Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஓளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லால் ஜயகொடி மற்றும் பிரதித் தலைவர் கிரிசாந்த வீரசூரிய ஆகியோர் அரசியல் வற்புறுத்தல் காரணமாக பதவி விலகியதை ‘ஜனரல’ என்ற சிங்களப் பத்திரிகை இரு வாரங்களுக்கு முன்னர் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. சில மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாகவும், அதனை மறுத்த அதிகாரசபை முக்கியஸ்தர்களை பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனரல பத்திரிகையின் கடந்தவார ஆசிரியர் தலையங்கமும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவமளித்திருந்தது. சுகாதார அமைச்சருக்கு அப்படி கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்தே நாங்கள் அலசிப் பார்க்கின்றோம். இது விடயத்தில் அதிகாரசபை நிபுணர்கள் நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை ஆராய்ந்தால் இதனை அறிந்துகொள்ள முடியும்.

ராஜபக்ச ஆட்சியை தோற்கடிக்க  அடிப்படை பொது கொள்கையாக ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் இருந்தது. ராஜபக்ச ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதே தமது பிரதான குறிக்கோள் என்று ஆட்சியை பிடித்த புதிய ஆட்சியாளர்கள் முன்னைய ஆட்சிக்கு மேலாக ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பவர்களாக மாறி உள்ளனர். இந்த அரசிடமிருந்து ஜனநாயக உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக போராடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும்; இடதுசாரி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், கலைஞர்கள் பல்வேறு குழுக்கள் இணைந்து ஜனநாயக்திற்காக போராட புதிய படையினை அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13-06-2016) கொழும்பு தேசிய நூல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊரான ஊர் இழந்தேன்

ஒத்தப்பனை தோப்பிழந்தேன்

பேரான கண்டியிலே

பெத்த தாயே நா மறந்தேன்

சி.கே. வேலுப்பிள்ளை அவர்கள் தொகுத்த "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்னும் தொகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் மலைகளிற்கு வயிற்றுப்பசி தீர்க்க வந்து வாழ்விழந்த ஒரு தோட்டத்தொழிலாளியின் துயரம் இவ்வாறு நாட்டார்பாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. "இந்தியாவில் அப்போது கடும் பஞ்சமும், வரட்சியும் நிலவியதால் அங்கிருந்த மக்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரக்கூடியதாக இருந்தது.

ஊரான ஊர் இழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே 
பெத்த தாயே நா மறந்தேன்
 
 
சி.கே. வேலுப்பிள்ளை அவர்கள் தொகுத்த "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்னும் தொகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் மலைகளிற்கு வயிற்றுப்பசி தீர்க்க வந்து வாழ்விழந்த ஒரு தோட்டத்தொழிலாளியின் துயரம் இவ்வாறு நாட்டார்பாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. "இந்தியாவில் அப்போது கடும் பஞ்சமும் , வரட்சியும் நிலவியதால் அங்கிருந்த மக்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரக்கூடியதாக இருந்தது. இந்நிலைமைகளைப் பயன்படுத்தி பிரிட்டிசார் தென்னியாவிலிருந்து "மலிவான கூலிகளை" வரவழைப்பதற்கு பல வஞ்சகமான உபாயங்களை கையாண்டனர். தமிழ் தரகர்களை இப்பணிக்கு அவர்கள் பயன்படுத்தினர். இத்தரகர்கள் தென்னிந்தியர்களை ஆசை காட்டி ஏமாற்றி அழைத்து வந்தனர்". (க.மோகன்ராஜ், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்).
 
தமிழ்நாட்டின் ஏழை மக்களை 1840 களில் "தமிழ்த்தரகர்கள்" பிரித்தானிய காலனித்துவவாதிகளின் எலும்புத்துண்டுகளிற்காக ஏமாற்றி அனுப்பி வைத்தனர். இன்று 2016 இலும் அவர்கள் எமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பிரித்தானிய காலனித்துவாதிகளிற்கு கால் கழுவிய தரகர்களின் இடத்தில் இலங்கையின் மக்கள் விரோத, இனவெறியர்களிற்கு சேவகம் செய்யும் மலையகத் தமிழ் தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள் என்னும் ஒட்டுண்ணிகள் மலையக மக்களை ஏமாற்றி வயிறு பிழைக்கிறார்கள்.
 
மலையக தோட்டத்தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதற்கு தோட்டத் துரைமார்களும், பிரித்தானிய காலனித்துவ அரசும் அனுமதிக்கவிலை. நடேச ஐயர் என்னும் முற்போக்குவாதி, அக்காலத்தில் இடதுசாரிக் கட்சியாக இருந்த இலங்கை தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர் தொழிலாளர்களை அணி சேர்த்து தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் மூலம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வென்றெடுத்தனர். ஆனால் மலையக மக்களின் போராட்டங்களினாலும், நடேச ஐயரின் உழைப்பினாலும் கிடைத்த தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகளை வலதுசாரிகள் கைப்பற்றிக் கொண்டனர். அநகாரிக தர்மபாலா, டி.எஸ் சேனநாயக்கா, கன்னங்காரா போன்றோர் முன்னெடுத்த இந்திய எதிர்ப்பு வாதத்திற்கு எதிராக மலையக மக்கள் மத்தியில் இந்தியர் - இலங்கையர் தேசியவாதத்தை முன் வைத்து பெரி. சுந்தரம் தலைமையிலான இலங்கை - இந்தியர் காங்கிரஸ் தொழிற்சங்கம் என்னும் பிற்போக்குவாதிகள் மலையக மக்களை காட்டிக் கொடுக்கும் அரசியலை தொடக்கி வைத்தனர்.
 
தோட்டத்தொழிலாளர்கள் மிக மோசமாக சுரண்டப்படுவதை எதிர்த்து சமசமாசக் கட்சி, இலங்கை தொழிலாளர் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாகப் போராடின. "ஐரோப்பிய தோட்டத்துரைமாருக்கு வாக்குரிமை அளிப்பதில் அவர்களிற்கு (இலங்கை அரசிற்கு) எத்தகைய ஆட்சேபமும் இல்லை. சொத்துடையோரும், மக்களைச் சுரண்டுபவரும் வாக்குரிமை பெறுகின்றனர். ஏழைத் தொழிலாளிக்கோ வாக்குரிமை மறுக்கப்படுகிறது. இந்தியத் தொழிலாளரும், இந்நாட்டிலுள்ள அதிகளவு மக்களான விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒரே வகையானவர்கள். இந்தியராயினும், இலங்கையினராயினும் போராட்டம் முதலாளி வர்க்கத்திற்கு எதிரானதே" என்று சமசமாசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி என். எம். பெரரா அரச கவுன்சிலில் பேசினார். (குமாரி ஜெயவர்த்தனா, மலையகத் தமிழ் மக்கள்).
 
இவ்வாறு இலங்கையின் இடதுசாரிகள் இலங்கையின் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு முதலாளித்துவத்திற்கும், இனவாதத்திற்கு எதிராக போராட வேண்டியதன் தேவை குறித்து பேசியும், போராட்டங்களை முன்னெடுத்தும் வந்த போது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வணிகர்கள், தோட்ட உரிமையாளர்கள் என்னும் பிழைப்புவாதிகள், அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமான தேசியவாதத்தை முன்னெடுத்து மலையக தோட்டத் தொழிலாளர்களை இலங்கையின் உழைக்கும் மக்களுடன் இணையவிடாமல் தடுத்தனர்.
 
தோட்டத் தொழிலாளர்களை "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக" பிரித்தானியர்கள் சுரண்டியபோது அவர்களின் கைக்கூலிகளாக "கங்காணிகள்" என்னும் பதவியில் இருந்து ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் களவெடுத்து சேர்த்த பணத்திலேயே இந்த தேசியவாதிகள் தோட்ட உரிமையாளர்கள் ஆகினார்கள். "தோட்டத்துரையிடமிருந்து பெரிய கங்காணியே தனது தொழிலாளர் கோஸ்டிக்குரிய சம்பளத்தை வாங்குவார். அப்பொழுது தோட்டத் தொழிலாளரிடையே நூறு வீதம் கல்வியறிவின்மை நிலவியது. இவர்களது எழுத்தறிவின்மையைப் பயன்படுத்தி, "வெள்ளைக் கம்பளி" வாங்கிய கணக்கு, "கறுப்புக் கம்பளி" வாங்கிய கணக்கு என்று கள்ளக் கணக்கெழுதி சம்பளத் தொகை முழுவதையும் பெரிய கங்காணி அபகரித்துக் கொள்ளுவார். என்றுமே தொழிலாளியால் கடனில் இருந்து மீள முடியாது". (க. மோகன்ராஜ், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்). இப்படி தன் சக இந்திய தமிழ் தொழிலாளியை சுரண்டிய தன்னினம் தின்னி கங்காணிகள், பின்பு தொழிற்சங்கங்கள் மூலம் பணமும், பதவியும் பெறலாம் என்ற நிலை வந்த போது இந்தியத் தேசியம், மலையகத் தமிழ் என்று பாசமலர்களாகி தேசியக்காரர்கள் வேசம் போட்டனர்.
 
