Language Selection

வன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.

 

வன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். மகிந்தா-கோத்தபாயா முதல் சர்வதேச சமூகம் வரை மனித அவலம் பற்றி நாளாந்தம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

 

ஓபாமாவின் அமெரிக்கா கூட 'தாங்கொனாத் துயரில்" போர்ப் பொறிக்குள் அகப்பட்ட மக்களை வான் ஊர்திகள் கொண்டு அழைத்துச் செல்லலாமா என சிந்தித்தது!

 

தமிழகத்தில் திராவிடக் கழகங்கள், - ஏனைய அரசியல்; தலைவர்கள் 'தம் உயிரினும் மேலான உடன்பிறப்பபுக்களை இரத்தத்தின் இரத்தங்களை" தொப்புள் கொடி உறவுகளுக்காக (தேர்தல்) போர்க்கோலம் பூண வைத்துள்ளனர்! nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார்!  தமிழ்மக்களைக் கொன்றொழிக்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மேலே ஓருபடி சென்று, தாம் ஆட்சிக்கு வந்த 100நாட்களில் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்கின்றார்! இதனால் தமிழகமக்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என திக்குமுக்காடுகின்றார்கள்.

 

மறுபுறத்தில் புலிகளின் புலம்பெயர்வுகள் மனிதப் பேரவலத்தை முன்நிறுத்தி வகைவகையான கோசங்களோடும் - கோரிக்கைகளோடும் பல்லாயிரக் கணக்கில் மக்களை திரள வைக்கின்றனர். புலிகளின் இப்பாசாங்குகள் சர்வதேச சமூகத்திற்கு தெரியாத ஒன்றல்ல!

 

வன்னி நிலப்பரப்பில் மக்கள் அழிவிற்கு அரசே  பிரதான காரணி. புலிகள் மக்களை யுத்தப்பொறிக்குள் தங்களோடு பலவந்தமாக வைத்திருப்பது மக்கள் அழிவிற்கான மறறோர் காரணி! அத்தோடு சர்வதேச சமூகத்திடம் இருந்தும் அரசிடம் இருந்தும் மக்களுக்கு வருபனவற்றைக்கூட கிடைக்காமல் செய்து, அதில் பெரும்பகுதியைக் தமதாக்குவதும் உலகறியா விடயமல்ல. இதனாலேயே எங்களுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கும், நாங்களே சாப்பாடு போடுகின்றோம் என்கின்றது அரசு

 

தொணடர் நிறுவன ஊழியர்களை - ஐ.நா.சபை ஊழியர்களை - ஏன் மக்களைக் கூட தங்களுக்கிசைவாக - பலாத்காரமாகவே செயற்படுத்துகின்றார்கள். மக்களுக்கு பாதுகாப்பாக  ஒதுக்கப்படும் இடங்களுக்குள் ஊடுருவுவதன் மூலம் மக்களுக்கான (குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள்) சோதனைக் கெடுபிடிகள் பயங்கரமாக மேற்கொள்ளப்படுகின்றன! ஒருபுறம் போர்ப்பொறிக்குள்ளும் மறுபுறம் ஊடுருவியும் மக்களைக் சாகடிக்கும் வேலைக்கு காரணியாக இருந்துகொண்டு, சர்வதேச சமூகமே மக்களைக் காப்பாற்று என ஒப்பாரி வைப்பதும்;, மன்றாட்டக் கடதாசி கொடுப்பதும், புலிப்பாசிசத்தின் பாசாங்கே!

 

புலிகள் ஓர் மக்கள்சார் விடுதலை இயக்கமாக இருந்து, தமிழ்மக்களின்  சுயநிர்ணய உரிமைப்போரை, புரட்சிகர வெகுஐனப்போராக முன்னெடுத்திருந்தால் சர்வதேசிய சமூகத்தை நோக்கிய மன்றாட்டமோ, ஒப்பாரியோ வைக்கத் தேவையில்லை! மக்கள் நலனில் சர்வதேசத்தை விட புலிகளுக்கே அதிக அக்கறை இருந்திருக்கவேண்டும்.

 

தேசத்திற்காக!, தேசியத்திற்கான!, சுதந்திரத்திற்காக!, விடுதலைக்காகப்!, போராடும் உண்மையான விடுதலை  இயக்கங்கள் மக்கள் நலனில் - அவர்களின் அபிலாசைகளில் இருந்தே போர் என்ன, சகலதையும் முன்னெடுப்பார்கள்! இந்நோக்கில் புலிகளிடம் தமிழ் மக்களின் விடுதலைக்காக எதுதான் உள்ளது? மக்கள் விரோதமும் குரூர கொலைக் குணம்சம் கொண்ட குறுந்தேசிய இனவெறிப் பசிசமுமே! இவ் இருப்பைக் கொணடவர்களால் தமிழ்மக்கள் விடுதலை என்பது ஏட்டுச்சுரைக்காயே! 

 

இந்நிலையில் தமிழ்மக்களின் எதிர்காலம்தான் என்ன? மகிந்த சிந்தனையையும் அதன்பேரினவாத நடவடிக்கைகளையும் ஏற்று அதனோடு சமதான சகஐPவனம் செய்வதா? தத்துவங்கள் சோறு போடாது 'நம்புங்கள் மகிந்தன் நல்லவன்" அவர் தருவதை பெறுவது இன்னும் பெறவேண்டியவற்றிற்காக காத்திருப்பது என்ற டக்கிளஸ் - கருணா போன்ற ஐனநாயக நீச்சலடிப்பாளர்களின் பின்னால் செல்வதா? அல்லது தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போரை மூன்றாவது பாதையின் ஊடாக செல்ல வைப்பதா?

 

தமிழ் மக்களின் சுயநிர்னய உரிமைப்போர் சம்பந்தமாக நான்காம் அகிலக்காரர் முதல் பினநவீனத்துவம் வரையுள்ள 'தத்துவவாதிகள்" பலர் 'தத்தக்கப் பித்தக்கம்" என்ற நிலையிலேயே உள்ளனர். நான்காம் அகிலக்காரர்கள் உலகப் புரட்சியிலேயே தமிழமக்கள் விடுதலை எனபர். தலித்காரர்கள் 'தலித் புரட்சியிலேயே" தமிழ் மக்கள் விடுதலையென்பர்! பின்நவீனத்துவக்காரர்கள்  'நவீனத்துவப்; புரட்சியிலேயே" விடுதலையென்பர்! இப்பேற்பட்டோர் தமிழ்மக்கன் பிரச்சினையை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் அணுகாமல் வெறும் யாந்திரப் பாங்குடனேயே பார்க்கின்றனர்!

 

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப்போர் முற்றுப்பெறவில்லை. கடந்த கால்நூற்றாண்டு காலமாக குறுந்தேசிய இனவெறியாளர்களின் போரால் (புலிகள்) அது சரியான திசை நோக்கிச் செல்லாது தற்காலிகப் பின்னடைவில் தரித்துள்ளது! இது தற்காலிகமானதே! இது மூன்றாவது பாதையின் ஊடாக புதுப் பரிமாணங்களோடு முன்னேறிச் செல்லும்! செல்ல வைக்கவும் வேண்டும்! மனிதகுல வரலாறு என்பது எப்போதும் சமாந்திர நேர்கோட்டில் வந்ததுமல்ல. போவதுமல்ல!

 

சமகால நிலையில் மூன்றாவது பாதை நோக்கிய கொள்கை கோட்பாடுகளோ அல்லது i;தாபன அமைப்போ இல்லை. ஆனால் இதை  வகைப்படுத்தி, உள்வாங்கிய நோக்கில், தோழர்கள் - நணபர்கள் - கல்வியாளர்கள் நாட்டிலும், புலம்பெயர் சமூகத்திலும் உள்ளனர்! இவர்கள் இவற்றை கட்டுரைகளாக பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் முன்வைக்கினறiர். இப்பேர்ப்பட்ட கட்டுரைகள் வருகின்றபோது, பலர் இந்நோக்கிலான ஆரோக்கியமான அபிப்பிராயங்களை பின்னூட்டங்கள் மூலம் வெளிக்கொணர்கின்றனர். இவை இன்னும் ஆழமான ஆக்கபூர்வமான - விவாதங்கள் மூலம் முன்னெடுக்கப்படவேண்டும்.

 

சிலர் இன்றைய சமகால நிலையை புதிய ஐனநாயகப் புரட்சிக்கான காலகட்டமாகவும் கணிக்கின்றனர.; உண்;மையில்  அதை நோக்கியதாக இருக்கவேண்டுமே தவிர, இன்றைய காலகாட்டம் உடனடியாக புதிய ஐனநாயகப் புரட்சிக்கான காலகட்டமல்ல. ஏன் என்பது பற்றிய பரந்துபட்ட ஆரோக்கியமான விவாதங்கள் தேவை.

 

புதிய ஐனநாயகப் புரட்சி பிரதான எதிரிக்கு எதிராக, அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் சிங்கள மக்களினதும், ஏனைய ஐக்கியப்படக்கூடிய அனைத்துச் சக்திகளையும் உள்வாங்கிய ஓர் ஐக்கிய முன்னணிப் போரே. இவ் ஐக்கிய முன்னணிப் போரில் ஐக்கியப்படக்கூடிய நட்புச் சக்திகள் (சிங்கள முஸ்லீம் மக்கள்) குறுந்தேசிய இனவெறியாளர்களின் நடவடிக்கைகளால் -(தற்காலிக) முரண்பட்ட  நிலையில் உள்ளன. அத்தோடு இப்போதும் சிலர் முi;லீம் மலையக மக்கள தேசிய இனமே இல்லையென்ற கருத்தோடு ஊசலாடுகின்றனர். இவைபற்றிய சரியான புரிதலின்றியும் இவை சீர்செய்யப்படாமலும், எடுத்தயெடுப்பில் புதியஐனநாயகப் புரட்சிபற்றி சிந்திக்க இயலாது. ஆனால் அதை நோக்கிய முன்னெடுப்புக்கள் வேலைகள் வேலைத்திட்டங்கள் அத்தியாவசிய தேவையே! நீண்டகால நோக்கில் ஏமது தாயகத்தின் விடிவிற்கான பாதை புதிய ஐனநாயகப் புரட்சியே!

 

ஆனால் இன்றைய இலங்கையின் சமகாலநிலை, ஐனநாயக போராட்டக் காலகட்டமே! மகிந்தப் பேரினவாதமும் மற்றொரு புலியாகவே செயற்படுகின்றுது! ஐனநாயகத்திற்கு எதிரான மிரட்டல், சட்டம், ஒழுங்கு, மனித உரிமை மீறல், ஊடகவியலாளர்களின் தொடர் கொலைகள் போi;ற சர்வாதிகார நடவடிக்கைகளை புலிப்பாசிசத்திடம் இருந்து மகிந்தப்பாசிசம் கொப்பியடித்ததுபோல் செய்து கொண்டிருக்கின்றது.

 

