Language Selection

இயற்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடிமகனான மனிதன், ஆப்பிரிக்காக் கண்டத்தில் உருவெடுத்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து, வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெர்க்போஃன்ட்டெய்ன் குகைகளில், 40 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹோமினிட் மனிதரின் புதைவடிவங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

 

இந்த முதல் மனிதன் தோன்றியதே காலநிலை மாற்றத்தினால் தான் என்று இப்போது அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த ஆப்பிரிக்கா கண்டம் காலநிலை மாற்றத்தால் மேய்ச்சல் நிலமாக மாறியது. இதனால் காடுகளில் வசித்த மக்கள் திறந்த வெளிக்கு வர நேரிட்டது. அப்போது, தான் அவர்கள் தங்கலது பாதுகாப்புக்காகவும் வேட்டையாடவும் கல் ஆயுதங்கலையும், நீண்ட குச்சிகளையும் பயன்படுத்தத் தொடங்கினர். அந்தக் காலத்தில் இந்தக் காலநிலை மாற்றம் படிப்படியாக வெல்லமெல்ல நேர்ந்ததால், நமது மூதாதையர்கள், மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள முடிந்தது. இன்றோ, புவிவெப்பமாகும் வேகத்தைப் பார்க்கும் போது, பயமாக இருக்கிறது.

 

2100ம் ஆண்டுக்குள் இந்தப் புவியின் வெப்பம் 1.4 டிகிரி செல்ஷியஸ் முதல் 5.8 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. நிலம் வறண்டு பாலை. யாவதால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளியேறுகின்றனர். கீன்யா, உகாண்டா, தான்ஸானியா ஆகிய நாடுகளை ஒட்டிய விக்டோரியா ஏரியின் கரையில் நீர் அரிமாணம் ஏற்பட்டு, வறண்ட தரிசுப் பள்ளங்கள் தென்படுகின்றன. இத்தகைய ஒரு பள்ளம் 45 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவடைந்திருப்பதாக கீன்யாவில் உள்ள உலக வேளாண் காடுகள் மையம் தெரிவிக்கின்றன.

 

புவிவெப்பம் அதிகரிப்பதால் இத்தகைய இயற்கைச் சீற்றம் ஏற்படுவது போதாது என்று, நைஜீரியாவின் மையப்பகுதியில் மக்களின் வன்முறையும் அதிகரித்துள்ளது. அங்கு பாலைநிலம் தெற்கு நோக்கி விரிவதால், அரிதாகிப்போன நிலத்தின் காரணமாக விவசாயிகளுக்கும் நாடோடி, மேய்ப்பர்களுக்கும் இடையே போட்டியும் பூசல்களும் மலிந்து விட்டன.

 

அழியும் காடுகள், அரிதாகி வரும் நீர்வளம், உயரும் கடல் மட்டம் இவைகாரணமாக மக்கள் ஒட்டுமொத்தமாக குடி பெயரக்கூடும். ஏனெனில், உணவு விளைச்சலுக்கு உத்தரவாதம் இல்லாத சகாரா பாலைவனத்திற்கு உட்பட்ட ஆப்பிரிக்கா தான், புவிவெப்பத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, வறண்ட நிலத்தில் மேலும் வறட்சி பரவும் சதுப்பு நிலம் மேலும் ஈரமாகி, விளைச்சலுக்கு பயந்படாமல் போகும்.

 

உகாண்டாவில் வெப்பம் அதிகமாகி, மழை சரிவர பெய்யாமல் முக்கிய பயிரான காப்பி சாகுபடி ஆபத்துக்கு உள்ளாகி விட்டது. கடல்வெப்பம் உயர்வதால், ஆப்பிரிக்காவின் பசுமையான கீழைக் கடலோரத்தில் பவளத்திட்டுக்கள் பாழ்பட்டு விட்டன.

 

மனிதகுலத்தின் தொட்டிலான ஆப்பிரிக்கா இன்று மிக மோசமான சுற்றுச் சூழல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கு காரணம். கரியமில வாயுவின் கணக்கற்ற வெளியேற்றத்தால் புவிவெப்பம் அடைவது தான் என்று உலக வளவிலங்கு நிதியத்தின் புவி காலநிலை மாற்றத்திட்டத்தின் இயக்குநர் ஜென்னிஃபர் மோர்கன் கூறுகிறார்.

 

பெரும்பாலான ஆப்பிரி்க்கர்கள் மழையை நம்பும் வேளாண் தொழிலை செய்து பிழைக்கின்றனர். எனவே, வேளாண் தொழிலாளர்களை வறட்சியும் வெள்ளப் பெருக்கும் மிக மோசமாகப் பாதிக்கிறது. கார்கள், தொழிற் கூடங்கள், மின்சார ஆலைகள் போன்றவை வெளியிடும் வெப்பக்காற்றால், ஆப்பிரிக்கா சூடாவதற்கு உலகின் பணக்கார நாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், காலநிலை மாற்றத்தை சரிவரக் கையாளாவிட்டால், ஆப்பிரிக்கரை காப்பாற்ற முடியாமல் போகும் என்கிறார் ஜென்னிஃபர் மோர்கன்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.