Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு பெரும்பான்மையினர் வாக்களித்ததின் பின்னர் இங்கிலாந்தில் வாழும் ஆங்கிலேயர் அல்லாத மக்களின் மேலான இன, நிறவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் என்பது பெருநிறுவன முதலாளிகள தடங்கலின்றி கொள்ளையடிப்பதற்கான திறந்து விடப்பட்ட, கட்டுகளற்ற ஒரு சந்தை. ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் ஐரோப்பாவிற்குள் எல்லைகள் அற்று சுதந்திரமாக எங்கும் குடியேறலாம் என்பது ஏழைத் தொழிலாளிகளை மலிவான ஊதியத்திற்கு வேலை வாங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது.

புலம்பெயர் நிதியுதவிகள் சரியான திசையில் இன்று பயணிக்கவில்லை. ஒரு கையால் வாங்கி மறு கையை ஏந்தும் மனிதர்களையும், சமூகத்தையும் உருவாக்குவதற்கு எமது உதவிகள் அமையக் கூடாது. சமூக உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் உதவிகள் பெறுவதையும் இதன் அடிப்படையில் கொடுப்பதையும் அடிப்படையாகக் கொண்டு, உதவிகள் சமூகத் தன்மை பெற்றாகவேண்டும்.

ஜனநாயகத்துக்கான ஆர்பாட்டக்காரர்களின் முதலாவது கருத்தரங்கு  இன்று (30.06.2016)  கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  புதிய ஜனநாயக மார்க்சிய லெனிய கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி உட்பட பல இடதுசாரி கட்சிகளுடன் அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் ,ஆசிரிய சங்கங்கள் உட்பட கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நவதாராளமய உபாயங்களுக்கேற்ப பொருளாதாரத்தை சீர்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளின் போதும் மக்கள் எதிர்ப்பு அதிகரிப்பதினால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இன்றைய கூட்டரசாங்கம் அவற்றை அடக்குவதாக அச்சுறுத்தல் விடுக்கின்றது.

ஜனநாயகம் குறித்து இதுவரை போர்த்திக் கொண்டிருந்த பசுத்தோலை நீக்கிவிட்டு போராடும் சக்திகள் மீது அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் விடுத்துக் கொண்டிருக்கின்றது.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!!

கடந்த வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவர தயாராகும் நவதாராளமய மறுசீரமைப்புகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து கிளம்பும் போராட்டத்தை காட்டிக் கொடுக்க தயாராவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களினது ஓய்வூதியம் வெட்டப்படுதல், தனியார் துறை ஊழியர்களின் 8 மணி நேர வேலை நாளை இரத்துச் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானதும், பொதுவாக அரசாங்கம் ஆலோசித்துள்ள தொழிலாளர் உரிமைகளை இரத்துச் செய்யும் சட்டத் திருத்தங்களுக்கு எதிரானதுமான போராட்டத்தை தவறாக வழிநடத்தி, காட்டிக் கொடுக்க அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தன.

ஒரு மனிதனின் சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றது? பிறக்கும் போதே இருப்பதில்லை. கற்பனையில் இருந்து தோன்றுவதில்லை. சமூகத்தின் அங்கமாக மனிதன் இயங்கும் போது அதில் இருந்தே சிந்தனை தோற்றம் பெறுகின்றது. அதேநேரம் சமூகத்தில் தொடர்ந்து இயங்குவதாலே சரியான சிந்தனையாக உருவாக முடியும். சிந்தனை செயல் வடிவம் பெறும் போது இருக்கும் நிலையில் இருந்து மாற்றம் நிகழ்கின்றது.

வல்லரசுகள், பெரு நிறுவனங்கள் மக்களைச் சுரண்டுப் போது மக்கள் தமது கொள்ளைகளிற்கு எதிராக கிளர்ந்து போராடாமல் இருப்பதற்காக சமுகசேவை செய்வதாக காட்டிக் கொள்ளுவார்கள். அறிவாளிகள், கலைஞர்கள், விளையாட்டு துறையினர் என்று பலரை தமது தூதுவர்களாக அனுப்பி மக்களிற்கு மூளைச்சலவை செய்ய முயற்சி செய்வார்கள். தாம் கொள்ளையடிக்கும் நாடுகளில் இருக்கும் தமது கைக்கூலிகளான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை தமது நாடுகளிற்கு கூப்பிட்டு தமது நாடுகள் பூலோக சொர்க்கம் என்று எழுதச் சொல்வார்கள். ஆய்வு மையங்கள், சிந்தனையாளர்கள் மன்றங்கள் என்ற பெயர்களில் முதலாளித்துவக் கொள்ளைகளை நியாயப்படுத்தும் கொள்கைகளை ஜனநாயகம் என்று வெளிவிடுவார்கள்.

"ஜனநாயகம்" என்ற வார்த்தை பெரும்பாலானோருக்கு புதிய வார்த்தையல்ல. கடந்த தேர்தல்களின்போது ஜனநாயகம் குறித்த பல்வேறு பகுப்பாய்வுகள், வாக்குறுதிகள், மற்றும் விமர்சனங்கள் அரசியல் மேடைகளிலெல்லாம் முழங்கின. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும்  ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை பிரதான முழக்கமாக இருந்தது. கடந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுள் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. அதேபோன்று, வெள்ளை வான் கலாச்சாரம், காணமலாக்கல், கடத்தல், கொலை, அரசியல் பழிவாங்கல், ஊடக அடக்குமுறை போன்றவற்றால் இன்னல்களுக்குள்ளாக்கப்பட்ட சமூக ஜனநாயகம் சம்பந்தமான அபிலாஷைகளை பயன்படுத்தி புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பதினெட்டு மாதங்களின் பின்பு இன்று என்ன நடக்கின்றது? ஜனநாயகம் சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளனவா அல்லது ஜனநாயகம் மேலும் ஆபத்தில் வீழ்ந்துள்ளதா? அது குறித்து அறிந்து கொள்ள பகுத்தறிவை பயன்படுத்துங்கள் என நாம் உங்களை அழைக்கின்றோம்.

இன்று மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியினை மூடும்படி கோரி மருத்துவ மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்றது. இதற்கு முன்னரும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிற்கு எதிராக பல ஆர்ப்பாட்ட பேரணிகள், கண்டனங்கள், போராட்டங்கள் பல தடவைகள் நடைபெற்றுள்ளன.

இன்று (23/6/2016) யாழ்ப்பாணத்தில் மாணவ அமைப்புக்கள், ஆசிரிய சங்கங்கள், இடதுசாரிய கட்சிகள், கலைஞர்கள் புத்திசீவிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதற்க்காக உருவான போராட்ட அமைப்பினர் பரவலாக துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ் நகரத்தில் பொதுச்சந்தை, விற்பனை நிலையங்கள், பஸ் நிலையம் போன்ற பல இடங்களில்  "ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?" என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தினை பரவலாக விநியோகித்தனர்.

கொழும்பு சுதந்திர வர்த்தக  வலயத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது உரிமைகளிற்காகவும் அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை மேற் கொண்டிருந்தனர். இவர்களிற்கு ஆதரவாக இடதுசாரிய கட்சிகள், முற்போக்காளர்கள், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக கூடிய ஜனநாயக்திற்காக போராடும் அமைப்பினர்," ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?" என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தினை பரவலாக விநியோகித்தனர்.  ஜனநாயக உரிமைகள் சார்பாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இந்த குழுவில்  இடது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த நாளைய பெருந்தலைகளான பிரித்தானியாவும், பிரான்சும் முன்னுக்கு நின்று 10.01.1920 அன்று தொடங்கினார்கள். (League of Nations, Wikipedia). "ரம்பையின் காதல்" படத்தில் "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் சுடுகாட்டில் ஒலிப்பது போல தங்களால் கொல்லப்பட்டவர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு இந்த கொலனித்துவ கொலைகாரர்கள் "சமாதானம் உலவும் இடமே" என்று உலக நாடுகள் சங்கத்தில் நின்று பாடினார்கள்.

வடக்கில் சொந்த இன மக்களை சாதி ரீதியாக கூர்மையாகப் பிளக்கின்ற இன்றைய இந்து மதவாத அரசியல் பின்னணியில், சிங்கள மொழியைக் கற்பது பற்றி முதலமைச்சருக்கு திடீர் ஞானம் பிறந்திருக்கின்றது. பிற மொழியையும், மக்களையும் நேசிப்பதை துரோகமாகக் காட்டி தமக்கு வேண்டாத அரசியல்வாதிகளை கொன்றவர்கள், பிற மொழி பேசும் மக்களை கொன்று குவிப்பதையே விடுதலைப் போராட்டம் என்றவர்கள், இன்று எதற்காக சிங்கள மொழியினை கற்கும் படி கோருகின்றனர்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழம் போன்ற வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற உலக மகா அயோக்கியர்களினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட எம் மக்களிற்கு இந்த மலைவிழுங்கி மகாதேவன்கள் நீதி பெற்றுத் தருவார்கள் என்று இன்றைக்கு வரைக்கும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தான் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மக்களை கொன்றார்கள் என்ற உண்மையை, ஆயிரக்கணக்கான எம்மக்களின் மரணங்களை தூசியை தட்டி விட்டு போவது போல போய் தம் பிழைப்புவாதங்களை தொடரலாம் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பதவிகளிற்காகவும், பணத்திற்காகவும் பொய் சொல்கிறார்கள்.

ஐரோப்பிய பொருளாதாரக் கட்டமைப்பில் பிரிட்டன் தொடர்வதா இல்லையா என்பதை தெரிவு செய்யுமாறு பிரிட்டிஸ் மக்களை, மூலதனம் கோருகின்றது. பாரிய சந்தையை, அதற்கு இருக்கின்ற தடைகளை அகற்றி, உள்நாட்டுக் கட்டுப்பாடுகளை அகற்றி, அகல விஸ்தரிப்பதை மையமாகக் கொண்டதே ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைவாகும். மீறி மனிதர்களை எல்லைகள் கடந்து ஓன்றிணைப்பதை குறிக்கோளாகக் கொண்டதல்ல. தேசியம், இனம், மதம், சாதி, நிறம் என்ற எல்லைகளைக் கடந்து, மனிதர்களை மனிதனாக ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE