Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இற்றைக்கு 11 மாதங்களுக்கு முன்பு ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்கப்படும்போது எமது நாட்டில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் காணாமல் போயிருந்தனர். தமது பிள்ளை- அல்லது கணவர்- அல்லது மனைவி, தாய், தந்தை பற்றிய தகவல்களைத் தேடி இராணுவ முகாம்களுக்கு அலைந்து திரிந்து கதறியழும் மனிதர்களின், பெண்களின் கண்ணீரால் இந்த வடக்கு தீபகற்பம் நிரைந்து வழியுமளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

தேடிச்சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு கிடைத்த பதில்
"அப்படி ஒருவரை நாங்கள் கைது செய்யவில்லை"  என்பதுதான்.

1989 ஜேவிபி அழித்தொழிப்பிற்கு பின்னர் ஜேவிபியை மறுபடியும் கட்டியமைத்தவர்களில் ஒருவரும், குமார் குணரத்தினத்தின் துணைவியாரும் ஆன "சம்பா சோமரத்ன" அவர்கள் நாட்டு மக்களிற்கு எழுதிய பகிரங்க கடிதம் இது.

மௌனம் பிற்போக்குவாதிகளுக்கே சேவை செய்கிறது. எனவே, மௌனத்தை கலைக்கும் வேளை வந்து விட்டது வாய் சவாடல்களுக்கும், கயிறிழுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை திறந்துவிட வேண்டும். இறுதி முடிவு மக்களிடமே உள்ளது.

இன்று அதிகாரமும், அகங்காரமும் தலைக்கேறி; சிறு கட்சிகள் தமக்கு சவாலாக இல்லையென வாய்ச்சவாடல் விடும் ஜேவிபியை பார்த்து இலங்கை இடதுசாரிய வரலாற்றை மீண்டும் கற்க வாருங்களென அழைப்பு விடுக்க வேண்டியுள்ளது. 60களில் ஜாம்பாவான்களாக இருந்த பழைய இடதுசாரியத்தின் முன்னால், சேறு பூசல்களையும் அவதூறுகளையும் தோற்கடித்து வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிராக, இதேபோன்று சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் ரோஹன விஜேவீர ஜேவிபியை உருவாக்கினார். சரியான வர்க்க அரசியலை கட்சியின் அரசியலாக தேர்ந்தெடுத்தார். பாட்டாளிகள் தமது உரிமைகளை வெல்வதற்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதென்பதையும், உரிமைகளை வெள்ளித்  தட்டில் வைத்து முதலாளிகள் தரமாட்டார்கள் என்பதையும் வர்க்கத்திற்கு உணர்த்தினார். வர்க்க ஒத்துழைப்பு மற்றும் மறுசீரமைப்புவாதம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு அழிவைத் தரக்கூடிய, எதிரிக்கு சேவை செய்பவையாகும் என துணிந்து அச்சமின்றி வர்க்கத்தை அறிவுறுத்தியமையால்தான், 80களில் நடந்த கொடூர அடக்குமுறையின் முன்னால் கூட கட்சியால் தளராது செயற்பட முடிந்தது.

“காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு”

வட-கிழக்கு உட்பட 5000 இக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு, அல்லது திட்டமிட்ட முறையில் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, வைகாசி 2009 இல் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களின் இரத்தம் ஆறாய் ஓட, கூக்குரல்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு என்ன நடந்ததென்று அரசைத் தவிர ஒருவருக்கும் தெரியாது. இன்றுவரை. தற்போது எவரும் காணாமற் போகச் செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோர் பற்றி கதைப்பதும் இல்லை. இவர்களின் குடும்பங்களின் நிலை பற்றி அக்கறை கொள்வதுமில்லை. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாம் தான் எனக் கூறிக் கொள்வோர், மைத்திரி-ரணில் அரசைக் காக்கும் விதத்தில் கள்ள மௌனம் காக்கின்றனர்.

அமைப்பு ரீதியானதும் - சட்ட ரீதியாகவும் செயற்படும் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிரான அடக்குமுறை (பயங்கரவாதம்) வடிவம் மூலமும் இயங்குகின்றது. சுரண்டலை நடத்துவதில் சுரண்டும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக வெடிக்கும் போது, அது வெளிப்படும் வடிவங்களில் பயங்கரவாதம் ஒரு வடிவமாகும்.

கடந்த 13 நவம்பர் முதல் குமார் குணரத்தினத்தை நாடு கடத்த எடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத குருமார்களே, அன்புத் தாய்மார்களே, தந்தையரே, தோழரே, தோழியரே!

சட்டத்தைப் பயன்படுத்தி தோழர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையையும், அரசியல் உரிமையையும் பறிப்பதற்கான முயற்சியில் இன்றைய கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் பிறந்து வளர்ந்த, கல்விகற்ற, அரசியலில் ஈடுபட்ட தோழர் குமார் குணரத்தினத்திற்கு அவர்கள் தரும் பதில்தான் "நீ ஒரு அவுஸ்திரேலிய குடிமகன், விசா இன்றி தங்கியிருப்பவன்; எனவே, நீ நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்பது. அவரை நாடுகடத்த எத்தனிப்பது அவரை மட்டும் பாதிக்கக்கூடிய விடயமல்ல. அதனூடு எதிர்காலத்தில் இந்நாட்டுத் தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள், மீனவர் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர் தலைவர்கள் போன்றோர் மீதான எதிர்கால சவாலின் அறிகுறிகள் தென்படுகின்றன.

இன்று பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மக்களை ஏமாற்றிய வரவு செலவு திட்டத்திற்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி நடாத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உரையாற்றிய துமிந்த நாகமுவ; இந்த தேசிய கூட்டாட்சியின் வரவு செலவு திட்டமானது உழைக்கும் மக்களையும், அரச ஊழியர்களையும் பொருளாதார ரீதியாக மேலும் வறுமையில் வீழ்த்தும் ஒன்றாக இருப்பதுடன்; சர்வதேச கம்பனிகளிற்கும், உள்நாட்டு தரகு கம்பனிகளிற்கும் பல சலுகைகளை வழங்கியிருப்பதனை சுட்டிக்காட்டியதுடன்;  கல்வி, விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளிற்கு எந்த நன்மைகளையும் வழங்கவில்லை என கண்டனத்தை தெரிவித்திருந்தார். போராட்டத்தில் பின்வரும் கோசங்கள் முழங்கப்பட்டன.

நாம் இன்றைய எமது வாழ்க்கையினை நகர்த்துவதற்கு ஒவ்வொரு நிமிடமும் போராடியே ஆகவேண்டும் என்பது எமது வாழ்க்கையின் நியதியாக மாற்றப்பட்டுவிட்டது. வாய் திறந்து பேசாமல், நீதி கேட்டுப் போராடாமல் வாழவே முடியாது என்ற நிலமை உலகிலே நிலை கொண்டுவிட்டது. எனக்கு என்ன, நான் எனது பாட்டில் அமைதியா இருந்துவிடுவோம் என் இருப்போமாயின், பக்கத்து வீட்டுக்காரனின் அதே பிரச்சனை நாளை எனது வீட்டின் கதவைத் தட்டும். வேலை, வதிவிடம், கல்வி, மருத்துவம், பொருளாதாரம்…, என நாளாந்த வாழ்க்கையினை கொண்டு செலுத்த நாம் சந்திக்கும் கஷ்ரங்களும் துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இது விதியல்ல.., கடவுளின் தண்டனையுமல்ல.

அமரர் டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அமரர் சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள்

(எஸ்.ஏ.டேவிட்) டேவிட் ஐயா அவர்கள்.

இவர் ஒரு அமைதியான காந்தியவாதி, மென் சொல் பேசுபவர், மற்றையோர்களைக் குறைபேசத் தெரியாதவர். எந்த வேலையைப் பொறுப்பெடுத்தாலும் அதனைச் செவ்வனே நிறைவேற்றி விடுவார். 1973 இல் இருந்து 1982 வரை அவருடன் நெருக்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நினைவுகளை மீட்க வேண்டுமேயாயிருந்தால் டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்களைப் பற்றிய நினைவுகளை மீட்காமல் இவரது பொது வாழ்வு பற்றிப் பேச முடியாது.

இன்று பேராதெனிய பல்கலக்கழக வளாகத்திலிருந்து இலவசக் கல்வி உரிமையினை வலியுறுத்தி பிரச்சாரா நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக அனைத்து பல்கலக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் மாபெரும் பாதயாத்திரை ஒன்று இன்று காலை புறப்பட்டு கொழும்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த பாதயாத்திரை எதிர்வரும் 27ம் திகதி கொழும்பை சென்றடையவுள்ளது. இந்த பாதயாத்திரையின் பிரதான நோக்கமாக மக்கள், மாணவர்களை நவதாராளவாத கல்விக் கொள்ளையான இலவசக்கல்வியினை பறிக்கும் கொள்கைக்கு எதிராக விளிப்பூட்டுவதே. கல்வியை விற்பனை பண்டமாக்கும் நவதாராளவாத கொள்கை காரணமாக  தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக என அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமை இன-மத வேறுபாடு இன்றி பறிபோகவுள்ளது.

மைத்திரி - ரணில் தேசிய கூட்டரசாங்கம் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை கடந்த வாராம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பொதுவில் இந்த வரவு செலவுத் திட்டமானது; உழைக்கும் மக்களிற்கும், அரச ஊழியர்களிற்கும், பொது மக்களிற்கும் எந்தவித நன்மையினையும் கொண்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தவித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இதன் உள்ளடக்கம் உழைக்கும் மக்களையும், பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட அனைவரையும் மேலும் மேலும் வறுமையில் வீழ்த்தும் ஒன்றாகும்.

இன்றைய பத்திரிகைகளில் வந்த செய்தியின்படி, சுமார் 2,000 அளவிலான வெளிநாட்டில் வாழும் ஸ்ரீலங்காவாசிகளுக்கு இரட்டைக் குடியுரிமை சான்றிதழ்கள் 17 நவம்பர் 2015ல் அலரிமாளிகையில் நடந்த ஒரு வைபவத்தில் வைத்து அதி மேன்மைதங்கிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பெருமைகொள்ளும் பவித்திரமும் ஆடம்பரமுமான இந்த விழாவில் பிரதமர் உட்பட உள்ளுர் பிரமுகர்கள் பலரைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டத்தினர் வெளிப்படையாக கலந்து சிறப்பித்தார்கள். இருந்தபோதிலும் இந்த குறிப்பிட்ட காட்சியில் சில முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

இலங்கை அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இரு வேறு அரசியல் போக்குகளை கொண்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெரு முதலாளிகளை, நில உடமையாளர்களை தனது அடித்தளமாக கொண்டிருக்கிறது. அந்நிய முதலாளிகளிற்கு நாட்டின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு அது என்றுமே கதவைத் திறந்து வைத்திருக்கிறது. முதலாளிகள் தடையின்றி வேகமாக கொள்ளைலாபம் அடிப்பதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கையின் அரசியல் அமைப்பையே மாற்றினார். பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு அரசியல் அமைப்பை மாற்றினார்.

இன்று 20-11-2015,  பலாங்கொடை நகரில் சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சத்தியாகக்கிரக போராட்டம் நாள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.  பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

"காந்தீயம்" ஸ்தாபனத்தின் தலைவர் S.A. டேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம் கார்த்திகை மாதம் 15, 2015 கனடாவில் இடம் பெற்ற போது பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை

"காந்தீயம்" பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனமாக 1976 இல் ஆரம்பித்த இவ் அமைப்பு 1974 இல் தொடங்கியது பற்றி இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்றிருக்கும்; பாக்கியநாதன் அவர் விரிவாக எடுத்துக் கூறுவார் என நம்புகிறேன். நான் காந்தீயத்தில் பணியாற்றிய அப்பொழுது தனாதிகாரியாக இருந்த நல்லதம்பி ஜயா மூலம் சென்றேன். டேவிட் ஜயாவை 1979 அல் இருந்து அவர் இறக்கும் வரை அறிவேன். டேவிட் ஜயாவின் அறிவாற்றலுக்கு அவரே நிகர். டேவிட் ஜயா தலைவராகவும், Dr.இராஜசுந்தரம் செயலாளராகவும், தனாதிகாரியாக நல்லதம்பி ஜயாவும் காந்தீயம் அமைப்பில் பணியாற்றினார்கள். இவர்களுடன் சந்ததியார் தொண்டர்களை இணைத்து புணரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் தொண்டர்களுடன் தொண்டனாக அவரும் பணியாற்றினார்.

காந்திய இயக்கத்தின் தாபகரும் நீண்டகாலப் போராளியுமான  டேவிட் ஐயாவின் நினைவு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (15.11.15) கனடாவில் ரொறன்ரோ நண்பர்களால் நடாத்தப்பட்டது. அன் நிகழ்வில் டேவிட் ஐயாவுடன் இணைந்து செயற்பட்ட பிரதான செயற்பாட்டர்களில் ஒருரான முருகேசு பாக்கியநாதன் அவரகளும், காந்திய இயக்கத்தில் தொண்டராகப் பணிபுரிந்த உஷா அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் ஐயாவும்; டேவிற் ஐயாவுடனான தமது நீண்ட கால அனுபவங்களைப் பற்றிய நினைவுரை ஆற்றினார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE