Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

1. குற்றச்சாட்டு எதுவும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

2. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவராவது இருக்கும் பட்சத்தில் அவர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.

3. நீண்ட காலம் காரணமின்றி சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு "வாழ்வு" மறுக்கப்பட்டமைக்காக விடுதலையாகும் கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும்

4. அவர்கள் சமூக வாழ்வில் மீழிணைவதற்கான திட்டம் தகுதி வாய்ந்தவர்களுடைய ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படல் வேண்டும்.

நெவில் ஆனந்த (சட்டத்தரணி)

சுஜீவா தகநாயக்கா (சமூக சேவையாளர்)

முடிதா கருணாமுனி (பத்திரிகையாளர்)

குசல் பெரேரா (தொழிற் சங்கத் தலைவர்)

அன்ரன் மாக்குஸ் (சட்டத்தரணி)

சிறிநாத் பெரேரா

தொடர்புக்கு:- நெவில் ஆனந்த(சட்டத்தரணி)- 0777876811 - சுஜிவா தகநாயக்கா(சட்டத்தரணி) - 0777324062

யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இன்றுவரை, யுத்தத்திற்கு பலியாகிய மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை, இடம் பெயர்ந்தவர்களின் பிரச்சினை, சொத்துக்களை இழந்த மக்களின் பிரச்சினை போன்றவற்றை தவிர அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அடக்குமுறை இயந்திரங்கள் தொடர்ந்தும் செயற்படுவதால் ஏற்பட்ட பிரச்சினைகள் அப்படியே உள்ளன. அவற்றில் அரசியல் கைதிகளை பற்றிய பிரச்சினை முக்கியமான ஒன்று. அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத நடவடிக்கையிலும் சமீபத்தில் ஈடுபட்டனர். அதே நேரம், அரசியல் கட்சிகள், வேறு அமைப்புகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு  கோரி வருகின்றனர். சம உரிமை இயக்கம் கடந்த சில காலங்களாக இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யாது, சிலருக்கு மாத்திரம் பிணை வழங்க தாம் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் கடந்த வாரம் கூறியது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பல போராட்டங்களை தொடர்ச்சியாக சமவுரிமை முன்னெடுத்து வருகிறது. போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவது தமிழ் - சிங்கள மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

இலங்கையில் நவகாலனித்துவம் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னைய மகிந்த அரசு போல்  இன்றைய நல்லாட்சி அரசும் இந்த திட்டத்தினை முன்னெடுத்து செல்வதில் முனைப்புடன் செயலாற்றுகின்றது. இதன் ஒரு அங்கமாக மாலம்பேயில் SATIM என்னும் தனியார் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதுடன் பல சலுகைகளையும் வழங்கியுள்ளது.

"மூடு, டாஸ்மார்க்கை மூடு" என்று பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவனை கைது செய்திருக்கிறது பார்ப்பன சதிகாரி ஜெயலலிதாவின் அரசு. நம் சகோதரிகளின் தாலியறுக்கும் சாராயக்கடைகளை மூடு என்று பாடியதற்காக ஜெயலலிதாவின் அடிமைநாய்களான தமிழ்நாட்டு பொலிஸ் தோழரை கைது செய்திருக்கிறது. நம் தாய்மாரை மீளா வறுமையில் வாட்டும் மதுக்கடைகள் வேண்டாம் என்று சொன்னதற்காக அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

மீரியாபெத்த மண்சரிவு அவலம் நடந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழியான புதிய வீடு கட்டித்தரப்படும் என்பது இந்த மக்களிற்கு இன்னமும் கனவாகவே இருக்கின்றது. பழைய அரசு போய் புதிய அரசும் வந்து ஏறக்குறைய ஒருவருடமாகின்றது. புதிய அரசாங்கமும் இவர்களது சந்தாப்பணத்தில் உல்லாச வாழ்வு வாழும் அரசியல்வாதிகளும், இந்த துன்ப்பட்ட மக்கள் விடயத்தில் கண்களை இறுக மூடி இன்னமும் தூக்கமாகவே நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வியாழன் 29/10/2015 அன்று கொழும்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு அலுவலகத்திற்கு,  அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மாணவர்கள் ஊர்வலமாக சென்று தமது கல்வி உரிமைக்காக மகஜர் ஒன்றினை சமர்ப்பிக்க சென்றிருந்த வேளையில் "நல்லாட்சி" அரச படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகினர்.

மக்களால், மக்களிற்கு, மக்களின் அரசு தான் ஜனநாயக அரசு என்று படம் வரைந்து, பொருள் சொல்லி முதலாளித்துவ அரசிற்கு பொழிப்புரை சொல்வார்கள். இதிலே இந்த அரசுகள் பூமியிலே இருந்து என்றைக்குமே மறைந்து போக மாட்டா என்று ஆபிரகாம் லிங்கன் பயம் காட்டுகிறார். இவை மக்களிற்கான அரசுகள் இல்லை, முதலாளிகளிற்கான அரசுகள்; ஊழலில் ஊறிப் போன குள்ளநரிகளிற்கான அரசுகள்; மகிந்த ராஜபக்ச போன்ற கொலைகாரர்களிற்கு நாட்டின் தலைவர்கள் என்று பட்டம் கொடுக்கும் அரசுகள்; பசியிலும், பட்டினியிலும் வாழும் மக்களை ஆலையின் உருளைகளில் நசுங்கும் கரும்பு போலகசக்கிப் பிழியும் அரசுகள்.

இது தான் நியதி, இது தான் நியம்… இதற்காக எங்களை தயார்ப்படுத்த வேண்டும். இதன் வழியில் தான் நாமும் செல்ல வேண்டும். இப்படி எம் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையினையே நாங்கள் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்டோம். காலம் காலமாக இப்படிப்பட்ட வாழ்க்கை முறையினையே இந்த முதலாளித்துவ அமைப்பு மிகவும் புத்திசாதுரியமாக தங்கள் தேவைகளை மக்கள் மீது திணித்து, அதனையே மக்களின் சாதாரண வாழ்க்கை முறைமையாக பழக்கப்படுத்தி, அதனையே மக்கள் ஏற்றுக் கொள்ள வைப்பதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை பிரதான கொள்கை முறையாகும்.

இன்று (29/10/2015) கொழும்பு வாட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் நான்கு வருட கற்கை ஆண்டாக இருந்த தேசிய அதிஉயர் கணக்காளர் பட்டப்படிப்பினை (HNDA) மூன்றாண்டாக குறைத்து, இந்த கற்கை நெறியின் தராதரத்தை குறைத்துள்ளமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த மாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசானது தண்ணீர்த் தாங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தியதுடன்; கலகம் அடக்கும் விசேட படையினரை ஏவி விரட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளது.

அதி உயர் கணக்காளார் பட்டப்படிப்புக்கான நான்கு வருடக் கல்வியை; உலக வங்கியின் தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு அமைவாக, இந்த கற்கையை மகிந்த அரசு மூன்று வருடங்களாக்கியது. இப்படி மாணவர்களின் கல்வியின் தரத்தைக் குறைத்ததுடன், மேலதிகமான ஒரு வருடக் கல்வியை பணம் கொடுத்து கற்கக்கோரியது. தனியார் கல்வியை திருட்டுத்தனமாக புகுத்தி மாணவர்கள் மீதான நிர்ப்பந்தமாக மாற்றியது.

யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. யுத்தத்தை முன்னின்று நடாத்திய புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் சுதந்திரமா நடமாடுகின்றனர். இறுதி நேரத்தில் சரணடைந்த பலர் புனர்வாழ்வு முகாம்களிற்கு அனுப்பப்பட்டு விடுதலை பெற்றுள்ளனர். ஆனால் புலிகளுக்கு உதவியவர்கள், புலியாக இருக்குமோ என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள்  மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களிற்க்காக கைது செய்யப்பட்ட மலையக-முஸ்லீம் - சிங்கள  செயற்பாட்டாளர்கள் எந்த நீதியும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (29.10.2015) மீரியபெத்த மண் சரிவு அவலம் நடைபெற்று ஒரு வருடமாகிறது. மண் சரிவால் பாதிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் இன்னமும் அகதிகள் போன்ற நிலையில், நிரந்தர வாழ்விட வசதிகள் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு, கடந்த வருடம் சுவிஸ் -இலக்கிய சந்திப்பு 2014 இல் சேர்க்கப்பட்ட நிதி, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையின் அடிபடையில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்ய உபயோகிக்கப்பட்டது. 

இலங்கையில் எந்த அரசுகள் அதிகாரத்துக்கு வந்தாலும் உழைக்கும் மலையக மக்கள் துயர் தீர்ந்த பாடில்லை. கடந்த வருடம் 29 ஐப்பசி மாதம் 2014 அன்று காலை 7:30 மணியளவில் பாரிய மண்சரிவு பதுளை பிரதேசத்தில் உள்ள கொஸ்லந்த கிராமத்தை தாக்கியது. மீரியாபெத்த மண்சரிவு அவலம் எனவும் அழைக்கப்படும் இம் மண் சரிவு 200 பேருக்கு மேற்பட்டவர்களை பலி வாங்கியது. 150 வீடுகளை துவசம் செய்தது.

இன்று (28/10/15) நண்பகல் 12 மணி அளவில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதராலயத்திற்கு முன்பாக சிரியாவின் மீதான ஏகாதிபத்திய யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள மனித பேரவலத்தினை கண்டித்தும் கியூபா மீது அமெரிக்கா ஜக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த பொருளாதார தடை நீடிப்பு தீர்மானத்திற்கு எதிராகவும் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கருத்து முரண்பாடுகளும் - வேறுபட்ட அரசியல் நடைமுறைகளும் என்பது சமூக இயக்கத்தில் முரண்பாடானாதல்ல. இது கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்துடன் இருக்கும் அதேநேரம் - கட்சிக்கு வெளியில் ஜனநாயகமாக இயங்குகின்றது. இதில் இருந்து வேறுபட்டதே அவதூறுகள்.

நடைமுறையை மறுதளிக்க முடியாத, அதேநேரம் நடைமுறைக்கு எதிரான தனிநபர் கருத்தாக அரசியல் மாறுகின்ற போது, அவதூறை அரசியலாக்க முனைகின்றது.

இந்த வகையில் இனியொரு இணையம் அரசியல் வங்குரோத்தில் இறங்கி, தன் சுய கற்பனைக்கு ஏற்ப "பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுக்களுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது." என்ற, கற்பனையான அவதூறை முன்வைத்திருக்கின்றது. இப்படி அவதூறை அவர்கள் முன்வைப்பதற்கான இன்றைய அரசியல் சூழல் என்ன?

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE