Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

புலிகள், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து துரத்தியதினாலும், காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து தொழுது கொண்டிருந்தவர்களை கொன்றதினாலும் கோபங் கொண்ட அல்லா தானாம் புலிகளை அழித்து விட்டார் என்று சில அறிவிலிகள் உளறுகிறார்கள். அவர்கள் இதோடு நிறுத்தியிருந்தால் நமக்குப் பிரச்சனை இல்லை. ஏனென்றால் இது நமக்கு அறிவீனம், மூடநம்பிக்கை, முட்டாள்தனமாக இருந்தாலும் மதவாதிகள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் மதம் என்ற கற்பனையை நம்புபவர்கள், எனவே தமது கற்பனைக்கதைகளுடன் காலத்தை கழிக்கட்டும் என்று விட்டு விடலாம்.

போராட்டம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்  "மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" என்ற பெயரில் இன்று புத்தகமாக - தொகுப்பாக வந்துள்ளது. இன்று (19.08.2015) வட்டுக்கோட்டையில் நடைபெற்ற காலஞ்சென்ற சிவசிங்கராசா சிவசம்பு மற்றும் அவரது துணைவியார் நாகம்மா ஆகிய இருவரினதும் முறையே இரண்டாவது, முதலாவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி "மாற்றத்துக்கான வழி திறக்கின்றது" எனும் நூல் வெளியீட்டின் போது, முதற்பிரதியினை முன்னணிப் பதிப்பகத்தின் சார்பில் தோழர் வன்னியசிங்கம் வெளியிட்டு வைக்க, திரு.இரத்தினம் ஜெயராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அரசியல் - இலக்கியம் - கலை என்று தங்களை "முற்போக்காக" காட்டிக் கொள்கின்றவர்கள் பெரும்பாலனவர்கள், தேர்தலின் போது தன் இனத்தில் இருந்து அணுகுகின்ற இனவாதத்தையே முன்தள்ளினர். இனவாதத்துக்கு எதிரான சிந்தனை முறை என்பது, தன் இனத்தைக் கடந்து அனைவரையும் மனிதனாக அடையாளப்படுத்தி அணுக வேண்டும். தமிழன் - சிங்களவன் என்ற குறுகிய இன அடையாளங்களில் இருந்து தேர்தலை அணுகுவதானது இனவாதத்தின் உள்ளடக்கமாகும். இடதுசாரிகள் மட்டும் தான் இனவாதத்துக்கு எதிராக அனைவரையும் மனிதர்களாக அடையாளப்படுத்தும் அதேவேளை தன் இனத்தை முன்னிறுத்தி தேர்தலை அணுகுவதில்லை.

இலங்கையின் பொதுத் தேர்தலின் போது ஒரு அரிய உண்மை வெளிப்பட்டது. அண்ணன் சுமந்திரன் துரோகி என்று சிலர் சொன்ன போது அவர் ஒரு நல்லவர், வல்லவர், நீதிக்காக இலவசமாக போராடுபவர் என்று வேறு சிலர் சொன்னார்கள். நடிகைகள் எனக்கு பிடித்தது லக்ஸ் சவர்க்காரமே என்று தமிழர்களிற்கு நற்செய்தி சொல்வது போல் மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் எங்களிற்கு பிடித்தவர் சுமந்திரனே என்றார்கள். படித்தவன் பொய் சொல்ல மாட்டான் ஆகவே உங்கள் பொன்னான வாக்கை அவருக்கே அள்ளி வழங்குங்கள் என்றார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் இனவாதததையும் - மக்கள் விரோத நவதாரள பொருளாதார கொள்கையைக் கொண்ட கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்றதுடன், அதன் பிரதிநிதிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

பார்க்குண்டா மாலிக்சாடா என்ற இருபத்தேழு வயது ஆப்கானிஸ்தானத்துப் பெண் இந்த வருடம் பங்குனி இருபதாம் திகதி காபுலில் வைத்து இஸ்லாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டாள். ஒரு சிறு பெண்ணை நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மதவெறி ஆண்கள் கூட்டம் அடித்துக் கொலை செய்து இஸ்லாத்தின் புனிதத்தை காப்பாற்றினார்கள். அந்த கொலைவெறியர்கள் அவளை காபூலின் தெருக்களில் இழுத்துச் சென்று அடித்தார்கள். ஒரு கூரை மீது இருந்து அவளை கீழே எறிந்தார்கள். அவள் மீது ஒரு காரை ஏற்றி நெரித்தார்கள். பின்பு ஒரு பள்ளிவாசலின் முன்பு வைத்து மறுபடியும் கற்களாலும், தடிகளாலும் அடித்தார்கள். அவளை தீ வைத்துக் கொளுத்தினார்கள். அவளின் உடல் காபுலின் நதியில் எறியப்பட்டது. இவ்வளவு கொடுமைகளும் ஆப்கானிஸ்தானத்து பொலிசாரின் கண் முன் தான் நடந்தது.

ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் ஆளும் அதிகார மேலாதிக்கவாத சக்திகளை வைத்தே இலங்கையை-இலங்கைக் குடிமக்களை-இலங்கையரைக் கட்டி ஆண்டுவந்தனர். 1920 முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்--மகாத்மா காந்தியின் கருத்துக்கள் ஆகியவற்றின் தாக்கம் இலங்கையின் வடபகுதியில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் முற்போக்கான சிந்தனை வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடைய விளைவாக பின்னாட்களில் "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தோற்றம் பெற்றது.

சீனப் பணத்தின் பெறுமதி குறைக்கப்பட்டதன் மூலம், உலக பொருளாதாரத்தில் அதிர்வை உருவாக்கி இருக்கின்றது. இது ஏன் எதற்காக என்பதும், என்ன விளைவுகளை உருவாக்கும் என்பதை புரிந்து கொள்வதன் மூலமே, உலகை எதிர்கொண்டு வாழ்வதற்காக போராட முடியும்.

இலங்கையில் இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற கட்சிகளிடமும் இருக்கின்ற அரசியல் ஒன்று தான். தமது பிழைப்பிற்க்காக தேவைப்படுகின்ற போதெல்லாம் கையில் எடுப்பது இனவாதம், மதவாதம். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மக்களை இன-மத ரீதியில் பிளவுபடுத்தியும், பொய் வாக்குறுதிகளை கூறியும், லஞ்சமாக பல பொருட்களை வழங்கியும் பாராளுமன்ற அரியணையினை கைப்பற்றுவதற்காக பகிரங்க பிராயத்தனங்கள் நடைபெறுவதனை காண்கின்றோம். இவர்கள் யாரிடமும் மக்களின் பொருளாதார பிரச்சினை முதல் தேசிய இனப்பிரச்சினை வரை தீர்வுகள் கிடையாது.

இலங்கையில் வாழும் குடிமக்களில் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு உள்ளது போல் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் சம உரிமை பெற்றுத் தருவோம் எனக் கூறி எமது தமிழ்த் தலைமைகள் அரசியல் கட்சிகள் அமைத்து ஜனநாயகப் பாதையில் அகிம்சை முறையிலும், வன்முறைப் பாதையில் ஆயுதப் போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபட்டு இறுதியில் தமிழ்ப் பேசும் மக்களைக் கட்டிய கோவணமும் இன்றி நிர்வாணமாக்கி அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணிலேயே அனாதைகளாக, அகதிகளாக, சிறைக்கைதிகளாக ஆக்கிய வரலாறே இலங்கைத் தமிழர்களின் கடந்த 67 ஆண்டு காலச் சரித்திரமாகும்.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ல் இலங்கையின் 15வது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆரவாரங்களிலும் மக்களை மயக்கும் வித்தைகளிலும் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 14அக்டோபர் 1947ல் இடம்பெற்றது. அந்நாள் முதல் இந்நாள் வரை இலங்கைக் குடிமக்கள் இனவாத முரசொலிகளை உள்வாங்கி உணர்ச்சிப் போதை ஊட்டப்பட்ட மனோநிலையில்தான் தங்கள் வாக்குகளை அளித்து வந்துள்ளனர்.

08.08.2015 டென்மார்க்கில் எம்.சியின் நினைவும் - அவனின் ”ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை" நூல் வெளியீடும் நடைபெற்றது. எங்கள் சமூகத்தை நேசித்தவன் என்பதால் - பலதரப்பட்டவர்களும் தங்கள் அனுபங்களையும் அவனின் சமூகம் சார்ந்த  செயலை முன்னிறுத்தியும் உரையாற்றினர்.

நாற்பத்தெட்டாம் ஆண்டு வெள்ளையர்களின் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது. உள்ளூர் கொள்ளையர்கள் அரங்கிற்கு வந்தனர். ஒவ்வொரு ஐந்து வருடமும் அவர்கள் மாறி மாறி ஆட்சி செய்வார்கள். வறுமையை ஒழிப்போம்; நாட்டை முன்னேற்றுவோம்; நாம் எல்லோரும் இலங்கை மக்கள், எல்லோரையும் சமமாக நடத்துவோம் என்பார்கள். அவர்கள் சொன்ன சொல் மாறாதவர்கள். வறுமையை ஒழித்தார்கள்; முன்னேற்றினார்கள்; சமமாக நடத்தினார்கள். ஆம் அவர்களின் குடும்பங்களின் வறுமையை ஏழு தலைமுறைக்கும் சேர்த்து ஒழித்தார்கள். தங்களின் தறுதலைப் பிள்ளைகளிற்கு பதவிகள் கொடுத்து முன்னேற்றினார்கள். இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை சமமாக கொள்ளையடித்தார்கள், கொலை செய்தார்கள். இந்த வையத்தில் நாமுள்ள மட்டிலும் வேற்று நினைவின்றி ஊழல் செய்வோம் என்று நாட்டை, மக்களை சுரண்டுகிறார்கள்.

நேற்று 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் யாழ். புலோலி சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்ற மன்ற சனசமூக நிலைய முன்றலில் அண்மையில் மறைந்த தோழர் எம்.சியின் நினைவுகளை பகிர்தலுடன், எமது சமூகத்தில் நிலவும் சாதி ஒடுக்குமுறை மற்றும் சமய, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் எழுதிய கவிதைகள் மற்றும் ஆக்கங்களின் தொகுப்பான ”ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை..” நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

எங்கடை பிரச்சனைகளைத் தீர்க்க, எங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம் என்பது உண்மையா? எங்கள் வாக்குகள் மூலம் தெரிவான பிரதிநிதிகள், பிரச்சனைகளைத் தீர்த்து இருக்கின்றனரா? எமது சுயமான தெரிவுகளுடன் தான் நாங்கள் வாக்கு போடுகின்றோம் என்றால், நாங்கள் பகுத்தறிவுபூர்வமாக இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

தேர்தல் முறையானது மக்களை அடக்கியாளும் ஆளும் வர்க்கத்தை தெரிவு செய்கின்றது. இலங்கையில் மக்களை இன-மத-சாதி ரீதியாக பிரிக்கின்றது. மக்கள் விரோதமே தேர்தல் முறையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கின்றது. இதற்கு மாறாக மக்கள் திரள் போராட்டம் மூலம் அரசை தூக்கியெறியும் அரசியல் நடைமுறை மூலமே, உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE