Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காட்டு வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான போரைத் தொடுத்திருக்கும் இந்திய அரசை எதிர்த்து சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பதிவுலகைச் சேர்ந்த பதிவர்களும், வாசகர்களும் கூட நிறையப் பேர் வந்திருந்தனர்.

முதலில் இந்தக் கூட்டத்திற்கு போலீசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. பிறகு உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்த பிறகே கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபணையில்லை என்று நீதிமன்றத்தில் கூறி அனுமதி வழங்கியது. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு தோள் கொடுக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவில் நடந்த முதல் நிகழ்ச்சி இதுவே. இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்களிடம் வசூல் செய்த தொகை ரூ.17,000 என்று தோழர்கள் மேடையில் அறிவித்தனர். இதுவே இந்தக்கூட்டத்தின் உணர்வுப்பூர்வமான எழுச்சிக்கு சான்று. இங்கே கூட்டத்தின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில புகைப்படங்களை வெளியிடுகிறோம்.

சிறப்புரைகள்

தலைமை தாங்கிய தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.


சிறப்புரை ஆற்றிய தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குறைஞர், பெங்களூரு.

சிறப்புரை ஆற்றிய தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா.

தோழர் வரவரராவின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்கும் தோழர் மருதையன்

சிறப்புரை ஆற்றிய தோழர் மருதையன், ம.க.இ.க, தமிழ்நாடு.


கலை நிகழ்ச்சிகள்


மக்கள் திரள்

http://www.vinavu.com/2010/02/24/green-hunt-meeting-pics/