Language Selection

புதிய ஜனநாயகம் 2005
08_2005.jpgஇந்திய அரசின் தேசிய நீர் கொள்கை, பொதுத்துறை தனியார்துறை கூட்டு என்ற பெயரில், தண்ணீரைத் தனியார்மயப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. இக்கொள்கையின்படி, தில்லி முதல் திருப்பூர் வரை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவது பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இது மட்டுமின்றி, ஆறுகளும், அணைகளும் கூடத் தனியார்மயமாக்கப்படுகின்றன.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என மன்மோகன் சிங் பேசியிருப்பது; ஆற்றுப் பாசனத்திற்கு அநியாயக் கட்டணம் விதிக்கும் மகாராஷ்டிரா மாநில அரசின் சட்டம்; தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் பாசன வசதிகளை பயனீட்டாளர்களே பராமரிப்பது என்ற உலக வங்கியின் திட்டம் இவையாவும் தண்ணீர் தனியார்மயத்தின் வௌ;வேறு முகங்கள் என்பதை நிறுவுகிறது, இந்நூல்.

 

தண்ணீர் வியாபாரமென்பது பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்பதற்குச் சமமானது; மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதம்; மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம் எனவும் விளக்குகிறது, இந்நூல்.

 

தண்ணீர்:
தாகத்திற்கா, இலாபத்திற்கா?

நன்கொடை ரூ. 5
ம.க.இ.க. வி.வி.மு. பு.மா.இ.மு. பு.ஜ.தொ.மு. வெளியீடு