Language Selection

இறை நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மோடியை பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்.

நரேந்திர மோடி எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானச் செயல் திட்டங்களுக்குத் தனது ஆதரவையும், ஒப்புதலையும் அளித்தான் என்பது பற்றி பாஜக, RSS, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் ஆகிய சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.

மேலோட்டம்

கோத்ரா சம்பவத்திற்குப் பின், நரேந்திர மோடியின் கோபம் தெளிவாக அறியக் கூடியதாக இருந்தது. அவன் (மோடி) பழிதீர்க்கச் சபதம் செய்தான். பஜ்ரங்தள் உடைய தேசிய ஒருங்கிணைப்பாளரான ஹர்சத் பட் என்பவனும் ஒருவனாக கலந்துக் கொண்ட ஒரு சந்திப்பின் போது நரேந்திர மோடி, "அடுத்த மூன்று தினங்களுக்கு அவர்கள் என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ அவை அனைத்தும் செய்து கொள்ளட்டும்" என்று (மோடி)சொல்லியுள்ளான். அதன் பிறகு அவன் எங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அனைத்தும் நிறுத்தப்பட்டது என பட் தெரிவித்தான்.

அஹ்மதாபாத் நகர விஹெச்பி தலைவனான ராஜேந்திர வியாஸ்க்கு மோடி ஆறுதல் கூறும் போது,"ராஜேந்திர பாய் அமைதியாக இருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலளித்தானாம்.

மோடியின் அரசு, வன்முறை கும்பல்களுக்கு அவர்களின் வெறி கொண்டத் தாக்குதல்கள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடத்திட அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கும் முயன்றது. நரோடா பாட்டியா வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கி என்பவன் மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் தங்குவதற்கு நரேந்திர மோடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்ததோடு, அவனுக்கு பெயில் கிடைக்க உதவிடும் வகையில் இரண்டு நீதிபதிகளையும் மாற்றம் செய்துள்ளான்.

குஜராத் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என மோடி உத்தரவிட்டதால், அது கலவரக்காரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லாமல் சுதந்திரமாக மூன்று நாள்கள் செயல்பட உதவியது. எதுவரையில் என்றால் இராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்னும் அதிகப்படியான நெருக்குதல்கள் மேலிட்டத்தில் இருந்து வரும் வரையிலுமாகும்.

 

நரோடா பாட்டியாவில் நிகழ்நத மனித இனப்படுகொலைகளுக்குப் பின்னர், முதலமைச்சரே சம்பவ இடத்திற்குச் சென்று, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கியமாக பங்கெடுத்தச் சாரா இன மக்களின் செயல்பாடுகளை "நியாயமானதே" என அங்கீகரித்தான்.

மோடியின் உறுதியான தலைமையினாலேயே, கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்த மனிதவர்க்கப் படுகொலைகள் நிகழ சாத்தியமானது என அரசாங்க சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா என்பவன் ஏற்றுக் கொண்டான்.

 

உங்களுடைய கை, மாபெரும் சட்ட ஒழுங்கில்லாத சமுதாயம்

அரசு நிர்வாகம் திரும்பிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவானக் கட்டளைகளை நரேந்திர மோடி மட்டும் பிறப்பிக்காமல் இருந்திருந்தால் குஜராத்தில் நடைபெற்ற இன அழிப்பு படுகொலைகளுக்குச் சாத்தியமே கிடையாது என்பதனை குற்றம்சாட்டபட்டவர்கள் ஒருவர் பின் ஒருவர் உறுதி செய்தனர்.

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவர்கள் படுகொலைகளை நிகழ்த்த எவ்வாறு சதி திட்டங்களை உருவாக்கினார்கள்?, சபர்மதி விரைவு இரயில் தீவைப்பு சம்பவம் நடந்த தகவல் கிடைத்த உடன், மிக அதிக அளவில் படுகொலைகள் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகள் உடனடியாக எவ்வாறு துவங்கப்பட்டது? பல்வேறு காவி அமைப்புகளிலுள்ள உறுதி மிக்க தொண்டர்களை உள்ளடக்கிய கொலைகள் செய்யும் குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கலவரங்கள் நடக்கும் போது காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மடடுமல்லாமல், சில சம்பவங்களில் வன்முறை கும்பலுடன் தோளோடு தோள் நின்று பங்கெடுத்தது எப்படி? குற்றவாளிகளுக்கு அவர்களுடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு பதிலாக உயிர் தப்பியவர்களை மிரட்டவும், விலைக்கு வாங்கவும் திட்டமிட்டார்களே அது எப்படி?, போன்ற விபரங்கள் முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

படுகொலைகளும் இன்னும் அது பற்றிய செய்திகளை இருட்டிப்பு செய்வது ஆகியன பாஜக அரசாலும் இன்னும் அதன் சகாக்களாகிய விஹெச்பி மற்றும் பஹ்ரங்தள் அமைப்புகளில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ளவர்களால் செய்யப்பட்டது. எனவே குஜராத் படுகொலைகள் ஒரு சூத்திரகாரனுடையக் கட்டளைகளை கொண்டு இயக்கப்பட்ட கொடூர காட்சிகளா அல்லது எவ்வித ஒருங்கியைப்பாளரும் இல்லாமல் தானாகவே நடந்துவிட்ட உணர்வு வெளிப்பாடா? திரைக்குப் பின்னாலிருந்து கண்ணால் காணமுடியாத படி நூல்களை கொண்டு பொம்மலாட்டங்கள் நடத்துவது போன்று, திரைமறைவில் இருந்து கொண்டு யாரேனும் வன்முறை வெறியாளர்களை இயக்கிக் கொண்டிருந்தார்களா?

 

இம்மனித வர்க்கப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த போது அம் மாநிலத்தை நிர்வகித்து வந்தவனுடைய அரசின் பல்வேறு துறைகளும் வன்முறை கும்பல்களுக்கு உதவிகள் செய்த போது, அவனுடைய நிஜமான பங்களிப்பு எத்தகைய அளவில் இருந்தது? குஜராத் இனப்படுகொலைகளில் காவல்துறையும் குற்றங்களில் பங்கு வகித்ததற்கு மோடி தான் பொறுப்பா?

 

இரத்த தாகவெறி பிடித்த விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவன்களான பாபு பஜ்ரங்கி, ஹரேஷ் பட் மற்றும் அனில் பட்டேல் போன்றவர்களை, இவ்வெறியாட்டத்திற்கு செல்ல மோடியா கட்டளையிட்டான்?

 

கொலையாளிகளிடமிருந்தே உண்மைகளைக் கண்டுபிடிக்க தெஹல்கா முயற்சி மேற்கொண்டது. அப்போது இது தான் இக்கயவர்கள் மோடியை பற்றியும் அவனது பங்களிப்பை பற்றியும் சொல்லியது....

 

கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியை பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்".

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது