Super User பெற்றோர் ஆவல் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீஇன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீஅல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணேஅல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலேவாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீஅன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணேஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...அறமி தென்றும்யாம் மறமி தென்றுமேஅறிகி லாத போது -- யாம்அறிகி லாத போது -- தமிழ்இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீஇயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமேபுலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்புலவர் கண்ட நூலின் -- நல்திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்... http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt145 Previous Article பெண் கல்வி Next Article அன்றும் இன்றும்