சிங்களமக்களுக்கு விமானத் தாக்குதல் குண்டுமழைப் பொழிவு அகதி வாழ்வு என்பன இல்லையே தவிர மற்றப்படி அவர்களும் அரசியல் பொருளாதார, சர்வாதிகார நெருக்கடிகளுpக்குள்ளும்;; சிக்கித் தவிக்கின்றனர்! இலங்கை இனறு மிகப் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றது! அதற்கான காரணம் இந்தியா போன்ற அந்நிய சக்திகளுக்கு, இலங்கை அரசியல் விபச்சார விடுதியாகியுள்ளது! அவர்களின் இசைவிற்கேற்ப அரசியலமைப்பும் - இராணுவக் கட்டமைப்பும் செயற்படுகின்றது! ராணுவ நடவடிக்கைளுக்கு பெருந்தொகை நிதி விரயமாகின்றது. மிகுதி சொற்பமே மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்படுகின்றது! இதன் விளைவாலேயே சிங்கள மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்! இதிலிருந்து சிங்கள மக்களை திசை திருப்பவே பயங்கரவாத ஒழிப்பு, புலி ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற நிகழ்வுகள்! இவை சிலநாட்கள் எடுபடும், நீணடகால நோக்கில் வெகுஐனப் போராட்டமாகவே மாறும்! இவற்றோடு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமும் இணைய வேண்டும்! இணையமுடியும்!

 

எம்நாட்டின் கடந்த 60 ஆண்டுகால பேரினவாத-குறுந்தேசிய இனவாத அரசியல் சாதாரண சிங்கள தமிழ் மக்களை பிளவுபடுத்தியுள்ளது! இவறிற்கு சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் பற்றி கட்டியெழுப்பப்பட்ட படிமங்கள்-புனைவுகளே முக்கிய காரணம்! இதனால் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர் பற்றிய உண்மை நிலைமைகள் பெரும்பாலான சிங்கள மக்களிடம் தெளிவாக சென்றடையவில்லை! சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை-தழிழீழம் என்றே பேரினவாதமும், குறுந்தேசிய அரசியலும் அவர்களை எண்ண வைத்துள்ளது! இதுபோல்; முஸ்லீம் மக்கள் பற்றி குறுந்தேசிய இனவெறியாளர்களால் கட்டப்பட்ட புனைவுகளால் -நடவடிக்கைளால் அவர்களும் எதிரியாக்கபபட்டுள்ளனர்! இதை சிங்களப் பேரினவாதம் தனக்கிசைவாக்கி கிழக்கு மாகாணத்தை துண்டாடும் வேலைகளை செய்துள்ளது! கிழக்கு மாகாணம் தேசிய இனப்பிரசினையின் (மூவின தேசிய மக்கள்) குவிமையம். இதி;ல் அரசு-கருணா-பிளiளான் என்ற முத்தரப்பும் கிழக்குமாகாண மக்களை நாளாந்தம் வதைத்துக் கொண்டேயிருக்கினறார்கள்! வடக்கில் டக்கிளஸ் ஆமியின் 'சட்டைப் பைக்குள்" இருந்துகொண்டு, வடக்கை மகிந்தாவின் 'வசந்த் பூமியாக்குகின்றார்"; மொத்ததில் எல்லாச் சர்வாதிகார-பாசிச-சக்திகளும், இவர்களிளின் வெளிநாட்டுக் கூட்டாளிகளும் இலங்கை மக்களை அடக்கி ஓடுக்கியும், இன-மத-ஐhதிய ரீதியில உள்ள முரணபாடுகளைக் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர்! இதுவே இன்றைய இலங்கைக்கான - உலகமயமாதலின் நிகழச்சிநிரல். 

 

இந்நிகழ்ச்சி நிரலின் ஊடாக எம்நாட்டு மக்களின் எதிரிகளை, நாம் அவர்களுக்கு எளிதாக இனங்காட்ட வேண்டும். இவர்கள்; சமகால நிலையில் பயங்கரவாதிகள்! நீண்டகால நோக்கில் கடதாசிப் புலிகளே. எம் மூன்றூவது பாதைக்கான நிகழ்ச்சி நிரலை, 'மக்களே மக்கள் மட்டுமே உலகின் உந்துசக்தி" யென முன்னிறுத்தி, இதிலிருந்து எம் வேலைகள் - வேலைத்திட்டஙகள் ஊடாக் பயணத்தை தொடர்வோம்!     

 

அகிலன்

01.04.2009