Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த சனி (4-07-2015) அன்று யாழ் ஸ்ரான்லி வீதியில் படிப்பகம் புத்தகக்கடை தோழர் இக்பால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தோழர் சந்திரகுமார் தலைமையில் கருத்தரங்கம் இடம்பெற்றது. இந்த கருந்தரங்கில் தோழர் இக்பால் திருமதி ஞானசக்தி சிறிதரன் திரு ரெங்கன் தேவராஜன் திரு சிறிதரன் (சுகு) திருநாவுக்கரசு திரு கருணாகரன் சிவராசா மற்றும் படிப்பகம் நிறுவனத்தின் பிரதிநிதி உட்பட பலர் கருத்துரை நிகழ்த்தினர்.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிய முன்னணியின் பொது வேட்பாளராக நின்ற தோழர் துமிந்த நாகமுவவுடனான நேர்காணல் (தமிழ் மற்றும் சிங்களம்).  ஜேவிபியின் உள்ள நடந்த அரசியல் போராட்டம் அதில் இடதுசாரிய நிலை எடுத்து போராடியதால்  தோழர் குமார் குணரத்தினத்திற்கு ஏற்ப்பட்ட நெருக்கடிகள், காட்டிக் கொடுப்புகள்  மற்றும் உடைவு குறித்த விளக்கங்களுடன், முன்னிலை சோசலிச கட்சியின் இன்றைய அரசியல்  மற்றும் இனப்பிரச்சனை தொடர்பான செயற்பாடுகள் குறித்தான ஒரு சிறு நேர்காணல் இது.

 

இடதுசாரியத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அரசியல் கிளர்ச்சியாக,  மக்களை சந்தித்து இடதுசாரிய அரசியல் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கும் நோக்கில் எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிலை சோசலிச கட்சி பங்கு பற்றுவது என முடிவெடுத்துள்ளது.

போராட்டம் பத்திரிகை "மக்கள் போராட்ட இயக்கத்தின்" வெளியீடாகும்.

"முதலாளித்துவ ஜனநாயகத்தை தோற்கடித்து உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை நிறுவுவோம்!"

"முக மாற்ற ஆட்சி மூலம் தருவதாகக் கூறிய ஜனநாயகம் எங்கே?"

இந்த பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆக்கங்கள்:

1. மூன்று போராட்டங்களும் ஒரு உண்மையும்.

2. 100 நாட்கள் முடிந்து விட்டன, குட்டிமணிகள் இன்னும் சிறையில்!

3. சாதி அடிப்படையில் எமக்குச் சமவுரிமை மறுக்கப்படுகிறது: நேர்காணல்

"இடதுசாரிய நடவடிக்கை - நெருக்கடியின் முன்னால் வர்க்கத்தின் தீர்வு" என்ற இந்த நூல் 2014 அக்டோபர் மாதத்தில் முதன் முதலாக எழுதப்பட்டு, அம்மாத இறுதியில் சிங்களத்தில் வெளியிடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கு எல்லோரும் தயாராக இருந்த நிலையில், தேர்தலை அண்மித்து இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜரோப்பிய, உலக நிதி நிறுவனங்களிடமிருந்து கிரேக்கம் பெற்ற கடனுக்கான கந்து வட்டியினை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கேடு கடந்த 30ம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கத்திற்கு மேலதிக கடன்களை வழங்கவும்; செலுத்த வேண்டடிய வட்டியை திரும்ப கொடுப்பதற்க்கான காலக்கேட்டினை நீட்டவும் மேற்கூறிய நிதி நிறுவனங்கள் பல நிபந்தனைகளை விதித்து கிரேக்க அரசுடன் கடந்த பல வாரங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது. பேச்சவர்த்தையில் எந்த வித முன்னேற்றங்களையும் வந்தடைந்திருக்கவில்லை.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இலங்கைத் தமிழ்ச்சமுகத்தின் கல்விக்கு பெரும் பங்களிப்பை நூற்று இருபத்தைந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதன் அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வாழ்வை கல்விக்காகவும், மாணவர்களிற்காகவும் அர்ப்பணித்தார்கள். உறுதியான பொதுவுடமை போராளியான கார்த்திக்கேசன் கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற பின்பு, ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக இருந்த சபாரத்தினம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் என்று அவர்களின் வரிசை மிக நீளமானது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் "படிப்பகம்" புத்தகக்கடையும், நூலகமும் யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 411ம் இலக்க கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டன. இதனை தோழர் சண்முகதாசன் அவர்களின் தலைமையின் கீழியங்கிய கம்யூனிஸ கட்சியில், யாழ் மாவட்டத்தின் முன்னணி  செயற்பாட்டாளர் ஆக இயங்கிய தோழர் இக்பால் அவர்கள் திறந்து வைத்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் யாழ் அலுவலகத்தை 30.06.2015 காலை 10 மணிக்கு யாழ் ஸ்ரான்லி வீதியில் 413 இலக்கத்தில், மகிந்த ஆட்சியில் அரச படையால் கடத்தப்பட்டு காணமல் போன குகனின் மகள் சாரங்கா  திறந்து வைத்தார். அண்ணளவாக 50 பேர் வரை இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  முன்னாள் இடதுசாரிகளும், காணமல் போனவர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இடதுசாரியத்தின் மீள்வருகையை புதிய உற்சாகத்துடன் பலரும் வரவேற்றனர். இந்த நிகழ்வையொட்டி யாழ் குடா எங்கும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சுவரொட்டிகள் ஓட்டப்பட்டு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் ஜூன் 30 பிற்பகல் 3 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியின், "இடதுசாரிய நடவடிக்கை" எனும் தமிழ் மொழி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள உணவக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இடதுசாரி கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வட பொது மக்கள் என 75 பேர்கள் அளவில் கலந்து கொண்டனர்.

இன்றைய மனித வாழ்வியலில் உழைப்பு என்பது அனைவருக்கும் முதன்மையானதல்ல, மாறாக ஒரு வர்க்கத்துக்குரிய செயலாக மாறி இருக்கின்றது. ஒரு வர்க்கத்துக்கு உழைப்பு அவசியமானதாக இருக்க, மற்றொரு வர்க்கத்துக்கு அவசியமற்றதாகின்றது. இங்கு உழைப்பவனின் உழைப்பையும், உழைப்பு மூலம் உற்பத்தி செய்த பொருளையும் திருடி வாழ்வதே, உழைக்காதவனின் செயலாக இருக்கின்றது. இதே தனிவுடமை அமைப்பின் மனித அறமாகவும் செயற்படுகின்றது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் யாழ் ஸ்ரான்லி வீதியில் முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் சரணடைந்தும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்க்கான போராட்டத்தை தோழர் லலித்துடன் சேர்ந்து முன்னெடுத்தமைக்காக மகிந்த அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தோழர் குகன் முருகானந்தனின்  மகள் சாரங்கா அலுவலகத்தை சிவப்பு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

ஜரோப்பிய ஒன்றியத்தினால் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியான 1.7 பில்லியன் யூரோ நாணயங்களை மீள கையளிக்க விதிக்கப்பட்ட காலக்கேடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. கடந்த இரு வாரங்களாக ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களிற்கும் கிரேக்க அரசுக்கும் இடையே நடந்த கடனுக்கான வட்டியினை திருப்பி கையளிப்பதற்க்கான பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி இறுக்க நிலையினை அடைந்துள்ளன.

அண்மையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் அவ் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் தொடர்பான பொதுக் கலந்துரையாடலை மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடல் 2015.06.27 ஆம் திகதி காவத்தை இ/ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மக்கள் ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளார் உட்பட சங்க செயற்குழு உறுப்பினர்கள் தலைமை வகித்த இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற அரசியலை மையப்படுத்திய பிரபல ஆசிரியர் சங்மொன்றின் அநாகரீகமான குழப்பும் நடவடிக்கைகளையும் மீறி ஆசிரிய உதவியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் சனிக்கிழமை யூலை 4ம் திகதி படிப்பகம் புத்தகக் கடை மற்றும் நூலகம் என்பன யாழ் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 இல் திறந்து வைக்கப்படவுள்ளன.

எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே!

உங்களுடைய நூல்கள் மற்றும் வெளியீடுகளை படிப்பகத்தில் விற்பனைக்கு வைக்கும் ஒழுங்குகளுக்கு எம்மை அணுகும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இன்று 28/06/2015 லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்தின் முன்பாக மனித உரிமைவாதியும், இந்திய ஆளும் அதிகாரவர்க்கத்தினரால் பழங்குடி மக்கள் மீது பல்தேசிய கம்பனிகளின் கொள்ளைக்காக நிலப்பறிப்பு, கனிமவள கொள்ளை என்பவற்றுக்காக ஏவிவிடப்பட்டுள்ள “காட்டு வேட்டை” ராணுவ நடவடிக்கை என்ற பேரில் அப்பாவி பழங்குடி மக்களை கொன்று குவிப்பதற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்திற்க்காக கடத்திச் செல்லப்பட்டு இருண்ட அறையில் தனிமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள Dr GN சாய்பாபா அவர்களை உடனடியாக விடுதலை கோரி போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE