Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நேற்று, 27.12.2015 அன்று  மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றக்கோரிப் போராடும் மக்கள் மீது ரணில்- மைத்ரி அரசின் கைகூலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். மேற்படி குப்பை மேட்டை  அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கால வரையறை அற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில், நேற்று 27.12.2015 அன்று அப்பகுதிக்கு ஆளணியுடன் வந்திறங்கிய ஆளுங்கட்சிகளின் அடிவருடியான கொலனாவ பிரதேச சபைத் தலைவர், போராடும் மக்கள் மீது ஆயுதங்களால் தாக்குதல் நட்டதியுள்ளார். இத் தாக்குதலால் காயமடைந்த 10 இற்கும்  மேற்பட்ட போராட்டதில் ஈடுபட்ட மக்களும், இவர்களுக்காக சட்ட ரீதியாக போராடும் சட்டத்தரணி நுவான் போபகேயும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பணமும் பாரிஸ் சென்ட்டும், சென்ற் மைக்கல் சேர்ட்டும்

நாலு பேர் அறியாமல் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்

யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு

ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா.

பாட்டைக் கெடுத்ததிற்கு அவ்வையார் மன்னிக்கவும். பிள்ளையார் என்று ஒருவர் இருந்தால் அவருக்கு அவ்வைக்கிழவி சொன்னபடி பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்து கொடுத்தால் போதும். ஆனால் யாழ்ப்பாணத்து பாடசாலைகளிற்கு ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் தான் ஒரு பதினொரு வயது பச்சைக்குழந்தைக்கு பள்ளிக்கூட அனுமதி கிடைக்கும். புது வருடத்தில் தை மாதத்தில் ஆறாம் வகுப்பிற்கு போகும் ஏழைப்பிள்ளைகளிற்கு தை பிறந்தால் வழி பிறப்பதில்லை. கல்விக்கொள்ளையர்கள் காசுக்காக ஏழைகளின் எதிர்காலத்திற்கான வழிகளை அடைத்து மூடுவதுதான் இலங்கையில் நடக்கிறது. அந்தச் சிறுவனோ, சிறுமியோ ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசு தேர்வில் நல்ல புள்ளிகள் பெற்றாலும் பணமில்லாவிட்டால் பாடசாலைக் கதவுகள் திறவாது.

குமார் குணரத்தினத்தின் பிரஜா உரிமையினை வழங்கி,  அவரை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியான சத்தியாகக்கிரக போராட்டத்தினை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக முன்னிலை சோசலிசக் கட்சியினர் நடாத்தி வருகின்றனர்.  இந்த தொடர்ச்சியான சத்தியாககிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தினர்கள், உறவினர்கள், குமாரின் பல்கலைக்கழக நண்பர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என இன, மொழி வேறுபாடுகளை கடந்து எல்லோரும் தொடர்ச்சியாக இதில் பங்கு பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தேசத்தின் முதன்மையான தமிழ்ப்பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வரும் வீரகேசரி நாளிதழின் வாலான மித்திரன் தொடங்கி யாழ்ப்பாணத்தின் "பண்பாட்டை" காப்பாற்ற அவதாரம் எடுத்திருப்பதாக ஊளையிடும் இந்தப் பொறுக்கி இணையத்தளங்கள் நியூஜப்னா (New Jaffna) வரையான வரலாறு ஊடக வரலாறு அல்ல. இலங்கையின் மஞ்சள் பத்திரிகைகளின் வரலாறு. பெண்களை இழிவு செய்து பத்திரிகை விற்று பணம் சம்பாதிக்கும் வியாபாரிகளின் வரலாறு. உள்ளாடைகளை தேடி அலையும் ஊனம் பிடித்த ஆபாசப் பொறுக்கிகளின் வரலாறு.

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே..,

அவர் ஏதும் அறியாரடி ஞானதங்கமே…!

திருவருட் செல்வர் திரைப்படத்தில் வந்த அருமையான பாடல். அங்கு ஆன்மீகத்தினை தவிர்த்து அரசியலாக பார்த்தால், இன்று மனிதர்கள் யாவருமே இந்த நிலையிற் தான் சிந்திக்கின்றார்கள்.., வாழ்கின்றார்கள், அலைந்து திரிகின்றார்கள். (நாளாந்தம் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு நாளந்தம் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விடத்திற்கும் நாளந்தம் திண்டாடும் அப்பாவி பாமர மக்களை நான் இங்கு தவிர்த்துக் கொள்கிறேன்). குடும்பம், உறவு, அன்பு, பாசம், சமூகம் என்று அரசியல் வரை தன் கண்ணெதிரே பக்கத்தில் இருக்கும் நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இல்லாத அல்லது தவறான இடத்தில் அதை தேட முற்படுகின்றான் மனிதன்.

அந்த பனங்காடுகளிற்குள் எழுந்த அவளின் கடைசி மூச்சுக்கள்; தொண்டைக்குள்ளே உறைந்து, புதைந்து போன மெளனமான அழுகைகள் எதுவும் அந்தப் பேய்களிற்கு கேட்கவில்லை. அவளின் ஆத்மா முடிவற்ற அந்த இருளில் கரையும் போது என்ன நினைத்திருப்பாள்?. யாரை நினைத்திருப்பாள்?. தாலாட்டிய தாயை, தாங்கி வளர்த்த தந்தையை தன்னை தேடி அவர்கள் தவிக்கப் போவதை; நீண்டு கொண்டு போகும் இரவுகளில் கண்ணீர் நிற்கா விழிகளுடன் தங்களின் செல்லமகள் பட்ட பாடுகளை எண்ணி பதறப்போவதை என்று எதை நினைத்திருப்பாள்?. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று ஏதும் அறியா அந்த சிறுகுழந்தை எண்ணிப் பார்க்க முதலே அந்த நாய்கள் அவளின் கடைசி மூச்சையும் அவளிடமிருந்து பறித்திருப்பார்கள்.

உலகம் அழியப்போவது பற்றி நாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கலாம். ஆன்மீகவாதிகள் (மதவாதிகளும் - எதிர்காலம் பற்றி ஆரூடம் கூறுவோரும்) உலக அழியப்போவது பற்றி அடிக்கடி கூறுவதால், நாத்திகவாதிகளாகிய (மார்க்சியவாதிகள்) நாங்கள் கூறுவது முரணாக இருக்கலாம். இயற்கை அழிவைக் காட்டி உலக அழிவு பற்றி ஆன்மிகவாதிகள் கூறும் போது, அதை கடவுளின் கோபமாக வர்ணிக்கின்றனர். முதலாளித்துவத்தின் இடத்தில் கடவுளை வைப்பதன் மூலம், புவியை அழிப்பவனை பாதுகாக்கும் ஆன்மிகவாதிகள், புவியின் அழிவை வரவேற்கின்றான்.

புவியை வெப்பமடைய வைப்பதன் மூலம் அழிவை ஏற்படுத்தும் முதலாளித்துவத்தை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு என்பதும், அழிவை தவிர்க்க முடியும் என்பதும் மற்றொரு எதார்த்தம்.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், இன்று (19.12.2015) சுவிற்சர்லாந்து சமவுரிமை இயக்கத்தினால்,  Zurich நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் இடதுசாரிய கட்சிகள்  மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணே, உங்களை ஒருமையில் "பொங்கியெழு மாவை சேனாதிராசா" என்று கூப்பிட்டு விட்டேன் என்று நினைக்க வேண்டாம். எங்கள் ஊரில் கந்தையா அப்பு என்று ஒரு முடி வெட்டும் தொழிலாளி இருந்தார். நல்ல அன்பான மனுசன், எங்களிற்கு என்னவோ விதம், விதமான ஸ்ரைல் என்று சொல்லி முடி வெட்டுவார். ஆனால் கடைசியில் பார்த்தால் எல்லோருடைய தலையும் சட்டியை கவிட்டு விட்டது போலவே இருக்கும். அவர் மருத்துவமும் பார்ப்பார். என்னவோ எல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். ஆனால் அதுவும் அவரது முடிவெட்டும் கலை மாதிரித்தான். வருத்தம் கொஞ்சமும் மாறாது.

இன, நிற நாசிகள் 1930களில் ஆட்சிக்கு வந்தது போன்று, ஐரோப்பாவில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கான சமிக்கைகள் அண்மைக் காலமாக தோன்றி இருக்கின்றது. பிரான்சில் இன, நிற நாசிக் கட்சியான "தேசிய முன்னணி"யானது (Front National ), அதி கூடிய வாக்குகளைப் பெற்று முதன்மையான கட்சியாக மாறியுள்ளது. வேகமான அதன் வளர்ச்சியானது, ஐரோப்பா எங்கும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. ஏகாதிபத்திய நாடுகளில் இனவாதமும், நிறவாதமும் தூண்டப்பட்டு வரும் இன்றைய சூழலில் அதிகாரத்தில் இருந்த கட்சிகள் கூட அதிகாரத்தைத் தக்கவைக்க வெளிப்படையாக "வெள்ளை இன மரபு" பற்றி பேசி வருகின்றது. பயங்கரவாதத்துக்கு தீர்வு இன, நிற ரீதியாக அணிதிரண்டு, தாங்கள் அல்லாதவர்களை ஒடுக்குவதன் மூலமே சாத்தியம் என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போக்கானது ஐரோப்பாவில் மட்டுமல்ல, அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி குடியரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் வரை இன, நிற, மத ரீதியாக மக்களை பிரிக்கும் கருத்துக்களை முன்வைத்திருப்பது, வரலாற்றின் மற்றொரு இருண்ட பக்கம் தொடங்க இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இன்று காலை கேகாலை நீதிமன்றில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குமார் குணரத்தினத்தினத்தை தொடர்ந்தும் எதிர்வரும் டிசம்பர் 30ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். குமாரிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 1ம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஜனவரி 8ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விரோத மைத்திரி - ரணில் அரசின் கொள்ளைக்கார  வரவு செலவுத் திட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் இன்று 17-12-2015 மகரகமவில்  இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு கூட்டத்தை இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ஆகியவை கூட்டாக நடாத்தின.

தமிழ்ச்சினிமா கழிசடைகள் காலங்காலமாக தமிழனின் மானத்தை விற்று வருகிறார்கள். தமிழ்ப் பெண்களை ஆணாதிக்க சொல்லாடல்களாலும், காட்சிப் படிமங்களாலும் பாலியல் வல்லுறவு செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டு காவாலிகளும் தங்களது மன விகாரங்களை, வக்கிரங்களை, அழுக்குகளை கொட்டி பெண்களை கேவலப்படுத்துகிறார்கள். மனிதர்கள் என்று சொல்லவே கூசும் இப்படிப்பட்ட பிறவிகள் தான் தமிழருக்கு கலைஞர்கள் என்னும் போது தமிழ்ச்சினிமா என்றைக்குமே சேறு நிறைந்த சாக்கடையாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.

இலங்கையில் கல்வியை தனியார் மயமாக்கும் முதல் நடவடிக்கையாக மாலபேயில் உருவாக்கப்பட்டுள்ள மருவத்துவ கல்வி கூடம் அமைந்துள்ளது. இங்கு கல்வி கற்பவர்களிற்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சி அளிப்பதற்கு உயர் கல்வி அமைச்சின் செயலாளர் முடிவு செய்துள்ளார். நேற்றைய தினம் இது குறித்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.

எமது தோழர்களான கிளி, புபுதுவின் அம்மாக்களின் மரணச் செய்திகள் எமது தோழர்களின் துயரங்களாக, அது எமது தாய்மார்களின் இழப்பாகின்றது. தோழர்களுடன் இணைந்த எமது போராட்ட வாழ்க்கையானது - அவர்களின் துயரம், மகிழ்ச்சி.. அனைத்துடனும் எம்மையும் இணைத்து விடுகின்றது.  

தொப்புள் கொடியில் இருந்து தொடங்குகின்றது மனித உறவுகள். இந்த உறவுக்கு ஈடு இணையற்ற உறவுகள் எதுவும் கிடையாது. தாய்மை சார்ந்த உறவுகளின் எற்படும் இழப்பு உணர்வு பூர்வமானவை, உணர்ச்சிகரமானவை.    

“இப்போதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்!”

“இப்போதாவது காணாமலாக்கல்களை கடத்தல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!”

“அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!”

“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”

"தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்!, அவரின் அடிப்படை உரிமைகளை அங்கீகரி!"

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE