Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அன்புள்ள ஜிஷா, நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்கமாட்டாய். அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக கல்வி கற்றுக்கொண்டு உனக்கும், உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருந்திருப்பாய். வானங்களையும், நட்சத்திரங்களையும் கனவுகண்ட ரோஹித் வெமுலா போன்ற ஒருவராகத்தான் நீ இருந்திருப்பாய். நீ ஒரு சட்டம் பயிலும் மாணவி என்பதை அறிந்தேன். இந்நாட்டின் சட்டங்கள் நம்மை மோசமாக ஏமாற்றம்கொள்ளச் செய்கின்றன என்பதைச் சொல்ல வருந்துகிறேன்.

ஜிலேபி சுவாமி என்றும் சரவணபாபா என்றும் முரளிகிருஷ்ணன் என்றும் திருநாமங்கள் கொண்ட ஆஆஆசாமி தற்சமயம் நெதர்லாந்தில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதாம். பக்த கேடிகள் பாபாவின் பாதம் தேடி படை எடுக்கிறார்களாம். இளிச்சவாயர்கள் அள்ள அள்ளக் குறையாமல் இருப்பதினால் "இந்த ஊர் இன்னுமாடா நம்பளை நம்புது" என்று ஆசாமிகளே அதிசயப்பட்டுக் கொண்டு ஆன்மீகக் கொள்ளையை தொடர்கிறார்கள். அண்ணன் இங்கிலாந்தில் இருந்து ஆன்மீகக்கொள்ளை அடித்த போது அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையை நெதர்லாந்து பக்த கேடிகளிற்கு சமர்ப்பணமாக மறுபிரசுரம் செய்கிறோம்.

2009 இல் புலிகளை அழித்தன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டதாக நம்பும் அரசு தான் இந்த "நல்லாட்சி" அரசு. இன்று நாட்டில் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களை தண்டிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக பழி வாங்க முனைகின்றது. அரசின் நவதாரளமயக் கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வழி நடத்தும் முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்களில் ஓருவராக தோழர் குமார் இருப்பதால் அவரின் பிரஜாவுரிமை மறுத்து சிறையில் தள்ளியிருக்கின்றது.

ரெலோ  இயக்கத்தின் முன்னாள் போராளி எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்", புளட் இயக்கத்தின் முன்னாள் போராளி சீலனின் "வெல்வோம் அதற்க்காக" மற்றும் பாஸ்கரனின் "முடிவுறாத முகாரி" ஆகிய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி கனடாவில் இடம்பெற விருக்கின்றது.

இலங்கையில் முன்னிலை சோசலிசக் கட்சி பாரிய மேதின ஊர்வலம் ஒன்றினையும் முடிவில் கூட்டம் ஒன்றினையும் உழைக்கும் மக்கள் தினமான மேதினத்தில் நடாத்தியுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் விடுதலை இயக்கம், புரட்சிகர மாணவர் ஒன்றியம், இளைஞர் அணி, விவசாயிகள் போராட்ட இயக்கம், தொழிலாளர் போராட்ட நடுநிலையம் மற்றும் முன்னிலை சோசலிச கட்சியினர் அணிவகுத்து சென்றதுடன், கோசங்களை எழுப்பிச் சென்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உடனடியாக பதில் தரவேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

SAITM தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்த்தும் இலவச கல்வியினை  வலியுறுத்தியும், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியான பல போராட்டங்களை கடந்த சில வருடங்களாக நடாத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மருத்துவ பீட மாணவர்கள், SAITM தனியார் மருத்துவ கடையினை உடனடியாக இழுத்து மூடும்படி கோரிக்கையினை முன்வைத்து கடந்த 100 நாட்களாக சுழற்சிமுறையில் சத்தியாககிரக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

விடிவு என்பது இல்லாத இருள் வெளிகளில் தமது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் கையறுநிலை பற்றி சிறையில் இருந்து வெளிவந்த இளைஞர் ஒருவர் அய்யா சம்பந்தனிடம் முறையிட்டு அவர்களின் விடிவிற்கு எதாவது செய்யுங்கள் என்று இறைஞ்சுகிறர். சிறையில் தமது வாழ்வைத் தொலைத்த எம்மக்களின் துயர வாழ்வை, தாங்க முடியா வேதனைகளை தவிப்புடன் அவர் சொல்ல அய்யாவோ பத்திரிகை படித்த படி பாராமுகம் காட்டி "ஏதுக்கு என்னிடம் வந்தாய்" என்பது போல் எதோ சொல்கிறார்.

இந்தக் காணொளி வெளி வந்ததும் பலரும் சம்பந்தன் அய்யாவை திட்டுகிறார்கள். ஆனால் அய்யாவோ, அவர் தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இன்றைக்குத் தானா இப்படி பயங்கரமாக இருக்கிறார்கள்? தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவையும் அவற்றின் தொடர்ச்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்றைக்கு மக்களின் பக்கம் நின்றார்கள்? என்றைக்கு மக்களின் பிரச்சனைகளிற்காக மனப்பூர்வமாக போராடினார்கள்? "எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்குறாங்களே, இவங்க ரொம்ப இளிச்சவாயன்களடா" என்று அவர்கள் எம்மை ஏமாற்றிக் கொண்டு இருப்பதை ஏற்றுக் கொண்டு இருப்பது நமது தவறில்லையா?

நேற்றைய தினம் 23-04-2016 பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் சதுக்கத்தில் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் அரசியல் காரணங்களிற்க்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதனை கண்டித்து - அவரை விடுதலை செய்யக்கோரியும், வடக்கு-கிழக்கில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியமர்த்தக்கோரியும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியும், நிலப்பறிப்பை கண்டித்தும் கோசங்களை முழங்கினர்.

இன்று 22/4/2016 வெள்ளி மாலை பாரிஸில் உள்ள இலங்கை தூதராலயத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தினை ஜனநாயகத்திற்கான இலங்கையர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். குமார் குணரத்தினத்தினத்தை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அவரை நாடு கடத்த வேண்டாம் என கோரியும் மேலும் அரசியல் காரணங்களிற்காக புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளை பறிக்க வேண்டாம் எனக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் சனிக்கிழமை 23/04/2016 அன்று பிற்பகல் 3 மணி முதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வெஸ்ட்மினிஸ்ரர் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை, குமார் குணரத்தினத்தின் விடுதலை – பிரஜாவுரிமை – அரசியல் செய்வதற்க்கான உரிமை மற்றும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியேற்றுமாறு வலியுறுத்தியும் நிலப்பறிப்பினை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளையினர் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதி செய்வதற்க்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்றினை கரோ பகுதியில் நடாத்தி இருந்தது. சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று பல அரசியல் அமைப்புக்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், இணையத்தள எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் என தமிழ்-சிங்கள-முஸ்லீம் இனத்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா மறைந்த நேரம் காசி ஆனந்தன் "இலங்கையின் சுதந்திர நாளை பகிஸ்கரிக்க வேண்டி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு மட்டக்களப்பு கல்லூரிக்கு மிதிவண்டியில் தானும் பாலு மகேந்திராவும் சென்று வெடிகுண்டு வீசியதாக" குறிப்பிட்டார். அன்று கல்லூரிக்கு வெடிகுண்டு வீசியவர் இன்று "இந்தியாவை எமது விடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருக்க வேண்டுமென்று ஆசையுடனும், அவாவுடனும் கேட்டுக் கொள்ளுவதாக" கேட்டு இலங்கைத் தமிழ்மக்களின் மேல் வெடிகுண்டு வீசுகிறார்.

குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கோரியும் மற்றும் அரசியல் காரணங்களிற்க்காக புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கையில் அரசியல் செய்யும் உரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரியும் நேற்றைய தினம் இத்தாலி, மிலான் நகரில் உள்ள இலங்கை தூதராலயம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த இரு நாட்களாக (06-07/04/2016) யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த மீனவ ஒத்துழைப்பு அமைப்பினர், யாழ் மாவட்டத்தின் பல பகுதி மீனவ அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். தென்னிலங்கையில் மீனவரின் உரிமைகளிற்க்காக போராடி வரும் நாமல் தலைமையில் வந்திருந்த குழுவினர்; வலலாய், பருத்தித்துறை, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டமானாறு, குருநகர் மற்றும் தீவக மீனவர்களையும், அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ் நிலை, தொழில் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் போர் காரணமாக அவர்களின் வாழ்வில் ஏற்ப்பட்ட இடர்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அண்மையில் பிரான்ஸில் இடம்பெற்ற 46வது இலக்கிய சந்திப்பில் "சமகால அரசியல் போக்கு அரங்கில்" தோழர் ரயாகரன் ஆற்றிய உரை இது. காணெளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே "நல்லாட்சி" தான். உலகமயமாதல் எதுவோ அதுவே "நல்லாட்சியாக" இருக்கின்றது. உலகமயம் என்பது சொத்துடமையைக் குவிக்கும் உலகளாவிய வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாகும். "நல்லாட்சி"யானது சுதந்திரமாகச் சொத்தைக் குவிக்க உள்ள தடைகளை அகற்றுவதும் அதற்கு ஏற்ற பண்பாட்டுக் கலாச்சார அடிப்படைகளை உருவாக்குவதுமாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE