸ் முடிந்து போகும்

“காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த சங்கரராமனை, சங்கராச்சாரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து போட்டுத்தள்ளினார். யார் சாட்சி சொல்லுவார்கள். அது போல இங்கேயும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் சாமியாரை தீர்த்து கட்ட, தீட்சிதர்கள் முன்னோட்டம் பார்க்கிறர்கள். சாமியாரை இத்தனை தடவை தாக்குகிறார்களே, நாம் ஒரு தடவை தீட்சிதனை திருப்பி அடித்து விட்டால் என்ன ஆகும்? நாம் போலீசு ஸ்டேசன்ல புகுந்து போலீசை அடிச்சா என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். கோவிலும், போலீசு ஸ்டேசனும் ஒன்றுதான்.

சாமியார் கொல்லப்பட்டால் முதல் குற்றவாளி தீட்சிதன், இரண்டாவது குற்றவாளி சிதம்பரம் நகர மக்கள், மூன்றாவது குற்றவாளி போலீசு என்பதை அறுதியிட்டு சொல்லுகிறேன். தீட்சிதர்களால் சாமியார் உயிருக்கு ஆபத்து என்றுபல முறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். ஏனென்றால் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வந்த தில்ல நடராசன் கோவில் முழுமையாக கையை விட்டு போகிறது அதை மீட்க முடியாமல் இருப்பதற்கு சாமியார்தான் காரணம், அவரை போட்டு விட்டால் நீதிமன்றத்திற்கு இவர்கள் தொடர்ந்து வாதாட முடியாது என்று தீட்சிதர்கள் நினைக்கிறார்கள்.” “சாமியாரை அடித்தால் பொதுமக்கள் திருப்பி அடிப்பார்கள் என்று தீட்சிதன் நினைத்தால் சாமியார் தாக்கப்படமாட்டார். சாமியாரை தாக்கிய தீட்சிதனை நாம் கைது செய்யாவிட்டால் தீட்சிதனுக்கு பாதுகாப்பில்லை என்று போலீசு நினைத்தால் போலீசு தீட்சிதனை கைது செய்யும். தீட்சித பார்ப்பானுக்கு எதிராக சட்டம் செயல்படாது என்பது தொடருமானால், மக்களே சட்டத்தை அமல்டுத்த வேண்டும். அப்போது நடராசர் கோவில் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும். அதற்கு நாங்கள் முன்னணியில் இருப்போம். 15 நாட்களுக்குள் ரவடி ஞானமூர்த்தி தீட்சித கும்பலை போலீசு கைது செய்யாவிட்டால் நாங்களே கைது செய்து போலீசு நிலையத்தில் ஒப்படைப்போம் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.”

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

தொடர்புடைய பதிவுகள்

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

12

 

 

3

4

http://www.vinavu.com/2009/07/31/thillai4/