மலையக தமிழ் மக்களை தான் இறக்கும் வரை ஏமாற்றி பிழைப்பு நடத்திய செளமியமூர்த்தி தொண்டைமானின் தந்தை, கறுப்பையா தொண்டைமான் இப்படி கங்காணியாக இருந்து தோட்ட உரிமையாளர் ஆனவர். ஒரு தோட்ட உரிமையாளனான தொண்டைமான், ஏழைத் தோட்ட தொழிலாளர்களின் தலைவனாக இருந்த கொடுமை பல லட்சம் மலையக மக்களின் வாழ்வை மீள முடியா அவலத்தில் தள்ளியது. " காங்கிரசின் தலைமையை அதனைக் கைப்பற்றிய காலம் முதல் விடாப்பிடியாக தன் கைக்குள்ளேயே வைத்துள்ள தொண்டமானின் சாகசம் சாதித்துவேசம், பணத்திமிர் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே வேரூன்றி ஓங்கியது." என்று இரா. சிவலிங்கம் அவர்கள் சி.வி. வேலுப்பிள்ளையின் "நாடற்றவர் கதை" நூலிற்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
 
ஏழை மலையக தோட்டத் தொழிலாளர்களிடம் தொழிற்சங்க சந்தாப்பணம் என்று கொள்ளையடித்த பணமும், அவர்கள் போட்ட வாக்குப்பிச்சையிலே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பெற்றது போதாதென்று மலையக மக்களை டி.எஸ். சேனநாயக்காவுடன் சேர்ந்து நாடற்றவர்களாக்கியவனும், கடைந்தெடுத்த இனவாதியும், தமிழ் மக்களை இனக்கலவரத்தில் கொன்றவனுமாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட மந்திரிப் பதவி என்னும் எலும்புத்துண்டிற்கு வாலாட்டும் அளவிற்கு தொண்டமானின் துரோக அரசியல் தொடர்ந்தது.
 
மலையக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதை செந்தில் தொண்டமான், மனோ கணேசன் என்று இன்றைய அரசியல்வாதிகள் அப்படியே தொடர்கிறார்கள். இவர்கள் தொண்டமான் போலவே மக்கள் விரோத ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து மலையக மக்களின் ஏழ்மையைப் போக்குவார்களாம்; பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்களாம். ஆனால் இவர்கள் மந்திரிகளாகிறார்களே தவிர மலையக மக்கள் மாறா வறுமையில் தான் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.
 
"தோட்டத் தொழிலாளர்கள் இங்குள்ள ஏனைய மக்கள் போன்று சாதாரண வீடுகளில் வாழவில்லை. "லயன்" எனப்படும் அறைகளிலேயே அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி "லயன்களில்" 10 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஒரு அறையும்; 5 அடி அகலம் கொண்ட ஒரு வராந்தாவும் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும்". (இரா. சிவச்சந்திரன், மலையகத் தமிழ் மக்கள்). மனித வாழ்க்கைக்கு உதவாத இந்த லயன்களில் வாழும் மக்கள் பல்வேறு உடலியல், உளவியல் தாக்கங்களிற்கு உட்பட்டுள்ளனர். பல லயன்கள் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் ஏற்படும் மண்சரிவின் காரணமாக பலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கை,  மலையக மக்களும் எதிர்காலமும், 1992).
 
இட நெருக்கடி, சுகாதாரக் குறைபாடுகள் மட்டுமல்ல மண்சரிவினால் ஏற்படும் மரணங்களுடனுடன் தான் மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் வெள்ளத்திலும், மண்சரிவிலும் அவதிப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளி ஒருவர் அங்கு வந்த மாகாணசபை உறுப்பினர்களிடம் "பாதுகாப்பான வீடு கிடைக்க வழி செய்யுங்கள்" என்று கேட்டார். "அரசாங்கத்திடம் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்ற வழக்கமான மறுமொழி வந்தது. அந்த தொழிலாளி எதிர்த்துப் பேசிய போது " எதிர்த்து பேசாதே, உன்னால் கட்டித் தர முடியுமா" என்று ஒரு கைத்தடி ஊளையிட்டது. "நாய்களே, வீடுகள் கட்டித் தருவோம்" என்று நீங்கள் தானே தொழிலாளர்களிடம் வாக்குப்பிச்சை கேட்டீர்கள்.
 
நேற்று காலையில் ஒரு தமிழ் ஊடக நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் ஒரு விஷயம் சொன்னார். “யாழ்ப்பாணம் போய் நேற்றுதான் கொழும்பு வந்தேன். அங்கே ஒரு செய்தி பிரபலமாக வலம் வருகிறது” என்றார். “பீடிகை போதும். செய்தியைத்தான் சொல்லுங்கள்” என்றேன். “இந்த நல்லாட்சியிலும் நாம் எதிர்பார்த்தவை எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அரசுக்கு அழுத்தம் தந்து வேகத்தை அதிகரிக்க மக்களை அணி திரட்டி ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டும் என ஜனவரியில் இருந்து கட்சிக்குள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒன்றும் நடந்தபாடில்லை. மக்கள் போராட்டம் என்று வெறும் வாய்ப்பாட்டு பாட இனி அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் பாருங்கள். அரசுக்குள் அமைச்சராக இருந்துக்கொண்டே மனோ கணேசன், தன் ஏனைய சகபாடிகளையும் இழுத்துக்கொண்டு வந்து தலைநகர் கொழும்பில் பகிரங்க போராட்டம் நடத்தி விட்டார். அவர் செய்தது உண்மையில் தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தரும் நடவடிக்கைதான். என்ன சொன்னாலும் அதுதான் உண்மை. ஆனால், உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நாம்தான் என்று சொல்லிக்கொண்டு, நாம் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சும்மாவே இருக்கின்றோம்” என்று ஒரு பிரபல தமிழ்த்தலைவர் யாழ்ப்பாணத்தில் குறைப்பட்டு நொந்துக்கொண்டாராம். “இதை என்னிடம் சொல்லாதீர்கள் பிரதர். ஒருவேளை போராட்டம் வேண்டாம் என்றுகூட அவர்கள் நினைக்கலாம். அதுபற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், முடியுமானால் உங்கள் பத்திரிக்கையில் இதை எழுதுங்கள்” என்றேன். “ஏனென்றால், அங்கே உள்ளவர்களுக்கு புரியாவிட்டாலும்கூட பரவாயில்லை. இங்கே உள்ள ஒருசில கண்ணிருந்தும் பார்வை இல்லாத குருடர்களுக்கும், காதிருந்தும் செவிப்புலன் இல்லாத செவிடர்களுக்கும், வாய் இருந்தும் பேசத்தெரியாத ஊமைகளுக்கும், மூளை இருந்தும் சிந்திக்க தெரியாத முட்டாள்களுக்கும், இதயம் இருந்தும் நல்லெண்ணம் இல்லாத காழ்ப்புணர்ச்சிக்காரர்களுக்கும் புரியட்டும்” என்றேன்.
 
இது வடிவேலு தனக்குத் தானே "பீ கேர்புல்" சொன்னது மாதிரி அண்ணன் மனோ கணேசன் தனக்குத் தானே "நீ தலைவண்டா" என்று சொல்லிக் கொண்ட பதிவு. மலையக மக்களை மிக மோசமாக சுரண்டிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு அவர் போராட்டம் நடத்துகிறாராம். அவர்கள் எப்படியான அயோக்கியர்கள் என்பதும், மக்கள் விரோதிகள் என்பதும் தெரியாதது போல் கதை விடும் அண்ணன் எல்லாம் நல்லெண்ணம் இல்லாதவர்களைப் பற்றி பேசும் கொடுமையை என்னவென்று சொல்ல!.
 
கூனி அடிச்ச மலை
கோப்பிக் கன்று போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி
 
யாரிடம் சொல்கிறாள் இவள்? அல்லது யாரிடம் முறையிடுகிறாள், காலத்திடமா அல்லது தனது இளைய தலைமுறையிடமா? (சி.வி. வேலுப்பிள்ளை, மலைநாட்டு மக்கள் பாடல்கள்). அந்த தங்கை தனது தமையனை மலைகளிடம் பறி கொடுத்தாள். மலையக மக்கள் தமது வாழ்க்கையை தலைமுறை, தலைமுறையாக முதலாளிகளிடமும், இனவாதிகளிடமும், தன்னினம் தின்னிகளான மலையக அரசியல்வாதிகளிடமும் பறி கொடுத்து வருகிறார்கள். தொண்டமான்களை புறந்தள்ளி நடேச ஐயர் போன்ற போராளிகள் முன் வந்து போராட வேண்டும்.

தனது குறுகிய கால (9 மாதங்கள்) இயக்க வாழ்க்கையையும், அக்கால அரசியல் சூழுலையும் நேர்மையான, பக்க சார்பற்ற சுய மீளாய்வுக்குட்படுத்திய ஆசிரியரின் முயற்ச்சி பாராட்டுக்குரியது. தான் சார்ந்த இயக்கத்தையும், ஏனைய இயக்கங்களையும் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடுநிலை தவறாது விமர்சிப்பது மெச்சத்கது. இப்படியான கண்ணோட்டங்களை இந்நாட்களில் வாசிக்கக் கிடைப்பது அரிது. சமகாலத்தில் வெளியாகும் போராட்டம் தொடர்பான நூல்களில் தவறுகளை நியாயப்படுத்தல் பலவவீன்னங்களை மிகைப்படுத்தல், ஒருசிலரை குறிவைத்து தாக்குதல் போன்னறவை அதிகமாகக்காணப்படும். இந்நூல் அதற்கு விதிவிலக்கு.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு, சட்டம், நீதி.. இதை அடிப்படையாகக் கொண்ட அமைதியையே அரசு அமைதியாக முன்வைக்கின்றது. ஆளும் கூட்டம் மக்களால் "தேர்தலில்" தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில், அவர்களின் கொள்கைகளும் முடிவுகளும் கேள்விக்கு இடமற்றவையாக "ஜனநாயகம்" வரையறுக்கின்றது. இதை கேள்விக்குள்ளாக்கி மக்கள் போராடும் போது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றனர். பிரான்ஸ் முதல் இலங்கை வரை, இதற்கு உலகில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

புத்தரின் படுகொலை!

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

ஒவ்வொரு மனிதனும் நீதி நியாயத்தைத்தான் கேட்டு நிற்கின்றான். நாட்டின் அதிகார பீடத்திலுள்ளவர்கள் தான் அதனை நிறைவேற்ற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களிடமே நீதி நியாயத்தை கேட்க வேண்டிய நிலையில் இந்நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்தும் ஜனநாயகத்தை கேட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினையும் பயன்படுத்தியே இந்நாள் ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். குறிப்பாக, ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினைகள் அன்றைய தேர்தல் மேடைகளில் முழங்கியது எமக்கு நினைவிருக்கின்றது.

இன்று 02-06-2016, பண்டாரவளை நகரத்தில் புதிய ஆட்சியாளர்கள் தேர்தல் கால மேடைகளில் உறுதி அளித்த ஜனநாயக உரிமைகளை மக்களிற்கு உறுதிப்படுத்துமாறு கோரி கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. உறுதி அளித்த ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கு மாறாக மைத்திரி - ரணில் அரசு; மகிந்த அரசு போல் ஆட்சியினை தொடர முயற்சிக்கின்றது. மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த, இந்த அரசிற்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு மற்றும் களுத்துறையில் பொது மக்களின் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" மற்றும் "அடக்குமுறை சட்டங்களை சுருட்டிக் கொள்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

உழைப்பை இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்கு பிரஞ்சு அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான தொழிலாளர்களின் தொடர் போராட்டங்கள், உலகெங்குமான பொதுக்கவனத்தை ஈர்த்திருக்கின்றது. உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான மனித நடத்தையை ஒரு நாளும் அடிமைப்படுத்த முடியாது என்ற உண்மையை இந்தப் போராட்டங்கள் பறைசாற்றி நிற்கின்றது.

பொருளாதார அமைச்சர் மைக்குரான் (Macron) "நல்ல கூலி தான் உழைப்பு" ("La meilleure façon de se payer un costard c'est de travailler" - "The best way to pay for a suit is to work") என்று, தொழிற்சங்க உறுப்பினருடனான நடந்த தர்க்கத்தில் கூறுமளவுக்கு, ஆளும் வர்க்கம் வக்கரித்து நிற்கின்றது. கூலி என்பது உழைப்பில் கிடைக்கின்றதே ஒழிய, கூலி கொடுப்பதால் உழைப்பு வருவதில்லை. முதலாளி தனது பணத்தில் கூலி கொடுப்பதில்லை. உழைப்பைச் சுரண்டி அதில் ஒரு பகுதியை கொடுப்பது தான் கூலி. இந்த அடிப்படை உண்மையை மறுக்கின்ற பிரஞ்சு அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றது.

இளமைக் காலத்தில் காணும் கனவு போல் வேறு பருவங்கள் எமது வாழ்வில் இருந்தது இல்லை. இளமை பருவத்தில் காணும் அக் கனவை நனவாக்கிப் பார்ப்பதற்காக எமது வாழ்நாள் முழுவதும் முயற்சிக்கும் எம்மில் அநேகம் பேருக்கு அக்கனவு கனவாக மட்டுமே இருக்கின்றது. பல அரசியல்வாதிகள் இளைஞர்களை தங்களது எடு பிடிகளாக வைத்திருப்பது, எமது கனவை எமக்கே விற்பதற்கே. முதலாளித்துவ கம்பனிகள் அவர்களது பண்டங்களை எமக்கு விற்பதும், எமது கனவை அவர்களின் பிரச்சாரத்திற்கு பாவிப்பதன் மூலமே.

எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு" புத்தகத்தின் முன்னுரை இது.

சுட்டெரிக்கும் சூரியன்; வயல்களிற்கு, தோட்டங்களிற்கு, கடற்கரைகளிற்கு, கட்டிடவேலைகளிற்கு, அலுவலகங்களிற்கு செல்லும் மனிதர்கள்; பள்ளி செல்லும் மாணவர்கள், மாணவிகள்; பின்னேரங்களில் மதில்களில் சாய்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசும் இளைஞர்கள்; மின்னல் வந்து போவது போல போய் வரும் பெண்கள் இவை எல்லாம் தான் எல்லோரையும் போல எல்லாளனின் உலகமாக இருந்தது. ஆனால் ஒரு நெருங்கிய சொந்தக்காரனைப் போல மரணம் அடிக்கடி எல்லாளனின் உலகத்திற்கு, தமிழர்களின் உலகத்திற்கு வந்து போனது. முரசுகள் முழங்கிக் கொண்டு போர் வந்தது. காற்றுக் கலைத்த கடற்கரை மணல் போல வாழ்க்கை கலைந்து போனது. முனை முறிந்து போன நட்சத்திரங்கள். மொட்டைப்பனை மரங்களின் மேல் பாதி உடைந்த நிலா என இயல்பு வாழ்க்கை அறுந்து வீழ்ந்தது.

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பிரச்சாரச் செயலரும், செயற்பாட்டாளருமான தோழர் புபுது ஜெயகொடவும் தோழர் சுஜித் குருவித்தவும் இன்று மே 25 ம் திகதி மருதானைப் பொலிசாரினால் அபாண்டமான சதி நோக்கு கொண்ட பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டு, குற்றமாகச் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலர் புபுது ஜயகொட மற்றும் கட்சி உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னிலை சோசலிச கட்சி மீதான அடக்குமுறை தொடர்கின்றது. குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு குமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அவருக்கு இந்த நாட்டு குடியுரிமையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டகாரர்களிற்கும் அரச படைகளிற்கும் ஏற்ப்பட்ட முறுகல் நிலையில் அலுவலக கண்ணாடிகள் நொருங்கின.

முன்னிலை சோசலிசக்கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள், மாணவர் போராட்டங்களை முடக்க மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக போலி குற்றச்சாட்டுக்களை இந்த மூவர் மீதும் சுமத்தும் நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE