Language Selection

புதிய கலாச்சாரம்

05_2007.jpg

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள்.

05_2007.jpg

மேற்கிந்தியத் தீவுகள், மார்ச் 23. முதலில் ஆடிய இலங்கை அணி 254 ஓட்டங்களை எடுக்க, நடுத்தரமான இந்த இலக்கை இந்திய அணி சும்மா ஊதித் தள்ளிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தால் புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.

05_2007.jpg

மே நாள். ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கனிச் சந்தையான சென்னை கோயம்பேடு வணிக வளாகம். பச்சைப் பசேலென்ற காய் களைத் தம் முதுகில் சுமந்தபடி அந்த மாபெரும் வணிக வளாகத்தின் உயிர்த் துடிப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் தொழிலாளிகள். அவர்களுடைய உரிமைக் குரலாய் செங்கொடிகளையும் பதாகைகளையும் தமது தோளில் சுமந்த வண்ணம் அந்தச் சந்தை முழுவதும் பரவிக் கொண்டிருந்தார்கள் எமது தோழர்கள். பசுமையில் பதிந்த அந்தச் சிவப்புத் தீற்றல்களை, தீக்கொன்றை களாய்த் தீட்டிக் காட்டின விடியலின் இளங்கதிர்கள்.

05_2007.jpgஇரண்டாவது முறையாக தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபராகப் பதவி யேற்ற ஹீயுகோ சாவேஸ், இவ்வாண்டு மே தினத்திற்குள் நாட்டின் முக்கியத் தொழிற் துறைகளை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் அரசியல் சாசனத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார்.

"ஏ! சரோசா... என்ன, பாக்காத மாதிரி போய்ட்ருக்க?''

 

"ஓ! ராணி, வா, வா, தப்பா எடுக்காதே, மாப்புள கார்ல வந்து இறங்கிட்டாரு, ஆலம் கரைக்கச் சொன்னாங்க. அதான் ஒன்ன கூடப் பாக்குல.''

02_2007_puja.jpg

"திருவண்ணாமலையைச் சுற்றி வந்தவர்களுக்கு முக்தி கிடைப்பது போல, சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒருதரம் சுற்றி வருபவர்கள் வாசகர் ஆகலாம்'', என்கிறார் தினமணி ப.கிருஷ்ணன். ""என்னதான் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வந்தாலும் புத்தகம் படிக்கிற பழக்கம் அதிகரித்துள்ளது. இம்முறை 8,000 புதிய புத்தகங்கள், 474 கடைகள், விரிவுபடுத்தப்பட்ட 50,000 சதுர அடி பரப்பு, 5 கோடி புத்தகங்கள்... இவையே இதற்கு சாட்சி'' என்கின்றனர். ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை நடத்திவரும் "தென்னிந்தியப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்க' (பபாசி) நிர்வாகிகள்.

02_2007_puja.jpg

சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையைக் கொண்டிருப்போரை போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பதில் நமக்கு தயக்கமிருந்ததில்லை. ஆனால், சொல்லிலும் செயலிலும் முரண்பாடு ஏதுமின்றி ""சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'' என்று கொள்கைக் குன்றுகளாக வலம் வரும் "மார்க்சிஸ்டு'களை இனிமேலும் போலி கம்யூனிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டிருப்பது பொருத்தம் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.

02_2007_puja.jpg

இந்தியாவில் எழுச்சி கொண்ட சிப்பாய்கள் செய்த அட்டூழியங்கள் உண்மையிலேயே திகைக்க வைக்கின்றன; பயங்கரமாக இருக்கின்றன; சொற்களால் வருணிக்க முடியாத அளவு கொடூரமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களை ஆயுதந்தாங்கிய எழுச்சிப் போர்களில், தேசிய எழுச்சிப் போர்களில், இனமோதல்களில், எல்லாவற்றையும் விட மதம் சார்ந்த போர்களில்தான் பார்க்க முடியும்.

02_2007_puja.jpg

ரேவண்டாபாய் காம்ளே தனது ஆறு வயது மகனோடு பேசிப் பல மாதங்களாகி விட்டது. ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள், ஆனால் இப்படியொரு நிலைமை. பூரிபாய் நாக்புரேவுக்கும் அப்படித்தான் சில சமயம் பெரிய மகனோடு பேச நேரம் கிடைக்கும், அதுவும் அவன் விழித்துக் கொண்டிருந்தால்.

02_2007_puja.jpg

"காவிரி கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமானது; தமிழகத்துக்கு அதன்மீது எவ்வித உரிமையும் இல்லை'' என்ற குதர்க்க வாதம்தான் இதுநாள் வரை கர்நாடக அரசு செய்த வந்த எல்லாவிதமான சட்டவிரோத அடாவடித்தனங்களுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. இந்தப் பின்புலத்தில் 1990இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தற்போது வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

02_2007_puja.jpgஏய்! சாயிபாபா
வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்
வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?
வெயிலறியா உன் தலைமுடியிலிருந்து
விதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!
அதுவா அற்புதம்?

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE