Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அடிதடி காரணமாக, பல்வேறு தரப்பினர் இனவாதத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவின் கையொப்பத்திலான அவ் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிங்கள-தமிழ் மாணவர் தொடர்பிலான முதலாம் வருட வரவேற்பு விருந்துபசாரத்தின் போது, கலாசார நிகழ்வு பயன்படுத்தியமைக்காக இரு சாராரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கலாசார நிகழ்வு ஒன்றுக்காக இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு கொள்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

இலங்கையின் கொடிய இனவெறி அரசுகளின் எம்மக்களின் மீதான கொடும்போரினால் கண் இழந்து, கேட்கும் புலன் இழந்து, பாய்ந்து துள்ளும் வயதில் பாதம் இழந்து, படிக்கும் வயதில் எடுத்து எழுத கை இழந்து, ஏங்கி ஏங்கி மனநிலை இழந்து என்று தம் எதிர்காலம் தெரியா குழந்தைகள் வன்னியில் உள்ள காப்பகம் ஒன்றில் சில நல்ல மனிதர்களின் உதவியுடன் வாழ்கிறார்கள். நாளைய நாட்கள் என்னாவாயிருக்கும் என்று அந்தக் குழந்தைகளிற்கு தெரியாமல் இருப்பது போலவே அந்த இல்லத்தை நடத்தும் அந்த நல்ல மனிதர்களிற்கும் தெரியவில்லை. மக்களிடம் இருந்தும், சில நிறுவனங்களிடம் இருந்தும் உதவிகள் பெற்று அந்த இல்லத்தை அவர்கள் நடத்துகிறார்கள். ஆனால் அந்த உதவிகள் அற்ற குளத்து அறுநீர் பறவைகளைப் போல் அருகி வருகின்றன.

சம உரிமை இயக்கத்தின் கையெழுத்துப் போராட்டமானது நேற்றைய தினம் (15/7/2016) மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது அதிகளவான பொதுமக்கள் குறித்த கையெழுத்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கி, கையெழுத்து இட்டுச்சென்றனர்.

சக மனிதனுக்கு உதவுவது ஒரு சமூக உணர்வு. சுய(தன்)நலத்தை முதன்மையாகக் கொண்ட தனிவுடமை அமைப்பில், மனித உணர்வுகள் காணாமல் போகின்றது. இந்தச் சூழலில் சமூக சார்ந்து உதவும் மனப்பான்மை அருகிவரும் அதேநேரம், உதவிகள் கூட சமூகம் சாராது தனிமனிதம் சார்ந்ததாகி வருகின்றது. இதனால் சமூகம் பயன் பெறுவதில்லை. மனித சிந்தனைகள், நடைமுறைகள், உதவிகள் அனைத்தும், சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து, சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவையாகும்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "கல்வி விற்பனையை நிறுத்து", "உடனடியாக மாலபே போலி பட்டக் கடையை மூடு", "மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து".. ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் இன்றும் (13-14/07/2016) தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மலையகத்தில் இருந்து வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெருமாள் கணேசன் என்னும் ஆசிரியர் அக்கராயன் மகாவித்தியாலயத்தில் தலைமை ஆசிரியராக கடமையாற்றுகிறார். அவருக்கு கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபராக செல்லுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நியமனக் கடிதம் வழங்கியிருக்கிறார். அக்கடிதத்தின் படி பெருமாள் கணேசன் 07.07.2016 தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். "கடமையை 07.07.2016 அன்று பொறுப்பேற்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும்போதே 06.07.2016 அன்றிரவு அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருக்கிறது. இதனையடுத்து, கணேசன் குறித்த பாடசாலையில் கடமை ஏற்பதைத் தவிர்த்தார்" என்று கவிஞரும், கிளிநொச்சி மாவட்டக்காரருமான கருணாகரன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

கடந்த மே மாதம் 02ம் திகதி அரசாங்கம் விதித்த வரிகளின் சுமையை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். ஒவ்வொரு பொருளினதும் விலை ஏறிக்கொண்டே போகின்றது. சுகாதார சேவைக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்கு, வைத்தியரை செனல் செய்ய, மருந்துகளுக்கு என்று சகலதிற்கும் புதிததாக 15% வரி விதிக்கப்பட்டது. தொலைபேசி கட்டணத்திற்கு விதித்துள்ள வரியை பார்த்தால் வயிறு பற்றி எரிகின்றது. தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கின்றது. மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது மட்டுமல்ல, வீட்டுக் கடனுக்கான வட்டி கடந்த நான்கு மாதங்களில் 9.3% லிருந்து 12.5%  அதிகரித்துள்ளது. தனியார் கடன் (Personal Loan) வட்டி 11% லிருந்து 17.5% வரை அதிகரித்துள்ளது. வாகனம் எடுப்பது எப்படியிருந்தாலும் வீட்டை கட்டிக் கொள்ளவும் முடியாத நிலை.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு சட்டத்தை ஆயுதமாக கையிலெடுத்துள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவை பொலிஸார் கைது செய்துள்ளமை குறித்து  கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"ஈழமாணவர் பொதுமன்றம் டேவிட்சனை பொலிஸ்காரங்கள் பிடிச்சுக் கொண்டு போய்விட்டாங்களாம்" என்று வாகைமரத்தடியில் நின்று கொண்டு இருக்கும் போது சந்திரன் ஓடி வந்து சொன்னான். அன்றிரவு கடைசி பஸ் போன பிறகு மதில் முழுக்க "டேவிட்சனை விடுதலை செய்" என்று எழுத முடிவு செய்து கலைந்தார்கள். அடுத்தநாள் காலை பள்ளிக்கூடம் போவதற்கு பஸ்சிற்கு காத்திருக்கையில் ஆறுமுகம் மாஸ்டர் வந்தார். "தம்பிமாரே டேவிட்சனை விடுதலை செய் எண்டு என்ரை மதிலிலே எழுதியிருக்கு. ஏன் நானோ அவரை பிடிச்சு வைச்சிருக்கிறேன், விடுதலை செய்யிறதுக்கு" என்றார். மதுரையில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் "இலங்கைத் தமிழ் மக்களின் இன்னல்களிற்கு தீர்வு காண தமிழ்நாட்டு அரசும், முதலமைச்சரும் உதவி செய்ய வேண்டும்" என்று இலங்கை கம்பன் கழக ஜெயராஜ் விழா மேடையில் இருந்த முதலமைச்சரான எம்.ஜி.ஆரை பார்த்து கேட்டபோது "ஏன் என்னைக் கேட்டோ போராட தொடங்கினீர்கள்" என்று கேட்ட தர்க்க நியாயம் ஆறுமுகம் மாஸ்டரின் குரலில் இருந்தது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகிரு வீரசேகர சற்று முன்னதாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்வியைத் தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக பரவலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களை பொலிஸ் படையினை ஏவிவிட்டு அடக்கி ஒடுக்கி வருகின்ற இந்த நல்லாட்சி அரசின் இன்னொரு பாய்ச்சல் தான் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையினைக் கைது செய்திருக்கும் நடவடிக்கையாகும்.கல்வியினை விலைபொருளாக்கி இலவச கல்விமுறைமைக்கு ஆப்பு வைக்கும் இந்த நல்லாட்சி அரசின் நடவடிக்கையினை எதிர்த்து தீவிரமாக மாணவர்கள் அணிதிரண்டு போராடுவது பொறுக்க முடியாத அரசின் கண்மூடித்தனமாக நடவடிக்கையே இதுவாகும். கல்வியை விற்றுக் கொள்ளையிட நினைக்கின்ற பெரும் பணமுதலைகளுக்காக மாணவர்களையே மிதிக்கத் துணிந்திருக்கிறது இந்த நல்லாட்சி அரசு. இந்த நல்லாட்சி அரசு யாருக்கு, இந்தப் பணமுதலைகளுக்கும் பெரும் மூலதனத்துக்கும் தான் நல்லாட்சி என்பது இதிலிருந்தே புரிகின்றதல்லவா?

அதிரும் வாள் வெட்டுகள், பெரியவர்கள் என்போர் குழந்தைகளைக் குதறும் பாலியல் வக்கிரங்கள். இவைகள் அண்மைய செய்திகளில் முதன்மையானதாக வெளிவருகின்றன. இக் குற்றங்களை இழைப்போரைத் தண்டிப்பதன் மூலம் குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம் என்பது, புலிகளின் வழி வந்த தமிழ்த்தேசிய சிந்தனை முறையாகும். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அரசு, நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனைகளால் இக்குற்றங்களை இல்லாது போக்குவதற்கான தீர்வைக் காண முடியும் என்று கூறுகின்றது. குற்றவாளிகள் தண்டனைகள் மூலம் தண்டிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கலாம். ஆனால் சமூகத்தில் புரையோடிவிட்ட இவ்வாறான போக்குகளை, தண்டனை மூலம் களைந்துவிட முடியாது என்பதே உண்மை. குற்றங்கள் உருவாகுவதற்காக அடிப்படைக் காரணிகள் களையப்பட வேண்டும்.

நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சியில் கனகபுரம் வீதி, டிப்போசந்தி, பரந்தன் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இதில் பல மக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவை வழங்கி இருந்தனர்.

இலங்கையின் மிகப்பெரும்பான்மையினரான ஏழை உழைக்கும் மக்களை மிகச் சிறுபான்மையினரான  ஒரு கூட்டம் அடக்கி ஆண்டு வறுமையில் வாழ விதித்திருக்கிறது. இனவாதம், மொழிவாதம், மதவாதம் பேசி தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை ஒருவரோடு இணைய விடாமல் செய்து எதிரிகளாக்கி இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்து தம் கொள்ளையைத் தொடருகிறது இந்த கொடியவர்களின் கூட்டம். இந்தக் கொடியவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு தடையாக உள்ள இனவாதம் களையப்பட வேண்டுமாயின் ஒரு பொது மேடை தேவையாகிறது.

அன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…

முழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.

அந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.

யாழ். பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (04/07/2016) காலை முதல் யுத்தப் பாதிப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும், இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி, சமவுரிமை இயக்கத்தினர் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அநேகமான மக்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

மலையக தொழிலாளர்களுக்கான 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவை தோட்ட கம்பனிகள் வழங்காமல் மாற்று திட்டத்தை முன்வைக்க முயற்சிப்பதாக முன்னணி சோசலிஷ சட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். ஹற்றனில் கடந்த  (29/06/2016) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE