Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஜம்பதுக்கு ஜம்பது – தமிழரசு (சமஸ்டி) - மாவட்ட ஆட்சி - மாகாண ஆட்சி - சுயாட்சி – சமஸ்டி…… இப்படியே மாறி மாறி இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த 68 ஆண்டுகளாக தங்கள் தங்கள் பாரம்பரிய-பரம்பரை சுய லாப சிந்தனையுடன் அவரவர் கோரிக்கைகளின் பின்னால் அணி திரள்வதும் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதும் தெரிவு செய்தவர்களால் ஏமாற்றப்படுவதும் நாட்டில் ஒரு தொடர் நாடகமாக அரங்கேறியபடி உள்ளது.

இந்த நாடகம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாடுகளை-மனேபாவங்களை-ஆசை அபிலாசைகளை மிகவும் தெளிவாக பிரதிபலித்துக் காட்டுவதால் தொடர்ந்து வெற்றிகரமாக மறுபடி மறுபடி மேடையேறிக் கொண்டிருக்கிறது.

யாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் "எனினும் நாம் பறப்போம்" என்னும் கலாச்சார விழா நடைபெறுகிறது. தொல் தமிழ் முரசாம் பறை முழங்கி விழா தொடங்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா என்ற இனவெறிக் கொலைகாரன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரச பயங்கரவாதிகளால் தமிழ் மக்களின் மேல் நடத்திய இனக்கலவரமான எண்பத்துமூன்று ஆடியின் இனக் கலவரம் குறித்த "கறுப்பு யூலையின் பின்" என்ற ஓவியக் கண்காட்சி உட்பட இன வாதம், மொழி வெறி, சாதி என்பவை குறித்த புகைப்படக் கண்காட்சி, கார்ட்டூன் கண்காட்சிகள் இடம் பெற்றன.

சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில்  யாழில் "எனினும் நாம் பறப்போம்" கலாசார விழா நேற்றைய தினம் 30ம் திகதி செப்டம்பர் ஆரம்பித்து நாளை 2ம் திகதி ஒக்டோபர் வரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழரின் பாராம்பரிய இசையான பறை முழக்கத்துடன் ஆரம்பித்த இந்த விழா; தெரு நாடகம், புகைபடக் கண்காட்சி, சினிமா என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. விழா படங்கள் இங்கே...

தோழர் லலித் வீரராஜ் ஒரு இரப்பர் தோட்டத்து தொழிலாளியின் மகன். மூன்று சகோதரிகளுடன் பிறந்தவர். அதனால் தொழிலாளிகளிற்கே உரிய போர்க்குணம் கொண்டவர்; வறுமையின் கொடுமையை வாழ்நாள் முழுவதும் உணர்ந்தவர். இக்காரணங்களால் தொழிலாளிகளின் போராட்டக் குரலான பொதுவுடமை தத்துவத்தை தன் வாழ்வின் பொருளாக கண்டு கொண்டவர். இலங்கையின் ஒடுக்கப்படும் மக்களின் அமைப்பாக எழுந்த முன்னிலை சோசலிசக் கட்சியில் இணந்து கொண்டார். முன்னிலை சோசலிசக் கட்சியின் அமைப்பான மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தார்.

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டி ருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: 'நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?'

வர்க்கமும் - சட்டமும்

அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு, சட்டம், நீதி.., இதை அடிப்படையாகக் கொண்ட அமைதியையே அரசு அமைதியாக முன்வைக்கின்றது. ஆளும் கூட்டம் மக்களால் "தேர்தலில்" தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில், அவர்களின் கொள்கைகளும் முடிவுகளும் கேள்விக்கு இடமற்றவையாக "ஜனநாயகம்" வரையறுக்கின்றது. இதை கேள்விக்குள்ளாக்கி மக்கள் போராடும் போது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றனர். பிரான்ஸ் முதல் இலங்கை வரை, இதற்கு உலகில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

மக்கள் ஆளும் வர்க்க பொருளாதார சட்டத்தை ஏற்று, அதற்கு அடங்கி ஒடுங்கி அமைதியாக வாழ்வதில்லை. சட்டம் ஆளும் வர்க்கம் சார்ந்த சுரண்டும் சட்டங்களாக இருப்பதால், இவை இனம், மதம், சாதி, நிறம், பால் சார்ந்ததாக செயற்படுகின்றது. சுரண்டும் வர்க்க சட்டங்கள், மக்களுக்கு எதிரானவையாகவே எங்கும் எப்போதும் இருக்கின்றது.

“…………ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை எதிர்பார்ப்புக்களை தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கும்………………………………………………………………..

…………..எம்முடைய இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள் வெறுப்புக்கள் புரிந்துணராமை போன்றவை மற்றையவரின் மொழியை நாம் தெரிந்து கொள்வதால் அவை இல்லாதாக்கப்படுகின்றன அல்லது இல்லாதாக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன. ஆகவே சகோதர மொழியைக் கற்பதால் சகோதர மக்களிடையே நிலவும் எம்மைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்க அது உதவி புரிகின்றது.”

(கடந்த செப்டெம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து)

கிளிநொச்சி எரிகிறது. மகிந்த ராஜபக்ச என்ற இனப்படுகொலையாளனால் எரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட நகரம் மறுபடி எரிகிறது. இராணுவம் மண்ணில் புதைத்த ஊரை உழைப்பாளிகளும், உழவர்களும் உதிரத்தை சிந்தி கட்டி எழுப்பினார்கள். இன்று ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற வடமாகாணசபையின் பொறுப்பற்ற தன்மையினால் மறுபடி எரிகிறது. மக்கள் குறித்து, அவர் தம் உழைப்பு குறித்து எந்த விதமான அக்கறையுமற்ற அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும் கிளிநொச்சி எரிகிறது.

காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் தொடர்பில் முன்னனி சோசலிச கட்சியின் நிலைப்பாடு.

காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் என்ற பெயரில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை செய்வதற்கான சட்டமொன்று 2016 ஆகஸ்ட் 23-ம் திகதி சபாநாயகரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது. இது 2016 மே மாதம் 24-ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, கெபினட் அனுமதியுடன் ஜூன் மாதம் 22-ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த சட்டமூலமாகும். இதற்கான வாக்கெடுப்பானது ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் இனவாத அடிப்படையிலான பலமான எதிர்ப்புக்களின் மத்தியில் நடந்தது. அன்றைய தினமே சட்டமூலத்திற்காக வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், அந்த விவாதம் தொடர்பான சட்டமுறையை அறிந்து கொள்வதற்கும் இன்னும் கால அவகாசம் தேவை என்பது எதிர்க்கட்சி அணியின் சில உறுப்பினர்களின் எண்ணமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியினரதும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினதும், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் ஆதரவுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

மத வெறியர்கள், இன வெறியர்கள், சாதி வெறியர்கள் என்போர் எப்பொழுதும் தேசபக்தியை தாமே முழுக் குத்தகைக்கு எடுத்த தவப்புதல்வர்கள் என்று ஊளையிடுவார்கள். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தவரை பெரும்பான்மையினராக கொண்ட நாகலாந்து, மிசோராம், மேகாலயா மக்கள் தமது உரிமைகளிற்காக போராடுவதை இந்த தேசபக்தி அயோக்கியர்கள் கிறிஸ்தவ சதி என்று கொச்சைப்படுத்துவார்கள். ஒரு சில மதவெறி குழுக்களின் பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டை வைத்து காஷ்மீர் மக்களின் வாழ்வு உரிமைகளிற்கான போராட்டங்களை முஸ்லீம் மதவெறியர்களின் போராட்டமாக கொச்சைப்படுத்துவார்கள்.

எமது நாட்டில் 1915ல்-56ல்-58ல்-61ல்-77ல்-81ல்-83ல் கலவரங்களும், 1971ல் 88-89ல் ஆயுதக்கிளர்ச்சிகளும், 1983 முதல் 2009 வரை யுத்தமும் இடம் பெற்றுள்ளன. இதனால் லட்சக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஊரை விட்டு ஊர் இடம் பெயர்ந்துள்ளனர் - நாட்டை விட்டு ஓடியுள்ளனர் –லட்சக்கணக்கான குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

இன்று நாட்டில் 75 சத வீதமான மக்கள் வாழ்வாதாரங்கள் இன்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சகல வளங்களும் மக்களுடைய உரித்துக்களாக இல்லாத வண்ணம் பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்நியர்களின் தொழிற் கூடமாக இலங்கையும் அவர்களின் அடிமைச் சேவகர்களாக மக்களும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் மீள வந்து செயற்படுவதனை உறுதி செய்வதே, தமது முக்கிய பணிகளில் ஒன்று என வாக்குறுதி அளித்தே மைத்ரி -ரணில் அரசு பதவிக்கு வந்தது. அத்துடன் மகிந்தா நாட்டு மக்களிற்கு மறுத்த ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதும் தனது முக்கிய பணி எனவும் உறுதி அளித்திருந்தது.

ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலை வெல்வதற்காக வழங்கப்பட்ட பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்நாட்டில் ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள், நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள், உலகப்பயங்கரவாதிகள், சர்வதேசக் காவற்துறையான இன்ரபோலினால் தேடப்படுபவர்கள் என அனைத்து கிரிமினல்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.

தனது பிரஜாவுரிமையை மீளக் கோரியதற்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்காகவும், இலங்கைப் பிரஜை குமார் குணரத்தினத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது. மேற்படி அரசியற் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்ட தோழர். குமார் குணரத்தினம், தீர்ப்பு வழங்கபட முன்பு, 24. பங்குனி 2016 அன்று கேகாலை நீதி மன்றத்தில் வழங்கிய சாட்சிய உரை:

சாதியம் பற்றிப் பேசத் தயங்குபவர்கள், வெட்கப்படுபவர்கள், கூச்சப்படுபவர்கள், மறுப்பவர்கள் சனநாயக மறுப்பாளர்களே. இவர்கள் ஆளும் மேலாதிக்க வாத சர்வாதிகாரர்களே. இலங்கை அரசின் ஆயுத அடக்குமுறையின் கீழும் சீறிப் பாய்ந்த “தேசியம்” தனது அடித்தளக் கட்டுமானத்தை “சாதி” சூத்திரக் கணக்கின் பிரகாரமே திட்டமிட்டு அமைத்துக் கொண்டது என்பது பகிரங்க உண்மையாகும். அதனால்தான் போராட்ட காலத்தில், ஆயுத அச்சுறுத்தலின் கீழ் “சாதியம்” பதுங்கிங்கியிருந்ததே தவிர அது அழிக்கப்படவில்லை.

புலம்பெயர் நாடுகளில் சாதிக்குரிய தன்மைகளாகக் குறிப்பிடப்படும் பல அம்சங்கள் தெற்காசிய சமூகங்களிக்கிடையே விரவிக்கிடக்கின்றது.

சாதியமும் சாதிய அடையாளங்களும் நீடித்துவரும் கொடுமைகளுக்கு எதிராக குறிப்பாக இங்கிலாந்தில் Equality Act 2010 கொண்டு வரப்பட்டு அது குறித்து விரிவான விவாதத்தை பாராளுமன்றத்தில் நடத்தி வருகின்றது.

கடந்த 2014-ல் இங்கிலாந்து தொழிலாளர் நீதிமன்றத்தில் முதன் முதலாக சாதி ரீதியான ஒடுக்குமுறை நடைபெற்றதை ஒப்புக்கொண்டு ஆவணப்படுத்தியுள்ளது. இதனை மேல் முறையீட்டு மன்றமும் ஒத்துக் கொண்டதுடன் அதற்க்கான இழப்பீட்டு தொகையினையும் அறிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் இடதுசாரி, முற்போக்கு வட்டாரங்களில் தோழர் வேலு என்ற மென்மையாக, நகைச்சுவையாகப் பேசும் தோழரை தெரியாதவர்கள் எவருமில்லை. இந்தியாவில், தமிழ் நாட்டில் மார்க்கசிய - லெனினிய அமைப்பில் இணைத்து மக்கள் அரசியல், தொழிற்சங்கங்கள் என்பவற்றில் தமது தீவிரமான தொடர்ந்த செயற்பாடுகளின் மூலம் உழைக்கும், ஏழை மக்களுடன் சேர்ந்து போராடினார். மக்கள் விரோத தமிழ்நாட்டு மாநில அரசு அவரின் முற்போக்கு அரசியலை முடக்க தமது வழக்கமான பணியான பொய் வழக்கை போட்டு தடா சட்டத்தில் கைது செய்தார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண வாக்களியுங்கள் என்று வாக்குப்பிச்சை கேட்டு பாராளுமன்றம் சென்று அங்கு இனவெறி அரசுடன் கூடிக் குலாவி தமிழ் மக்களிற்கு துரோகம் செய்தவர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்தை கிண்டலடித்து சாதிவெறி பேசியவர்கள்; இன்றைய சம்பந்தனின் அன்றைய அவதாரங்களிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அவர் ஒரு நல்லவர், வல்லவர் என்று அறிக்கைகள் வருகின்றன.

தமிழ்மக்களிற்கு துரோகம் செய்தவர்களும், சாதிவெறியர்களும், கொலைகாரர்களும் மரணமடைந்த போது மக்கள் தலைவர்கள் என்று தூக்கிப் பிடித்தவர்கள் இன்று மெளனமாக இருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று மக்களிற்காக தாம் மரணிக்கும் வரை உழைத்த மகத்தான சில போராளிகளின் மறைவின் போது எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE