Language Selection

சட்டம் செய்த சதி

முயல்களோடு ஓடிக்கொண்டே, அதை வேட்டை நாயைக் கொண்டு வேட்டையாடுவதுப் போலப், பாதிக்கபட்டவர்களுக்காக வாதிடுகிற அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களுடைய அனுதாபங்கள் எல்லாம் குற்றவாளிகளின் மீதே திட்டமாக இருக்கிறது. அரசாங்கச் சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா, உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நானாவதி-ஷா ஆணையத்தையே சரிகட்டி நீதியை அழிக்க எத்தகைய நம்பிக்கையோடு இருந்தார்!.

 

மேலோட்டம்

சபர்மதி விரைவு இரயில் 'தீ'க்கு இரையாக்கப்பட்ட அந்த இரவிலேயே கலவரக்காரர்களைப் பாதுகாப்பதற்காக, வழக்கறிஞர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று சங்பரிவார முக்கியஸ்தர்களால் நியமிக்கப்பட்டது.

விஹெச்பி உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முக்கியமான வழக்கறிஞருமாகிய சேத்தன் ஷா என்பவனே நரோடா பாட்டியா படுகொலைகள் வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாட வந்த முதல் வழக்கறிஞர் ஆவான். மிக முக்கியமான, சிக்கலான வழக்குகளில் அரசு தரப்பு சார்பாக சங்பரிவார அபிமானிகள் ஆஜராவது வழக்கப்படுத்தப்பட்டதால், பின்னர் இவன் (சேத்தன் ஷா)குல்பர்க் சமூக படுகொலைகள் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டான்.

கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கபட்டப் பகுதிகளுள் ஒன்றான மேஃஸானா மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞராக, குஜராத் மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான திலீப் திரிவேதி நியமிக்கபட்டிருக்கிறான். குஜராத் முழுவதும் கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒழுங்குபடுத்தி நடத்துகிறவனும் இவனே.

 

சபர்கந்தாவில் அரசு தரப்பு வழக்கறிஞராக விஹெச்பி மாவட்டத் தலைவனான பாரத் பட் என்பவன் நியமிக்கபட்டிருக்கிறான். இவனால் முடிந்த அளவு குற்றவாளிகளுக்கு சிறந்த உதவிகளை செய்வதாக இவன் கூறுகிறான்

.

நானாவதி-ஷா ஆணையத்தில் மாநில அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா நீதிபதிகள் மேல் அவதூறான மதிப்பீடு செய்கிறான். அவனது அபிப்பிராயத்தின் படி, நானாவதி பணத்தாசையுடைவர் என்றும், ஷா அவர்கள்(சங்பரிவாரம்) மீது அநுதாபமுடையவர் என்பதாகும்.

 

நீதி - வஞ்சிக்கபட்டவர்களுக்கு மறைக்க(மறுக்க)ப்பட்டது

கலவரங்கள் நடப்பதற்கு முன்பே, வழக்கறிஞர்கள் மிக அதிகமான கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு வழக்குகளைச் சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை சங்பரிவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது.

 

நன்கு சோதித்து அறியப்பட்ட ஒரு திட்டத்தை வைத்து நடத்தபட்ட மனித வர்க்கத்தின் படுகொலை மட்டுமல்ல, இது ஒரு துயரமான முடிவுமாகும். ஹிந்துக்களில் எவர்கள் கலவரத்தினாலும், கொலைகளினாலும் குற்றம்சாட்டப் படுவார்களோ அவர்களுக்குச் சட்ட உதவிகள் அளிப்பதற்கான திட்டங்களையும் சூழ்ச்சிகளையும், கலவரங்கள் நடப்பதற்கு முன்பே விஹெச்பி வகுக்க ஆரம்பித்துவிட்டது.

 

தீமந்த் பட் மற்றும் தீபக் ஷா, இவ்விருவரும் வதோதரா பகுதி பாஜக உறுப்பினர்கள். பட் என்பவன் மஹாராஜா சயோஜிராவ் பல்கலைகழகத்தில் தலைமை கணக்காளனாக பணி செய்கிறான். ஷா என்பவன் பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறான். இவ்விருவரும் தெஹல்காவிடம் சொல்லும் போது, சபர்மதி விரைவு இரயில் சம்பவம் நடந்த இரவில் சங்பரிவார் முக்கிய நபர்கள் ஒன்று கூடி கலவரக்காரர்களுக்கு எதிராக பதியப்படும் வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களின் கமிட்டி ஒன்றை நியமித்தார்கள்.

 

உண்மை நிலை என்னவென்றால், விஹெச்பியில் பதவியில் இருக்கக் கூடியவர்களே தனியாக பணியாற்றக் கூடிய வழக்கறிஞர்களாகவும் இன்னும் அரசு

வழக்கறிஞர்களாவும் என அதிக எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் இருந்தது அவர்களுடைய வேலையைச் சுலபமாக்கித் தந்தது. வதோதராவில் வழக்கறிஞர்களாக இருக்கும் ராஜேந்திர திரிவேதி, நீரஜ் ஜெயின் மற்றும் துஸார் வியாஸ் போன்ற அதிகமான வழக்கறிஞர்கள் பெயர்களை தீபக் ஷா கூறி, இவர்கள் எல்லோரும் முன்னேற்பாடுகளைக் குறித்து நடத்தபட்டச் சந்திப்பில் கலந்துக் கொண்டதாக கூறினான்.

RSS உறுப்பினாகளான நரேந்திர பட்டேல் மற்றும் மோகன் பட்டேல் ஆகியோர் தெஹல்காவிடம் சொல்லும் போது, கலவரத்திற்குப் பின் ஹிந்து கலவரக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக சபர்கந்தா மாவட்டத்தில் சங்கலன் என்ற பெயரில் ஒரு அமைப்பை RSS உருவாக்கியதாகச் சொன்னார்கள். தனியாகப் பணியாற்றிய விஹெச்பியை சார்ந்த அநேகமான வழக்கறிஞர்களே குற்றவாளிகளுக்காக வாதாடுகிறவர்கள் ஆனார்கள். இன்னும் அரசு தரப்பு வழக்கறிஞர்களோ விஹெச்பி உறுப்பினர்களாகவோ அல்லது சங்பரிவார அபிமானிகளாகவோ இருப்பதனால் கலவரக்கார வன்முறை குற்றவாளிகளுக்கு மறைமுகமான உதவிகளைச் செய்தனர்.

 

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றங்களை முன்னெடுத்து வைத்து வழக்கைக் கொண்டுச் செல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு உள்ளபடியே உதவிகளைச் செய்தார்கள். எனவே, அநேகமான இடங்களில், வழக்கைத் தொடர்ந்தவருக்காக (பாதிக்கப்படவருக்காக) வாதிடும் வழக்கறிஞரும், எதிர் தரப்புக்கு (குற்றவாளிக்காக)வாதிடும் வழக்கறிஞரும் ஒரே பக்கத்திற்குச் சார்புடையவர்களாக, அதாவது கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் செய்தக் குற்றவாளிகளின் தரப்புக்கு ஆதரவாக இருந்தார்கள். அப்படியானால் முஸ்லிம் சமுதாயம் என்ன நம்பிக்கையோடு தங்களை வதைத்தக் கொடுமைபடுத்தியக் குற்றவாளிகள் தண்டனை அளிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியும்? முதலில் காவல்துறை தங்களது போலியான கண்துடைப்பு விசாரணைகள் மூலம் கலவரக்காரர்களின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். இப்பொழுது பாதிக்கபட்டவர்களுக்காக வாதாட வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அணி திரண்டு விட்டனர்.

 

விஹெச்பியின் செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடுடைய உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முன்னனி வழக்கறிஞருமான சேட்டன் ஷா, முதலில் நரோடா பட்டியா படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்காகத் தான் ஆஜரானார். அரசாங்கம் பின்னர் அவரை, குல்பர்க் சமூக குடியிருப்பு படுகொலைகளுக்கான வழக்கில் அரசு தரப்பு (பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும்) வழக்கறிஞராக நியமித்தது. குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ளவர்களில் ஒருவனான பிரஹ்லட் ராஜு என்பவனை தெஹல்கா சந்தித்த போது கூறினான், அவன் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தப் போது, எப்பொழுது காவலதுறையிடம் சரணடைய வேண்டும் என்பது பற்றிய ஆலோசனையை சேட்டன் ஷா அளித்ததாகக் கூறினான்