Language Selection

புதிய கலாச்சாரம்

தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் ஏழை நாடுகளின் கையை முறுக்கிக் கையெழுத்து வாங்கியது உலக வங்கி. காட்ஸ் ஒப்பந்தமோ, சுயவிருப்பத்துடன் மனப்பூர்வமாக இதில் கையெழுத்திட்டுத் தருமாறு கோருகிறது.
சேவைத்துறைகளிலான வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (General Agreement on Trade related Services) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், காட் (GATT) ஒப்பந்தத்துடன் (வரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம்) இணைந்ததாகும். எனவே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் காட்ஸ் ஒப்பந்தத்தையும் அடிப்படையில் ஏற்றுள்ளன.

மக்களின் எதிர்ப்புகள் எவ்வளவு வந்தபோதும், "தனியார்மயம் தோல்வி' என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட போதும் உலக வங்கி எள்ளளவும் பின்வாங்குவதில்லை. உலகின் நீர்வளம் அனைத்தையும் கைப்பற்றி, குடிநீரை மட்டுமின்றி உலகின் உணவு உற்பத்தி முழுவதையுமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதே உலக வங்கியின் நோக்கம்.

ஏழை நாடுகளின் மீது மறுகாலனியாக்கத்தைத் திணிப்பதற்கு வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களே, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள்.உலக வங்கி என்பது உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான வங்கியுமல்ல; ஏழை நாடுகளின் நலத்திட்டங்களுக்கெல்லாம் கடனுதவி வழங்கும் வள்ளலுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை எல்லா ஏழை நாடுகளுக்கும் விரிவுபடுத்துவது, அதற்கேற்ப சட்டதிட்டங்களைத் திருத்தியமைக்குமாறு அந்நாட்டு அரசுகளை நிர்ப்பந்திப்பது,

அரசு என்ன செய்கிறது? தண்ணீர்க் கொள்ளையை அனுமதிக் கிறது. மக்களுடைய தாகத்தைக் காசாக்கும் இந்தக் கொள் ளையை ஊக்குவிக்கிறது. இந்தத் தண்ணீர்த் திருட்டைத் தொழில் வளர்ச்சி என்றும் தண்ணீர்த் திருடர்களைத் தொழிலதிபர்கள் என்றும் கூறி கவுரவிக்கிறது.

நாளுக்கு நாள் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. போதிய அளவு மழை பெய்யாததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் இது முழு உண்மையல்ல.

தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; மண்ணின் உயிர்த்துளி; உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் எந்தமுதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல; உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் கொடை. புவி ஈர்ப்பு விசைதான் அதை விநியோகம் செய்கிறது. புல் பூண்டுகள் முதல் மனிதன் ஈறான எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் சேர்த்துத்தான் இயற்கை தண்ணீரை வழங்குகிறது.

கோக் தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடு. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமையவிருக்கும் கோக் ஆலைக்கு, சிப்காட் வளாகத்தில் நிலம் கொடுத்து, தாமிரவருணியிலிருந்து அன்றாடம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீரையும் குழாய் மூலம் கொண்டு வந்து தரவிருக்கிறது தமிழக அரசு. ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒண்ணேகால் பைசா.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
தண்ணீர்ப் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். குடிநீருக்காக மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும். நீர்வளத்தைக் கையகப்படுத்தி இலவசமாக மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு கழிவு.

வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?


2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE