Language Selection

* மதம் மக்களுக்கு அபின் போன்றது.

* உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.


* விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது. 

* சமூதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.

* நம்முடைய முந்தைய தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால், தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவது தான்.

* மனிதனின் வாழ்க்கையை அவனது மனசாட்சி நிர்ணயிப்பதில்லை. ஆனால், சமூக வாழ்க்கை தான் அவனது மனச்சாட்சியை நிர்ணயிக்கிறது. 

* இதுவரை இருந்து வரும் சமூதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே.

* தலை வணங்குவதையும், கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.

* இராணுவ நோக்கத்துடன் எல்லைகளை வகுக்கத் தொடங்கினால் அவைகளுக்கு முடிவே இருக்க முடியாது. ஏனெனில், எல்லா இராணுவ முடிவுகளுமே தவறானவை. எனவே தவறைத் திருத்துவதற்காகவே புதிய நாடுகளைக் கைப்பற்றுவதன் அவசியம் நேரிடும். அத்துடன் வெற்றி அடைந்தவர்களோ, தோல்வி அடைந்தவர்களோ, எல்லைகளை மீண்டும் திருத்தி அமைக்க முயல்வார்கள். அது யுத்தத்தை வளர்க்கும்.

* பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது; அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.

* முதலாளி என்பவன், ஒரு காரியவாதிதான். அவன் தன் காரியாலயத்திற்கு வெளியே என்ன பேசுகிறானோ அதைப் பற்றி எப்போதுமே சிந்திப்பதில்லை. ஆனால், தன் காரியாலயத்தின் உள்ளே என்ன செய்கிறானோ அதை எப்போதுமே அறிந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மைதான். 

* மனிதனுக்கு இயற்கையுடன் உள்ளத் தொடர்பை இயந்திரக்கலை தெளிவுபடுத்துகிறது. வாழ்விற்காக அவன் நேரடியான உற்பத்திச் செயலில் ஈடுபடுவதையும் இது விளக்குகிறது. இது சமூக உறவுகளையும் அதன் விளைவாக ஏற்படும் மனோ நிலைகளைப் பிரித்துக் காட்டுகிறது.

* வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யும் பொழுது மக்கள் நிர்ணயமான அத்தியாவசியமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். இது அவர்களின் விருப்பத்தை ஒட்டியதல்ல... 

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்குப் பொருத்தமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். இந்த உற்பத்தி உறவுகள் தான் சமூதாயத்தின் பொருளாதார அமைப்புக்குரிய அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்தின் மீது தான் கட்ட அரசியல் கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. இதைத் தொடர்ந்துதான் இதற்குப் பொருத்தமான சமூதாய உணர்வு தோன்றுகிறது. 

* உற்பத்தி முறையின் வளர்ச்சிக் கட்டங்களில் தான் வர்க்க வேறுபாடுகள் உருப்பெருகின்றன. வர்க்கப் போராட்டம் கண்டிப்பாகப் பாட்டாளி சர்வாதிகாரத்தில் கொண்டு போய்விடும். அந்தச் சர்வாதிகாரமானது வர்க்கப் பிளவுகளை ஒழித்து வர்க்க மற்ற சமூதாயத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

* வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்திச் செய்யும் முறைதான் வாழ்க்கையின் சமூதாய, அரசியல், அறிவியல் போக்குகளை நிர்ணயிக்கிறது.

* முதலாளித்துவ கம்யூனிச சமூதாயங்களுக்கிடையே ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும். புரட்சிக்கரமான இடைக்காலம் ஒன்று இருக்கிறது. இதனோடு ஏற்படும் அரசியல் மாற்றத்திலே அரசாங்கமானது பாட்டாளி சர்வாதிகாரமாக மாத்திரம் இருக்கும் காலம் உண்டு.

* மனிதனின் உணர்வை அவன் இயக்கத்தை நிர்ணயிக்கவில்லை. ஆனால், அவனது சமூக இயக்கந்தான் அவனது உணர்வை நிர்ணயிக்கிறது.

* சமூதாயமானது, சக்திக்குத் தகுந்த உழைப்பு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் என்பதிலிருந்து, சக்திக்கு தகுந்த உழைப்பு, தேவைக்கு தகுந்த ஊதியம் என்ற நிலைமைக்கு வளர்ச்சி அடையும். 

* ஒரே விதமான தொழிலில் ஒயாமல் ஈடுபடும் நிலையான உழைப்பானது; மனிதனிடமுள்ள ஜீவ உற்சாகத்தின் தீவிரத்தையும், பொழிவையும் தின்றுவிடுகிறது. தொழில் மாறுதல் மூலமோ அது புத்துயிரும் புது நிகழ்ச்சியும் காண்கிறது. உபயோக நோக்கமற்ற எந்தப் பொருளுமே மதிப்பீடு பெறமுடியாது. அது உபயோகமற்றதாயிருந்தால் அதில் அடங்கியுள்ள உழைப்பும் உபயோகமற்றதாகும். அந்த உழைப்பு என்றும் கணிக்க முடியாது. அதனால் அது மதிப்பை உற்பத்தி செய்யவும் முடியாது.

* கம்யூனிஸச் சமூதாயம் தன்னுடைய சொந்த அஸ்திவரத்தின் மேல் கட்டுப்பட்டு எழவில்லை. அதற்கு மாறாக முதலாளித்துவத்தின் வயிற்றிலிருந்து அதனுடைய அடையாளங்களோடு, பொருளாதாரத் துறையிலும், மனப்பான்மையிலும், ஒழுங்கிலும், இன்னும் ஒவ்வொரு துறையிலும், அந்த பழைய முதலாளித்துவ இயற்கையுடனேயே அப்பொழுது தான் பிறந்து வந்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

* உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவைப் பொறுத்து நாடுகளுக்கிடையே உள்ள பகைமையையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்!

* ஒருவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதைக் கொண்டு நாம் அவனை மதிப்பிட மாட்டோம். அதே போல புரட்சி சகாப்தத்தை அதன் உணர்ச்சியை கொண்டு நாம் மதிப்பிட மாட்டோம்.

* முதலாளித்துவ தனிச்சொத்துடமை முறையின் சாவு மணி கேட்கும். சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவார்கள். 

* வெற்றியின் ஒரு அம்சம் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. அதுதான் எண்ணிக்கை. ஆனால், கூட்டு முறையிலே ஒன்றுபட்டால்தான் அறிவு முறையிலே நடத்தப்பட்டால் தான் எண்ணிக்கை பயனுள்ளதாகும். 

* தொழிற் பிரிவினைகளும், உடல் உழைப்புக்கும், மூளை உழைப்புக்கும் உள்ள முரண்பாடும் மறைந்தொழிந்த பிறகு உழைப்பானது வாழ்க்கைக்கு உபகரணமாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையின் அத்தியாவசியமான அம்சமாக மாறின பிறகு மனிதனின் வளர்ச்சியை ஒட்டி உற்பத்தி சக்திகளும், வளர்ந்த பிறகு கூட்டுச் செல்வம் ஏராளமாகக் குவியும் போதுதான் முதலாளித்துவ உரிமை என்ற குறுகிய அடிவானத்தைக் கடந்து மனித சமூதாயம் முன்னேறிச் செல்ல முடியும். அதன் பிறகு தான் சக்திக்கு ஏற்ற உழைப்பு தொழிலுக்கேற்ற ஊதியம் என்ற நியதி சமூதாயத்தில் இடம் பெறும். 

* பாட்டாளிகள் - இழந்து விடுவதற்குத் தங்களைப் பிணைத்திருக்கும் தவறுகளைத் தவிர வேறெதுவும் இல்லை. வென்றடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள். 

* ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒரு வர்க்கம் என்ற முறையிலே தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் அரசியல் போராட்டம் ஆகும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தைக் குறைக்கும்படி முதலாளிகளை வேலை நிறுத்தத்தின் மூலம் நிர்பந்தப் படுத்துவது பொருளாதாரப் போராட்டமாகும். ஆனால் 8- மணி நேர வேலையை சட்டமாக்குவதற்காகவே தொழிலாளிகள் நடத்தும் போராட்டம் அரசியல் போராட்டம் ஆகும். தனிப்பட்ட பொருளாதாரப் போராட்டங்களிலிருந்து அரசியல் இயக்கம் பிறக்கும்.