Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தோழர் குமார் அவர்கள் உயிராபத்து காரணமா அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர். நல்லாட்சி புதிய அரசு நாட்டை விட்டு அரசியல் காரணங்களால் வெளியேறிய அனைவரையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இலங்கைக்கு திரும்பி வந்த தோழர் குமார் இலங்கை பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். நல்லாட்சி அரசானது தோழரது விண்ணப்பத்திற்கு பதிலளிக்காது காலத்தை கடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாடு கடத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முனைப்பாக உள்ளது.

எதிர்வரும் ஞாயிற்க்கிழமை 15ம் திகதி நவம்பர் பிற்பகல் 3 மணி முதல் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது உழைத்த “டேவிட் ஜயா” அவர்களின் நினைவுக் கூட்டம் கனடா ஸ்காபரோ நகரில் இடம்பெறவுள்ளது.

பாசிச இந்துத்துவ வாத அமைப்பான சிவசேனா, RSS அமைப்புகளின் ஆயுள்கால உறுப்பினர் மோடி எதிர்வரும் லண்டனிற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்க்கொள்ளவுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் முஸ்லீம் கலவரத்தை திட்டமிட்டு நடாத்தி 2000 மேற்பட்ட அப்பாவி முஸ்லீம் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்களை கொன்றொழித்த நரேந்திர மோடி இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் 2015 மாசி மாதம் குமார் குணரத்தினம் அவர்கள் தனக்கும், தன்னை போன்று அரசியல் காரணங்களிற்க்காக உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவருக்கும் மீள குடியுரிமை வழங்க வேண்டியதற்க்கான காரணங்களை முன்வைத்து வெளியிட்ட ஊடக அறிக்கையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.

தன் தமிழ்மக்கள் கொலை கண்டு எழுந்த துயரத்தில், அவர்களை துடிக்க துடிக்க கொன்ற கொலைகாரர்களின் மீது பொங்கிய கோபத்தில் பிரபாகரன் என்ற ஒரு மனிதன் நாராயணன் என்னும் இழிபிறவிக்கு செருப்பால் அடித்து தன் வஞ்சம் தீர்த்தான். ஜோர்ஜ் புஷ் என்னும் கொலைகாரனிற்கு ஈராக்கிய பத்திரிகையாளன் செருப்பால் அடித்து மரணித்த தன் ஈராக்கிய மக்களிற்கு மரியாதை செய்ததைப் போல பிரபாகரன் ஈழத்து மண்ணில் புதையுண்ட தன் மக்களிற்கு என்றும் உம் பகைவரை மன்னிக்க மாட்டோம் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார்.

சிறையில் உள்ள கைதிகளை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்க மறுப்பதும், அவர்கள் அனைவரினதும் விடுதலை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுப்பதனை மறுப்பதும்; மக்களுக்கு செய்யும் துரோக அரசியலாகும். மைத்திரி-ரணிலுடன் இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பு முதல் புலம்பெயர் பினாமி அமைப்புகள் வரை மேற்குறித்த அரசியலை தான் இன்று செய்கின்றனர். சிறையில் அடைத்து வைக்கபபட்டுள்ள விசாரணைக் கைதிகள் முதல் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களே. இந்த அவசாரகாலச் சட்டத்தை நீக்கக்கோரிப் போராடாமல், கைதிகளின் விடுதலை பற்றி பொதுவாக பேசுகின்றவர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகளே.

நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றின் இடையேயுள்ள இருள்- பிரமிள்

ஈழப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவிற்கு வந்த ஈழத் தமிழர்களை இந்திய அரசும், தமிழக அரசும் எவ்வாறு நடத்தி வந்துள்ளன என்பன பற்றிய விபரங்களை உள்ளடக்கிய சமீபத்தில் வெளிவந்த இரண்டு நூல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்று (06.11.15) மதியம் 1.00 மணியளவில் லண்டனில் உள்ள இலங்கை தூதரலாயத்திற்கு முன்பாக தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோசங்கள் முழங்கப்பட்டன.

சமவுரிமை இயக்கத்தினரால் நேற்று மாலை 3:30 மணியளவில் யாழ் நூலகத்தில் அமைந்துள்ள உணவுச்சாலை கேட்போர் கூடத்தில்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கம் இடம்பெற்றது.

சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சந்திரகுமார் கபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி நிவாஸ், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சமவுரிமை இயக்க செயற்பாட்டாளர்கள் யூட் சில்வா புள்ளே, தர்மலிங்கம் கிருபாகரன், பூபாலபிள்ளை சந்திரகுமரன் உட்பட அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்!, அவரின் சிவில் உரிமைகளை அங்கீகரி! ஆகிய கோசங்களை முன்வைத்து தற்சமயம் கொழும்பு கோட்டை புகையிரத நியைலயம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

நேற்றைய முன்தினம் (4/11/2015) தோழர் குமார் குணரட்னம் அவர்கள் சுகயீனமுற்றிருந்த தாயாரை பார்க்க சென்றிருந்த வேளையில் கோகாலை பொலீசாரால் கைது செய்யப்படட்டார். அவரை நாடு கடத்தும் முகமாகவே இந்த கைது நடவடிக்கையினை இலங்கை அரசு மேற்க்கொண்டிருந்தது. தோழர் குமார் அவர்கள் உயிராபத்து காரணமா அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர். நல்லாட்சி புதிய அரசு நாட்டை விட்டு அரசியல் காரணங்களால் வெளியேறிய அனைவரையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் இலங்கைக்கு திரும்பி வந்த தோழர் குமார் இலங்கை பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்.

 

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்! அவரின் சிவில் உரிமைகளை அங்கீகரி!! ஆகியவற்றை முன்னிறுத்தி நாளை 05.11.2015 அன்று பகல் 3:30 மணிக்கு, கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்திருக்கின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று கேகாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நோய் வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்க்காக கேகாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த வேளையிலேயே  தோழர் குமார் குணரத்தினம் கைது செய்யப்பட்டார்.

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமவுரிமை இயக்கமானது நாடுமுழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் அரசியல் கைதிகைளின் விடுதலை பற்றிய கோரிக்கைகளை முன்வைக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.

சம உரிமை இயக்கம்

அரசியல் கைதிகள் விடுதலைக்கான கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள்

யாழ்ப்பாணம்

2015 நவம்பர் 01

அன்பார்ந்த சகோதரர்களே,

நான் ஒரு இலங்கையின் முன்னாள் சிறைக் கைதி. முதல் தடவை 1977ல் அநுராதபுரச் சிறையில் 10 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்துள்ளேன். பிணையில் வெளிவந்த என் மீது அப்போது நாட்டில் அமுலில் இருந்த சட்டங்களின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின் வழக்கு தள்ளுபடியானது.

இரண்டாவது தடவை 1982ல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம், பனாகொட இராணுவ முகாம், வெலிக்கடைச் சிறை, மட்டக்களப்புச் சிறை யாவற்றையும் தரிசித்துள்ளேன்.

மைத்திரி - ரணில் அரசின் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களால் நடந்த வண்ணமுள்ளன. இதற்கு முக்கிய காரணிகளின் ஒன்று கல்வியை தனியார் மயப்படுத்துவதாகும். கடந்த வாரம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது பொலிஸார் வழிமறித்துத் தாக்கிய கொடூரச் சம்பவம் "நல்லாட்சியின்" உண்மை முகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.  

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE