Language Selection

புதிய கலாச்சாரம்

12_2005PK.jpg

எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைந்து விட்டார். தன் மரணத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை ""என் நினைவுச் சின்னம்''. அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பலரும் அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கும் இச்சமயத்தில் அதன் மறைபொருளை, குமுறலை, ஏக்கத்தை, அக்கவிஞனின் உண்மை யான உணர்ச்சியை வெளியிடுகிறோம்.

12_2005PK.jpg

தீபாவளியின் கவலைகளும் மகிழ்ச்சியும் பலவிதம். தமிழகத்தில் விடாது பெய்த அடை மழையால் சிறு வியாபாரிகளுக்கும் பாதையோர வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு தீபாவளி இல்லை! ஆர்.எம்.கே.வி., போத்தீசு நிறுவனங்களின் கவலை, யார் அதிக விலையில் புதிய பட்டுப் புடவைகளை வெளியிடுகிறார்கள் என்பது! இது போக, ராணி, தேவி குடும்ப வார இதழ்களில் தீபாவளி கொண்டாட இயலாத ஏழைக் குழந்தைகளுக்கு பணக்காரக் குழந்தைகள் உதவிய சிறு கதைகளும் வெளிவந்திருக்கும். இது நாம் அறிந்த தீபாவளி. நாம் அறியாத தீபாவளி ஒன்றும் உண்டு.

12_2005PK.jpgதிட்டத்திட்ட திண்டுக்கல், வைய வைய வைரக்கல்னு இப்படி இருக்கானே என்று மக்கள் சிலரைப் பார்த்து மலைப்பதுண்டு. அப்படி நம்மை மலைக்க வைக்கிறது மார்க்சிஸ்டுகளின் (இகஆ) தீக்கதிர் நாளேடு. தீபாவளி சிறப்பு மலர், ரம்ஜான் சிறப்பு மலர் என இரண்டு மலரை வெளியிட்டு தனது மார்க்சிய திருத்தல்வழி பாரம்பரியத்திற்குச் சிறப்பு சேர்த்துள்ளது. வருடா வருடம் சங்கராச்சாரியே மறந்து போனாலும், தீக்கதிர் பீடாதிபதிகள் மறக்காமல் பட்டாசுடன் புதுப்புது கதைகளையும்

12_2005PK.jpg

மழை. எங்கும் மழை. மழை தரும் கவித்துவ உணர்வை சோகம் கவ்விக் கொண்ட பேய் மழை. தமிழகத்தின் கொடை என்றழைக்கப்படும் வடகிழக்குப் பருவமழை ஏறக்குறைய பாதி தமிழகத்தை வெள்ளக்காடாக்கி விட்டது. மழை தந்த இந்தப் பெருவெள்ளத்தின் சோதனையோடு தண்ணீர் தனியார்மயம் குறித்த பிரச்சினையை இணைத்துப் பரிசீலிப்பது அவசியமாக இருக்கிறது. முன்பு குடிநீருக்காகச் சாலை மறியல் செய்த மக்கள் தற்போது வெள்ள நிவாரணத்திற்காக அன்றாடம் மறியல் செய்த வண்ணம் போராடுகின்றனர்.

12_2005PK.jpg

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.

12_2005PK.jpg

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம்.

12_2005PK.jpg

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், திருச்சி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னை மதுரவாயல் பகுதியிலும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. அமைப்புகளைச் சேர்ந்த எமது தோழர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும், பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 28ஆம் தேதியன்று தொடங்கிய இந்தப் பணி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

12_2005PK.jpg

மாமழை போற்றுதும் என்பதற்குப் பதிலாக, மாமழை போதும் எனுமளவுக்கு மழை கொட்டித் தீர்க்கிறது. சென்னையில் மட்டும் இரண்டே நாளில் 410 மி.மீட்டர் மழை. நடுங்குகின்றன குடிசைகள். ஏழைகளின் எலும்பைத் துளைக்கிறது மழையின் குளிர். நகராட்சிக் கட்டிடங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் அணைந்து கொண்டு பட்டைச் சோற்றுக்காகப் பரிதவிக்கிறார்கள் அன்றாடங்காய்ச்சிகள். முதியவர்களுக்கும், குழந்தைகளுக்குமாய் முண்டியடிக்கிறார்கள் பெண்கள்.

12_2005PK.jpgஒரு அரை நூற்றாண்டுகாலக் "குடியரசு ஆட்சி' மிகப் பெரும் தோல்வியை அவமானத்தை அடைந்து விட்டது, கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளம். வெற்றி கொள்ளும் படை பகைவெறி அடங்காத ஆவேசத்துடன் ஆக்கிரமிப்பு நாட்டில் அனைத்தும் தழுவிய பேரழிவு விளைவிப்பது போலச் செய்துவிட்டது. பத்து மாதங்களுக்கு முன்பு தமிழகக் கடற்கரையைத் தாக்கிய ஆழிப்பேரலை (சுனாமி) ஆயிரக்கணக்கான உயிர்களையும், நூற்றுக்கணக்கான கடலோரக் கிராமங்களையும் காவு கொண்ட துயரத்தை நினைவுபடுத்துகிறது.

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

 

09_2005.jpg

தனது சிறு படகில் கொச்சின் கடற்கரைக்குத் திரும்பும் மீனவர் பெர்னாண்டஸ் கண்களில் சோகம் தேங்கியிருக்க அனேகமாகக் காலியாக இருக்கும் தன் மீன் கூடையைக் காட்டுகிறார். பலமணி நேரம் போராடிய பிறகு அவருக்குக் கிடைத்திருக்கின்ற உழைப்பின் பரிசு அவ்வளவுதான்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE