Language Selection

புதிய கலாச்சாரம்

09_2005.jpg

பத்துக்கு பத்து குடித்தனத்தில் பெத்தபிள்ளை அருகே வந்தாலும் ""ச்சே போ அந்தாண்ட கசகசங்குது நீ வேற'' என்று காயும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அண்ணா டவரின் உயரத்தில் இடைவிடாது வரும் காற்று, கொஞ்சலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

09_2005.jpg

பாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடுத்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

ஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு 56 காரணிகளை வைத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூறுவது 40 காரணிகள். நம் நாட்டுக்கு பன்னாட்டு பாட்டில் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளவை வெறும் 16 காரணிகள். ""குடிக்கத்தக்க நீரெல்லாம் குடிநீரே'' என்கிறது நம் அரசு.

09_2005.jpg

கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத ஓட்டுக் கட்சிகளோ மிகவும் குறைவு!) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன்? எப்படி? எதற்காக?

09_2005.jpg

வெள்ளையனுக்குக் கப்பம் கட்ட மறுத்து தூக்கில் தொங்கினான் கட்டபொம்மன். சுதேசிக் கப்பல் கம்பெனியை இயக்கிக் காட்டினார் வ.உ. சிதம்பரம். சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்று ஒரு வீரம் செறிந்த மரபைக் கொண்ட நெல்லை மண்ணின் மக்களுக்கு ஒரு சோடா கலர் கம்பெனி இன்று சவால் விடுகிறது.

09_2005.jpg

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்' (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

09_2005.jpg

""கொக்கோ கோலாவிற்கு எதிராக நக்சலைட்டுகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களை எங்கே கண்டாலும் பிடித்துப் போலீசிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்'' ஆகஸ்டு 25ம் தேதியன்று காலை முதல் நெல்லை பேருந்து நிலைய வாயிலில் ஒலிபெருக்கியின் மூலம் நெல்லை நகரப் போலீசு வெளியிட்ட அறிவிப்பு இது. நெல்லை கங்கை கொண்டான் கோக் ஆலைக்கு எதிராக செப். 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் எமது போராட்டத்திற்கும்,

கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத

04_2005.jpg

சுனாமி பேரழிவுக்குப் பிறகு பட்டினப்பாக்கம் பகுதியை அமைதி சூழ்ந்து கொண்டிருந்த ஒரு நாளின் மாலை; காற்றின் அசைவு கூட இன்றி அமைதியாக இருட்டிக் கொண்டு வரும் மாலை. ஏனோ வானம் கொஞ்சம் மூட்டம் போட்டிருந்தது. கரையோரங்களிலிருந்து வெளியேறிய மக்கள் சாலை ஓரங்களிலும், சர்ச்சுகளுக்குள்ளும், தேநீர்க் கடைகளுக்கு அருகாமையிலும் கூட்டம் கூட்டமாய் ஒதுங்கியிருக்கிறார்கள். நான் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். தற்செயலாகத் திரும்பினேன்.

04_2005.jpg

""அவா அவா செய்த கர்ம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பார்ப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் விஷயத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவர்களின் பாங்கனாக துக்ளக், தினமலர் வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.

04_2005.jpg

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE