Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நேற்றைய தினம்  சனிக்கிழமை 27/06/2015 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில. "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.

சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தினை தொடர்ச்சியாக இலங்கை முதல் புலம்பெயர்ந்த நாடுகள் வரை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அண்மையில் பிரான்ஸ் மற்றும்  லண்டனில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் அவுஸ்திரேலிய இடதுசாரிகள் பங்கு பற்றியதுடன் தமது ஆதரவினையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முன்னிலை சோசலிசக் கட்சியினர் யாழ் நகரப் பகுதியில் நேற்றைய தினம் (26/6/2015) சுவரொட்டி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.முன்னிலை சோசலிசக் கட்சி, தனது யாழ் மாவட்டக் காரியாலயத்தை எதிர்வருகின்ற செவ்வாய் (30.06.2015) அன்று காலை ஸ்ரான்லி வீதியில் திறந்து வைக்கவுள்ளது.

யூலை (2015) 4ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 ல் (ஆரியகுளத்திற்கு அருகாமையில்) "படிப்பகம்" புத்தக நிலையம் திறப்பு விழா இடம் பெறுகின்றது.

எதிர்வரும் ஜீன் 30ம் திகதி செவ்வாயன்று,  யாழ் நூலக உணவக மண்டபத்தில்  "இடதுசாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வினை முன்னிலை சோசலிச கட்சி ஒழுங்கு செய்துள்ளது.

நேற்றைய தினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகாமையில் சமவுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "அரசியல் கைதிகளை விடுதலை செய்" போராட்டம்  சர்வதேசத்து மக்களின் கவனத்தை ஈர்க்குமுகமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கள- தமிழ் மக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.

முன்னிலை சோசலிசக் கட்சி தனது அலுவலகத்தை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் திறக்கவுள்ளது. அத்துடன் "இடதுசாரிய நடவடிக்கை" என்ற இடதுசாரிய முன்னணியின் அரசியல் ஆவண நூல் வெளியீடும், கருத்தரங்கும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. சகோதர, சகோதரிகள், தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களை இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.

பாரிஸ் இபிள் (Eiffel Tower)  ரவருக்கு அருகாமையில் நேற்றைய தினம் (14/06/2015) இலங்கை சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி போராட்டம் இடம்பெற்றது.

கனடா சம உரிமை இயக்கத்தின் முதலாவது கலாச்சார நிகழ்வான "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு 13,06,2015 அன்று ஸ்காபுறோ சிவிக் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதலில் வரவேற்புரை மூத்த இடதுசாரியும் சமூக சிந்தனையாளருமான திரு மார்க் சூசை அவர்களால் வழங்கப்பட்டது.

"சம உரிமை இயக்கம்" இன்று நாடளாவிய அளவில் இலங்கைக் குடிமக்களால் பேசப்படும்-கவனிக்கப்படும்- அணுகப்படும்- விமர்சிக்கப்படும்- சந்தேகிக்கப்படும்- அவதானிக்கப்படும் ஒரு அரசியல் அசைவாக விளங்குகிறது.

"அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!" என்ற கோசத்தை முன்வைத்து, சமவுரிமை இயக்கம், 20.06.2015 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை  Westminster Parliament Square இல் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக தாமதமின்றி விடுதலை செய் என்ற கோசத்தை முன்வைத்து சமவுரிமை இயக்கம், 14.06.2015 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை Palce Trocaderor வில் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சமவுரிமை இயக்கம் (பிரான்ஸ்)

மனித அறிவு என்பது அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய வளர்ச்சியாகும். அதாவது வரலாற்று பூர்வமாகவே உழைப்பு பற்றிய அறியாமையில் இருந்து, உழைப்பின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு வளர்ந்து வருகின்றது. இதுதான் மனித அறிவின் எதார்த்தம். மனித உழைப்பு என்ற ஒரு நடைமுறைக்கு வெளியில், அறிவு சுயாதீனமாக இருக்கவும் முடியாது, தோன்றவும் முடியாது.உழைப்புதான் மனிதஅறிவின் அடிப்படையும் ஆதாரமுமாகும்.

இனவாதம் மூலம் 66 ஆண்டுகள் மக்களை பிரித்து ஆண்டவர்களையும், அதை எதிர்த்து நின்ற இனவாதிகளில் இருந்து, இந்தத் தேர்தல் மூலம் புதிய தலைமுறையை அரசியல் மயப்படுத்தியதில் இடதுசாரி முன்னணி வெற்றிக்கான ஆரம்ப காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.

மருந்துப்பொருள் விற்பனை மாபியாக்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும அப்பாவி மக்களை மீட்டெடுக்கின்ற பரந்துபட்ட போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்ற அதேவேளை மாணவர் இயக்கங்களும் சுகாதார சேவைத்துறைச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்எடுத்துச் செல்லவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து ஒரு புதிய அரசும் தெரிவாகியுள்ள போதிலும் ஜனநாயகம் தொடர்பானதும் பொருளாதாரரீதியான மேம்பாடுகள் தொடர்பான மக்களது அபிலாஷைகள் நிறைவேறப்போவதில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றனதென முன்னிலை சோஷலிசக் கட்சி கருதுகின்றது.

டில்லி பல்கலைக்கழக பேராசிரியரும் மக்கள் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளருமான கலாநிதி G.அனுப்பிN. சாய்பாபா அவர்கள் ரகசியமாக சாதாரண உடையில் வந்திருந்த இந்திய போலீசால் கடந்த வருடம் மே மாதம் 9 ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்' (UAPA), கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மத்திய சிறையில்ஒரு இருண்ட தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE