Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

10.12.2015 வியாழக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மாத்தளை, எல்கடுவ, செம்புவத்தை தோட்டத் தொழிலாளர்கள் ஜந்து டிவிசன் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு தோட்ட வீதியை மறித்து ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதிகளில் இன அடிப்படையில் அரசியல்வாதிகள் செயற்படத் தொடங்கிய போது இனவாதம் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என உணர்ந்த - மக்களை நேசித்த பல அறிவாளர்கள் தெற்கிலும் வடக்கிலும் இனவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய தீவிரமாகச் செயற்பட்டார்கள். அந்த செயற்பாடுகளை வடக்கில் 'யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தொண்டர்களும் தெற்கில் இடதுசாரிச் தொண்டர்களும் இணைந்து நின்று முன்னெடுத்தனர்.

எம் தாய்மார் தம் புதல்வரை, புதல்வியரை தேடி தம் ஆவி சோர தரையிலே புரண்டு அழுகிறார்கள். தம் குழந்தைகள் தவழ்ந்து விளையாடிய மண்ணிலே தம் உயிர் போகட்டும் என்பது போல் தளர்ந்து விழுகிறார்கள். காணாமல் போன தம் கண்மணிகளை மறுபடி ஒரு முறையேனும் காண மாட்டோமா என்று கதறி அழுகிறார்கள். சிறகு விரித்து, வண்ணத்துப்பூச்சியாய் வலம் வர வேண்டிய நம் குழந்தைகள் தம் தாயை, தந்தையைத் தேடி தம் சின்னக்குரல்கள் சிதைய அழுகிறார்கள்.

மக்களை கொள்ளையிடும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பரந்து பட்ட அளவில் போராட்டத்தை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக நாளை 14-12-2015 மருதானை CSR நிறுவனத்தில் பத்திரிகையாளர் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த பத்திரிகையாளர் கூட்டத்தை பல தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் இணைந்து நடாத்த இருக்கின்றன.

இன்று 12-12-2015 காலை 10 மணி முதல் டென்மார்க், கொல்ஸ்ரபரோவ் நகரில் சமவுரிமை இயக்கம் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை நடாத்தியிருந்தது. இப் போராட்டமானது "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!, சகல காணாமலாக்குதல்கள் கடத்தல்கள் குறித்த தகவல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!, அனைத்து இலங்கை பிரஜைகளின் பிரஜா உரிமையினை வழங்கு!, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்!, குமார் குணரத்தினத்தை உடன் விடுதலை செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.

மனித உணர்வுகளானது முதலாளித்துவ, பண உறவுகளாக மாறிவிட்ட எதார்த்தத்தை,  "லெனின் சின்னத்தம்பி" என்ற நாவல் அற்புதமான அழகியலாக்கி இருக்கின்றது. உழைப்பைச் சுற்றிய மனித உறவுகள், முதலாளித்துவ உறவாக எமக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை, இந்த நாவல் மூலம் தரிசிக்க முடியும். எல்லா மனிதர்களும் குறைந்தது இதில் ஒருவனாகத் தன்னும் வாழ்கின்றனர் என்பதே எதார்த்தமாகும். இதுவொரு கற்பனையல்ல. வெளிப்படையான பொது எதார்த்தத்தைக் கடந்த, அது தோன்றுகின்ற சூழலுக்குரிய உள்ளார்ந்த எதார்த்தத்ததின் உட்புறத்தை இந்த நாவல் உடைத்துக் காட்டி இருப்பது இதன் சிறப்பு.

மைத்திரி - ரணில் கூட்டாட்சி அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியான; கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களிற்காக உயிராபத்தினால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் திரும்ப வந்து செயற்படலாம் என வாக்குறுதிக்கமைய, இலங்கை குடியுபிமைக்கு விண்ணப்பித்த முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு மறுமொழி ஏதும் வழங்காது, அவரை கைது செய்து தடுத்து வைத்துள்ள நல்லாட்சி அரசு,  எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைத்துள்ளது.

எதிர்வரும் சனி 12/12/2015 அன்று டென்மார்க்கிலுள்ள கொல்ஸ்ரபரோவ் நகரசபைக்கு அருகில் காலை 10 மணி முதல் சமவுரிமை இயக்கம் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களிற்கு எதிராக முன்னெடுக்க இருக்கின்றது.

“இப்போதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்!”

“இப்போதாவது காணாமலாக்கல்களை கடத்தல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!”

“அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!”

“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”

சர்வதேச மனித உரிமை நாளான இன்று 10.12.2015, சமவுரிமை இயக்கம் போராட்டமொன்றை கொழும்பில் நடாத்தியது.

கடத்தப்பட்டோர், காணமலாக்கக்பட்டோரை விடுவி!

அவர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிடு! .

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.

நாளை டிசம்பர் 10ம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கொழும்பில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களை எதிர்த்து மாபெரும்  ஆர்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பினை விடுத்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களான; கடத்தல், மற்றும் சரணடைந்து காணாமல் ஆக்கல், வன்னி யுத்தத்தில் மக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்தது முதல் பத்திரிகையாளர்கள், மனித உரிமையாளர்கள் கடத்தல், காணாமல் ஆக்கல் படுகொலைகள் என இன-மத-மொழி வேறுபாடுகள் இன்றி பல் வேறு மனித உரிமைகள் மீறப்பட்டன.

"யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தனது 6வது மாநாட்டை 1930 ஏப்ரல் 22 - 23ந் திகதிகளில் திருநெல்வேலி இந்து பயிற்சிக் கல்லூரியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. அதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீவிரமான எதிர்ப் பிரச்சாரங்களும் வீதித் தடை- கல்லெறி வீச்சுப் போன்ற வன்முறைகளும் இடம்பெற்றன. அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்த நீர் அள்ளும் வழிவகைகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன. கல்லூரி வளவுக்குள் இருந்த கிணற்றுக்குள் அழுக்குப் பொருட்கள் வீசப்பட்டன. முதலாவது நாள் மாநாடு கூச்சல்கள் குழப்பங்கள் கல் வீச்சுக்கள் மத்தியிலும் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த வன்முறைகள் காரணமாக இரண்டாவது நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் 'றிஜ்வே" மண்டபத்திற்கு மாற்றப்பட்ட போதும் அன்றிரவு கல்லுரி மண்டபத்திற்கு தீ வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மழை, வெள்ளம், காற்றுடன் கூடிய இருண்ட கால நிலை,  நீதி மன்றத் தடை யுத்தரவு, போலீசார் மற்றும் இராணுவப்  புலணாய்வாளர்களின் மிரட்டல் போன்றவரையும் மீறி தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையான குடியியல் உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் இன்று 08/12/2015 பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னிலை சோசலிசக் கட்சியும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சக இடதுசாரி கட்சிகளின் தலைமைகளுடன் இணைந்து முன்னெடுத்தது.

யாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (08) ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். 

நீரில் மூழ்கி மிதந்த சென்னை மக்களின் அவலம், இயற்கையினதும், வழமையை மீறிய மழையினது விளைவா? இப்படிக் காரணம் தேட, காட்ட முற்படுவதானது, சமூகத்தன்மையற்ற வக்கிரமாகும்;. இதன் பின் சமூகத்தன்மை எதுவும் இருப்பதில்லை.

நீரில் புதைந்துவிட்ட மனிதர்களை மீட்கும் நடவடிக்கை எதையும் எடுக்காது, நிவாரணம் எதையும் வழங்காது, கைவிட்டுவிட்ட அரச இயந்திரத்தின் பாராமுகத்தனமானது, அரசு குறித்தான கேள்வியாகி விடுகின்றது.

செல்வந்தர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் சரதியல் பாணியிலான வரவு செலவு திட்டமென இதனைக் கூறினாலும், ஜோர்ஜ சோரோஸ் பாணியிலான வரவு செலவுத் திட்டமே சமரப்பிக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திபின்போது முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

"இன்று பத்திரிகைகளை திறந்தால் நாட்டிலுள்ள பிரச்சினைகளை அறிந்துக் கொள்ள முடியும். வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பத்திரிகை கூறுகிறது. வரவு செலவு திட்டத்திற்கு நாடு முழுவது எதிர்ப்பு என இன்னொரு பத்திரிகை கூறுகிறது. நாடாளுமன்றத்தில் இருப்பது மக்கள் பிரதிநிதிகளென புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. என்றாலும் இந்த வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் கருத்துக்கும், நாடாளுமன்றத்தின் கருத்துக்குமிடையிலான இடைவெளியை பார்க்கும்போது நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென்பது நிரூபனமாகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுமென்று பார்த்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. வரவு செலவு திட்டத்திலுள்ள அழிவைத் தரக்கூடிய ஆலோசனைகளை போராடித்தான் தோற்கடிக்க வேண்டும். சில திட்டங்கள் மக்கள் போராட்டங்களால் திருப்பிவிடப்பட்டுள்ளன. என்றாலும், இந்த கொள்கை இருக்கும் வரை இந்தப் பிரச்சினையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே, நவ தாராளமய கொள்கைக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த எதிர்ப்பை வரிசைப்படுத்த வேண்டும்.

உணவிற்காக மனிதர்கள் மாட்டை உண்ட போது கொலை செய்யப்பட்டதை எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரை. அப்போது பம்மிக் கொண்டு இருந்து விட்டு இப்போது பொங்கி எழுந்து "புரட்சி" பேசும் சில முகநூல்காரர்களிற்கு சமர்ப்பணமாக இந்தக் கட்டுரை மறு, மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதிலும், குறிப்பாக குஜராத்தில் இந்து மதவெறியர்கள் மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள், உண்பவர்கள் என்னும் அடித்தட்டு, ஏழை மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். மதவெறியர்களை எதிர்த்து 06.12.2015 வெளி வந்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

எல்லா உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் கீழிலிருந்து மேலாக அடங்கும். ஒளிர்ந்து எரியும் சூரியனிடம் இருந்து பசும் தாவரங்கள் பச்சையம் பெற்று பசியாறும். பாய்ந்து துள்ளும் மான் அம்மரத்தின் பசுந்துளிர் கடித்து உயிர் வாழும். கானகத்து பெரும்புலி அம்மானை வேட்டையாடி அடித்து உண்ணும். எல்லா உயிரினங்களும் இரைகளே. வேட்டையாடும் மிருகம் இன்னொரு விலங்கினால் வேட்டையாடப்படும். இது தான் இயற்கை. பல்லுயிரும் பெருகி வாழும் காடு கனமழை பொழிய செய்யும். மாமழை போற்ற நாடு செழிக்கும். மனிதர் பசியின்றி வாழ்வார். இது தான் இயற்கையின் விதி, இயற்கை அன்னையின் கொடை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE