Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(மார்கழி 5, 2011 இல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நடாத்தப்பட்ட போராட்டப் படம்)

எங்கள் தோழர்கள் குகனும்-லலித்தும் சிறைப்படுத்தப்பட்ட போராளிகளின் -கைதிகளின் விபரம் திரட்டியதாலேயே மஹிந்த அரசால்  கடத்தப்பட்டு காணமல் போகச் செய்யப்பட்டனர். ஒருவரிடமும் எந்த விபரமும் இல்லாத நிலையில் தென்னிலங்கைத் தோழர்கள் சிலரின் முயற்சியால், கைதிகள் பற்றிய பெருமளவு விபரம் திரட்டப்பட்டது.

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன். எம்மைச் சுற்றிய எல்லாம் இனவாதம், சாதியம், ஆயுதம் தாங்கியவர்களின் அராஜகங்கள் என்று மனிதத்தை குழி தோண்டி புதைத்த போது கும்மிருட்டில் மிளிரும் ஒரு நட்சத்திரம் போல எழுந்தவன் எங்கள் எம்.சி.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி சனிக்கிழமை அன்று டென்மார்க் கொல்ஸ்ரபரோவ் நகரில் தோழர் லோகநாதனை நினைவு கூருமுகமாக அவரது கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை" புத்தக வெளியீடு இடம்பெறுகின்றது.

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அருட்தந்தை இமானுவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

சென்ற இதழ் தொடர்ச்சி...

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தை அடுத்து, 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது, வடபகுதி பொலிஸ் நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட பொலிஸார் ஊர்வலத்தினர் மீதாக பலமான தாக்குதல் நடாத்தினர்.

எதிர்வரும் 13ம் திகதி (ஜீன் - ஆனி மாதம்) சனிக்கிழமை அன்று கனடாவில் "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்நிகழ்வினை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக பெரும்பான்மை இன சிங்கள உழைக்கும் மக்களை அணிதிரட்டி, சகல இன மக்களுக்கும் சமவுரிமையினை உறுதி செய்யுமுகமாக கடந்த சில வருடங்களாக சமவுரிமை இயக்கம் பல போராட்டங்களை நடாத்தி வருகின்றது.

சிறைச்­சா­லை­களில் தடுத்­து ­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சியல் கைதிகளையும் விடு­தலை செய்­யக்­கோரி சம உரிமை இயக்­கத்­தினால் நேற்று கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்­பட்­டது. சம உரிமை இயக்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்­டத்தில் முன்­னிலை சோஷலிச கட்சி, இலங்கை ஆசி­ரியர் சங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சிறைச்­சா­லை­களில் தடுத்து­ வைக்கப்பட்டுள்ள நபர்­களின் உற­வினர்கள் என பல்­வேறு தரப்­பி­னர் கலந்து கொண்­டனர்.

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28.05.2015 பிற்பகல் 3:30 மணிக்கு  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் மூவின மக்களும் இணைந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர். இதில் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் உறவுகளும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியது.

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28/05/2015 பிற்பகல் 3:30 மணிக்கு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ இருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமவுரிமை இயக்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.

சகோதரி வித்தியாவுக்கு  நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் நேற்று (26.05,2015) கொழும்பு பொரளை மயானத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போரட்டம் பெண்ணியவாதியும், சட்டத்தரணியுமான ஷாமில தளுவத்தவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், தனியல்பாகவே மூவின மக்களும் பங்குகொண்டனர். 700 பேர் வரையில் பங்கு கொண்ட போராட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று முன்வைக்கப்பட்டது. அம் மனுவில் உள்ள கோரிக்கைகளும், பரிந்துரைகளும் கீழே வாசிக்கலாம்:  

சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் பற்றிய கோரிக்கைகள், மற்றும் பரிந்துரைகள்

கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியில், குப்பைக் கழிவுகளைக் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி போராடிய மக்கள் மீது நல்லாட்சி அரசு தனது அரச படைகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. இக் குப்பை மேடுகள்  அருகில் உள்ள வீடுகளில் சரிந்து விழுவதாகவும், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் சுகாதார சீர்கேடுகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இன- மத பேதங்களை கடந்து சகல பெண்களையும், ஆண்களையும் போராட அறைகூவல் விடுத்து இன்று கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் விழிப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

வன்முறை - சூறையாடல் வித்தியாவை மட்டும் சூறையாடவில்லை, வித்தியாவின் பெயரால் மக்களின் போராட்டத்தையும் - பெண்களின் குரலையும் கூட சூறையாடி இருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதை மக்களுக்கு எதிராக அரங்கேற்றியதோ, அதைப் போன்ற ஒன்றையே சிலரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதன் மூலம் சமூகத்தை உறைநிலைக்கு தள்ளி இருக்கின்றது. மீண்டும் பாதுகாப்பு படைகளை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.

உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலும், பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர முனை வரையிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதியில் முன்னணி வெளியீட்கத்தின் முதலாவது வெளியீடான தோழர் சீலனின் போராட்ட அனுபவமான “வெல்வோம் அதற்க்காக...” நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. அதன் படங்களை இங்கே காண்கின்றீர்கள்.

வித்தியாவுக்கு நீதி கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டம், சுதந்திரப் பெண்கள் அமைப்பினால் (Free Women) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கோரியும், அனைத்துப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் அணிதிரளுமாறு போராட்ட அறைகூவலை வெளியிட்டுள்ளது சுதந்திரப் பெண்கள் அமைப்பு. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE