" உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல.
உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை
வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும்
விகிதாசாரம் உழைத்து, அவ்வுழைப்பின் பலனை பகிர்ந்து,
தத்தம் தகுதிக்கும், தேவைக்கும் அவசியமான அளவு
அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்,
தேசீயம் என்றும், தேச சேவை என்றும், தேச பக்தி என்றும்,
தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும்,
ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும், பல பல சொற்களைக் காட்டி,
மெய்வருத்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொதுமக்களை,
கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல்
வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார் வஞ்சித்து ஏமாற்றி
வயிறு வளர்ப்பதை - ஏன்? உழைப்பாளிகளைவிட
அதிக சுகமான வாழ்வு வாழ்வதை - அடியோடு ஒழிக்க வேண்டும்
என்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன்."
(தந்தை பெரியார், தமிழர் தலைவர் என்ற நூலலில் இருந்து .... ஆசிரியர் சாமி. சிதம்பரனார். பக்கம் : 149)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_4230.html