Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பிரான்சின் விமானத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம்மை ஆள்குறைப்பு செய்ய திட்டம் போட்டிருக்கும் நிர்வாகிகளை ஓட, ஓட விரட்டி சட்டையைக் கிழித்தெறிந்தார்கள். தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (Confederation general du travail, C.G.T) போன்ற தொழிற்சங்களின் தீரம் மிக்க தொழிலாளர்கள் செங்கொடிகளுடன், கோசங்கள் எழுதப்பட்ட தட்டிகளுடன் நிர்வாகிகள் என்னும் கொழுப்புப் பூனைகளை பின்னங்கால்கள் பிடரியில் பட ஓட வைத்தார்கள். உலகத்தின் முதலாவது சமத்துவப் போரை, தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியை 1848 இல் பிரெஞ்சுப் புரட்சி என்று நிகழ்த்திக் காட்டிய தொழிலாள்ர்கள் தமது போர்க்குணத்தை, இடதுசாரியத்தை மறுபடியும் ஒருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

பிரஞ்சு விமான சேவைத்துறையில் இருந்து 2900 மேற்பட்ட தொழிலாளிகளை வேலையில் இருந்து நீக்கும் அதன் அறிவிப்பை அடுத்து, அதற்கு எதிரான போராட்டங்களும் தொடங்கியது. பல்வேறு வடிவங்களில் தொடங்கிய போராட்டமும் - பேச்சுவார்த்தை என்ற பெயரில் "ஜனநாயக ரீதியானதாக" பதிலளிக்காத அதிகார முடிவுகளை திணிக்கின்ற சர்வாதிகாரத்தை முன்வைத்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள்கூலி தொடர்பான கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த நி;லையில், தொழிற்சங்கங்கள் 1000 ரூபா நாள்கூலியை முன்வைத்துப் போலித்தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். நீண்டகாலமாக முதலாளிமார் இதனை நிராகரித்தவர்கள் - இன்று கூட்டு மோசடியை முன்வைத்திருக்கின்றனர்.

கலையை ரசிக்கத் தெரிந்த மனிதன், எந்த மொழியைச் சேர்ந்த கலை என்று அதனைக்குறுக்கி ரசிப்பது கிடையாது. அப்போது மனிதம் முதன்மை பெற்று, மனிதனை மனிதன் நேசிக்க வைக்கின்றது. சமவுரிமை இயக்கம் மனிதத்தன்மை ஊடாக தமக்குள் ஒன்றுபட்டு - தமது முரண்பாடுகளை தாமே தீர்க்கும் ஜனநாயகப் பண்பாட்டை முதன்மையாகக் கொண்டு இயங்குகின்றது. இதற்கு அமைய புதிய கலைகளை அறிமுகம் செய்யவும் - படைக்கவும் முனைகின்றது. இதன் கன்னி முயற்சிகளே கலைவிழாக்கள்.

3-10-2015 அன்று டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் ஜரோப்பிய சமவுரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து வசந்தத்தை தேடுகிறோம் கலை கலாச்சார நிகழ்வு ஒன்றினை நடாத்தியிருந்தனர்.

ஜ.நாவில் எடுக்கப்பட்ட இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான முடிவுகளை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று தமிழ் நாட்டிலும், ஏகாதிபத்தியங்கள் போர்க்குற்றங்களிற்கு மகிந்தாவுக்கும் அவருடன் கூடி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் என இன்னமும் மக்களை புலி மற்றும் பிரபாகரன் பெயரால் ஏமாற்றிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியவாதிகள் ஜ.நா முன்றலிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை அரசின் ஆதரவுடன் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் ஒன்று நேற்றைய தினம் (01/10/2015) நிறைவேற்றப்பட்டுள்ளது.

பன்நாட்டு உற்பத்தியாகும் பொருட்கள் பற்றிய பொது உளவியலானது, நம்பிக்கைகள் மற்றும் பிரமிப்புகளால் கட்டமைக்கப்பட்டது. மனித அறிவை மலடாக்கும், அதன் சொந்த விளம்பரங்களாலானது. இதற்கு வெளியில் பயன்படுத்தும் பொருள் பற்றிய, அறிவு மனிதனுக்கு இருப்பதில்லை. இந்தப் பின்னணியில் பன்நாட்டு உற்பத்திகளின் சந்தைத் தரத்தை நேர்மையானதாக நம்பும் கண்மூடித்தனமாக வாழ்க்கையையும் - தர்க்கவியலையும் கொண்ட உலகமாக உலகம் குறுகி இருக்கின்றது. இந்தப் போலியான வாழ்க்கை பிரமிப்புகளையே, வோக்ஸ்வாகன் வாகனம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கி தகர்த்து இருக்கின்றது. சுற்றுச்சூழல் சார்ந்த தன்னுடைய தரக்கட்டுப்பாட்டையும் - அனுமதிக்கப்பட்ட பொதுத் தரக்கட்டுப்பாட்டையும் 40 மடங்கு குறைத்துக் காட்டும் வண்ணம் மாபெரும் மோசடிகளை செய்ததன் மூலம், 11 மில்லியன் (1,1 கோடி) வாகனங்களை உலகளவில் விற்று கோடிகோடியாக வோக்ஸ்வாகன் சுருட்டி இருக்கின்றது.

ஜெனிவாவில் வைத்து ஒரு திருவாசகம் சொல்லப்பட்டிருக்கிறது, "நாங்கள் என்ன மாடு மேய்த்து விட்டா வந்தோம்". தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்கு வந்த போது ஜெனிவா நகரத் தெருவில் வைத்து தான் வணக்கம் சொல்லியபோது தனக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதால் வெகுண்டெழுந்த ஒரு அறிவாளியின் அறிக்கை இது. சுமந்திரன் வணக்கம் சொல்லாமல் ஒரு தனிமனிதனை அவமதித்தார் என்றால் இந்த அறிவுக்கொழுந்து உழைக்கும் மக்கள் எல்லோரையும் தனது மேட்டுக்குடித்தனத்திலும், சாதிவெறியிலும் அவமதிக்கிறது.

வசந்தத்தை தேடிச் செல்வோம்!

இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு  அழிக்கின்றது  என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும்  நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும்  உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.

ஐ.நாவையும், அமெரிக்காவையும் நம்பு என்று கூறியதன் மூலம் காட்டிக்கொடுத்து சரணடைந்த "தமிழ்தேசியம்"; இன்று மக்களுக்கு தீர்வாக அடிமைத்தனத்தையே வாழ்வாக்கி இருக்கின்றது. ஐ.நா பரிந்துரையான "கலப்பு நீதிமன்றம்" என்ற "தமிழ்தேசியத்துக்கு" இனிப்பாக இருந்த அரைகுறை பகுதியையும், அமெரிக்கா தன் நலனுக்கு ஏற்ப வெட்டி நீக்கி விட்ட நிலையில் - அந்தத் தீர்மானத்தை கூட்டமைப்பு அங்கீகரித்து வரவேற்றுள்ள நிலையில் -"தமிழனின் தமிழ்தேசியம்" அரசியல் ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றது.

இந்திய ரோலர்கள் வட கடலைச் சூறையாடுவதும் - இலங்கை மீனவர்கள் அதை தடுக்கக் கோரி இலங்கை கடற்படை முகாமுக்கு முன் போராடுவதும் நடக்கின்றது. கடற்படை வட கடலை சூறையாடுவதை தடுப்பது - அரசின் "நல்லாட்சிக்கு" விரோதமானதாக கருதுகின்றது. இன்று அதிகாரத்துக்கு வந்த புதிய முகமாற்ற "நல்லாட்சி" - இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கானதே. "நல்லாட்சி" என்பது மக்களின் நலன் சார்ந்ததல்ல என்பதையும் - இலங்கைக் கடலில் அத்துமீறும் நாசகார அழிவுகர ரோலர்களை தடுத்து நிறுத்துவதையும் மறுக்கின்றது.

இலங்கை அரசுகளின் வன்முறை தமிழ்மக்களின் வாழ்வை மரணத்தில் வாழ வைத்திருக்கிறது. இலங்கை அரசுகளின் வன்முறை தமிழ் மக்களைக் கொன்றது; சிறையிட்டது; அகதிகளாக அலைய விட்டது; பொருளாதாரத்தை, தொழில்களை, விவசாயத்தை மண்ணிற்குள் புதைத்தது; பல குழந்தைகளிற்கு கல்வி என்பது காணாப் பொருளாகியது. இந்த வன்முறை சூழ்ந்த வாழ்வில் இருந்து வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புதிதாக வந்த மாணவர்களை அடித்து வன்முறை செய்கிறார்கள்.

ஐ.நா பரிந்துரைகளை "தமிழ்" தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் கூட்டமைப்பு மூலம் அதிகாரம் கிடைக்காதவர்கள், தங்கள் முரண்பாட்டை அரசியலாக்க சர்வதேச விசாரணை என்று ஒற்றைக்காலில் நின்று கூவுகின்றனர். இதற்கு அப்பால் புலிகளின் யுத்தக்குற்றம் குறித்தான பகுதி ஐ.நா பரிந்துரையில் இருப்பதால், புலி புலம்பெயர் குழுக்கள், பினாமிகள், ஆதரவுகள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். ஐ.நா விசாரணை வேண்டும் என்று கூறி ஐ.நாவை நோக்கி படையெடுத்தவர்கள் - தமக்கு எதிரான பரிந்துரைகளைக் கண்டு, ஐ.நா பரிந்துரையை தமது "தமிழ்" தேசிய வெற்றியாக பறைசாற்ற முடியாது நெளிந்தபடி - புலிகளின் யுத்தக்குற்றத்துக்கு சுயவிளக்கம் அளிக்க முற்படுகின்றனர்.

இலங்கையின் வரலாற்றைப் சற்றுப் பின்னோக்கிப் (1919ல் இருந்து) பார்த்தோமானால் அன்றிலிருந்து இன்றுவரை எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியாளும் ஆதிக்க சக்திகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாதம் என்ற மூலதனத்தை முதலீடு செய்து அதனை நன்கு அபிவிருத்தி செய்து வருவது புலனாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE