Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையில் இன்று தினமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒன்று கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் - கவனயீர்ப்புப் போராட்டம் - மனுக் கொடுக்கும் ஊர்வலம் - மறியல் போராட்டம் - உண்ணாவிரப் போராட்டம் என்ற வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர்.

2009ல் யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவியிருந்தது. தோற்கடிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பரிகாசம் செய்யப்பட்டு பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.

இன்று 31-07-2016 கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மாநாடு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்ச்சிக் கல்லுரியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணா அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வில், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தமிக்க முனசிங்கா மற்றும் தென்னிலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இன்று கேகாலை, இரத்தினபுர மற்றும் ஊவா மாகாண நகரங்களை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் மாநாடு இடம்பெற்றது. தமிக்க முனசிங்க அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இம் மாநாட்டில் தொழிலாளர் போராட்ட மையத்திய நிலையத்தின் சார்பாக துமிந்த நாகமுவ  மற்றும் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,  ஊவா மாகாண புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் 1983 இலிருந்து பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளிலே தமிழில் நவீன நாடகங்களை தரத்துடனும், தம் நாடகங்கள் சொல்லும் சேதிகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும், விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கையும் கொண்டு நிகழ்த்தி வருகிறது. இவர்கள் லண்டனில் தங்கள் பாதங்களை பதித்துக் கொண்டு உலகின் பல நாடுகளிலும் நாடக விழாக்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள். கனடா, அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, பிரான்சு, நோர்வே, ஜெர்மனி ஆகிய நாடுகளில் முன்னோடி முதல் தமிழ் நாடக விழாக்களை தமிழ் அவைக்காற்று கலைக்கழகமே நடத்தியது.

எனது மயிர் பொசுங்கி விட்டது

எனது தோல் கருகி விட்டது

எனது காதுச்சோணைகள் கருகி விட்டன

இந்த ரணங்களோடு தான்

மீண்டும் எழுந்திருக்கின்றேன்

 

இந்த ஊனங்களின்

தழும்புகளுடன் தான் நான் இனி வாழவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா! 

"வசந்தத்தை தேடி" 

செப்டம்பர் 23, 24, 25 

நிகழ்வுகளுக்கான குறிப்பான நேரங்கள் மற்றும் இடங்கள் பின்னர் அறியத்தரப்படும் 

நிகழ்ச்சி நிரல் 

1.சமவுரிமை இயக்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் - கண்காட்சி 

2.இனவாதத்திற்கு எதிரான புகைப்படக் கண்காட்சி 

3.இனவாதம் குறித்து சித்திரக் கண்காட்சி 

பொய்யான பட்டங்களை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தலை எதிர்த்தும், கல்வியை தனியார் மயப்படுத்தலையும் எதிர்த்தும், பாடசாலைகளில் அநியாய கட்டண வசூலை எதிர்த்தும் நேற்று 27.07.2016 பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வல போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஹைலெவல் வீதி இருந்து தொடங்கி கொழும்பு நகரத்தின் ஊடாக நுகேகொட நோக்கி நடாத்தப்பட்டது. அதன் பின் பொதுக் கூட்டம் சமரக்கோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது.

நேற்றைய தினம் (27/7/16) கொழும்பில் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவும்,  இலவசக் கல்வியை அழிப்பதற்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தினை நடாத்தியிருந்தனர்.

வலம்புரி பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் பல்கலைக்கழக வன்முறைக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வில் "யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் காதல் கலாச்சாரம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே நியாயமும் தர்மமுமாகும்." என்கின்றது. இங்கு வன்முறை மூலமும், தமிழரின் பெயரில் வலம்புரி கோரும் "தர்மமும்", "நியாயமும்", யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் காதலிக்கக் கூடாது, தட்டு தடுமாறி தமிழரை காதலிப்பதை எண்ணியும் பார்க்கக் கூடாது. அதாவது தமிழ் மக்களின் சாதிக் கலாச்சாரத்தை சிங்கள மாணவர்களின் வாழ்க்கைமுறை மீறுவது தான் பிரச்சனை, ஆகவே "மாணவர்களுக்கு ஒழுக்கக் கோவை" உருவாக்குமாறு கோருகின்றது. 

யாழ் அரச செயலகத்திற்கு முன்னால் வேலையற்ற யாழ் மாவட்ட பட்டதாரிகள் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தேசியக் கொள்கையாக இருந்து வருகின்ற போதிலும் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பட்டதாரிகளை அரசுகள் உள்வாங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

நடந்த யுத்தம், யுத்தத்துக்கு பிந்திய இன மேலாதிக்கம், யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் அவலங்களும் எம் அன்றாட வாழ்வுடன் இணைந்தாக காணப்படுகின்றது. இதற்கு தீர்வு என்ன? பதிலுக்கு இனவாதம் தீர்வைத் தருமா? மாணவர்களாகிய நீங்கள் தான் இதை சிந்தித்தாக வேண்டும்!

தமிழ் இனவாதிகள் கூறுவது போல், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இனவாத வன்முறை சிங்கள மொழி மாணவர்களே உங்கள் மேல் நடத்தியதாக வைத்துக் கொள்வோம். இது தான் உண்மை என்றாலும், எதிர் இனவாதம் தீர்வல்ல என்பதை உங்கள் சொந்த அனுபவம் புரிய வைத்திருக்கும்.

கடந்த 16ம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த மோதல் சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளர். அதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட விடயத்தில் தலையீடு செய்ய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் துமிந்த நாகமுவ ஊடக சந்திப்பின்போது கூறிய கருத்துக்கள்.

“யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு வடக்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தென்பகுதி மாணவர்கள், விஷேடமாக சிங்கள மாணவர்கள உள்நுழையத் தொடங்கினர். இந்த நடைமுறை நான்கு வருட காலமாக இருந்து வருகின்றது. யாழ். பல்கலைக்கழக சூழுலுக்குள் இருந்தே அனைவரும் இது குறித்து பேசுகின்றனர். நாம் இந்த உரையாடலை தொடங்குவதற்கு முன்பு ஒரு விடயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசுபொருளாகியிருக்கின்றது. வழமைபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சம்பவத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றாக சம உரிமை இயக்கம் கருதவில்லை. பல வருடங்களாக விதைக்கப்பட்டதைத்தான் இன்று அறுவடை செய்கின்றார்கள். எமது நாடு இனவாத எரிமலைக்கு மேல் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினால் அதில் தவறு கிடையாது. அது அடிக்கடி வெடிக்கின்றது. சமீபத்திய வெடிப்புதான் யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இனவாதம் என்றால் சிங்கள இனவாதமாகக் கருதுகின்ற யாழ் மையக் கருத்தியல், யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை திரித்துப் புரட்டுகின்றது. யாழ் பல்கலைக்கழக வன்முறையில் தமிழ் இனவாதமே முதன்மையான பங்கைக் கொண்டு செயற்பட்டதுடன், இன வன்முறையைத் துண்டியது. இந்த பின்னணியில்

1. இன ரீதியாக தமிழர்கள் கொழும்பில் தாக்கப்பட்டால் அதை இனக்கலவரம் என்றோ, இனவன்முறை என்றோ கூறுகின்ற தமிழர்கள்;, அதை சிங்கள இனவாதமாகக் கருதுகின்றனர். தமிழ்மொழி பேசும் பிரதேசத்தில் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டால், அது சிங்கள இனவாதமல்ல, அது தமிழ் இனவாதமாகும்.

"யாழ்.பல்கலைக்கழக மோதல் தற்செயலாக நடந்த சம்பவமல்ல!" என்கின்றார் சுமந்திரன். இப்படிக் கூறிய சுமந்திரன், வன்முறையில் ஈடுபட்டதாக கூறி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒன்றியத் தலைவர் த.சுசீந்திரனுக்காக, நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதன் பின்னணி என்ன? ஓரு கட்சியின் தலைவர் இனவன்முறையில் ஈடுபட்டதாகக் கூறிய ஒருவருக்காக நீதிமன்றம் செல்லும் பின்னணியில், இந்த வன்முறைக்கான தொடர்பு என்ன?

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சமபவம் குறித்து பல்வேறு பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை அரசியல் லாப நோக்குடைய இனவாதத்திற்குள் மக்களை இட்டுச்செல்லும் ஆபத்துக்கள் நிறைந்தனவாக இருக்கின்றன என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் தலைவர் லகிரு வீரசேகரா இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE