Language Selection

வெட்டிச்சாய்க்கப்பட்ட உயிர்கள் எத்தனை. வீதிகளில் அனாதைப்பிணங்களாய் சுட்டுச் சரிக்கப்பட்டவர்கள் எத்தனை.

நேசித்த தேசத்தின் மக்களின் விடுதலைக்காய் போராடப் புறப்பட்டோர் புத்தி பேதலித்தவர்களால் புதைகுழிகளில் மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.

 

அந்தோ பெண்கள் ஒழுக்கமிழந்ததாய் விபச்சாரிகளாய் ஒழுக்க சீலர்களால் நாமமிடப்பட்டு சுடலைக்காட்டுக்குள் ஆடைகள் இல்லாமல் அடக்கம் பண்ணப்பட்டார்கள். இன ஒடுக்கு முறையாளனிடமிருந்து விடுதலை பெற்றுத் தருவதாய் முளைத்தெழுந்த இயக்கங்கள். துப்பாக்கிகளால்; சொந்த மக்களை அடக்கியாளும் புதிய எஐமானர்களாய் மாறினார்கள். சுழிபுரத்தில் ஆறு போராளிகள் ஆண்குறிகள் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

 

இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்;பித்த மறுப்பறிக்கைகள் உடல்களை மறைப்பதற்காய் மண்ணுள் புதைத்தது போல் உண்மையை புதைக்க முடியாது போயின. தலைமையை பாதுகாக்கும் பாரிய கடப்பாட்டில் தாம் இதை செய்ததாக தர்க்க நியாயங்கள் சொன்னார்கள் இந்தத் தறுதலைகள்.

 

இயக்கப் போராளிகள் அகிலன் செல்வன், அன்றைய எஸ்.ஆர் இன்றைய மாமனிதன் (கொலைசெய்யப்பட்டால் மட்டும் கிடைக்கும் பட்டம்) சிவராம் "தாரகி" யின் அநுசரணையுடன் காணாமல் போனவர்கள் ஆனார்கள். அகிலன் செல்வன் எங்கே என்ற கேள்விக்கு அவர்கள் பின்தளத்தில் விசாரணைக்காக சென்றிருக்கின்றனர். கடலில் படகு போக்குவரத்து நிலைமைகள் கடற்படைக் கெடுபிடிகள் தணிந்த பின்னால் திரும்பி வருவார்கள் என்றவாறான புனைகதைகளின் மூலம் அடுக்கடுக்கான பொய்கள் அள்ளி வீசப்பட்டன.

 

சொந்தப் போராளிகளையே கருவறுக்கத் தொடங்கிய போது கணிசமான மக்களும் போராளிகளும் விழிப்படைந்தனர்;. மக்களுக்கான ஐனநாயகக் கோரிக்கைகளும் உட்கட்சி அராஐகத்திற்கெதிரான கோசங்களும் முளைவிடத் தொடங்கியது. இந்த திரண்டு வந்த மக்களின் போராட்டம் ஐனநாயக கோரி;க்கைகளை முன் வைத்து போராளிக் குழுக்களை நெறிப்படுத்தும் நோக்கில் சாத்வீக பாதையில் எதிர்த்து கிளம்பியது. உண்மையான விடுதலை வேண்டி நின்ற ஐனநாயகம் கோரிநின்ற போராளிகள் தலைமைகளால் மிகக் கொடூரமான முறைகளில் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கேள்வி முறைகளின்றி புதைக்கப்பட்டார்கள்.

 

போராளிகள் இயக்கங்களுக்குள்ளேயும், மக்கள் எவ் இயக்கமும் சாரா போராட்ட வழிமுறைகளினூடும் ஐனநாயக மீட்சிக்கும் இயக்க அராஐகங்களுக்கும் எதிரானதுமான போராட்டங்களுக்கு திரண்டெழுந்தனர். இயக்கங்களின் இராணுவ அராஐக நடவடிக்கைகளையெல்லாம் நியாயப்படுத்தும் தொங்கு தசையாக மட்டும் மக்கள் அணி அரசியல் அணி இருக்க வேண்டும் என எதிர்பார்;த்திருந்த தலைமைகளும் அதனது அராஐக அணிகளும் அவர்களின் பொய்களை மிரட்டல்களை சதிகளை அவதூறுகளை திசைதிருப்பல்களை இயக்க தலைமை விசுவாசத்தை எல்லாம் மூடி மறைக்கும் முயற்சியில் தனது கீழணி போராளிகளை அரசியல் அணிப் போராளிகளை தம் இடையறாத பொய்ப்பரப்புரைகள் மூலமும் அரசியல் சாயமிட்டு நியாயப்படுத்துவதன் மூலமும் திசைதிருப்பி விடலாம் என மனப்பால் குடித்தனர்.

 

மத்திய குழு தீர்மானங்களும் மக்கள் அவை தீர்மானங்களும் நடைமுறைகளும் இராணுவ நடைமுறைகளினால் மிதித்தொதுக்கப்பட்டன. இராணுவ நடைமுறைகள் எதுவும் மக்கள் நலன் சார்ந்த அரசியலோடு பிணைந்திராத, அரசியலால் வழி நடத்தப்படாத இயக்கங்களின் மத்திய குழுத் தீர்மானங்களோடு மக்கள் அவை தீர்மானங்கள் முரண்படத் தொடங்கின.

 

மக்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் அவை பதிலளிக்கும் போது அது திக்கித் திணறும் நிலைக்காளாக்கப்பட்டது. மக்களோடான அரசியல் தொடர்பாடல்களை மக்கள் அவையானது முன்னெடுக்கப்பட முடியாதபடி மக்கள் அவைக்கு மக்களோடிருந்த நெருக்கம் சீர்குலைந்தது. இயக்கத்தின் திசைவழி கொள்கை வழிகளில் முரண்பட்டு நின்ற மத்திய குழு அங்கத்தினர் தனிநபர் வழிபாட்டு அணியினரால் சித்திரவதைக் கூடங்களுக்குள் சிறை வைக்கப்பட்டனர். இவைகளை எதிர்த்த போராளிகள் விசாரணை என உழன்றியில் ஏற்றப்பட்டு மரணங்களை தழுவிக் கொண்டனர்.

 

குரூரக் கொலைஞர்களின் குகைக்குள்ளும் துஞ்சுவர் என்றறிந்திருந்தும் அஞ்சா நெஞ்சத்துடன்; அவர்கள் தளர்விலாது போராடி தம்முயிரை ஈய்ந்து விடுதலையின் வீரிய நோக்கிற்காய் வீழ்ந்து பட்டனர். விடுதலைக்காய் வீழ்ந்த இவர்கள் தன்னுயிரை ஈய்ந்த வெளிச்சத்தில் தான் நீறாய் போனது அந்த அராஐகக் கும்பல். உள்ளும் வெளியுமாய் விரிந்த போராட்டத்தில் உடைந்து சிதறி துரும்பாய் சீரழிந்தனர். மத்திய குழு தவிர்க்க முடியாதபடி இரண்டாய்ப் பிளந்தது. விடுதலை இலக்கிய நாவல் ஒன்றின் மூலம் உண்மையாக பாத்திரப்புனைவுகளோடும் சம்பவங்களோடும் அரசியல் விமர்சனத்தோடான பாங்கில் "புதியதோர் உலகம்" என்ற இலக்கியம் வெளிவந்தது. பிரிந்த உறுப்பினர்களை வேட்டையாடுமாறு நரபலி வேட்டைக்குழு பணிக்கப்பட்டது.

 

பின்தளத்தில் தங்கிவிட்ட "வசந்தன்" சந்ததியார் குரூரமாக கண்களிரண்டும் தோண்டப்பட்டு சித்திரவதை மூலம் கொலைசெய்யப்பட்டார். குரூரக்கொலைவெறி தீர்ந்த பின் உடல் சாக்கில் இடப்பட்டு கூவம் ஆற்றுக்குள் வீசப்பட்டது. காந்தீயவாதி டேவிட் அவர்கள் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்கள்.

 

தளத்துக்கு வந்து சக மத்திய குழுவினருடன் தலைமறைவாய் இருந்த மத்திய குழு உறுப்பினர், அதுவரையும் தளப் பொறுப்பாளராகவிருந்த "டொமினிக்" "கேசவன்" "கோவிந்தன்" எழுதி வரலாறாக்கப்பட்டது தான் "புதியதோர் உலகம்" என்ற நாவல்.

 

தளத்தில் தங்கியிருந்த இவர்களையும் இன்னும் தளத்திலிருந்த அர்ப்பணிப்பான போராளிகள் மீதும் அருவருப்புக் கொண்டனர், தளத்திலிருந்த தலைமை விசுவாச பதவி மோகங் கொண்ட எடுபிடிகள். இந்த எடுபிடிகள் அவர்களை தேடியழிக்கும் நடவடிக்கைக்காக தெருவெங்கும் அலையும் ஆயுததாரிகளாக்கப்பட்டார்கள். தலைமையின் கடைக்கண் பார்வைக்கும் மத்திய குழு அங்கத்துவத்துக்கும் ஆலாய்ப்பறந்த சிலரில் " மாமனிதர்" சிவராமும் அடக்கம். எஸ்.ஆர் என்ற அன்றைய பெயரோடு துப்பாக்கி தரித்து நரவேட்டைக்காய் "மாமனிதர்" புறப்பட்டார். வாய்மூடி மௌனித்திருந்தனர் இன்னும் சில தள மத்திய குழு உறுப்பினர்கள். அராஐகம் தெருவெங்கும் புறப்பட்டது. துப்பாக்கியின் சன்னக் குழாய்கள் சக போராளிகளின் இரத்தம் குடிக்கவென இவர்களின் கைகளுக்குள்ளும் பைகளுக்குள்ளும் பல ரகங்களில் பதுங்கியிருந்தது. மாமனிதர் எஸ். ஆரின் விரல்கள் வேட்டு வைக்கும் விசையை அழுத்தும் இமைப்பொழுதில் சுதாகரித்து தற்காத்து மரணத்திலிருந்து தப்பி மீண்டனர் தீப்பொறி குழுவினர் சிலர். இச்சம்பவம் பின்னர் தாக்க வந்தவர்களையே தாம் தாக்க முனைந்ததாகவும் தங்களது தற்பாதுகாப்புக்கான எதிர் நடவடிக்கையால் அவர்கள் பின்வாங்கிக் கொண்டதாகவும் வீரப்பிரதாப நையாண்டிகள் மூலம் ரசித்துரைக்கப்பட்டன.

 

இயக்கத்தின் பல்கலைக்கழக மாணவர்களிடையேயான சரிந்து சென்ற ஆதரவை மீண்டும் சரிசெய்து கொள்ளவும், இவர்களை மீண்டும் தமது பிரச்சார நடவடிக்கைக்கு மீளவும் பாவித்து மக்கள் மத்தியில் திரண்டிருந்த எதிர்ப்புக்களை சரிக்கட்டவும் கண்துடைப்பான ஒரு தள மாநாடும் அதைத் தொடர்ந்த பின்தள மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டு மிக நல்ல நாடகமாக அரங்கேற்றப்பட்டது. திறமையான நடிப்பெல்லாம் சோரம் போனது தான் மிச்சம். இத் தள மாநாட்டின் விளைவாய் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இருந்த சிலர் வெளியேறி நின்ற "றோவின்|| தயாரிப்பான பரந்தன் ராஐனால் அறுவடை செய்து கொள்ளப்பட்டார்கள். பரந்தன் ராஐனுடன் இரகசியமான ஒப்பந்தத்துடன் சிலர் மீண்டும் தளம் திரும்பினர். எனினும் இது கசியத் தொடங்கி அம்பலத்துக்கு வந்தது.

 

மாணவர் அமைப்பானது "தமிழீழ மாணவர் பேரவை" தன்னகத்தே முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் தனது மத்திய குழுவில் இயக்கத் தலைமைகளின் குருட்டு விசுவாசிகள் ஓரிருவரை கொண்டிருந்த போதும் ஐனநாயக மறுப்புக்கும் அராஐகவாதப் போக்குக்கும் முற்றாக அடிபணிந்து போகாதிருந்தது. இன்னொரு மாற்று அரசியல் போராட்டப்பாதைக்கான பரிதவிப்பில் ஊசலாடியபடி இருந்தது. தனது கீழணி மாணவ அங்கத்தவர்களுக்கான மாற்றுப் பாதையை தரமுடியாதபடி அதன் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழீழ மாணவர் பேரவை ஆகக் குறைந்தது ஐனநாயகத்துக்கான குரலாகக் கூட தனது பாதையைத் தொடர பல முனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

 

அதனது முன்னணி உறுப்பினர்கள் அப்போது தான் மாற்று இயக்கப் போராளிகளின் உறவுகளை வளர்க்கத் தொடங்கியிருந்தார்கள். கருத்தியல் ரீதியல் தம்மை வளர்ப்பதற்காகவும் கருத்தியல் விவாதங்களுடு தம்மை அரசியல் ரீதியில் உயர்த்திக் கொள்வதற்காகவும் சக போராளிக்குழுக்களின் முன்னணி உறுப்பினர்களின் நல்லுறவுகளை தேடத் தலைப்பட்டனர்.

 

இந்நிலைமை அன்றைய மாற்றுப் போராளிக்குழுக்களால் தங்கள் தொங்கு தசைகளாய் மக்கள் மத்தியில் இவர்களை காட்டும் முயற்சிக்கு வழிவகுத்தது. இது அவர்களின் சுயாதீனத்துக்கு சேறடித்தது. சரியான கருத்தியல் ரீதியான அரசியல் போராட்ட ரீதியிலான உள்வாங்குதலுக்கு பதிலாய் வெறுமனே எண்ணிக்கை அடிப்படையில் கபளீகரம் செய்ய நினைத்தார்கள்.

 

அதுவரை இயக்க நடவடிக்கைகளின் பிரச்சார எடுபிடிகளாய் மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாதபடி ஒரு சரியான அரசியற் கருத்துப்பலமின்றி தளமின்றி தனித்து விடப்பட்டார்கள்.

 

உதிரிகளாய் உடையத் தொடங்கிய நிகழ்வானது பலரையும் பல திசைகளில் சிதற வைத்தது. இவர்களில் சிலர் புலிகளினால் கைது செய்து சிறை வைக்கப்பட்டார்கள். சிலர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தீப்பொறி தர்மா காணாமல் போனார் என்பது இன்றைய "ஒட்டுப்படைகள்" இல்லாத மாற்று இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு துப்பரவாக்கப்பட்ட, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்த, குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் நடந்ததொன்றாகும். சொந்த இயக்க அராஐகத்தை எதிர்த்து போராடிய இவர்கள் சளைக்காது மீண்டும் மக்களுக்கான ஐனநாயகத்துக்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போது புலிகளினால் ஆபத்தானவர்களாய் கருதப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள்.

 

புதியதோர் உலகம் என்ற நாவலை பல பிரதிகளாக்கி அதை விநியோகித்து மாற்று இயக்க அராஐகத்தை வெளிக்கொணருவதாக நடித்த புலிகள் இதன் மூலம் தங்கள் அராஐகத்தை கீழ்நிலைப்படுத்தி தங்களின் மீதான, தங்களின் பாசிச நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பு முன்னிலைப்பட்டு வந்த சூழலை இதன் மூலம் பின்தள்ளினார்கள். மக்களின் விழிப்புணர்வையும் திசை திருப்பினார்கள். இங்கே இவர்கள் சொந்தப் பாசிச நடவடிக்கைகளிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள மிகவும் திட்டமிட்டுக் கருமம் ஆற்றினார்கள். இதை மறுத்துரைக்க முடியாதபடி இவர்களே பின்னாளில் நாவலாசிரியரின் கைதுக்கும் காணாமற் போனதற்கும் பொறுப்பானவர்கள் ஆனார்கள்.

 

ரெலோ இயக்கத்தின் உட்பூசல் தாஸ்க்கும் பொபிக்கும் இடையில் வெடித்து யாழ் மருத்துவமனை இரத்தக்களரியாகியது. படுகொலைகளை ஆயுத வெறியாட்டங்களை மக்கள் தம் கண்ணால் தரிசித்து உறைந்து போயினர். பகிரங்கமாகவும் கடத்திவைத்தும் பொதுமக்களை ஆயுதமுனையில் மிரட்டும் கலாச்சாரத்தை பாகுபாடின்றி எல்லா இயக்கங்களும் செய்தன. ஆலாலசுந்தரம் தர்மலிங்கம் போன்றோர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அத்துமீறல்கள், உரிமைகோராத படுகொலைகள், கடத்தல்கள் நாளாந்த நிகழ்வாகியது.

 

கந்தசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஈ.பி.ஆர்.எல.;எவ் இலிருந்து பிளவுபட்டுச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தீர்;த்த துப்பாக்கி வேட்டு சூளைமேட்டில் இந்தியக் குடிமகன் ஒருவனைப் பலிகொண்டது. ஈ.பி.ஆர்.எல.;எவ் இற்குள் வெடித்த உட்கட்சிப் போராட்டங்கள் கோரிக்கைகள் கைகூடா நிலையில் உதிரிகளாய் வெளியேறிய பலர் வெளியில் மக்களோடு போராட்டங்களில் தம்மை அடையாளப்படுத்த முனைந்தனர்.

 

ரெலோ இயக்கத்தலைமையை விமர்சித்து அதன் இயக்கப்போராளிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரகடனப்படுத்தி இந்தியாவில் களத்தில் இறங்கினர். நூறுக்கும் மேற்பட்ட பெண் போராளி உறுப்பினர்கள் இங்கு பங்கெடுத்துக் கொண்டனர்.

 

இயக்கங்களின் மாறான போக்குகளுக்கு வளைந்து கொடுக்க மறுத்த மக்கள் சுயாதீனமான போராட்டங்களில் அணிதிரண்டனர். வாகன வழிமறிப்பு, வீதித்தடைப் போராட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என பலவாறான வழிகளில் மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

 

இவையெல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டது புலிகள் இயக்கம். புலிகள் இயக்கத்தின் மற்றைய இயக்கப் போராளிகள் மீதான அழித்தொழிப்பு, அரசியல் கொலைகள் ரெலோ இயக்கத்தின் மீதான அழிப்பின் போது கோர வடிவம் கொண்டது. ரெலோ இயக்கப் போராளிகளை தெருதெருவாய் குற்றுயிரும் குறையுயிருமாய் ரயர் தீயில் உயிரோடு கருக்கி சாகடிக்கப்பட்ட அதுவரை காணாப் பயங்கரம் மக்கள் கண்முன் விளைந்தது. மக்களின் இரத்தம் உறைந்தது.

 

ரெலோ இயக்கம் சாய்க்கப்பட்டபின் ஈ.பி.ஆர்.எல்.எவ.; இயக்கம் குறிவைக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அதனது போராளிகள் சிறையிலேயே குண்டு வீசி கூட்டாக கொலை செய்யப்பட்டார்கள்.

 

புளட் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர் மெண்டிஸ் கிட்டுவினால் சிநேக பூர்வ முறையுடன் "விசாரணைக்கென" அழைத்துச் செல்லப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இதற்கு முன்பாகவே புளட் இயக்கம் தன்னை தானே கலைத்துக் கொள்வதாக பகிரங்கப்படுத்தியிருந்தது.

 

என்.எல்.எவ்.ரி போன்ற இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். பலர் தேடப்படும் நிலைக்காளானார்கள். இப்படியான கைதுகளின் போது பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டன. அக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் வைக்கப்படுவதோ விசாரணைகளோ நடாத்தப்படுவதில்லை.

 

 இவையெல்லாம் பின்னணிகளாகவிருக்க பல்கலைக்கழக மாணவன் விஐpதரன் கடத்தப்பட்டு காணாமல் போன போது சக மாணவனை விடுதலை செய்ய வேண்டியும் அது மட்டுமல்லாது

 

மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்"

 

என்ற கோசத்தோடு பல்கலைக்கழகத்திலிருந்து மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கைக்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தில் தம்மையே சமர்ப்பணம் தர வந்தார்கள் போராளிகள். எல்லா இயக்கங்களினதும் ஐனநாயக விரோதப் போக்கு கொலை அராஐகங்களுக்கு முகம் கொடுத்து சகித்துக் கொண்டிருந்த மக்கள் மேலும் சகிக்க முடியாத போக்கின் வளர்ச்சி கண்டு இக் கோரிக்கையின் போர்க்கொடி தூக்கினார்கள். அவ்வவ் வியக்கங்களிலிருந்து வெறுப்படைந்து வெளியேறிய போராளிகள் மக்களுக்கான ஐனநாயகப் போராட்டத்தில் கைகோர்;த்தார்கள். ஒரு வித மக்கள் எழுச்சி நாலாபக்கமும் பற்றிப்பரவி தீயாய் எழுந்தது. இந்தக் கோரிக்கைகளின் வேகம் கொடுத்த தாக்கம் உண்ணாவிரதப் போராளிகளை புலிகளின் மரணதண்டனை பட்டியலிலிட்டது.

 

தன்னுடைய உள்ளியக்க அராஐகத்துக்கு தாழ்பணியாது வெளியேறிய விமலேஸ்வரன்; உண்ணாவிரதப் போராளியானான். அதற்காக அவன் அனாதைப்பிணமாய் தெருவில் வீழ்த்தப்பட்டான். அவனது உடலம் கூட "அவர்களால்" அப்புறப்படுத்தப்பட்டது. ஊர்வலம் கிளர்ச்சி கண்டன அறிக்கைகள் அஞ்சலிக் கூட்டம் யாவும் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. பத்திரிகைள் எவையும் பத்திச்செய்தியாகக் கூட பிரசுரிக்காத வகையில் எச்சரிக்கப்படடிருந்தன. மக்களுக்கான கோரிக்கையோடு மரணத்தையும் எதிர்கொள்ளும் அர்ப்பணிப்போடு எழுந்த ஐனநாயகத்துக்கான போராட்டக் குரல்கள் கொலைகள் மூலமாக கொடூரமாக நசுக்கப்பட்டது.

 

இந்தப் போராட்டத்தின் ஒலி ஒளி ஆவணங்களை நீங்கள; www.tamilcircle.net இல் பார்க்க முடியும்.

 

இந்தியா பணம் கொடுத்து கட்டளையிட்ட உயிர்ப்பலிக்களமான புலிகள் செய்த பயங்கரம் அநுராதபுரத்தில் அப்பாவி சிங்கள மக்களின் உயிர் குடித்தது.

 

முஸ்லீம் மக்கள் பள்ளிவாசல்களில் தொழுகையின் போது பலியெடுக்கப்பட்டார்கள்.

 

யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வேரோடு பிடுங்கி வீசப்பட்டனர்.

 

அகதிவாழ்வு தேடி வந்த நாட்டிலும் புலிகளின் கொலைக்கரங்களால் பாரிஸில் சபாலிங்கம் குதறப்பட்டார். நாதன் கஜன் பட்டங்கள் வழங்கி குதறப்பட்டனர்.

 

கொலைக்கரங்கள் குரல்வளைகளை இறுக்கிய போதும் இந்திய ஆக்கிரப்பு இராணுவத்தின் கொடுமைகளை ஆவணப்படுத்தி "முறிந்தபனை" என்ற ஆவணத்தை தயாரித்து

 

"... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான - தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்"

 

என்ற உடற்கூற்றியல் விரிவுரையாளர் ரஐனி திரணகம தனது பல்கலைக்கழக வாசலிலேயே பரிதாபமாய் கொலை செய்யப்பட்டார்.

 

பல்கலைக்கழக மாணவி செல்வநிதி தியாகராஐh விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு திரும்பாதவர் ஆக்கப்பட்டார். இவருடைய விடுதலைக்காய் பென் என்ற அமைப்பும் வெளிநாட்டு ஸ்தாபனங்களும் குரல் கொடுத்தார்கள். விளைவேதுமில்லை.(http://www.pen.org/freedom/bga.htm).  இவர் மரணதண்டனைக்காளாக்கப்பட்டார் என புலிகளினால் உறுதிசெய்யப்பட்டது.

 

மேற்சொல்லப்பட்டது மேலும் இன்னும் சொல்லப்படாததும் ஐனநாயக மறுப்புக்களும், மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளும் ஒரு வழி செல்ல, அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட தியாகத்துடன் கூடிய மக்கள் போராட்டங்கள் நடந்தேறிய வரலாறுமாகும். இவை நிகழ்ந்தது இன்று நேற்றல்ல. இத்தனைப் போராட்டங்களும் ஐனநாயகத்துக்கான போராட்டங்கள் தான். மக்களும் போராளிகளுமாய் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து நடாத்திய இந்தப் போராட்டங்கள் பற்றி அறியாதிருந்தேன் என்று nஐயதேவன் குறிப்பிடுவாராயின் பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்த கதையாகத் தான் இருக்கும்.

 

எனவே இன்றைய ஐனநாயகச் சீமான் nஐயதேவன் அன்றைய இந்நிகழ்வுகள் நடந்தேறிய போது ஐனநாயகம் என்றால் என்ன என்று புரியாத அரிவரி அறிவுடன் இருந்ததாக நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்றெண்ணி நாடகம் போடுகின்றார். அப்போதெல்லாம் இவர் புலிகளின் நம்மவராக நாலும் கற்றவராக பவனி வந்துகொண்டிருந்தார். "ஐனநாயகம்" என்று திடீரென இப்போது புலிகளுக்கெதிராக வாய் கிழிய கத்தும் சீமானே, நீங்கள் இத்தனை ஐனநாயக மீறல்கள் நடந்தேறிய போதெல்லாம் இத்தனை போராட்டங்கள் நடந்த போதெல்லாம் அவைகளை நசுக்கிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்திய அணியின் வெளிநாட்டு தூண்களில் ஒன்றாய் நீங்கள் இருக்கவில்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன மக்குப் பிண்டமா?

 

இன்றும் கூட என்ன ஈராக் மக்களின் இரத்தம் குடிக்கும் பிரிட்டிஸ் தொழிற்கட்சியின் பெரிய பிரமுகராமே நீங்கள். ரொனி பிளேயரின் தோழனாமே நீங்கள். இலட்சக்கணக்கில் பிரிட்டிஸ் மக்கள் ஈராக் போருக்கெதிராய் தெருக்களில் இறங்கி போர் எதிர்ப்பு ஊர்வலம் சென்ற போது நீங்கள் ஈராக் மக்களின், அந்நாட்டின் இறையாண்மையை மீறி அவர்களை கொன்று குவித்த இரத்தத்தில் கைகழுவும் போர்வெறியர்களோடு கைகுலுக்கிக் கொண்டிருந்தீர்கள். எங்கே வாழ்கிறது உங்கள் ஐனநாயகம் இங்கே.

 

போராட்டங்களில் இறந்துபட்டவன், களையெடுப்பதாய் உயிர்ப்பலி கொள்ளப்பட்டவன் எல்லாம் எட்டப்பன், துரோகி, என்று நீங்கள் அவர்களின் நம்மவராக விருந்தபோது திரும்ப திரும்ப சொல்லி மகிழ்ந்திருப்பீர்கள்.ஆனால் உங்கள் தோல்களில் நீங்களே வளர்த்தெடுத்த புலியின் நகக் கீறல்கள் பட்ட மாத்திரத்துடன் தான் ஐனநாயகம் மீறப்பட்டு விட்டதாக ஐயோ முறையோ என்று காட்டுக் கூச்சல் போடுகிறீர்கள். புலிகளின் தலைவரைப் போற்றிப் பேணும் உங்களது தமையனார் சிபாரிசு செய்ய முனைவது யாதெனில் புலிகளில் "உயர்சாதி" களுக்குடைத்தான அறிவும் ஆற்றல் திறனும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். நீங்கள் புலிகளிலுள்ள லும்பன்களே(உங்கள் பாசையில் சொல்வதானால் கஞ்சிக்கு வழியின்றி லும்பன் தனத்தில் கச்சை வரிந்து கட்டிய கட்டுக்கோப்பில்லாத எளிய சாதிப்பன்றி) புலிகளின் பிரச்சனை என்கின்றீர்கள். nஐயதேவனும் அவருடைய அண்ணனும் இங்கே என்னே ஒற்றுமை.

 

“Prabhaharan, whom I yet consider a rare individual born to accomplish a historic mission, should immediately set about revamping the political and public affairs divisions in his organization and make them more responsive to the real needs and desires of the Tamil people. Every individual manning these positions should be screened for probity, as there is no legal frame work to govern their conduct at present 

 

“Secondly, by quite blatantly discriminating against the so-called 'Higher Castes ' of old, the LTTE has alienated many Tamils with considerable talent and abilities. At the helm of the new social order being engineered by the LTTE are their cadres and their families. This is a matter of serious concern and has to be challenged by the Tamil people. An old evil can not be permitted to be replaced by a new one.”

 

உயிர்த்தியாகம் தந்து போராடி மாண்டவர்களின் சமாதிக்கு மேலாக அரண்மனை கட்டும் கனவுகளோடு ஏகாதிபத்திய தயவுடன் நாக்கைத் தொங்கவிட்டபடி நாயாய் அலைகின்ற உங்களுக்கு "ஐனநாயகம்" ஒரு முகமூடி.

 

அராஐகத்துக்கு எதிராக போராடி சமாதியானார்கள் எத்தனையோ போராளிகள். அப்போதெல்லாம சங்கூதி மணியடித்து உங்கள் சங்கரனாருக்கு பூசை செய்த நீஙகள் இப்போது ரி.பி.சி யில் ஐனநாயக மகுடி வாசிக்கின்றீர்கள்!. எதற்காக!

 

சிறி
27.2.2006