Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தேர்தலையே அரசியலாகக் கொண்ட அரசியல் கட்சிகள், மற்றைய இன மக்களையே எமது பிரச்சனையாகக் காட்டுகின்றன. அதாவது எமது எதிரியாக காட்டுகின்றனர். இதன் மூலம் தமது இன - மத - சாதிய பிரதிநித்துவமான அரசியலை முன்வைக்கின்றனர். ஆனால் மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில், பிற இன மக்கள் எதிராக, எதிரியாகவோ இருப்பதில்லை.

தேசிய இனப் பிரச்சினை சார்ந்த எமது கொள்கை நிலைப்பாடானது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்கி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அபிவிருத்தியினை பெற்றுக் கொள்வதற்கான, மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகளை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான ஒன்றையே கொண்டு இருப்பதுடன்

மக்களின் அவலம் நிறைந்த வாழ்வுக்கான தீர்வுகளை கொள்கையாகக் கொண்டிராத கட்சிகள், கொள்கையற்ற கட்சிகளாக இருப்பதுடன், முகத்தை முன்னிறுத்தி வாக்கைக் கோருகின்றனர்.

இந்த பத்திரிகையின் உள்ளே…

1. முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்காக முன்னிலை சோசலிச கட்சிக்கு வாக்களிப்போம்!

2. தேர்தல் சாதிக்கப் போவது என்ன?

3. முகத்துக்கு வாக்களிப்பதா! கொள்கைக்கு வாக்களிப்பதா!!

4. வாக்களிக்கின்றோமா! எதற்காக?

5. மக்களின் உரிமையும், கடமையும், அரசியல் பலமும்

6. தேசிய இனப் பிரச்சினை பற்றிய எமது கொள்கை நிலைப்பாடு

யாழ் புலோலியில் மறைந்த தோழர் எம்.சி லோகநாதன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா "ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை?"

காலம்: 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி

இடம்: சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்றமன்ற சனசமூகநிலைய முன்றல்

எதிர்வருகின்ற சனிக்கிழமை (08-08-2015) அன்று முற்பகல் 11:30 மணி முதல், டென்மார்க் கொல்ஸ்ரபரோவில் தோழர் எம்.சியினை நினைவு கூருதலும், அவரது கவிதைகள் ஆக்கங்கள் நிறைந்த "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை?" நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது. தோழர் எம்.சி லோகநாதனின் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்களை இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.

இலங்கைக் குடி மக்களின் கருத்தறியாமல் சிங்கள-தமிழ் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் எழுதப்பட்ட ஒரு அரசியல் அமைப்பின் கீழ் ஜனநாயகம் என்ற போர்வையில் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறவுள்ளது. இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் அரசியல் யாப்பின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட அரச கட்டமைப்பினால் கடந்த 68 வருடங்களாக இனவாதக் கோஷங்களை முன்னிறுத்தி நடாத்தப்பட்டு வரும் 15வது தேர்தல் இதுவாகும்.

எமது அன்புக்குரிய சமூக ஆர்வலர்களே! நண்பர்களே! எழுத்தாளர்களே! வெளியீட்டாளர்களே! சமூக அமைப்புக்களே! தோழர்களே!

படிப்பகம்” புத்தகக்கடையும் நூலகமும் யூலை மாதம் 4ம் திகதி 2015 அன்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 411ம் இலக்கக் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டதனை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையின் அடுத்த பொதுத் தேர்தலையொட்டி ஆய்வாளர்கள்-அறிஞர்கள்-வல்லுனர்கள்-விமர்சகர்கள்-சமூக அக்கறையாளர்கள்-மக்கள் நலன் விரும்பிகள் என பலதரப்பட்ட செயற்பாட்டாளர்களிடமிருந்து ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேவேளை பாரம்பரிய-பரம்பரை-புதிய கட்சிகள்  பமைய-புதிய கூட்டமைப்புக்கள் யாவும் தங்கள் வழமையான ஆட்பலம்-அணிவகுப்பு-ஆரவாரங்கள் அடங்கிய விழாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளன. இதேவேளை இவர்கள் யாவரும் எதனைக் காட்டி தங்கள் பொறிக்குள் மக்களை மாட்டி வைக்கலாம் என்கிற ஒரே நோக்கத்துடன் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கியும் விட்டுள்ளனர். 

 பொதுத்தேர்தல் அண்மிக்கிறது அல்லவா?

இந்த தேர்தலில் நடைபெறப் போவது அடுத்து வரும் 05 வருடங்களில் எங்கள் வாழ்க்கையின் தலைவிதி என்ன என்பதை தீர்மானிக்கப் போகிறது.

அக்காலப்பகுதியினுள் எங்கள் பொருளாதார வாழ்க்கைக்கு நிகழப் போவது என்ன? எங்கள் அரசியல் உரிமைகளுக்கு  நடக்கப்போவது என்ன?  அதற்காக எடுக்க வேண்டிய தீர்மானங்கள்  எவை?  அந்த தீர்மானங்களுக்கு எங்களையும் இணைத்துக் கொள்வார்களா? இல்லையா? அவைகளுக்கு எதிராக, அவற்றை மாற்றியமைக்கும் உரிமை எங்களுக்கு கிடைக்குமா?  இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப் போவது பொது தேர்தலில் வெற்றி பெறும் தரப்பினரேயாகும். ஆதனால் வாக்கு கேட்கும் யாவரும் இந்த பிரச்சனைக்கான தங்களின் எண்ணப்பாடுகளை தெரிவித்தில்லை.

கிரேக்க நாட்டின் நிதி நெருக்கடியினை தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் 60 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி வழங்க உடன்பட்டுள்ளது. கிரேக்க பராளுமன்றத்தில் 251 வாக்குகளால் ஒப்புதல் பெறப்பட்ட இந்த தீர்வுத் திட்டம் கிரேக்க நாட்டின் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் எதிராகவே எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் அலெக்சியஸ் சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்திருந்தது.

தங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று மண்டை கழண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சி, கரவெட்டி, தச்சன்தோப்பு பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள்.

தேர்தல் வரும் போதெல்லாம் மக்களை அணுகுவதற்கு அரசியல்வாதிகள் புதிய புதிய யுக்திகளை கையாள்வது அவர்களது தந்துரோபயமான அணுகு முறையாகும். இன்று முன்னாள் போராளிகளை அரசியற் களத்தில் பகடைகளாக்கி தங்கள் அரசியல் வாழ்க்கையினை, அரசியற் பிழைப்பினை நகர்த்திக் கொள்ள பல அரசியற் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

குறிப்பு:  பொருளாதார அபிவிருத்தி அடையாத வறிய நாடுகள் உலக நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனையும் அதற்கான கந்து வட்டியையும் கட்ட முடியாது திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிடம் கடனை திரும்ப பெறும் முகமாக பல பரிந்துரைகளை அமுலாக்கும்படி நிதி நிறுவனங்கள் நெருக்குதலை கொடுத்த வண்ணமுள்ளன. அதாவது சமுக நலத் திட்டங்களிற்கான உதவியை குறைத்தல், ஓய்வூதிய வயதை அதிகரித்தல், சுகாதாரம் மற்றும் கல்விக்கான  நிதி ஒதுக்கீட்டை  குறைத்தல் என பலவகை நெருக்குதல்கள். உலக நிதி நிறுவனங்களின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில்  இலவச கல்வியினை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனை மக்களிற்கு விழிப்பூட்டும் முகமாக ஜனாதிபதி அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு நாடு முழுவதும் மக்களிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நிலம் எங்கும் இலங்கை அரசுகளால் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. குளங்களில், ஏரிகளில் எமது மக்களின் குருதி உறைந்து போயிருக்கிறது. கூதல் காற்றில் இலைகள் உதிர்ந்து விழுவது போல எமது வாழ்வு வீழ்ந்து கிடக்கிறது. இத்தனைக்கும் காரணமான இலங்கையின் இனவெறி அரசுகளுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூடிக் குலாவும்.

இன்று ஜீலை 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு  மகரகமவில் முன்னிலை சோசலிச கட்சி, பொதுத் தேர்தல் 2015 இன் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை தொடக்கி வைத்தது. இடதுசாரிய பலம் என்பது உண்மையான மாற்றத்திற்க்கான ஒரே மார்க்கம் என்பதனை மக்களிடம் எடுத்துச் செல்லுதலே, இத்தேர்தலில் கட்சியின் முக்கிய குறிக்கோள் என பிரச்சார செயலாளர் திரு புகுபுடு ஜெயக் கொட அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE