Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அண்மையில் வடகிழக்கில் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, ஹர்த்தால் நடந்தப்பட்டது. இந்தக் ஹர்த்தாலானது அரசுக்கு எதிராகப் போராடக்கூடிய புதிய மனநிலையை உருவாக்கியதைத் தாண்டி - கைதிகள் மீதான உண்மையான அக்கறையுடனோ, அந்த உணர்வுடனோ முன்னெடுக்கப்படவில்லை. மாறாக கூட்டமைப்பில் தமக்கான ஒரு இடத்தைக் கோரி நிற்கின்ற தரப்புகளே - கூட்டமைப்புக்கு எதிரான ஹர்த்தாலை கைதிகளின் பெயரில் நடத்தினர். இந்தப் பின்னணியில்

கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக கடந்த வெள்ளி 13/11/2015 முதல் நடைபெற்று வருகின்ற சத்தியாகக்கிரக போராட்டமானது பொதுமக்களிற்கும் புகையிர பயணிகளிற்கும் அசௌகரியத்தை உண்டு பண்ணுவதா தெரிவித்து கொழும்பு பொலீசாரால் வழக்கு ஒன்று நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குமார் குணரத்தினத்தின் சகோதரி உட்பட முன்னிலை சோசலிக கட்சி உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிய முன்னணியில் உள்ள அமைப்புகளின் தோழர்கள் என 18 பேர்களை நீதிமன்றில் அராஜாக அழைப்பானை பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னணியில் மைத்திரி - ரணில் அரசே செயற்பட்டது.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் கேகாலையில் வைத்து அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் (18) அவரது வழக்கு கேகாலை நீரிமன்றில் விசாரணைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது குமார் குணரத்தினம் சார்பாக  ஆஜரான சட்டத்தரணிகள் குழுவில் நுவான் போபகே, உதுல் பிரேமசந்திர, அஜித் குமார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த நவம்பர் 4ம் திகதி தோழர் குமார் குணரத்தினம் அவரது தாயாரின் வீட்டில் வைத்து கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நவம்பர் 18 ம் திகதி வரை  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருத்தமை என்ற விடயத்தை முன்வைத்து அவரை நாடுகடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அது குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் இது விடயத்தில் மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்தக் கடிதம் உங்கள் கைக்கு கிடைக்கும்போது மேற்படி நிலைமைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் கைதுசெய்யப்பட்ட கையோடு தோன்றிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும், இந்தப் பிரச்சினையின் வரலாறு சம்பந்தமாகவும் ஒரு விளக்கத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

குமார் குணரத்தினத்தை இலங்கை குடிமகனாக ஏற்று அவரை உடனடியாக விடுதலை செய்து, அவரின் அரசியல் செய்யும் உரிமையினை நிலைநாட்டக்கோரி கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்பாக கடந்த வெள்ளி 13/11/2015 முதல் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்று வருகின்றது.  புகையிரத நிலையத்திற்கு முன்னால் மக்களிற்கு அசௌகரியம் மற்றும் ஊறுவிளைவிப்பதாக ஏற்படுத்துவதாக கூறி பொலீசார் சார்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம் (போலீசார் வழக்கு எண் B 3329/2015)  கொழும்பு கோட்டை நீதிபதி சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்கள் என 18 பேரை நாளை நீதிமன்றில் அஜாராகுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிய முன்னணி உறுப்பினரான குமார் குணரத்தினத்தை 2012 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் திகதி கைது செய்வதற்கு; இன்றைய ஜே.வி.பி தலைவரான அநுரா குமார திஸநாயக்காவிற்கு அவசியம் இருந்ததாகவும், அதற்க்காக குமாரின் நடமாட்டங்கள் மற்றும் தங்குமிடங்கள் குறித்து தன்னிடம் தகவல்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

நாம், கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலைநிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை (ஜப்பசி 2015)  வெளிவந்து விட்டது. இந்த பத்திரிக்கையின் உள்ளே....

1. ஆளும் குடும்பத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் உடன்படிக்கை

2. அரசியல் கைதிகளை விடுதலை செய்! - சம உரிமை இயக்கம் கொழும்பில் போராட்டம்

3. அரசியல் கைதிகளின் விடுதலையும், கூட்டமைப்பு - மைத்திரி-ரணில் அரசின் வஞ்சகமும்

ரிசானா என்ற ஏழை இஸ்லாமிய மதச்சட்டங்களின் படி கொலை செய்யப்பட்டாள். தமிழைத் தவிர வேறுமொழி தெரியாத அவளிற்கு மொழிபெயர்ப்பாளர் சவுதி அரசினால் கொடுக்கப்படவில்லை. அவளிற்காக வாதாட வழக்கறிஞர் வைக்கப்படவில்லை. பதினேழு வயது சிறுமி அவள் என்று கதறியதையும் அவர்கள் தங்கள் காதில் விழுத்தவில்லை. அவளின் மரணத்தை அவளின் பெற்றோருக்கு சொல்லவேண்டும் என்ற சிறு தார்மீகம் கூட அந்த மதவெறி பிடித்த கும்பலிற்கு இருக்கவில்லை. அவளின் தாய், தந்தையர் ஊடகங்களில் பார்த்துத் தான் தங்கள் சின்னமகள் தங்களை விட்டு போய்விட்டாள் என்பதை அறிந்து கொண்டனர். அவளின் உடலையாவது தங்களிடம் கொடுத்து விடுங்கள் என்ற அந்த ஏழைகளின் கண்ணீர் பாலைவனத்து பாவிகளின் பாறைமனத்தை சிறிது கூடக் கரைக்கவில்லை.

மதிப்புக்குரிய மத குருமார்களே,

அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே,

தோழரே, தோழியரே.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக செயற்படும் இந்த இடைவிடாத சத்தியாக்கிரக எதிர்ப்பின் நோக்கம், தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதுதான். தோழர் குமார் குணரத்தினம் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அது மாத்திரமல்ல, அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரியும், அவரின் அடிபடைமனித உரிமைகளை கோரியும் தொடர்ச்சியான போராட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது.

பாரிஸில் கடந்த இரவு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலானது காரணகாரியமற்ற  எதனுடனும் தொடபற்ற, அடிப்படைவாதத்தின் தன்னெழுச்சி சுயவடிமல்ல. மாறாக ஒரு நாணயத்தின் இருபக்கங்களேயான மத அடிப்படைவாதத்தினதும் ஏகாதிபத்தியவாதத்தினதும் பொது விளைவாகும். இவ் இரண்டும் பயங்கரவாதத்தைச் சார்ந்து இயங்குகின்றன. அதாவது தனிச்சொத்துரிமையை அடிப்படையாக் கொண்ட தத்தம் பொருளாதாரக் கொள்கையினை முன்னெடுக்கும் அதன் அரசியல் நடைமுறை வடிவம் தான் பயங்கரவாதமாகும். 

2012 இல் குமார் மற்றும் திமுது ஆட்டிக்கல கடத்தப்பட்டு காணமல் போன நிலையில் அவுஸ்திரெலியாவின் தலையீட்டை அடுத்து கடத்தல் நாடகம் அம்பலமானது. குமார் நாடு கடத்தப்பட்ட அதேநேரம், திமுது ஆட்டிக்கல வீதி ஒன்றில் வைத்து விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின் பத்திரிகையாளரைச் சந்தித்த திமுது ஆட்டிக்கல வழங்கி அன்றைய பேட்டியானது, கோத்தபாய - ஜே.வி.பியின் கூட்டு கொலைகார கிரிமினல் தனத்தை அன்று அம்பலமாக்கியது.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்தும் நடவடிக்கையினை எதிர்த்து, அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி; இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக மௌனப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்று 12/11/2015  பாரிசில் உள்ள இலங்கை தூதராலயத்தின் முன்பாக பிற்பகல் 3 மணி முதல் முன்னிலை சோசலிச கட்சி பிரான்ஸ்  கிளையால் குமார் குணரத்தினத்தினதும், அரசியல் கைதிகளினதும் விடுதலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என கணிசமானோர் கலந்து கொண்டனர்.

இன்று 11/11/2015 செவ்வாய் கேகாலை நகரத்தில்; தோழர் குமார் குணரத்தினத்தை உடனடியா விடுதலை செய்யக்கோரியும், அவரது அரசியல் உரிமையினை அங்கீகரிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கு பற்றி குமாரின் விடுதலைக்காகவும், அவரின் அரசியல் செய்யும் உரிமைக்காகவும் குரல் கொடுத்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE