Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யாவை உடன் விடுதலை செய்!

தில்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் SAR. கிலானி மற்றும் GN. சாய்பாபா அவர்களை உடன் விடுதலை செய்!

மரண தண்டனை அகற்றிடவும்! காலனித்துவ 'தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றிடவும்!!

ரோஹித் வேமுலாவிற்கு நீதி வேண்டும்!

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சத்தீஸ்கர் இருந்து இராணுவம் முழுமையாக திரும்பப் பெறு!!

சோனி சோரிக்கு நீதியை வழங்கு!

சத்தீஸ்கரில் செய்தியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து!!

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் கால நிலை 1940களில் எப்படி அமைந்திருந்ததோ அப்படியேதான் இன்றைக்கும் அமைந்துள்ளது. கடந்த 68 வருடங்களாக எந்தவிதமான பரிணாம வளர்ச்சியும் இன்றி எமது அரசியல் தொடர்ந்து ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டு மக்களை வண்டி இழுக்கும் மாடுகளைப் போல பாவித்துக் கொண்டு வருகிறதற்கான ஒரேயொரு அடிப்படைக் காரணம் எமது தமிழ் அரசியல் பாவிக்கும் "நுகத்தடி"தான். அதன் பெயர்தான் "சாதி".

1949ல் மலையக மக்கள் நாடற்றவராக ஆக்கப்பட்டபோது, அதனைக் காரணமாக வைத்து சமஷ்டி கட்சி ஆரம்பித்த நாம் அவர்களை அப்படியே கை கழுவி விடச் செய்தது எமது "சாதி" மனப்பான்மையே.

கடந்த கால ஆயுதப் போராட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் சிந்தாந்த நெறிப்படுத்தலுடன் முன்னெடுக்கப்படுவதை தடுத்து அதனை திசை திருப்பி முள்ளிவாய்க்கால் வரை இட்டுச் சென்றதும் எமது "சாதி" ஆதிக்கமே.

இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் மீதான குடிவரவு விதியினை மீறியதான சோடிக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இன்று கேகாலை உதவி பொலிஸ் அத்தியகட்சககர் மீதான, குமாரின் கைது தொடர்பான விசாரணை இன்று முடிவுக்கு வந்திருந்தது.

அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்க்கான மாதாந்த சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதேவேளை சாதாரண மக்களின் அன்றாட தேவைகளிற்கான பொருட்களின் மேல் ஜரோப்பிய நாடுகளில் அறவிடும் வாற் (VAT) வரி இனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அறித்தல் வெளியிட்டுள்ளது. எந்த அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதிக்கப்படவுள்ளது என்ற பட்டியல் இன்னமும் வெளிவரவில்லை. ஏற்க்கனவே தமது அன்றாட தின வாழ்வுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் மேல் விதிக்கப்படவுள்ள வரி என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற செளந்தரராஜனின் பக்திப்பாடல் ஒன்று பல வருடங்களிற்கு முன் பிரபலமாக இருந்தது. இப்பொழுது காதல் கடிதம் எப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த நாட்களில் காதல் கடிதங்களில் கவிதை மழையாக பொழிந்து தள்ளியிருப்பார்கள். சொந்தமாக வசனமே எழுதத் தெரியாத வயதுகளில் கவிதை எழுத எங்கே போவது, எனவே காதல் கடிதங்களில் பாடல்வரிகளை மாற்றி எழுதுவார்கள். மணி என்ற எங்களது கூட்டாளிக்கு வசந்தி என்ற பெண்ணின் மேல் காதல் வந்தது. வழக்கம் போல கவிதை வரவில்லை.

வடக்கின் போர் என்றதும் மறுபடியும் போரா என்று பயந்து விடாதீர்கள் மக்களே, இது யாழ் மத்திய கல்லூரிக்கும், பரி யோவான் கல்லூரிக்கும் இடையில் நடக்கும் கிரிக்கட் போட்டி. போரினால் சிதைந்து போன எம்மக்களின் வாழ்விற்கு விளையாட்டு, இசை, நுண்கலைகள் என்பன ஆறுதல் அளிக்கின்றன. உற்சாகத்தை ஊட்டுகின்றன. எம்மக்களின் வாழ்வை சீரழிக்க வெள்ளமாகப் பாயும் மது, போதை மருந்துகள் என்பவற்றில் மாணவர்கள் தடம் புரளாமல் இருக்க இவை மனத்திடத்தை அளிக்கின்றன. ஆகவே பந்துகள் உருளட்டும், பாட்டுகள் முழங்கட்டும். இவை போன்ற நிகழ்வுகள் இன்னும் பல்கிப் பெருகட்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை கோரி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிகழ்ந்தது. இந்நிகழ்வில் அனைத்து பீட மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அரசியல் கைதிகள் என யாரும் சிறைகளில் கிடையாது என அரசு அறித்துள்ள நிலையில், சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிற்கு ஆதரவாக கைதிகள் விடுதலைக்கான போராட்டக்குழு, சமவுரிமை இயக்கம் மற்றும் உறவினர்களின் போராட்டங்களுடன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(JNUSU துணைத்தலைவரான ஷெஹ்லா ரஷீத் ஷோராவுடன் நேர் காணல்) -AJOY ASHIRWAD MAHAPRASHASTA

ஷெஹ்லா ரஷீத் ஷோரா JNUSUவின் துணைத் தலைவர். JNUவை வேட்டையாடும் செயல் என்று அவர்கள் கருதுவதற்கு எதிராக நடக்கும் மாணவர் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். ஷெஹ்லா ரஷீத் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அவர் அகில இந்திய மாணவர் கழகத்தின் (AISA) ஓர் உறுப்பினர். யூஜிசியை ஆக்கிரமிக்கும் இயக்கம், ரோஹித் வெமுலா தற்கொலைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பிரதான இடது மாணவர் தலைவர்களில் ஒருவர். அவர் பிரண்ட் லைன் (Frontline) இதழுக்கு அளித்த பேட்டியின் சாரமான பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

இன்று (08.03.2016) சர்வதேச பெண்கள் தினமான  பங்குனி 8ம் திகதியினை கொண்ட்டாடும் முகமாக "பெண்கள் விடுதலை இயக்கம்" கொழும்பு பிரதேசத்தில் பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாகவும் இதனை அண்டிய வீதிகளிலும் இந்த பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  பெண்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராக போராட அழைப்பு விடுக்கப்பட்டதுடன், பெண் விடுதலை குறித்த பிரச்சினைக்கு சரியான தீர்பு சம்பந்தமாக சமூகக் கருத்தாடலை தொடங்குவதற்காக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்ற தொனிப்பொருளிலான  வீதி நாடகம், பாடல்கள், தெருமுனை கூட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அன்னையரே, புதல்வியரே,

சகோதரிகளே, தோழியரே...

மேலும் ஒரு நாள்

மீளவும் வந்தது மார்ச் 8

என்றும்போல்

சமைப்பது, அழகுபடுத்துவது

ஆடைகளைத் தயார்படுத்துவது

மேலும் பல

பெண்களுக்கு அதுதானே வேலை!

பெண்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்க்காக போராட பெண்கள் விடுதலை இயக்கம் இன்று களுத்துறை வீதிகளில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. பங்குனி -08 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களை தமக்கு எதிரான ஆணாதிக்க அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பவற்கு எதிராக போராட இந்த பிரச்சார நடவடிக்கை அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் காலியில் ஆரம்பித்து இன்று களுத்துறை நாளை கொழும்பு நாளை மறுநாள் கம்பகா என இந்த எதிர்காலத்துக்காக போராட அழைக்கும் பிரச்சார நடவடிக்கை தொடரவுள்ளது.

கன்ஹையா குமார்... ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துக் கொண்டிருக்கும் இளைஞன். செல்ஃபி மேளாக்களில் திளைத்துக் கிடந்த இந்திய அரசாங்கத்துக்கு மாணவர்களின் சக்தியை உணர வைத்த சிறு பொறி! சற்றே நீ......ண்ட முயற்சி, பின்... டெல்லியில் இருந்த அனைத்து ஊடக தொடர்புகள், இடதுசாரி இயக்க நண்பர்கள் தொடர்புகள் என அனைத்தையும் பயன்படுத்தி கன்ஹையா குமாரை தொடர்பு கொண்டு பேசினேன். விகடன்.காமுக்கு பேட்டி என்றதும் மகிழ்வுடன் இசைந்தார்... ’சற்றே விரைவாக பேட்டியை முடித்துவிடலாம்’ என்ற ஒற்றை நிபந்தனையுடன். ஆனால், ஏறத்தாழ 30 நிமிடங்களுக்கு மேல் பேசினார். இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இந்தி நன்கு தெரிந்த நெருங்கிய நண்பரின் துணையுடன் நீண்டது அந்த உரையாடல். தேர்ந்த அரசியல்வாதியைப் போல், சங்கடமான கேள்விகளுக்கும் சிரிப்பைப் படரவிட்டு பதில் தருகிறார்.

சர்வதேச பெண்கள் தினத்தை (8 பங்குனி) முன்னிட்டு, இன்று 5ம் திகதி  காலியில் பெண்கள் விடுதலை இயக்கம் (சுதந்திரத்திற்க்கான மகளிர் அமைப்பு) பெண்களின் விடுதலைக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளது. காலி பஸ் நிலையத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சாரம் பின்னர் காலி நகரம் அதனைத் தொடர்ந்து மகமோடரா மற்றும் டாடில்லா பகுதிகள் ஊடாக ஊர்வலமாக சென்றது. குடும்பத்தில், வேலை இடங்களில், தொழிற்சாலைகளில், மலையகத்தில் பெண் என்ற வகையில் முகம்கொடுக்கும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பெண்களை விளம்பரப் பொருளாகவும் போகப் பொருளாகவும் அடிமையாகவும் தான் இன்றைய சமூகம் பாவிக்கின்றது. இதிலிருந்து மாற்றத்தைக் காண பெண்கள் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரச்சாரத்தை இன்று முன்னெடுத்திருந்தனர்.

இலங்கையில் கடந்த 68 வருடங்களாக சிறுபான்மை இனத்தவராகிய தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களால் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்பட்டு வருவதாக கதையாடல் செய்யப்பட்டு நம்ப வைக்கப்பட்டு அதனடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகளுக்காக ஓர் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அது முடித்து வைக்கப்பட்டு மறுபடி மீண்டும் இன்று அதே கதையாடல் தொடங்கியுள்ளது.

இந்தக் கதையாடலில் யார் எவருடைய உரிமைகளை மறுக்கிறார்கள், யார் எவருடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள், கோஷமிடப்படும் இந்த "உரிமைகள்" பற்றிய வரைவிலக்கணம் என்ன என்பவை தொடர்பாக ஆராயவேண்டிய அவசியம் பெண்களாகிய எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பு: வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் சேலை கட்டிக் கொண்டு பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்ற அறிஞர்களின் அறிக்கையைப் போல, நல்லூர் கந்தசாமி கோவிலிற்கு பெண்கள் பாவாடை- தாவணி, சேலை மட்டுமே கட்டிக் கொண்டு வரவேண்டும் என்று யாழ் மாநகர சபையின் மாதா யோகேஸ்வரி பற்குணராஜா 2012 இல் அறிவிப்பு ஒன்றை எடுத்து விட்டார். தமிழ்மக்களை துடிக்க துடிக்க கொலை செய்த கொலைகாரன் மகிந்த ராஜபக்சாவுடன் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ்ப்பண்பாடு காக்க புறப்பட்ட அம்மாவின் தாயுள்ளம் கண்டு புல்லரித்து 04.02.2012 பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இன்றைய நாட்களின் தேவை கருதி மறுபடியும் பிரசுரிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE