Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

குமார் குணரத்தினத்தின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும், அவரின் அரசியல் உரிமைகளை வழங்கக் கோரியும் நேற்று (19.01.2016) பாரிய ஆர்பாட்டம் கொழும்பில் நடாத்தப்பட்டது. அவ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, ரணில்-மைத்திரி அரசால் அதிரடிப்படை ஏவிவிடப்பட்டு வன்முறை பிரயோகிக்கப்பட்டது. இவ் வன்முறையினை கண்டித்தும், குமார் குணரட்ணத்தின் உரிமைகளை அங்கீகரித்து - அவரை விடுதலை செய்யக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரியும் இன்று பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நடாத்தப்பட்டது.

காலங்களை முன் வைத்து ஆரூடம் கூறுகின்ற சாத்திரி போல், முகமாற்றம் மூலம் நல்லாட்சி கிடைக்கும் என்று "ஜனநாயகவாதிகள்" கூற, மக்கள் முகமாற்றத்துக்கு வாக்களித்தனர். இப்படி "நல்லாட்சிக்கு" வாக்களித்தவர்கள், அதை அரசிடம் எதிர்பார்க்கின்றவர்கள், தங்கள் தங்கள் விருப்பங்கள், தேவைகள் பிரச்சனைகளுக் கூடாகவே அணுகுகின்றனர். தங்கள் அனுபவ ரீதியான முடிவுகளில் இருந்தும், ஓப்பீட்டின் அடிப்படையிலும் "நல்லாட்சி"யை ஆதரிப்பதும், விமர்சிப்பதும் நடக்கின்றது. இப்படி அனுபவாதமும், ஓப்பீடும் தருகின்ற முடிவுகள் சரியானதா?.

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும் போராட்டம் ஒன்று இன்று  நடைபெற்றது. இப்போராட்டம் பகல் 12 மணிக்கு, மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் ஆரம்பித்து காலிமுகத் திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்ந்தது. ஜனாதிபதி செயலகத்துக்கு சில நூறு மீற்றர்களுக்கு முன்பாக போலீஸ் அதிரடிப்படையினால் தடுக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் மீது  நீர் தாரை பிரயோகம் செய்யப்பட்டதுடன் தடியடிப் பிரயோகம் செய்யவும் முயற்சிக்கப்பட்டது. 

"தமிழன்" என்ற இனமாக தமிழன் தன்னை அடையாளப்படுத்தும் போது சாதி கடந்து அல்ல, சாதியைப் பாதுகாத்துக் கொள்ளவே "தமிழன்" என்ற இன அடையாளம் என்பது எமது கடந்தகால வரலாறாக இருக்கின்றது. இந்த உண்மையின் பின்னால் தமிழனின் கலாச்சாரம், தமிழனின் சிந்தனை அனைத்தும் சாதியமே. சாதிய சமூகம், சாதியப் பண்பாடு கடந்து , கலாச்சாரம் குறித்து "தமிழன்" பேசுவதில்லை.

மூசிப்பனி பெய்த காலையில் செம்மண்ணில் ஆழப் புதைந்த புகையிலைக் கன்றுகளை காற்று அசைத்துச் செல்லும். தூரத்தே பனைமரத்தில் இருந்து பச்சைக்கிளிகள் சிவத்துப் பழுத்த மிளகாய்களை கொத்திச் செல்ல தருணம் பார்க்கும். பெருவரம்பை தொட்டு நிற்கும் வெள்ளத்தை மேவித் தலை தூக்கி நெல்லுக் கதிர்கள் காற்றில் ஆடும். தம் உயிரையே உழைப்பாக கொடுத்த ஆண்களும், பெண்களும் அறுவடை செய்யும் நாள் விரைந்து வர ஆவலோடு பார்த்திருப்பர். இது தான் இலங்கையின் சாதாரண மனிதர்களின் சரித்திரமாக இருந்தது. அரிசி புடைக்கும் போது கொத்த வந்த கோழிகளை காதுத்தோட்டை கழற்றி எறிந்து பெண்கள் கலைத்தார்கள் என்று பழந்தமிழ் பாடல் ஒன்று புளுகுவது போல அவர்களது வாழ்க்கை இருக்கவில்லை. ஆனால் அவர்களால் மூன்றுநேரம் உண்ண முடிந்தது. பனையேறும் தொழிலாளி முதல் பானை வனையும் தொழிலாளி வரை எளிய மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டம் 19.01.2016 அன்று பகல் 12 மணிக்கு, மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் நடைபெறும்.

பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியின் குரல் இன்று கரை சேர்ந்து விட்டது. பாடல்கள், நாடகங்கள், போராட்டங்கள் என்று அவரது வாழ்வு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றது.

நாடக அரங்கம், குணசேகரன் நாடகங்கள், வடு, தலித்தியம், அரங்கியலும் அரசியலும், நாட்டுப்புற இசைக்கலை, பலி ஆடுகள் போன்ற நூல்களை அவர் தமிழ் வாசிப்புத்தளத்திற்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

சமவுரிமை இயக்கினரால் இன்று பாரிஸில் நடாத்தப்பட்ட பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இனம் - மதம் - சாதி கடந்து; தமிழ்-சிங்கள்-பிரஞ்சு மொழிகளில் ஒன்று கலந்த உரையாடலுகளுடன்  கலை நிகழ்வுகளுடன் அனைவரும் கூடி நடந்திய விழாவாக சிறப்புற நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.

லண்டன் புறநகர் பகுதியான ஹரோ நகரசபை மேயரான சுரேஸ் கிருஸ்ணா அல்லது லண்டன் பாபா என்பவர் கார்த்திகை மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் "தமிழ்த்தேசியத்தின் தவப்புதல்வன்" என்னும் நாடகத்தை மேடையேற்றினார். பின்பு கழுத்தில் மணிகள், சங்கிலிகள் தொங்க ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து "நீயும் நானும் ஒண்ணு, அதை தெரியாதவன் வாயில் மண்ணு" என்ற நாடகத்தை ஒரே மாதத்திற்குள் அரங்கேற்றினார்.

நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

நான் இவ்வளவு காலமும் செய்த வேலைகளிலே, இப்படி ஒரு சந்தோசம், ஒருபோதும்; எங்கும் கிடைத்ததில்லை, அப்படியொரு சந்தோசமான வேலை.

சாதாரண ஒரு குழந்தைப் பராமரிப்புத் துறை தான் எனக்குத் தெரிந்த, பிடித்த தொழில். ஆனால் இந்தப் பராமரிப்புத் தொழிலோடு ஒரு உதவியாசிரியராக ஒரு மூன்றோ நாலோ மணித்தியாலம் வேலை செய்ய முடியுமா என்று கேட்ட போது வியப்பாக இருந்தாலும் மிகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

எனது நிலையை உணர்ந்த அதிபர் ஜயோ பயப்படாதே......? மூன்றாம் நாலாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு உதவுது தான் உன் வேலை.

சந்தோசமாய் ஏற்றுக் கொண்டேன்.

மாலபேயில் அமைந்துள்ள சத்யம் (SATIM) தனியார் மருத்துவ கல்லூரியினை மூடுமாறு கோரியும், கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினையும் எதிர்த்தும் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளாக பாரிய பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மருத்துவபீட மாணவர்கள், அண்மையில் பல தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தொடர் சத்தியாகக்கிரக போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து குதித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நகரத்திற்கு அருகே இருக்கும் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தில் மரணமடைந்த செல்லமுத்து என்னும் இந்துமதத்தினால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் உடலை அவர்களின் சேரிக்கு பக்கத்தில் இருக்கும் வழுவூர் என்னும் ஊரின் பொதுப்பாதை வழியாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது அவர்களைத் தடுத்து அந்த ஊரின் ஆதிக்கசாதி வெறியர்கள் ஊளையிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஆற்றங் கரையோரமாக நெடுந்தூரம் நடந்து சென்று மரணமடைந்தவர்களை மயானத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள். சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பெய்த பெருமழையினால் இந்த பாதையை பாவிக்க முடியாமல் போனதாலேயே அவர்கள் ஊரின் நடுவே செல்லும் பொதுப்பாதையினால் செல்லமுத்து அவர்களின் உடலை எடுத்துச் செல்ல முயன்றார்கள்.

ஜனவரி 14ம் திகதி  பிற்பகல் 03.30 மணிக்கு கொழும்பு  தேசிய நூலக கேட்போர் கூட மண்டபத்தில். "புதிய அரசியலமைப்பு, பழைய நாடகம்"  என்ற கருப்பொருளில், முன்னிலை சோசலிசக் கட்சி கருத்தரங்கு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள மைத்திரி-ரணில் அரசானது இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை (Constiutional Reform) மேற்க்கொள்ள குழுவொன்றை   நியமித்துள்ளது. இச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளுவதன் மூலம், இலங்கை மக்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடப்படும் என மைத்ரி - ரணில் அரசும், அதன் அடிவருடிகளும் பிரச்சாரம் செய்கின்றனர்.

மாலபேயில் அமைந்துள்ள சத்யம் (SATIM) தனியார் மருத்துவ கல்லூரியினை மூடுமாறு கோரியும், கல்வியை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினையும் எதிர்த்தும் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளாக பாரிய பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மருத்துவ பீட மாணவர்கள், அண்மையில் பல தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தொடர் சத்தியாகக்கிரக போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை முன்வைத்து குதித்துள்ளனர். அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இந்த போராட்டத்துடன் இணைந்து கொண்டு போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.

மீதோட்டமுல்ல குப்பைமேட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சூழல் சீர்கேடுகளால் அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல வருடங்களாக போராடிவருகின்றனர். மைத்திரி அரசு இந்த குப்பை மேட்டை அகற்றுவதற்கு பதிலாக விஸ்தரிக்கும் திட்டத்துடன் மேலும் அப்பகுதியில் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயலில் இறங்கி உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்பகுதியில் சத்தியாகக்கிரக போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஆளும் கட்சியின் அப்பிரதேச நகரசபை தலைவர் தலைமையில் வந்திருந்த குண்டர்கள், போராட்டம் நடாத்தியவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொணடிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் போராட்ட மக்களிற்கு சட்ட உதவியளித்து போராட்டத்தை ஒருங்கமைத்த சட்டத்தரணி நுவான் போககேயும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE