Language Selection

புதிய கலாச்சாரம்

நாங்கள் சும்மா இருந்தாலும்
நாடு விடுவதாயில்லை...

எழுதுவதால் மட்டுமல்ல
கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்
எல்லோர்க்கும் ஒருசமயம்
கவிதையாய் வாய்க்கும்.

கவினுறு மலைகள் ஏறிக் களைத்து
எங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து
காடுகள் சோலைகள் பூத்து
எங்கள் கைகள் வரைக்கும் காய்த்து
ஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து
சமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து
உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்
ஒன்று கலந்து வளர்ந்த தமிழே! தலைமுறைக் குரலே!
பிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே!
உயிர் உறை கனவே! பரம்பரை உழைப்பே!
பாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே!

திசைகளின் கவர்ச்சியை வெறுத்து
தசைகளின் சுகங்களை மறுத்து
வசவுகள் ஆயிரம் பொறுத்து
உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு
பசையென உயிரையே கொடுத்து
மண்ணைக் கிளப்பிய வேர்களே
மார்க்சிய லெனினியப் பூக்களே
மகத்தான தியாகிகளே!
நிலவைக் காட்டிச் சோ×ட்டும்
தாயின் அன்பும் மாறிவிடும்
சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய
உங்கள் தோழமை இரத்தம்
தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!

 பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.  இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.


 இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன். ""வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தார்.

 1967இல் நக்சல்பாரி பேரெழுச்சியின்போது ஆளும் வர்க்கத்தின் கேடயமாகச் செயல்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி, கடந்த 30 ஆண்டுகளில் ஆளும் வர்க்கத்தின் வாளாகப் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. நந்திகிராம் அதற்கு ஒரு நாடறிந்த எடுத்துக்காட்டு. மார்க்சிஸ்டுகளின் துரோகத்தை எங்கெல்லாம் மக்கள் எதிர்க்கிறார்களோ, எங்கெல்லாம்  புரட்சியாளர்களின் அரசியல் நடவடிக்கைகளால் இவர்கள் அம்பலமாகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் படுகொலைகளை நிகழ்த்த மார்க்சிஸ்டுகள் தயங்குவதில்லை. விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன மார்க்சிஸ்டு கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

 நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள்.

வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ள
யாருக்கும் ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை

புல்லரிக்க வைக்கவில்லையா?

 கொழந்தசாமி, பெரிய வூட்டுக்கு அமெரிக்காவுலேந்து பெர்சா பார்சல் வந்துச்சின்னு கேள்விப்பட்டேன்.. உனக்கு எதுனாச்சும் கொடுத்திருப்பாங்களே? சும்மா சொல்லுயா நாங்க கேக்க மாட்டோம்!


 ""தோ! கையில இந்த நாயதான் கொடுத்திருக்காங்க. எல்லாந் தெரிஞ்சு கேக்குறியே..  ஊம், வாய்தான் வாழப்பழம் கை கருணைக்கிழங்கு. போவியா'' டீக்கடை வாசலில் மூங்கில் தூணில் சுண்ணாம்பை ஒரு விரலால் தடவிக்கொண்டே சுப்பையனை நிமிண்டி விட்டான் கோபு.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE