Language Selection

ஊடறு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

(தோழிகள் அனைவருக்கும் பெண்கள் அமைப்புக்களும் உதிரிகளாகவும் பெண்கள்  ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை நாம் ஆங்கிலத்திலும்  மொழிபெயர்த்து ஐ.நா சபை உட்பட அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்ப உள்ளோம் இக்குறிப்பில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் உங்கள் அமைப்புக்களின் பெயர்களையும் உங்களின் பெயர்களையும்  இணைக்குமாறு  கேட்டுக்கொள்கின்றோம்

 

We as individuals, friends, and women’s organizations are planning to translate the following statement into English and send it to the United Nations and other international human rights fora.  We request you to endorse the statement as an individual or as an organization and become a signatory to this document if you agree with it.) 

30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதாக சர்வதேச ரீதியாகப் பிரச்சாரப்படுத்திக் கொண்டு, மகிந்த ராஜபக்சவின்  இலங்கை அரசாங்கம் தனது  பேரினவாத இன அழிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள்,பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்களே.

தற்போது நடைபெற்று வரும் கண்மூடித்தனமான துப்பாக்கி மற்றும் எறிகணைத் தாக்குதல்களாலும் குண்டு வெடிப்புகளாலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், ஓரே குடும்பத்தில்  அனைத்து அங்கத்தவர்களையும் இழக்கும் சந்தர்ப்பங்களும் நாளுக்கு நாள்  பெருகிவருகின்றன.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள மனித பேரவலம் ஒரு புறம் உணவு வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் - வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் இராணுவம் வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது, எங்கு குண்டு விழுகிறது எந்தப்பக்கத்தில் இருந்து எறிகணை விழப்போகிறது  என்று ஒவ்வொரு வெடிச் சத்தத்திலும் உயிரைத் துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை  திட்டமிட்டு நடத்தி வருகின்ற இலங்கை பேரினவாத  அரசை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

 

 
முல்லைத்தீவிலிருந்து விடுதலைப்புலிகள்  வெளியேறியபோது  அப்பிரதேசங்களில் வசித்த  மக்களுடன் அவர்கள்  சென்றுள்ளனர். 300 சதுரகீலோ மீற்றர் கொண்ட பெரும்பகுதியான காடுகள் அடங்கிய பிரதேசமாகவே இது உள்ளது. இப் பிரதேசங்களில் அரசால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களால்   பொதுமக்கள் பாரிய உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும். முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது 4 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ள  இலங்கையின் பிரதான  எதிர்க்கட்சியான ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன இவர்களில் 2.000 பேர் கர்ப்பிணித் தாய்மார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளதுடன் வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து தமது ஆழ்ந்த அக்கறையை கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் வெளியிட்டுள்ளதுடன்  அப்பாவிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் விதமாக நடந்துகொள்ள வேண்டாம் என்று  போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ;'பாதுகாப்பு வலயம்' போதுமானதல்ல.

 

 

பாதுகாப்புவலயத்திற்கு தப்பிவந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை எறிகணை வீச்சை இலங்கை இராணுவம் செய்வதாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கியநாடுகளின் மனித உரிமைக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்  தனது நாட்டின்  பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசாங்கமே ஆனால் திட்டமிட்டு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கமே செய்து வருகிறது. பாதுகாப்பு வலயத்திற்குள் தப்பிவருபவர்களும் சந்தேகத்தித்தின் பேரில்  கொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள்  விசாரணை என்ற பெயரில்  கடத்திச்செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.காயப்பட்டவர்களுக்கு;  சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மீதும் அரசு ஷெல் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

பெப்ரவரி 3 ம் திகதி புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இரணடு மணித்தியால இடைவெளிக்குள் நான்கு தரத்திற்கு மேல் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றதெனவும், இதனால் அறுவை சிகிச்சை பகுதி பாதிக்கப்பட்டுள்தாகவும், பாதுகாப்பற்ற நிலையில்  காயப்பட்டவர்கள் வெளியேறுகின்றனர் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பேச்சாளரான சரசி விஜயரத்ன  தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் மக்கள் வாழும் பகுதிகள் மீது கிளஸ்டர் குண்டுகளை வீசியமை சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. (www.amnesty.org/en/news-and-updates/news/civilians-trapped-sri-lanka-conflict-20090128)

ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரின் கருத்துப்படி புதுக்குடியிருப்பிலுள்ள பிரதான வைத்தியசாலை கிளஸ்டர் குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. அது தற்போது வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் வைத்தியசாலை பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது. 16 மணித்தியாலங்களாக தொடர் செல்வீச்சுக்கும் குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ளது.


இவ்வாறான சூழ்நிலைகளில் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிப்பதென்பது போர்க்குற்றமாகக் கருதப்படக் கூடியது என்கிறார் சர்வதேச மன்னிப்புச் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் சபையின் சாம் சரீப். யுத்தத்தால்  அதிக மக்கள் பாதிக்கப்படும் நாடக இலங்கை முன்னிலையில் உள்ளதாக பெல்ஜியத்திலிருந்து இயங்கிவரும் கிரைசிஸ் வொட்ச் அமைப்பும்,;  இக் கண் மூடித்தனமான படுகொலையினால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக யுனிசெப் அமைப்பும் கருத்து தெரிவித்துள்ளமை இக் குறிப்பிடத்தக்கது.

 

இக்கொடுரப் போரை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

- இத்திட்டமிட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கு எதிரான தாக்குதல்களை உடனடீயாக நிறுத்தி பொது மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு இலங்கையரசு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

- மனித பேரழிவை தடுப்பதற்கு, யுத்தத்தில் சிக்கித் தத்தளிக்கும் இரண்டரை லட்சம் பொதுமக்களின் பாதுகாப்பை உடனடியாக முதன்மைப்படுத்துமாறு இலங்கை அரசையும் ஐக்கியநாடுகள் சபையையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபை இதில் உடனடியாக தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்
 

- யுத்தப்பிரதேசங்களில் சிக்கித்தவிக்கும் மக்களை அப்பிரதேசங்களிலிருந்து அப்பபுறப்படுத்த மனிவுரிமை அமைப்புகளுக்கு உடனடியாக  அனுமதியளிக்குமாறு இலங்கையரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

- பாதுகாப்பற்ற நிலையில் யுத்த பிரசேங்களில் சிக்கியிருக்கு மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்குமாறும் விடுதலை புலிகளையும்   கேட்டுக்கொள்கிறோம்.

- இதுவரை நிகழ்ந்த பாரிய இழப்புகளைக் கருத்திற்கொண்டு, உடனடியாக யுத்தநிறுத்தமொன்றை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அமைப்புக்கள்

 

- பெண்கள் சந்திப்பு, - ஐரோப்பா 
- தமிழ் மகளிர் மன்றம் - ஜேர்மனி 
- ஊடறு - சுவிஸ் 
- பனிக்குடம் - இந்தியா 
- பெண்கள் ஐக்கிய பேரவை  மதுரை -இந்தியா
- போருக்கு   எதிரான மக்கள் இயக்கம் - மதுரை 
- தலித் பெண்கள் இயக்கம் மதுரை 
- ஆதித் தமிழர்  பேரவை தென் மாவட்டம் - இந்தியா 
- தலித் தோழமை மையம் - இந்தியா 
- உயிர்ப்பு  தமிழ் பெண்கள் அமைப்பு -கனடா
- மனித உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு - இந்தியா 
- உயிர்மெய் நோர்வே 
- அணங்கு இந்தியா

 

தனிப்பட்ட ரீதியாக (கையெழுத்திட்டவர்கள்)

- உமா ஜேர்மனி
-  தேவா ஜேர்மனி
- றஞ்சி சுவிஸ்
- லீனா இந்தியா
- மங்கை ஜேர்மனி
- ரஜனி இந்தியா
- மேரி ஜேர்மனி
- மல்லிகா ஜேர்மனி
- குட்டிரேவதி இந்தியா
- ஓவியா இந்தியா
- ஆழியாள் அவுஸ்ரேலியா
- சுமதி ரூபன் கனடா
- ரதி சுவிஸ்
- தில்லை சுவிஸ்
- செல்வி சுவிஸ்
- தர்சினி சுவிஸ்
- சுகிர்தராணி இந்தியா
- இவோன் சுவிஸ்
- ரோகினி சுவிஸ் 
- ஆரதி சுவிஸ்
- சியானா சுவிஸ்
- ஜெயந்தி சுவிஸ்
- பாமா இந்தியா
- செண்பகவல்லி இந்தியா
- செல்வா இந்தியா
- நாகலக்சுமி இந்தியா
- அழகி இந்தியா
- றஞ்சிதம் இந்தியா
- செந்தமிழ் மாரி இந்தியா
- மோனிகா அமெரிக்கா 
- பைரவி ஜேர்மனி 
- ராஜினி ஜேர்மனி 
- நளாயினி சுவிஸ்
- சிந்துஜா சுவிஸ் 
- சாந்தி ஜேர்மனி
- அருந்ததி லண்டன் 
- மாதுமை சுவிஸ் 
- சாம்பவி லண்டன்
- மனோகரி லண்டன்
- சுமதி அவுஸ்ரேலியா 
- பாகினி இந்தியா 
- வனிதா இத்தாலி 
- கலா நோர்வே
- மாலதி மைத்திரி இந்தியா 
- கிருஷாங்கினி இந்தியா    
- மரகத மணி   இந்தியா
- நிஷாந்தினி  இந்தியா 
- பிரியம்வதா  இந்தியா 
- இன்பா சுப்ரமணியம் இந்தியா
- அ.வெண்னிலா இந்தியா
- பூரணி  இந்தியா  
- அ.ரோசஸ்லின்  இந்தியா 
- தமிழ்ச்செல்வி  இந்தியா  
- எஸ்.தேன்மொழி இந்தியா
- புதியமாதவி இந்தியா 
- வதனி பிரான்ஸ்
- கீதா பிரான்ஸ்
- பரிமளா பிரான்ஸ்
- ப்ரியா கனடா
- சாரு கனடா 
- பாமதி அவுஸ்ரேலியா 
- மாலினி அமெரிக்கா
- தர்சனா லண்டன் 
- லக்சுமி பிரான்ஸ் 
- நந்தினி கனடா  
- பிரயதர்சிநி அமெரிக்கா
- வள்ளி மனோரஞ்சன் இந்தியா 
- சௌந்தரி அவுஸ்ரேலியா 
- பவானி கனடா
- பானுபாரதி நோர்வே
- பால கௌரி நியுசிலாந்து
- செல்வா டென்மார்க்
- கௌசி டென்மார்க் 
- மஞ்சு மலேசியா 
- தர்மினி பிரான்ஸ்

--------------------------

 

 

AN  URGENT  APPEAL

 

 

Tamil civilians are indiscriminately victimized by the Sri Lankan government headed by Rajapakse who declares that the 30-year-old war is coming to a close.  But in the pretext of ending the war, the Sri Lankan government is successfully committing an ethnic genocide. The innocent people and civilians are the most victimized by this inhuman war.

 

These indiscriminate attacks by shelling and bombing are aimed at civilian targets.  Further, there are instances in which whole families are killed in the attacks.   This trend is increasing day by day.

 

On the one hand, thousands of people including children are facing death by military attacks and hunger.  People live a terrorized life in a situation where there in no food, shelter or medical help.  They are hiding in the forests and fields and are anticipating the advance of the army and its shelling and bombing.  Each gunshot and bombing terrorizes them to the extremes of agony.  We strongly concern the Sri Lankan fascist government which deliberately organizes this ethnic genocide.

 

When the LTTE left Mullaittivu, the people of that region accompanied them.  That region is a forested area of 300 sq. kms.  The military attacks of the government in this region will result in the loss of thousands of innocent lives.  Dr. Jayalat Jayawardana of UNP, the opposition party of Sri Lanka, has observed that in this region controlled by the LTTE, there are still four lakhs of people.  Among them are two thousand pregnant women.  He has asked to deal carefully with these people in a press meet in Colombo.

 

The security zone drawn out by the government is not up to the mark.  Those who left the LTTE controlled areas to reach this place have been indiscriminately attacked by the army.  This has been observed by the International Red Cross and the spokesperson of the human rights organization of the United Nations.  While it is the duty of any government to protect its rightful citizens, the Sri Lankan government is deliberately and systematically conducting its programme of ethnic genocide.

- 2 -

 

Many who enter the so-called “security zone” are killed by suspicion.  Women are kidnapped, raped and killed in the name of enquiry.

 

The few remaining hospitals that care for the injured are damaged by shelling and bombing.  On February 3, within a short span of two hours a hospital in Pudukkudiyiruppu was attacked by shelling four times.  A spokesman of the International Red Cross has observed that this has badly damaged the operation theatre of the hospital and that the injured are forced to leave that place in a situation of insecurity and despair.  The Amnesty International has pointed out that the use of cluster bombs on civilian targets is an act that violates the international human rights regulations.  Further Mr.Sam Sheriff, Asian Regional Director of the Amnesty International, has stated that the use of cluster bombs is a war crime.

 

Crisis Watch, Belgium has noted that Sri Lanka is among the nations most- affected by war.  UNICEF has observed that the Tamil children are the worst-affected by the war.  We vehemently condemn this inhuman war.

 

·       We demand that the Sri Lankan Government stop this deliberate war against civilians and ensure the safety and security of innocent lives.

 

·                 We ask the Sri Lankan Government and the United Nations to gi top priority to protect the 2½ lakh civilians caught up in the war to avert a massive genocide.

 

·                    We ask the United Nations to immediately intervene in the situation and do the needful.

 

·                    We ask the Sri Lankan government to permit the international human rights organizations to give safe shelter to the people suffering in the war-torn areas.

 

·                    We also ask the LTTE to ensure the free movement of the people who are caught up in the war-affected areas.

 

·                    We demand that the international community exert pressure on the Sri Lankan Government and the LTTE to immediately stop the war and announce a ceasefire in view of the huge loss of innocent civilian lives.       

Feb 2009