Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சாதியம் பற்றிக் கதைக்க வேண்டாமெனக் கம்புசுத்தும் கனவான்களே!

முகப்புத்தகத்தில் சமூவியல் ஆய்வாளரும், பெண்ணிய மற்றும் சமூகப் விடுதலைக்கான செயற்பாட்டாளருமான அகல்யா, வடக்கில் இன்று தலைவிரித்தாடும் சாதி ஒடுக்குமுறைகள் பற்றி பின்வரும் பதிவை வெளியிட்டார்

"கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை" என்று கூறியவருக்கு

"காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கல் செய்வார்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கல் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான். அவர்களை அங்கு படைக்க விடமாட்டார்கள்.

யாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் அரசியல் கலாசார விழா எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி மற்றும் அக்டோபர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

1. புகைப்படக் கண்காட்சி - இனவாதம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிரான இரு புகைப்படக் காட்சிகள் உள்ளடக்கம்.

2. கார்ட்டூன் - கார்ட்டூன் காட்சிகள்

இலங்கை அரசு என்னும் மக்கள் விரோத கொடுங்கோலர்களால் எந்த ஒரு குற்றமும் இழைக்காத ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அரச கொலைகாரர்களால் ஆயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தமிழ் மக்களிற்காக தமது தனிப்பட்ட வாழ்வை சிந்திக்காது, தமது அன்புக்குரியவர்களை விட்டு விட்டு போரிட வந்தவர்களும் இலங்கை அரச கொலைகாரர்களால் கொல்லப்பட்டனர்; கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள்.

அன்று தொட்டு இன்று வரை இலங்கையில் “இனப்பிரச்சனை’’ சிலருக்கு வளமான வாழ்க்கையையும் பலருக்கு துன்ப-துயரங்கள் குறையாத வாழ்வையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. சுதந்திரம் பெற்று குடியரசாக மாற்றம் பெற்ற ஒரு சனநாயக நாட்டில் - தெற்கில் இளைஞர்களின் கிளர்ச்சியிலும் வட கிழக்கில் இளைஞர்களின் எழுச்சியிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்ட ஒரு நாட்டில் - சர்வாதிகாரத்தை ஒழித்து சனநாயகத்தை மீட்டு நல்லாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்களைக் கொன்று குவிக்கும் அரசியல் பாரம்பரியம் இன்றும் தொடர்ந்து அதே பழைய பாணியில் சென்று கொண்டிருக்கிறது.

இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "மாலபே SAITM"ஐ மூடசொல்லி சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் காலையிலிருந்து கொழும்பின் வீதிகள் வழியே நடந்து கொண்ருக்கிறார்கள். "சைற்றம்" இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் அனேக கற்கை நெறிகளை விலைக்கு விற்கும் ஒரு கல்வி நிறுவனம். அதாவது பணம் கட்டி பட்டப்படிப்பை படித்துக்கொள்ளலாம்.

ஏன் ? பணம் கட்டிப் படிக்கக்கூடாதா? உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறாத ஒருவன் விரல் சூப்பிக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டுமா? என்று பொங்குகிறீர்களா? தாராளமாக பணம் கட்டிப்படிக்கலாம். ஆனால் உண்மையில் இங்கே என்ன நடக்கிறது? அந்த அடிப்படையை கொஞ்சம் புரிந்துகொண்டால் ஈவிரக்கம் இல்லாத இந்த கேள்வி மனதில் எழாது.

"துயரத்திற்கு அப்பால் - இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான அனுபவங்கள் மூன்று" விவரணப்படம் இன்று 01-09-2016 கொழும்பு மாவலி நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் மக்களுக்காக போராடிய நான்கு தமிழர்கள் பற்றிய விவரணப் படம் இது. இந்நிகழ்வில் ஜேர்மன், கியுபா, சீனா தூதரக பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பல மனித உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆவணப்படம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூன்று சம்பவங்களை உதாரணமாக முன்வைத்து விபரிக்கின்றது.

"தனியார் மருத்துவக் கல்லூரியை (மாலாபே) மூடு! தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம்! இலவசக் கல்வியை உறுதி செய்! கல்வி விற்பனைப் பண்டம் அல்ல!" ஆகிய கோசங்களை முன்வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மாணவர் போராட்டத்தின் இன்றைய (31/08/2016) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ பீட மாணவர்கள் சங்கமும் இணைந்து கொழும்பு நகரில் முன்னெடுத்திருந்தன. ஆர்ப்பாட்டம் கொள்ளுபிட்டியில் வைத்து அரச படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தண்ணீர் தாரகை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

கடந்த இரு தேர்தல்களின் போது இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது குறித்து பல வாக்குறுதிகளை மக்களிற்கு வழங்கியிருந்தனர். அதில் ஒன்று கடந்த மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களால் உயிருக்கு ஆபத்து இருந்தமையால் புலம்பெயர்ந்த அனைவரையும் மீள வந்து அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் குறித்து மேடை மேடையாக வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். வழங்கிய வாக்குறுதியினை ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்த தவறி விட்டனர் என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

உலகப்பட விழாக்களில் எல்லாம் ஒப்பற்ற பல விருதுகளை வென்றவையும், தமிழ் மண்ணின் வாழ்வை ஓவியமாக படச்சுருள்களில் பதிந்து தந்தவையுமான காலத்தை வென்று காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கப் போகும் கோடம்பாக்கத்து தமிழ்ப் படங்களை இலங்கைத் தமிழர்கள் சிலர் கள்ளத்தனமாக பதிவு செய்து வெளியிடுகிறார்கள் என்றும் இப்படிப்பட்டவர்களிற்காகவா நாம் போராடினோம் என்று ஒரு இயக்குனர் பொங்கி எழுந்திருக்கிறார்.

இதைக் கேட்டு விட்டு கோடம்பாக்கத்து கொள்கை வீரர்கள் இப்படிப் பேசலாமா, ஈழப் போராட்டத்திற்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையே இப்படிப் பேசிக் கொச்சைப்படுத்தி விட்டீர்களே என்று சில ஈழக் கைப்பிள்ளைகள் கலங்கிப் போயிருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பையும் பெரியார் பேசுவது போல் வெங்காயம் என்று ஏசலாமா? அல்லது ஈராக்கியப் பத்திரிகையாளன் கொலைகாரன் ஜோர்ஜ் புஷ்சிற்கு காலில் போட்ட செருப்பை கழற்றி எறிந்தது போல எறிவதிற்கு பழஞ்செருப்புகளை சேர்த்து வைக்கலாமா?

இலங்கை பல்கலைக்கழகங்களில் ஜனநாயகமே இல்லை என்றெல்லாம் எழுதுகிற பிரபல எழுத்தாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. அநேகமான புலம்பெயர் செய்திச் சேவைகளின் செய்திகளை பார்க்கின்ற போது எப்படி இலங்கை ஒரு வாழ்வதற்கே தகுதியில்லாத நாடு வன்முறைகள் நிறைந்த நாடு என்ற உணர்வு எங்களை மீறி ஏற்படுமோ அதே அளவிற்கு பல்கலைக்கழகங்களை பற்றிய வர்ணனைகளை அள்ளி இறைக்கிறார்கள்.

"அவள் பிறந்த போது தொட்டில் வாங்கக் கூட பணமில்லை. அவள் இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் பணமில்லை" என்று ஜென்னி மார்க்ஸ் தங்கள் செல்லக் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது மனமுருகிச் சொல்கிறார். கார்ல் மார்க்ஸ் - ஜென்னி மார்க்ஸ் தம்பதியினரின் சின்னக் குழந்தை பிரான்சிஸ்காவின் இறுதி நிகழ்வுகள் இங்கிலாந்தில் அகதியாக வாழ்ந்த ஒரு பிரெஞ்சுக்காரர் கொடுத்த இரண்டு பவுண்டுகள் உதவி இல்லாவிட்டால் நடந்திருக்காது. பிரான்சிஸ்கா இறந்தது 1852 இல்.

பிரியமான  சகோதர, சகோதரிகளே...

''துயரின் விளிம்பில் - இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான அனுபவங்கள் மூன்று" என்ற தொனிப்பொருளில் சிங்களம், தமிழ்  மற்றும் ஆங்கிலம்  ஆகிய  மும்மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் வீடியோ  விவரண  அறிக்கை  எதிர்வரும் செப்டெம்பர்  மாதம்  முதலாம்  திகதி (01.09.2016) காலை  10.00  மணிக்கு மகாவலி நிலைய  கேட்போர்  கூடத்தில் வெளியிடும் நிகழ்வு  நடைபெறவுள்ளது.

உழைப்பு சார்ந்து உருவானவன் "கந்தன்". அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த கந்தனை, முருகனாக, வேலனாக வழிபட்டதுடன், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினைமாவை முருகனுக்கு படைத்ததான வரலாற்று வழிக் கதைகளின் படி, "கந்தன்" வர்ணம் சாதி கடந்தவன் அல்ல. 

"கந்தர்" பௌத்த கடவுளாகவும் இருக்கின்றார். புத்தர் பரிநிர்வாணம் அடைகையில், கந்தருக்கு தர்மத்தை காக்கும் பணியை புத்தர் வழங்கியதாக கூறுகின்ற வரலாற்று வழிக் கதைகளின்படி, கந்தர் பௌத்த கோயில்களில் காணப்படுகின்றார்.      

சாதியை முன்னிறுத்தும் இந்திய பார்ப்பனியத்திலோ அல்லது இலங்கையில் வெள்ளாள சாதி இந்துக்களின் பெயர் வரிசையிலோ "கந்தன்" இருப்பதில்லை. இந்த வகையில் "கந்தன்" சாதியப் பெயர் வரிசையில் ஒடுக்கப்பட்ட சாதியப் பெயராகும். சாதிப் படிநிலையில் உயரும் போது, "முருகனானாலும்", முருகன், வேலன் சாதிய படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தான்.

உலக வரலாற்றில் இதுவரை இலங்கை முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது ஒரேயொரு விடயத்தில் மட்டுமே. அது உலகில் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்பதே ஆகும். 21 யூலை 1960ம் ஆண்டு சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்று இப்போது 56 வருடங்களாகின்றன.

அவர் மூன்று தடவைகள் (1960-1970-1994) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது மகள் திருமதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் மேல் மாகாண முதலாவது பெண் முதலமைச்சராகவும் (1993) இலங்கையின் பிரதமராகவும் (1994) பின்னர் இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் (1994) அடுத்தடுத்து இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்" என்பார்கள். இனத்தை முதன்மையாகக் கொண்ட சிந்தனை முறை, எல்லாவற்றையும் இனவாதமாகத்தான் அணுகும்;. அடித்தவன், அடிவாங்கியவன் எந்த இனம் - மதம் - சாதி ..என்று தேடி, அதையே காரணமாகக் கற்பித்து விடுவதன் மூலம், மக்களை பிளந்து குளிர்காய்வதென்பது ஊடகம் முதல் அரசியல் வரையான பிழைப்பாகி விடுகின்றது.

C.V. Wigneswaran at World Hindu Conference

C.V. Wigneswaran at World Hindu Conference

1980களில் ஒடுக்கப்பட்ட இனத்தின் தேசிய விடுதலை போராட்டமானது, 1985களில் இனவாதமாக குறுகியது. 2009 இல் இனவாத ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின், எஞ்சிய இனவாதம் இந்துத்துவமாக சீரழிந்ததன் மூலம் சாதியமாக வெளிப்படத் தொடங்கி இருக்கின்றது. சாதிக்கொரு கோயில்கள் ஊருக்கு ஊர் கட்டப்படுவது முதல் சாதி இந்துக்கள் கோரும் புனிதம் வரை, வாழ்க்கையில் சாதியே முதன்மையான சிந்தனையாகவும், செயலாகவும் மாறிவருகின்றது.

யாழ் மையவாதமாக இருக்கும் இந்துத்துவ சாதியமானது, வீரியம் பெற்ற சமூக கூறாக வெளிப்படத் தொடங்கி இருக்கின்றது. தேசியம், இனம், தமிழ் என்று கடந்தகாலத்தில் பொது அடையாளங்களை கொண்டு இயங்கிய சமூக அமைப்பு முறை, இந்துத்துவமாக மாறி சாதியத்தினை முன் உயர்த்தி வருகின்றது. சாதிய முரண்பாடுகள் சமூக முரண்பாடாக மாறி, முதன்மையாகி வருகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE